க.பாலாசி: என்னவள் கொண்ட என் சிந்தைதனில்...

Monday, August 17, 2009

என்னவள் கொண்ட என் சிந்தைதனில்...



மைகொண்டு அவள் பெயரெழுத...

நான் முயற்சிக்கும் நேரங்களில்...
நாணம் கொண்ட என் எழுதுகோல் சொல்கிறது...

உன்னவளை ‘வரைய’ என்னால் இயலாதென்று...

சரிதான் என்றெண்ணி கவிதை எழுத...
முட்டிக்கொண்ட வார்த்தைகள்...
ஒன்றன் பின் ஒன்றாக நெருக்க அணிவகுக்கின்றன...

தேனிக்களுக்கு இடம்கொடாமல்...

அகமும், புறமும் கொண்ட என் வார்த்தைதனில்...
சொக்கிய, சுய நலம் கொண்ட காகிதம்...
தானே அவளை அடைய எத்தனித்து ஏமாந்துபோகிறது...

இல்லாத அவள் இருக்கிறாள் என்றெண்ணி...


***********


புகைவண்டி பயணங்களில்...
அரிதாய் கிடைக்கும் சன்னலோரம்...
எதிரில் எப்போதாவது வந்தமரும் இளம் பெண்...
இடம் கொடாத ஆண்களை வெறித்து பார்க்கும் நடுவயது பெண்கள்...
கிடைத்த இடத்தில் ஒட்டிகொண்டமரும் முதியவர்...
படிகளில் காலமர்த்தி பயணம் கொள்ளும் நண்பர்கள்...
மடியே போதுமென சுகமாய் சுவாசிக்கும் குழந்தை...

இப்படி எதைப்பற்றியும் கவலையில்லை,
என்னவள் கொண்ட என் சிந்தைதனில்...

என்ன கொடுமையிதென்றெண்ணி கண்மூடும் வேலைதனில்...
மெல்ல நனையும் என் தோள்...

எட்டிப்பார்க்கையில் எழிலாய் தூவும் மழை,
கசிந்தது என் காதில் ‘வழிந்தவாறே’...

‘உன்னவள் வந்துவிட்டாளென்று’...

துடைத்துக்கொள் ‘உன் வழியலை’ என்று,
கைகுட்டை கொடுத்தேன்...துவட்டிக்கொண்டது...

திரைவிலகி தெரிந்தது நிலவு.



*********

19 comments:

ஈரோடு கதிர் said...

//சரிதான் என்றெண்ணி கவிதை எழுத...
முட்டிக்கொண்ட வார்த்தைகள்...
ஒன்றன் பின் ஒன்றாக நெருக்க அணிவகுக்கின்றன...

தேனிக்களுக்கு இடம்கொடாமல்...//

இனிப்பான வரிகள் நண்பா..

//அரிதாய் கிடைக்கும் சன்னலோரம்...
எதிரில் எப்போதாவது வந்தமரும் இளம் பெண்...//

சரியான ஏக்கம்தான்

//இடம் கொடாத ஆண்களை வெறித்து பார்க்கும் நடுவயது பெண்கள்...
கிடைத்த இடத்தில் ஒட்டிகொண்டமரும் முதியவர்...
படிகளில் காலமர்த்தி பயணம் கொள்ளும் நண்பர்கள்...
மடியே போதுமென சுகமாய் சுவாசிக்கும் குழந்தை...//

ரசனையான கவனிப்பு

நன்றாக இருக்கிறது பாலாஜி

ப்ரியமுடன் வசந்த் said...

ரசித்தேன்

ரசனையான வரிகள்

பிரபாகர் said...

//புகைவண்டி பயணங்களில்...
அரிதாய் கிடைக்கும் சன்னலோரம்...
எதிரில் எப்போதாவது வந்தமரும் இளம் பெண்...
இடம் கொடாத ஆண்களை வெறித்து பார்க்கும் நடுவயது பெண்கள்...
கிடைத்த இடத்தில் ஒட்டிகொண்டமரும் முதியவர்...
படிகளில் காலமர்த்தி பயணம் கொள்ளும் நண்பர்கள்...
மடியே போதுமென சுகமாய் சுவாசிக்கும் குழந்தை...//

பாலாஜி,

மேலே குறிப்பிட்டுள்ள வரிகள் யாவும் அற்புதம். உங்களிடம் நல்ல கவனிப்பு இருக்கிறது. அத்தோது அதனை வெளிக்கொணறும் திறமையும் இருக்கிறது.

நிறைய எழுங்கள் நண்பா, படிக்க காத்திருக்கிறேன்.

பிரபாகர்.

Unknown said...

பாலாஜி.... எப்புடி இப்புடியெல்லாம்.....!! கலக்கல் கவிதை....!!!



// அரிதாய் கிடைக்கும் சன்னலோரம்...
எதிரில் எப்போதாவது வந்தமரும் இளம் பெண்... ///



ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......ஸப்பா .... முடியல...... ட்ரெயின்ல எதுத்த மாதிரி ஒரு பிகரு ஒக்காரகூடாதே......!!! லைசன்சு இருக்குதா... இல்லையான்னுகோட கன்பார்ம் பண்ணாம .... கிட்டார எடுத்து வெச்சுகிட்டு பாட்டு பாட வேண்டியது......!!!



கவிதை நால்லாருக்கு பாலாஜி....!!

Prapa said...

நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....
நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,
வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.

ஹேமா said...

அத்தனை காதல் வரிகளிலும் தேனீக்கள் மொய்க்கின்றன.காவல் இருங்கள் பாலாஜி.

க.பாலாசி said...

கதிர் - ஈரோடு said...
இனிப்பான வரிகள் நண்பா..

நன்றி...

//எதிரில் எப்போதாவது வந்தமரும் இளம் பெண்...//
சரியான ஏக்கம்தான்//

உங்களுக்கு தெரியுது...

//மடியே போதுமென சுகமாய் சுவாசிக்கும் குழந்தை...//
ரசனையான கவனிப்பு
நன்றாக இருக்கிறது பாலாஜி//

நன்றி..தங்களின் வருகை மற்றும் பிரித்து மேய்ந்த பின்னூட்டத்திற்கு.

க.பாலாசி said...

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
ரசித்தேன்
ரசனையான வரிகள்//

நன்றி வசந்த், தங்களின் வருகைக்கு

பிரபாகர் said...
//பாலாஜி,
மேலே குறிப்பிட்டுள்ள வரிகள் யாவும் அற்புதம். உங்களிடம் நல்ல கவனிப்பு இருக்கிறது. அத்தோது அதனை வெளிக்கொணறும் திறமையும் இருக்கிறது.//

நன்றி தோழரே. தங்களின் கடல் கடந்த தங்களின் வருகை மற்றும் பின்னூட்ட பகிர்தலுக்கு.

// நிறைய எழுங்கள் நண்பா, படிக்க காத்திருக்கிறேன்.//

மீண்டும் நன்றியினை நவில்கிறேன். தங்கள் போன்றோரின் ஆதரவினால் தொடர்ந்து எழுதுவேன்.

//லவ்டேல் மேடி said...
பாலாஜி.... எப்புடி இப்புடியெல்லாம்.....!! கலக்கல் கவிதை....!!!//

நன்றி நண்பரே..

//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......ஸப்பா .... முடியல...... ட்ரெயின்ல எதுத்த மாதிரி ஒரு பிகரு ஒக்காரகூடாதே......!!! லைசன்சு இருக்குதா... இல்லையான்னுகோட கன்பார்ம் பண்ணாம .... கிட்டார எடுத்து வெச்சுகிட்டு பாட்டு பாட வேண்டியது......!!!//

பின்ன என்ன பண்றது. உங்களுக்கு பிக்ஸாயிடுச்சு. நாங்கள்லாம் அப்படியா?

//கவிதை நால்லாருக்கு பாலாஜி....!!//

மீண்டும் நன்றி நண்பரே..

க.பாலாசி said...

பிரபா said...
// நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம், வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

அப்படியா. எனக்கு தெரியவில்லை அன்பரே.. இப்போதே காண்கிறேன். நன்றி தங்களின் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு..

ஹேமா said...
//அத்தனை காதல் வரிகளிலும் தேனீக்கள் மொய்க்கின்றன.காவல் இருங்கள் பாலாஜி.//

நன்றி சகோதரி ஹேமா, தங்களின் வருகைக்கு...

வால்பையன் said...

இயற்கை காதலன்!

வால்பையன் said...

இயற்கை காதலன்!

சப்ராஸ் அபூ பக்கர் said...

நல்ல கவி வரிகள்.... வாழ்த்துக்கள்.... (ஏதோ மனதில் இனம் புரியாத திருப்பம் கிடைக்கிறது உங்கள் கவிதைகளைப் படிக்கும் போது......)

க. தங்கமணி பிரபு said...

அசத்தல் பாலாஜி! சூப்பர்!

Sadagopal Muralidharan said...

கவிதை அருமை.
ஆமாம். கல்யாணம் ஆயிருச்சா? இல்லையா?
இல்லன்னா வரும் மனைவி கொடுத்து வைத்தவர்.
ஆமென்றால் வந்த மனைவி கொடுத்து வைத்தவர்.

க.பாலாசி said...

//வால்பையன் said...
இயற்கை காதலன்!//

நன்றி அன்பரே..

//Blogger சப்ராஸ் அபூ பக்கர் said...
நல்ல கவி வரிகள்.... வாழ்த்துக்கள்.... (ஏதோ மனதில் இனம் புரியாத திருப்பம் கிடைக்கிறது உங்கள் கவிதைகளைப் படிக்கும் போது......)//

மிக்க நன்றி நண்பரே..தங்களின் முதல் வருகை மற்றும் பின்னூட்டப் பகிர்தலுக்கு.

//Blogger க. தங்கமணி பிரபு said...
அசத்தல் பாலாஜி! சூப்பர்!//

வாருங்கள் தங்கமணி சார், நன்றி தங்களின் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு.

//Blogger Sadagopal Muralidharan said...
கவிதை அருமை.//

நன்றி, தங்களின் பாராட்டுதலுக்கு.

//ஆமாம். கல்யாணம் ஆயிருச்சா? இல்லையா?இல்லன்னா வரும் மனைவி கொடுத்து வைத்தவர்.ஆமென்றால் வந்த மனைவி கொடுத்து வைத்தவர்.//

இன்னும் ஆகவில்லை அன்பரே...நன்றி தங்களின் வருகை மற்றம் கருத்திற்கு.

Bharathiselvan said...

கலக்குங்க பாலா.

க.பாலாசி said...

//பாரதிசெல்வன் said...

கலக்குங்க பாலா.//

நன்றிங்க பாரதி... தங்களின் முதல் வருகைக்கு.

vasu balaji said...

அருமையாய் எழுதுகிறீர்கள். "என்ன கொடுமையிதென்றெண்ணி கண்மூடும் வேலைதனில்...". வேளை என்று சொல்ல நினைத்தீர்களா தெரியவில்லை.

க.பாலாசி said...

// அருமையாய் எழுதுகிறீர்கள். "என்ன கொடுமையிதென்றெண்ணி கண்மூடும் வேலைதனில்...". வேளை என்று சொல்ல நினைத்தீர்களா தெரியவில்லை.//

மிக்க நன்றி அன்பரே...

தவறுதான் திருத்திக்கொள்கிறேன்...வேளை என்பதே சரி..

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO