க.பாலாசி: என் கணிதம்

Friday, June 26, 2009

என் கணிதம்


நீ ஒரு புள்ளி,

நான் ஒரு புள்ளி என

இருவருக்கும் இடையில்

ஓர் நேர்கோடு போட்டேன்,

ஆனால்

எவனோ ஒருவன் இடையில் வந்து

முக்கோணம் ஆக்கியவேளையில்,

நீயோ

புதிதாய் ஒருபுள்ளியை தொட்டு

நாற்கரம் ஆனாய்.

மையத்தில் உன்னை வைத்து

சுற்றிவந்தபோது

உன்னிடமே

சுருண்டுபோனது என் உலகம்
உன்னுடன் என்னை கூட்டி

நாம் ஒன்றுதான்

என்று நான் சொன்னபோது

உன்னுடன் நீ இன்னொன்றை கூட்டி

என்னை கழித்து

நாங்கள் இருவர் என்றாய்.

5 comments:

க. தங்கமணி பிரபு said...

நல்லாயிருக்கு! ஒரு கருத்து சொல்லலாமா.....? இதை, இதே குறியீடுகளுடன் நையாண்டியாக ஒரு கட்டுரையாக்கினால் சுவை கூடுமோ?

க.பாலாசி said...

நன்றிங்க சார். உங்கள் வருகை மற்றும் கருத்திற்கு. என்னால் உங்கள் பக்கம் வர இயலவில்லை. ஏனென்றால் ஒருவாரமாக என் பிளாக்கில் அதிக பிரச்சனைகள். இப்போதுதான் சரிசெய்துள்ளேன்.


**இதை, இதே குறியீடுகளுடன் நையாண்டியாக ஒரு கட்டுரையாக்கினால் சுவை கூடுமோ?**

சுவை கூடலாம், எனக்கு அனுபவம் இல்லை.

க.பாலாசி said...

//ஒரு கருத்து சொல்லலாமா.....?//

Allways welcome, Iam awaiting your comments for any time. By U.K.G. Student

தேவன் மாயம் said...

நன்றாக் உள்ளது நண்பரே!!! என் தளம் வரவும்!!.

க.பாலாசி said...

நன்றி அன்பரே. கண்டிப்பாக வருகிறேன். வரவேற்க தயார்தானே.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO