க.பாலாசி: நகையும் சுவையும்....

Friday, August 28, 2009

நகையும் சுவையும்....


இவரோட படத்துக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை....

வாய்விட்டு சிரிச்சா பன்றிக்காய்ச்சல் ஈசியா பரவிடும்ங்ற கொள்கையின் படி இங்கே சில சுவைகள்...

ஒரு சமயம் டீக்கடைக்கு போனப்ப, இரவுவேளைங்கறதுனால ‘அண்ணே ஒரு ஷகிலா டீ போடுங்கண்ணே’ அப்டின்னேன்...

அந்த ஆளு என்ன நெனைச்சாரோ தெரியல கொஞ்சம் முழிச்சாரு...

சரின்னு நானே... ‘ஆடை’யில்லாம டீப்போடுங்கன்னு சொன்னேன், அப்பதான் அவருக்கு புரிஞ்சி ...சிரிச்சிகிட்டே போட்டுகுடுத்துட்டு, ‘பாத்து தம்பி பொறுமையா குடிங்க, சூடாயிருக்கும்னு’ சொல்லிட்டு அவரு வேலைய பாக்க ஆரம்பிச்சிட்டார்..

உனக்கு தேவைதாண்டான்னு வந்துட்டேன்...

ஒரு தடவ ஹோட்டலுக்கு சாப்பிடப்போனேன். நான் எப்போது அந்த ஹோட்டலுக்கு எதிர்த்த ஹோட்டல்ல சாப்பிடுறது வழக்கம். இது இந்த ஹோட்டல்காரனுக்கு தெரிஞ்சிருக்கும்போல... பில்லு போடுறவரு கேட்டாரு ‘ஏம்பா எப்போதும் எதிர்த்த ஹோட்டலுக்குதான போவ.. இன்னைக்கு என்ன இந்தபக்கம்னு?’. நான் சொன்னேன் அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுன்னு எங்கம்மா சொல்லியிருக்காங்க.. அதனால தான் இங்கவந்தேன்னு... அவரும் எதோ புரிஞ்சமாதிரியே தலைய ஆட்டிட்டு விட்டுட்டார்...

கல்யாண மண்டபத்துல ஒரு பையன் அவங்க அம்மாவப்பாத்து ‘ஏன்மா கழுத்துல மாலை போட்டிருக்குற அக்கா அழறாங்க’ன்னு கேட்க, அவங்க அம்மா ‘அந்த பொண்ணு அவங்க அப்பா, அம்மாவ பிரியப்போறதால அழறா’ன்னு சொன்னாங்க...

மறுபடி பையன் ‘ஏன்மா அந்த மாலை போட்டிருக்குற அங்கிள் மட்டும் சிரிச்சிகிட்டே நிக்கிறார்?’ அப்டின்னான். அதுக்கு அவங்க அம்மா ‘அவன் உங்க அப்பா மாதிரிடா, நாளைலேர்ந்து அழ அரம்பிச்சுடுவான்னு...


ஒரு அன்பர் வீட்டுக்கு சாப்பிட போயிருந்தேன். சாப்பிட்டுகிட்டு இருக்கிறப்ப தன்னோட பொண்டாட்டியப்பாத்து ‘ஏன்டி இவ்வளவு காரமாவா கொழம்பு வைக்கிறதுன்’னு கேட்டார். அந்தம்மா வெறித்தனமா ஒரு பார்வ பார்த்துட்டு போயிட்டாங்க...அப்பறம் அவர்ட சொன்னேன்...‘சமைச்சு போட்டு உதவாங்கும் கணவன்களும் இருக்காங்க... உங்களமாதிரி சமைச்சத சாப்பிட்டு உதவாங்கும் கணவன்களும் இருக்காங்க’ன்னு. அதுக்கு அவரு ஹா..ஹா..ன்னு சிரிச்சார்...‘சிரிக்காதீர்...இதில் நீர் எந்த ரகம் என்று உங்களுக்கு தெரியும்’ அப்டின்னேன்.

அப்பறம் நீங்க வேணும்னா டிராஃபிக் போலீஸ்கிட்ட இப்படி பேசிப்பாருங்க...உங்களுக்கும் நகைச்சுவை தானா வரும்....மாமியார் வீட்டில்....

டி.போ: நீர்தான் இந்த வண்டிக்கு சொந்தக்காரரோ?

நீங்க: ஆம். நீர்தான் யூனிபார்ம் போட்டு வழிப்பறி செய்பவரோ?...

(லைசென்ஸ் மற்றும் எதுவும் இல்லாத உங்களிடம்)

டி.போ: ஏது... லைசன்ஸ் இல்லாமலே இவ்வளவு தூரம்...

நீங்க: நட்பு நாடியது...அதனால் டாஸ்மாக் வரையில்...

டி.போ: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.

நீங்க: என்னவென்று?

டி.போ: லைசென்ஸ் இல்லை, சரக்கடித்து விட்டு வண்டிஓட்டியது, வண்டிக்கு ஆர்.சி. இல்லை, இன்சூரன்ஸ் இல்லை, ஓவர் ஸ்பீடு, ஹெட் லைட்டில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை...இப்படி....எடுத்துரைத்தால் கணக்கிலடங்காதது....

நீங்க: சரி இப்ப என்னான்ற?

டி.போ: ஃபெயின் கட்டணும், கோர்டுக்கு போகணும்...இதெல்லாம் வேண்டான்னா எடு 500 ரூபாய்...

நீங்க (கோபமாக): யாரைக்கேட்கிறாய் பணம்? எதற்கு போடுகிறாய் ஃபெயின்? எங்களுடன் வண்டியில் வந்தாயா? அங்கே ஸ்கூட்டியில் போகும் ஃபிகரை ஓவர்டேக் செய்து கீழே விழுந்தாயா? சிக்னலில் மாட்டி சிறைபட்டு நின்றாயா? பூட்டிய டாஸ்மாக்கில் பிளாக்கில் ஒரு க்வாட்டர் வாங்கித்தந்தாயா? சைடிஸ் வாங்க காசு இல்லாமல் அடுத்தவர் பிளேட்டில் உள்ள வெள்ளரியை திருடித்தந்தாயா? நான் கால் தடுமாறும் நேரத்தில் பைக்கின் கிக்கரை உதைத்து உதவினாயா? மாமனா? மசசானா? ................னே...

குறிப்பு: நகைச்சுவைங்கிறது....நாம வாக்கிங் போகும் போது கட்டி இழுத்துகிட்டு போற நாய்க்குட்டி மாதிரி இருக்கணும்... கொஞ்சம் அவுத்துவுட்டாலும் அடுத்தவங்களை கடிச்சு குதறிடும்...

மேலே உள்ள இடுகை எவர் மனதையேனும் புண்படுத்துமாயின் மன்னிக்க...

பிடித்திருந்தால் தமிழ்மணம் மற்றும் தமிலிஸ்-யில் தங்களின் வாக்குகளை பதிவிடவும்...



**********

22 comments:

ஈரோடு கதிர் said...

//‘அண்ணே ஒரு ஷகிலா டீ போடுங்கண்ணே’//

இன்னுமா பாலாஜி ஷகிலா மேல கண்ணு..

//சைடிஸ் வாங்க காசு இல்லாமல் அடுத்தவர் பிளேட்டில் உள்ள வெள்ளரியை திருடித்தந்தாயா//
அடக் கொடுமைய இதெல்லாம் நடக்குதா?

வால்பையன் said...

கலக்கப்போவது யாரு?
ரெகுலரா பார்ப்பிங்க போல,
பரவாயில்லை வாராவாரம் அப்டேட் பண்ணுங்க, ஏன்னா நான் பாக்குறதில்லை,
அந்த குறை இங்கு தீரும்!

Jawahar said...

ஜோக்குகளை கண்டின்யுவிடியோட சொல்ல நினைக்கிற உங்க முயற்சி நல்லா இருக்கு.

http://kgjawarlal.wordpress.com

நாடோடி இலக்கியன் said...

ட்ராஃபிக் போலிஸ் காமெடி சூப்பர்.

க. தங்கமணி பிரபு said...

சூப்பர் பாலாஜி! பிரமாதமான flow! கலக்கிட்டீங்க!

சீமான்கனி said...

அடடே....அண்ணே... பின்றிங்க.. அண்ணே....டிராஃபிக் போலீஸ் காமெடி சுப்பர் அண்ணே....

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்கு நண்பா.. வாய் விட்டு சிரிச்சேன்..:-)))

வழிப்போக்கன் said...
This comment has been removed by the author.
வழிப்போக்கன் said...

நாமலும் ஏதோ விளங்கினாப்புல சிரிப்போம்...

ஹ..ஹா..ஹ..ஹா..
:)))

கலகலப்ரியா said...

good ones! mela irukkum rao pic paarkkavum..! ennoda reaction-um apdiye..!

க. தங்கமணி பிரபு said...

அன்புள்ள பாலாஜி,
வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

ப்ரியமுடன் வசந்த் said...

ha ha ha

எல்லா நகைச்சுவையும் ரசித்து சிரிப்பை வரவைத்தன

சுரேஷ்குமார் said...

அந்த கல்யாண காமடி சூப்பர்.ரசித்து சிரித்தேன்.எல்லாம் நல்லாயிருக்கு.

ரமேஷ் said...

மிக அருமையாக உள்ளது.கலக்கிட்டீங்க!

Sadagopal Muralidharan said...

நல்லா இருக்கு சிறுநகை பதிவுகள். விகடம் செய்வதை தவறான நோக்கில் யாரும் எடுத்துக்கொள்ள மாட்டர்கள் என்றே நினைக்கிறேன்.

ஒரு முக்கிய குறிப்பு:
த. ம. பி. சொன்னது போல நானும் என்னுடைய கருத்தை பதித்திருக்கிறேன்.
நீங்கள் தமிழையும், ஆங்கிலத்தையும் பார்த்து உங்கள் நடையில் பகிர்ந்து கொள்ளுங்கள் இந்த காட்டுமிராண்டிதனத்தை - உங்களுக்கு பிடித்தால்

க.பாலாசி said...

//கதிர் - ஈரோடு said...
இன்னுமா பாலாஜி ஷகிலா மேல கண்ணு..//

என்ன பண்றது எல்லாம் வயசுகோளாருதான்...

//அடக் கொடுமைய இதெல்லாம் நடக்குதா?//

சும்ம்ம்ம்மா......

//Blogger வால்பையன் said...
கலக்கப்போவது யாரு?
ரெகுலரா பார்ப்பிங்க போல,
பரவாயில்லை வாராவாரம் அப்டேட் பண்ணுங்க, ஏன்னா நான் பாக்குறதில்லை,
அந்த குறை இங்கு தீரும்!//

அப்படியா...பண்ணிடுவோம்...

//Blogger Jawarlal said...
ஜோக்குகளை கண்டின்யுவிடியோட சொல்ல நினைக்கிற உங்க முயற்சி நல்லா இருக்கு.//

நன்றி....உங்களின் கருத்திற்கு...

//Blogger நாடோடி இலக்கியன் said...
ட்ராஃபிக் போலிஸ் காமெடி சூப்பர்.//

நன்றி அன்பரே....

க.பாலாசி said...

//க. தங்கமணி பிரபு said...
சூப்பர் பாலாஜி! பிரமாதமான flow! கலக்கிட்டீங்க!//

நன்றி தங்கமணி சார்....

//Blogger seemangani said...
அடடே....அண்ணே... பின்றிங்க.. அண்ணே....டிராஃபிக் போலீஸ் காமெடி சுப்பர் அண்ணே....//

நன்றிண்ணே....

//Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
நல்லா இருக்கு நண்பா.. வாய் விட்டு சிரிச்சேன்..:-)))//

நன்றி அன்பரே...தங்களின் முதல் வருகைக்கு....

//Blogger வழிப்போக்கன் said...
நாமலும் ஏதோ விளங்கினாப்புல சிரிப்போம்...
ஹ..ஹா..ஹ..ஹா..
:)))//

ஹ..ஹா..ஹ..ஹா.. நன்றி....

//Blogger கலகலப்ரியா said...
good ones! mela irukkum rao pic paarkkavum..! ennoda reaction-um apdiye..!//

thanks for your comment. O.K. cool.

க.பாலாசி said...

//க. தங்கமணி பிரபு said...
அன்புள்ள பாலாஜி,
வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!//

முயற்சிக்கிறேன்...

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
ha ha ha
எல்லா நகைச்சுவையும் ரசித்து சிரிப்பை வரவைத்தன//

நன்றி....வசந்த்....

//Blogger Suresh Kumar said...
அந்த கல்யாண காமடி சூப்பர்.ரசித்து சிரித்தேன்.எல்லாம் நல்லாயிருக்கு.//

நன்றி சுரேஷ்....

//Blogger ரமேஷ் விஜய் said...
மிக அருமையாக உள்ளது.கலக்கிட்டீங்க!//

நன்றி ரமேஷ்....

க.பாலாசி said...

//Sadagopal Muralidharan said...
நல்லா இருக்கு சிறுநகை பதிவுகள். விகடம் செய்வதை தவறான நோக்கில் யாரும் எடுத்துக்கொள்ள மாட்டர்கள் என்றே நினைக்கிறேன்.
ஒரு முக்கிய குறிப்பு:
த. ம. பி. சொன்னது போல நானும் என்னுடைய கருத்தை பதித்திருக்கிறேன்.
நீங்கள் தமிழையும், ஆங்கிலத்தையும் பார்த்து உங்கள் நடையில் பகிர்ந்து கொள்ளுங்கள்//

கண்டிப்பா பகிர்ந்துகொள்கிறேன்...

நன்றி தங்களின் கருத்து பகிர்தலுக்கு...

"உழவன்" "Uzhavan" said...

நகைச்சுவை உங்களுக்கு நல்லா சரளமா வருது. தொடருங்கள்

க.பாலாசி said...

//" உழவன் " " Uzhavan " said...
நகைச்சுவை உங்களுக்கு நல்லா சரளமா வருது. தொடருங்கள்//

நன்றி உழவன் சார்...தங்களின் வருகை மற்றும் வாழ்த்துதலுக்கு...

vasu balaji said...

என்னைக்கோ தண்ணி போட்டு வண்டி ஓட்டி தண்டம் அழுதது சொல்லித் தீர‌லையோ? ஜோக்கெல்லாம் சோக்காதான் இருக்கு.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO