செத்துப்போன குருவிகளின் மீதமிருக்கும் சிறகுகளையும் ஒடிப்பதுபோல்,
ஈசலாய் கிளம்பிய இலங்கை ராணுவம்,
நம் தமிழர்களின் ஒன்றிரண்டு மீந்து போன உயிர்களையும் ஒடித்துகொண்டிருக்கிறது...
ஈழத்தமிழனின் வலியையும், உணர்ச்சிகளையும் மட்டுமே புரிந்துகொள்ளும் நம்மால்
எதிர்த்து போராட இன்று முடியாவிட்டாலும்,
நம் போராடும் குணத்தில் ஒரு முயற்சியாக
நம் குரலாவது ஓங்கி ஒலிக்கட்டும்...
ஒரு பதிவின் வழியாக...
கீழே உள்ள படம் அவர்களின் ஈவு இரக்கமற்ற செயலை உலகிற்கு உணர்த்த அவர்களே எடுத்து காட்டியது...
ஈசலாய் கிளம்பிய இலங்கை ராணுவம்,
நம் தமிழர்களின் ஒன்றிரண்டு மீந்து போன உயிர்களையும் ஒடித்துகொண்டிருக்கிறது...
ஈழத்தமிழனின் வலியையும், உணர்ச்சிகளையும் மட்டுமே புரிந்துகொள்ளும் நம்மால்
எதிர்த்து போராட இன்று முடியாவிட்டாலும்,
நம் போராடும் குணத்தில் ஒரு முயற்சியாக
நம் குரலாவது ஓங்கி ஒலிக்கட்டும்...
ஒரு பதிவின் வழியாக...
கீழே உள்ள படம் அவர்களின் ஈவு இரக்கமற்ற செயலை உலகிற்கு உணர்த்த அவர்களே எடுத்து காட்டியது...
இந்த ஒளியிடல் ஒரு மிகச்சிறிய உதாரணம் மட்டுமே...
இதைவிட எண்ணிலடங்கா கொடுமைகள்,
துயரங்கள், வேதனைகள்...
உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் பகிரும் நம் நெஞ்சங்கள்
உரக்க கத்தட்டும் ஓர் நாள்...
இன்னும் சிலரது குரல்கள்....
தங்கமணிபிரபு
சடகோபன் முரளிதரன்
கதிர் (ஈரோடு)
நர்சிம்
காமராஜ்
11 comments:
நன்றி நண்பா....
இந்த இடுகை மௌனமாய் இருக்கும் மக்கள் மனதை தட்டும்
கொடுமைகள்,
துயரங்கள், வேதனைகள்...
எப்போது விடிஉம்.....
உயிரைப்பறிக்கும்; இலங்கை இராணுவத்தின்
ஆயுதங்களா இந்தியா சைனா ஜப்பான் அமெரிக்கா சுவடன் ஆயுதங்களா
இலங்கையில் இருந்து யாதவன்
http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1251539986&archive=&start_from=&ucat=15&
at your discretion please. atrocities at its peak
:(
:(
:(
hmm..
கொடுமை...எல்லாமே கொடுத்துவிட்டோம் இழந்துவிட்டோம் இனி கண்ணீர் தவிர இவர்களுக்குக் கொடுக்க...?
ஏற்கனேவே எழுதியிருக்கிறேன். மீண்டும் எழுதுகிறேன், எழுதுவேன்...
வா, பகையே வந்தெம் நெஞ்சேறிமிதி
பூவாகி, காயாகி, மரம் உலுப்பிக் கொட்டு,
வேரைத் தழைத்து வீழ்த்து-ஆயினும்
அடிபணியோம் என்பதை நினைவில் கொள்.
புதுவை ரத்தின துரை
இந்தக் கவிதை வரிகள் என்னுள் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளன
நம்பிக்கையுடன் தொடர்வோம்
அன்புடன்
ஆரூரன்
தங்கள் பதிவு தமிழினத்தின் குரலாக ஒலித்தமைக்கு நன்றியும் வணக்கங்களும்!
வலியும் ஆற்றாமையும் மிகுந்த இந்த சூழலில் சிலநூறு ஆண்டுகள் நிகழ்ந்த நம் இந்திய சுதந்திர போரையும், நம் பள்ளிக்கூட வரலாற்று பாடங்களில் இடம் பெறாத பெயரறியாத எண்ணற்ற நம் இந்திய விடுதலை வீரர்களையும், அவற்றால் நாம் இன்று பெற்றுள்ள பயனையும் நினைவு படுத்திக் கொள்கிறேன்! இலங்கையில் நாம் கண்ட, காணாத பல கொடும் மரணங்கள் மிகவிரைவில் ஐக்கிய நாடுகள் சபையில் தமிழீழ கொடியினை ஏற்றப்போகும் அஸ்திவார செங்கற்களாகவே கொள்வோம் எனும் என் நம்பிக்கைதனை பகிர்ந்துகொள்கிறேன்! தமிழ் இலக்கியத்தில் புறநானூறுடன் இரண்டாயிரத்தின் ஈழப்போரும் தமிழர் வீரத்துக்கு சாண்றாக பதிவுபெறும் என திட்பமாக நம்புகிறேன்! நன்றி!
உணர்வுகளை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி...
Post a Comment