க.பாலாசி: இருமலர்கள்....

Monday, November 23, 2009

இருமலர்கள்....

ஒன்று:


தூக்கம் வர..

படித்த சிந்தனையை

கனவுடன் கலைத்துவிட்டு

காலையெழுந்தேன்.


முக்கியும் முனகியும்

நடந்தும் ஓடியும்

பலனில்லை...

குனியாமலே

தெரிந்த தொந்தி


இரவினில் தின்ற

தோசைக்கு

தொட்டுக்கொண்ட

காரச்சட்னி...

கடுகடுத்த வயிறு...


பாழாய்ப்போன

பல் தினமும்

கேட்கும் பற்பசை


உழைப்பறியா

உடம்புக்கு...

அழுக்குகளை

களைந்தெடுக்க

ஐசுவர்யாராய்

படம் சுற்றப்பட்ட

சவக்காரம்


எல்லாம் முடித்து

பசியாற பார்த்திருந்த

நேரத்தில் பழைய

சோறை போட்ட

புதிய மனைவி.

சலித்துக்கொண்டது மனம்..


தயிரூற்றி உண்ட

களைப்பில்

அலுவலகத்தில் சிறிது

உறக்கம்.


இடையிலேதேனும்

சிந்தனையிடுகை

இடவேண்டும்....

கொட்டாவியுடன்

எழுதினேன் என் வலையில்


உலகத்தில் எல்லோரும்

சோம்பேறிகள்...


**************


இரண்டு:


பாதியிரவொன்றில்

திடுக்கிட்டெழுந்தேன்.

காரணம்

யாதுமில்லை.

மூடப்படாத

கதவாக இருக்கலாம்.


இரண்டு குவளை

நீரருந்தியும்

வரமறுத்தது தூக்கம்.


அரசி தொடரை

பார்க்கவிடாமல்

மின்கம்பியை

துண்டித்த........

அதே எலி...


அரிசிப்பானையை

உருட்டுகையில்...

பதுங்கியிருந்து

பழி தீர்த்ததும்

இலகுவாய்

மூடிக்கொண்டது

இமைகள்.


**************

39 comments:

அன்புடன் மலிக்கா said...

ஹை நான் தான் ஃபஸ்ட்..

இருமலர்களும். இருவிததில் அருமை
அதிலும்

/முக்கியும் முனகியும்

நடந்தும் ஓடியும்

பலனில்லை...

குனியாமலே

தெரிந்த தொந்தி/

அச்சோ அச்சோ அதுவுமா???

மகா said...

really super balaji...

ஈரோடு கதிர் said...

//ஐசுவர்யாராய்
படம் சுற்றப்பட்ட
சவக்காரம்
//

இன்னும் ஐசுவர்யாராய்
விளம்பரம் போட்ட சோப்பா...

//கொட்டாவியுடன்
எழுதினேன் என் வலையில்//

அட..... உள்குத்து

//அரசி தொடரை
பார்க்கவிடாமல்
மின்கம்பியை
துண்டித்த........
அதே எலி...//

அரசி தொடர் இன்னும் முடியலையா?
அதுதான் எலி கடிச்சிடுச்சு

சரி...
என்னாச்சு பாலாசி
எத இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்

vasu balaji said...

/சரி...
என்னாச்சு பாலாசி
எத இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்/

அதான. இவருக்கு டேமேஜர் சரியில்லைன்னா இப்படியா கம்பேனி ரகசியத்த எல்லாம் சொல்லுறது. பதிவர் கூட்டம் என்னைக்கு 28ஆ. மூத்திர சந்து பார்த்து வைங்க கதிர். அங்க வச்சி பேசிக்கலாம். =))

நிஜம்மா ரொம்ப அருமையா இருக்கு பாலாசி.

ராமலக்ஷ்மி said...

இரு மலர்களுமே அருமை:))!

Ashok D said...

கலக்கிட்டீங்க... பாலாசி

ஊடகன் said...

உங்கள் கட்டுரையை விட கவிதை என்னை மிகவும் கவர்கிறது..........

உங்கள் கவிதை நடை யதார்த்த பகுதியாக இருப்பதாலோ?????????

vasu balaji said...

யூத்ஃபுல் விகடனின் ஆஸ்தான கவிஞரே பாராட்டுக்கள். கவிதைகள் பகுதியில் இதோ http://youthful.vikatan.com/youth/Nyouth/kbalasee23112009.asp

புலவன் புலிகேசி said...

முதலாவதை "இளமை விகடனில்" படித்தேன்...நன்று..ஆமாம் ஏன் இவ்வளவு விரக்தி...

//அரசி தொடரை

பார்க்கவிடாமல்

மின்கம்பியை

துண்டித்த........

அதே எலி...//


எலி செஞ்சது நல்ல காரியம் தான...???

ஹேமா said...

என்ன பாலாஜி,எங்களையெல்லாம் பாக்க சோம்பேறியாவா தெரியுது உங்களுக்கு.யாராச்சும் கண்டன அறிக்கை விடுங்களேன் பாலாஜிக்கு.

இப்போ உங்க கவலையெல்லாம்
"அரசி"பாக்கணும்.அவ்ளோதானே.
"சித்தி"பாருங்க.புரிஞ்சுக்கலாமாம்.

கவிதை இயல்பாய் அசத்துது பாலாஜி.

பிரபாகர் said...

ரொம்ப இயல்பா இருக்கு பாலாசி.

தொந்தி வயிறு சரியில்லைன்னு ஒரே புலம்பலா இருக்கு! சுய புராணமா?

நிறைய எழுதுங்க!

பிரபாகர்.

ப்ரியமுடன் வசந்த் said...

எளிமை கவிஞர் பாலாஜி வாழ்க..

எளிய வார்த்தைகளை பூட்டியிருக்கிறீர்கள்...அருமை....

காமராஜ் said...

இரண்டு கவிதையும் அழகு பாலாஜி.
சவர்க்காரம் ஐஸ் படம் போட்டதா .

அன்பேசிவம் said...

நண்பா, முதல்மலர் அருமையான மணம், இரண்டாவது மலர் அழகு.

கார்த்திகைப் பாண்டியன் said...

ரெண்டாவது நல்லாயிருக்கு நண்பா

கலகலப்ரியா said...

வாசமலர்கள்... வாழ்த்துகள் பாலாசி...! (ஐஸ்வர்யா படம் போட்ட சோப் கவருக்கே இப்டியா..)... (அப்புறம் பற்பசைய பல்லு தேடுதா... இதெல்லாம் டூ மச்.. எப்போ லாஸ்ட்டா?)

நாகா said...

இலகுவாய்..? இரண்டுமே அருமை

சீமான்கனி said...

//அரசி தொடரை

பார்க்கவிடாமல்

மின்கம்பியை

துண்டித்த........

அதே எலி...

அரிசிப்பானையை

உருட்டுகையில்...
பதுங்கியிருந்து
பழி தீர்த்ததும்
இளகுவாய்
மூடிக்கொண்டது
இமைகள்.//

பாவம் எலி அதுவும் எவ்ளோ நாள் தான் பொறுமையா இருக்கும்...''அட பாவி அதை மேல அனுபிடிங்களா!!!??''
கண்ணிர் அஞ்சலி.....

/முக்கியும் முனகியும்

நடந்தும் ஓடியும்

பலனில்லை...

குனியாமலே

தெரிந்த தொந்தி/
போலீஸ் வேலைக்கு ட்ரை பண்ணுங்க...
மலர்கள் இரண்டும் கலக்கல்ஸ்...

சத்ரியன் said...

//மின்கம்பியை
துண்டித்த........
அதே எலி...
அரிசிப்பானையை
உருட்டுகையில்...

பதுங்கியிருந்து
பழி தீர்த்ததும்

இளகுவாய்
மூடிக்கொண்டது
இமைகள்.//

பாலாசி,

அனைவருக்குள்ளும் இருக்கும் மிருகத்தை அற்புதமாய் சுட்டும் வரிகள்.

வெண்ணிற இரவுகள்....! said...

உலகத்தில் எல்லோரும்

சோம்பேறிகள்...

//
உண்மை தான் நண்பா ..................
அலுவலில் சிறு தூக்கம் ரசித்தேன்

thiyaa said...

கலக்கல்

சந்தான சங்கர் said...

இரவினில் தின்ற
தோசைக்கு
தொட்டுக்கொண்ட
காரச்சட்னி...
கடுகடுத்த வயிறு...//


//எல்லாம் முடித்து
பசியாற பார்த்திருந்த
நேரத்தில் பழைய
சோறை போட்ட
புதிய மனைவி.
சலித்துக்கொண்டது மனம்..//

ராத்திரில
காரசட்டினிய குழைச்சு
அடிச்சா, காலைல
பழைய சோறுதான் சரி
இதுல சலிப்பு என்ன வேண்டி கிடக்கு
தங்கச்சி சரியாதான் போட்டிருக்கு.


(எங்க பக்கமும் வாங்கப்பு..)

Anonymous said...

அரசி தொடர பாக்கவிடாத எலிக்கு ஒரு ஹேட்ஸ் ஆப்

பூங்குன்றன்.வே said...

மிக அருமை நண்பா.

விஜய் said...

நான் கூட கரப்பான் பூச்சியை தேடி தேடி அடிப்பேன். இயல்பான கவிதை

வாழ்த்துக்கள்

விஜய்

க.பாலாசி said...

//அன்புடன் மலிக்கா said...
ஹை நான் தான் ஃபஸ்ட்..
இருமலர்களும். இருவிததில் அருமை
அதிலும்
அச்சோ அச்சோ அதுவுமா???//

நன்றிங்கக்கா வருகைக்கு....

//Blogger மகா said...
really super balaji...//

நன்றி...

//Blogger ஈரோடு கதிர் said...
இன்னும் ஐசுவர்யாராய்
விளம்பரம் போட்ட சோப்பா...//

நீங்க பாத்ததில்லையா?

// அட..... உள்குத்து//

ஆகா...கண்டுபிடிச்சிட்டீங்களே...

// அரசி தொடர் இன்னும் முடியலையா?
அதுதான் எலி கடிச்சிடுச்சு//

ம்ம்ம்...

சரி...
என்னாச்சு பாலாசி
எத இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்•///

ரைட்டு....நன்றி...

//Blogger வானம்பாடிகள் said...
அதான. இவருக்கு டேமேஜர் சரியில்லைன்னா இப்படியா கம்பேனி ரகசியத்த எல்லாம் சொல்லுறது. பதிவர் கூட்டம் என்னைக்கு 28ஆ. மூத்திர சந்து பார்த்து வைங்க கதிர். அங்க வச்சி பேசிக்கலாம். =))//

ஹலோ...ஹலோ....நான் அப்பாலிக்க வர்ரேன். இங்க சரியா காது கேட்கல....

// நிஜம்மா ரொம்ப அருமையா இருக்கு பாலாசி.//

நன்றி...அய்யா....

க.பாலாசி said...

//ராமலக்ஷ்மி said...
இரு மலர்களுமே அருமை:))!//

நன்றிக்கா...

//Blogger D.R.Ashok said...
கலக்கிட்டீங்க... பாலாசி//

நன்றி அசோக்கய்யா..

//Blogger ஊடகன் said...
உங்கள் கட்டுரையை விட கவிதை என்னை மிகவும் கவர்கிறது..........
உங்கள் கவிதை நடை யதார்த்த பகுதியாக இருப்பதாலோ?????????//

இருக்கலாம் நண்பா...நன்றி...

//Blogger வானம்பாடிகள் said...
யூத்ஃபுல் விகடனின் ஆஸ்தான கவிஞரே பாராட்டுக்கள். கவிதைகள் பகுதியில் இதோ http://youthful.vikatan.com/youth/Nyouth/kbalasee23112009.asp//

மிக்க நன்றியய்யா...தகவலுக்கு...

க.பாலாசி said...

//புலவன் புலிகேசி said...
முதலாவதை "இளமை விகடனில்" படித்தேன்...நன்று..ஆமாம் ஏன் இவ்வளவு விரக்தி...//

விரக்தியாகவா தெரிகிறது.

// எலி செஞ்சது நல்ல காரியம் தான...???//

ம்ம்ம்....சரிதான்...நன்றி நண்பா...

//Blogger ஹேமா said...
என்ன பாலாஜி,எங்களையெல்லாம் பாக்க சோம்பேறியாவா தெரியுது உங்களுக்கு.யாராச்சும் கண்டன அறிக்கை விடுங்களேன் பாலாஜிக்கு.
இப்போ உங்க கவலையெல்லாம்
"அரசி"பாக்கணும்.அவ்ளோதானே.
"சித்தி"பாருங்க.புரிஞ்சுக்கலாமாம்.
கவிதை இயல்பாய் அசத்துது பாலாஜி.//

நன்றி...ஹேமா வருகைக்கும் கருத்திற்கும்...

//Blogger பிரபாகர் said...
ரொம்ப இயல்பா இருக்கு பாலாசி.
தொந்தி வயிறு சரியில்லைன்னு ஒரே புலம்பலா இருக்கு! சுய புராணமா?//

அய்யோ அப்டில்லாம் இல்லிங்க...

// நிறைய எழுதுங்க!
பிரபாகர்.//

நன்றி வருகைக்கு...

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
எளிமை கவிஞர் பாலாஜி வாழ்க..
எளிய வார்த்தைகளை பூட்டியிருக்கிறீர்கள்...அருமை....//

நன்றி நண்பரே....

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

//காமராஜ் said...
இரண்டு கவிதையும் அழகு பாலாஜி.
சவர்க்காரம் ஐஸ் படம் போட்டதா .//

சும்மா சொன்னது தோழரே....நன்றி வருகைக்கு...

//Blogger முரளிகுமார் பத்மநாபன் said...
நண்பா, முதல்மலர் அருமையான மணம், இரண்டாவது மலர் அழகு.//

நன்றி நண்பரே...

//Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
ரெண்டாவது நல்லாயிருக்கு நண்பா//

நன்றி அன்பரே...

//Blogger கலகலப்ரியா said...
வாசமலர்கள்... வாழ்த்துகள் பாலாசி...! (ஐஸ்வர்யா படம் போட்ட சோப் கவருக்கே இப்டியா..)... (அப்புறம் பற்பசைய பல்லு தேடுதா... இதெல்லாம் டூ மச்.. எப்போ லாஸ்ட்டா?)//

ஸ்ஸ்ஸ்.....கம்பனி ரகசியம்....

நன்றி வருகைக்கு...

//Blogger நாகா said...
இலகுவாய்..? இரண்டுமே அருமை//

நன்றி திரு(த்)ந்தினேன்.

க.பாலாசி said...

//seemangani said...
பாவம் எலி அதுவும் எவ்ளோ நாள் தான் பொறுமையா இருக்கும்...''அட பாவி அதை மேல அனுபிடிங்களா!!!??''
கண்ணிர் அஞ்சலி.....//

// போலீஸ் வேலைக்கு ட்ரை பண்ணுங்க...
மலர்கள் இரண்டும் கலக்கல்ஸ்...//

நன்றி நண்பரே...

//Blogger சத்ரியன் said...
பாலாசி,
அனைவருக்குள்ளும் இருக்கும் மிருகத்தை அற்புதமாய் சுட்டும் வரிகள்.//

நன்றி நண்பரே....

//Blogger வெண்ணிற இரவுகள்....! said...
உலகத்தில் எல்லோரும்
சோம்பேறிகள்...
//
உண்மை தான் நண்பா ..................
அலுவலில் சிறு தூக்கம் ரசித்தேன்//

நன்றி நண்பா....

//Blogger தியாவின் பேனா said...
கலக்கல்//

நன்றி....

க.பாலாசி said...

// சந்தான சங்கர் said...
ராத்திரில
காரசட்டினிய குழைச்சு
அடிச்சா, காலைல
பழைய சோறுதான் சரி
இதுல சலிப்பு என்ன வேண்டி கிடக்கு
தங்கச்சி சரியாதான் போட்டிருக்கு.//

தங்கச்சியா.....?????.....

நன்றி நண்பரே வருகைக்கு...

//Blogger Thirumathi JayaSeelan said...
அரசி தொடர பாக்கவிடாத எலிக்கு ஒரு ஹேட்ஸ் ஆப்//

நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...

//Blogger பூங்குன்றன்.வே said...
மிக அருமை நண்பா.//

நன்றி நண்பரே முதல் வருகைக்கு....

//Blogger கவிதை(கள்) said...
நான் கூட கரப்பான் பூச்சியை தேடி தேடி அடிப்பேன். இயல்பான கவிதை
வாழ்த்துக்கள்//

நன்றி அன்பரே...வருகைக்கும் கருத்திற்கும்...

க.பாலாசி said...

// உழவன் " " Uzhavan " said...
வாழ்த்துக்கள்//

நன்றி உழவரே...

சுந்தரா said...

மலர்கள் ரெண்டுமே அருமை.

ரெண்டாவது ரொம்ப இனிமை :)

விகடனிலும் பார்த்தேன்...

வாழ்த்துக்கள் பாலாசி!

அன்புடன் நான் said...

உழைப்பறியா

உடம்புக்கு...

அழுக்குகளை


களைந்தெடுக்க

ஐசுவர்யாராய்


படம் சுற்றப்பட்ட

சவக்காரம்//

இரண்டுமே வித்தியாசமாக ரசிக்கும் படியிருந்தது.

பா.ராஜாராம் said...

ரெண்டு கவிதையும் பிடிச்சிருக்கு.ரெண்டாவது கவிதை..மிக அழகு பாலாஜி!

sathishsangkavi.blogspot.com said...

//எல்லாம் முடித்து

பசியாற பார்த்திருந்த

நேரத்தில் பழைய

சோறை போட்ட

புதிய மனைவி.

சலித்துக்கொண்டது மனம்.. //


விகடனிலும் பார்த்தேன்...

வாழ்த்துக்கள் பாலாசி!

மேவி... said...

sir... konjam periya eluthaa podunga... yerkanave enakku nollai kan....

Anonymous said...

இடையிலேதேனும்


சிந்தனையிடுகை

இடவேண்டும்....

கொட்டாவியுடன்


எழுதினேன் என் வலையில்
///

உக்காந்துக்கிட்டே உலகைச் சுத்துகிறோம் இல்ல- சோம்பேறி உண்மைதான்

தேவன்மாயம்!!!

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO