நாகரீக போர்வைக்குள் புரண்டு கொண்டிருக்கும் கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகளின் நிலையைப்பற்றி பெருமையுடன் சொல்வதற்கொன்றுமில்லை. இதற்கு விதிவிலக்காய் என்னைப்பெற்றதும் மற்றுமென் சுற்றுவட்ட 54 கிராமங்களும் இல்லையென்பதே அவிழ்ந்துகிடக்கும் உண்மை.
எங்கள் தெருவிலுள்ள 25 விவசாயக்குடும்பங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இல்லாதவர்கள் (நானறிந்தவரையில்). மழையினாலோ அல்லது வெள்ளத்தினாலோ வேறெந்த இடர்களாலோ பயிர்கள் பாதிக்கப்பட்டாலும் அடுத்த குறுவை சாகுபடியில் விட்டதை பிடிக்கலாம் என்ற ரீதியில் நம்பிக்கையும் ‘பணத் திடமும்’ உள்ளவர்கள். அடுத்தமுறையும் நட்டமாயின் அவர்களின் வெளிநாட்டுப்பிள்ளைகள் அவர்களை காப்பாற்றிவிடுவார்கள் அல்லது அடுத்த சாகுபடிக்கு பணநீரூட்டி உயிர் கொடுத்துவிடுவார்கள். அவர்களுக்கு இதுதான் தொழிலே (பிள்ளைகளுக்கல்ல). இது எங்கள் தெருவின் நிலை.
இந்நிலை அப்படியே தலைகீழாய் எங்களது அடுத்தடுத்த தெருவாசிகளுக்கு. முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். முதல் போகம் முறிந்துபோனால் அடுத்தபோகம் விளையும் வரையில் ஒரு ரூபாய் அரிசிதான் கதி. (இதன் விலை இன்னும் ஒருரூபாய் ஏறினால் அதோகதிதான்). இன்றைய நாளில் அவ்வப்போது அடித்துப்பெய்யும் மழையில் படுத்துக்கொண்ட நெற்பயிர்கள் அழுகி உயிர்த்துறந்த நிலையில் எல்லாம் வற்றி ஈரப்பதமுள்ள நிலத்தினை மீண்டும் கைகலப்பைக்கொண்டு (இன்றும் உயிருடன் உள்ளது) உழுது மறுநடவு செய்தாலும், எல்லாவித துன்பங்களையும் தாண்டி நெல்மணிகள் நிலத்தினை பார்க்கும் தருவாயில், மாரியின் மயக்கத்தில் பொய்க்கும் பருவமழை பல்லிளித்துக்காட்டும். மீண்டும் நட்டம்.
வானம் பார்த்த பூமி இல்லை. மின்மோட்டார் வசதி இருக்கிறது. இல்லாவிட்டாலும் அடுத்த வயலுக்கு சொந்தக்காரர் தண்ணீர் தரும் நல்லவராக இருப்பார். இப்போது காவிரி டெல்டா பகுதியில் பெரும்பாலானோர் காவிரியைமட்டும் நம்பி இல்லை. அது அம்மா வந்தால் கொஞ்சம், அப்பா வந்தால் கொஞ்சம், இல்லையேல் கருநாடகத்தில் வெள்ளம் வந்தால் ‘மிகவும்’ கிடைக்கும் வரம். (அதேநேரத்தில் இங்கே மழை அடித்துப்பெய்து கொண்டிருக்கும்) என்றும் இந்த வரம் ‘கடையாது’ என்றும் தெரியும். மழை வரவில்லையென்றால் வருந்துவதும், மிகைந்து வந்தால் வேதனைக்குள்ளாவதும் எல்லாப்பகுதி விவசாயிகளுக்கும் உரியதுதான். அருவடைக்கு தயாராகும் நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்தால் விவசாய மக்கள் ஒவ்வொருவரின் அடிவயிற்றிலும் அலறலெடுக்கும். தன்பயிருக்காக மட்டுமல்லாது, அடுத்தவர் பயிர்களும் அழுகுவதை நினைத்து கண்ணீர்மல்குவது விவசாயிகளுக்கே உ(ய)ரிய குணம். இது இன்றைய நிலையில் விவசாயிகளின் இன்னொரு பிரச்சனை.
இவையெல்லாவற்றையும் தாண்டி அருப்பருத்து களத்துக்கு கொண்டுவந்து அடித்துப்பார்த்தால் மிஞ்சுவது முதலாகத்தான் இருக்கும். சரிபோகட்டும் என்று அடுத்த நடவுக்கு தயாராவான் அதே நிலையவன். ஆனால் அவன் மனதில் ஆழப்பதியும் எண்ணமென்பது, தன் பிள்ளைகளுக்கும் இந்த நிலை வரக்கூடாது என்பதே. விவசாயத்தைவிட்டால் கிராமப்புறங்களில் இன்று வெளிச்சம்காட்டுவது கொத்தனார் தொழில். சித்தாளாக வேலைசெய்தால் ஒருநாளைக்கு (அதாவது காலை 10 மணிமுதல் மாலை 5.30வரை) 150திலிருந்து 200வரை ஊதியம் (கிராமப்புறங்களில்). கொஞ்சம் முன்னேறி ‘கரனை’ பிடிக்க ஆரம்பித்தால் 250க்கு குறைவில்லாமல்.
அதைவிடுத்து காலை 7 மணிக்கு அருப்புக்குச் சென்றால் மாலை 6.30 மணிவரையில் வெயிலை மென்று துப்பினாலும் விஞ்சிக் கிடைப்பது 150ரூபாய் வரையும், இரண்டு டீயும், பட்சணங்களுமே. (பெண் நடவாட்களுக்கு இன்னும் குறைவு). வயலுக்குச்சென்று பசியில் குத்தும் வயிற்றை பட்சணங்களில் நிரப்பி பலன் காணுவதை தனது சந்ததியினருக்கும் தொடரவிடாமல் செய்யவே எந்தவொரு தகப்பனும் விரும்புவான். அதே நிலைதான் இந்நிலை விவசாயிகளுக்கும். எப்பாடுபட்டாவது பிள்ளைகளை படிக்கவைக்கின்றனர், இல்லையேல் கொத்தனார் தொழில் அல்லது விவசாயமல்லாத வேறொரு தொழில், மிகை மிஞ்சினால் வெளிநாடு அனுப்பிவிடுகின்றனர். இல்லையேல் தருதலை உருப்படாது என்று தண்ணீர்தெளித்து விட்டொழிக்கின்றனர். எது எப்படியாயினும் இவர்களின் நோக்கம் விவசாய கஷ்டமென்பது தம்மோடு ஒழியட்டுமென்பதே. (விதிவிலக்குகளும் உண்டு).
“ஆலமரம் போல நீ வாழ - அதில்
ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னைத் தாலாட்ட - அந்த
கருணையை நாங்கள் பாராட்ட..”
எல்லாம் சரி. விழுதுகளின் ஊன்றலின்றி புரையோடிய ஆலமரநிழலில் எத்தனைக்காலந்தான் நம்மாலும் இளைப்பாறமட்டுமே முடியும்.
42 comments:
சூதாடிக்கோடீஸ்வரனாகலாம்,
உழுதால் நிச்சயம் கோமனாண்டிதான்.
இது இந்தியாவில் மட்டும் சாத்தியம்.
ஆழமான அலசல்.
அன்பின் பாலாசி
அருமை அருமை - ஆதங்கம் புரிகிறது - நல்லதொரு ஆய்வினில் விளைந்த இடுகை. விவசாயம் அழிந்து போவதற்குக் காரணமாக உள்ள பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.
நல்வாழ்த்துகள் பாலாசி
“ஆலமரம் போல நீ வாழ - அதில்
ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னைத் தாலாட்ட - அந்த
கருணையை நாங்கள் பாராட்ட..”
எல்லாம் சரி. விழுதுகளின் ஊன்றலின்றி புரையோடிய ஆலமரநிழலில் எத்தனைக்காலந்தான் நம்மாலும் இளைப்பாறமட்டுமே முடியு///
அருமையாகச்சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே!!
நீங்கள் சொல்வது சரிதான். இப்போது கிராமத்திலிருந்து நகரத்திற்கு வேறு வேலை தேடி மக்கள் சென்று விடுவதால், ஏதோ ஒரு நேரத்தில் போனால் போகிறதென்று விளைகிற பயிரையும் அறுவடை செய்ய ஆள் கிடைக்காமல் விவசாயி திண்டாடுகிறான்.
நல்ல கேள்வி!
செங்கல்லை திங்கச்சொல்லும்போது பயிர்களின் அருமை புரியும்..
மிக மிக அருமையான பதிவு பாலாசி.
//அது அம்மா வந்தால் கொஞ்சம், அப்பா வந்தால் கொஞ்சம், இல்லையேல் கருநாடகத்தில் வெள்ளம் வந்தால் ‘மிகவும்’ கிடைக்கும் வரம்.//
ம் கொடுமை பாலாசி...விவசாயிகளே இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தை ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஆழ்ந்தும் அழகாகவும் சொல்லியிருக்கிறீர்கள்
//விழுதுகளின் ஊன்றலின்றி புரையோடிய ஆலமரநிழலில் எத்தனைக்காலந்தான் நம்மாலும் இளைப்பாறமட்டுமே முடியும். //
அருமை பாலாசி
கடைக்கு போனா அரிசி வாங்கலாம்.. அவ்வளவுதானே..இப்படி நினைக்கற மக்கள்தான் இப்ப.. சரியான குமுறல்..
கடைக்கு போனா அரிசி வாங்கலாம்.. அவ்வளவுதானே..இப்படி நினைக்கற மக்கள்தான் இப்ப.. சரியான குமுறல்..
நல்லா எழுதியிருக்கிங்க நண்பா, அனுபவம் கை கொடுத்திருக்கிறது. :-)
புரையோடிய ஆலமரம்......
வருத்தமா இருக்கு கேட்க
உன் கையக் கொண்டா கண்ணில் ஒத்திக்கணும். என்னமா எழுதியிருக்க? சாப்புடறப்போல்லாம் இது கண் முன் வரும்:(
ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க பாலாசி...
எல்லாத்துக்கும் வெளிநாட்டை நம்பி இருக்கிற நிலைமை சீக்கிரமா நம்ம நாட்டுக்கு வரத்தான் போகுது.. இன்னொரு பிரேசில்.. :(
புரையோடுவதற்க்குமுன் நெரிகட்டும். பத்தாண்டுகளுக்கு முன்பே நெரிகட்ட துவங்கிய விவசாயம் இன்று புரையோடிப் போனதை கண்டு வருத்தமாக இருக்கிறது.
//அது அம்மா வந்தால் கொஞ்சம், அப்பா வந்தால் கொஞ்சம், இல்லையேல் கருநாடகத்தில் வெள்ளம் வந்தால் ‘மிகவும்’ கிடைக்கும் வரம். (அதேநேரத்தில் இங்கே மழை அடித்துப்பெய்து கொண்டிருக்கும்) என்றும் இந்த வரம் ‘கடையாது’ என்றும் தெரியும்.//
சரியாச் சொன்னீங்க பாலாசி.. எனக்கும் கொஞ்ச காலமா ஒரு சில சந்தேகம் இருக்கு.. ஒரு பதிவாவே அந்த சந்தேகத்தை கேட்டு விடுகிறேன்..
:-(((((((
அருமையா சொல்லியிருக்கிறீர்கள்
விழுதுகளின் ஊன்றலின்றி புரையோடிய ஆலமரநிழலில் எத்தனைக்காலந்தான் நம்மாலும் இளைப்பாறமட்டுமே முடியும்.
..............சரியான கேள்வி. மாறுதல்கள் விரைவில் வர வேண்டும்.
பாலாசி.. அருமையான கட்டுரை. உணர்ந்து அனுபவித்து எழுதியிருக்கீங்க.
கொஞ்சம் எழுத்துக்களை பெரியதாக்கினால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.
எங்கள் நாடுகளின் யதார்த்த ஆதங்கம்.
இதற்கு வழிதான் என்ன ?
விவசாயிகள் தன் விளைச்சலின் மகசூலைப் பார்த்து மகிழ்வதைவிட தன மகன்,மகள் நன்றாகப் படிக்கிறார்கள் என்பதை கேள்விப் படும் போது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.விவசாயிகளின் மன உணர்வை பதிந்தமைக்கு நன்றி பாலாஐி.
உழவை உழுது இருக்கீங்க பாலாசி...
நல்ல பதிவு பாலாசி மனதை வருடுகிறது...கழனி செழிக்கணும்...
மிகவும் நல்லதொரு இடுகை,
ஆதங்கம் ஆத்மார்த்தமாய்..
அரசாங்கம் கைகொடுக்காமல் எதுவும் செய்ய ஏலாது. இப்படி புலம்புறதத்தவிர... ம்..ம்.என்ன செய்ய.
மண்ணில் விளையும் அரிசியில் சோறு திங்கும் எவரும் இதை சாதாரண புலம்பல் என எடுத்துக் கொள்ள முடியாது.
ஒரு கட்டத்தில் சோற்றுக்கு அரிசியில்லை எனும் நிலை வரும்போது கொத்தனாரும், பஞ்சுமில்லுக்கு வேலைக்குப் போறவங்களும் மண்ணுல கால் வச்சித்தான் ஆகனும்.. காடு கழனியிருக்கிற நாமும் அதற்கு திரும்ப வெகுகாலம் ஆகாது... காரணம் தங்கத்தை திங்கமுடியாது... அரிசி பருப்பை புறக்கணிக்க முடியாது
எல்லாம் கடையில் கிடைக்கும் என்ற மாயை உடையும் காலம் வெகு தூரத்தில் இல்லை....
நிதர்சன உண்மைகளை கூறியிருக்கிறீர்கள்......
என்னோட அப்பா இது வரைக்கும் என்னை வயலில் இற்ங்க அனுமதித்ததே இல்லை.., அவருடய அனுபவம் அப்படி .., என்னோட விவசாயம் போகட்டும் என்கிறார்..,ஹம்ம்
ஒரு விவசாயியின் நிலைமையை தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள் பாலாஜி.. எந்த விவசாயியும் தன் பிள்ளையை விவசாயி ஆக்கிப் பார்க்கணும் என நினைப்பதில்லை.
நல்ல அலசல்- வருத்தப்பட வைக்கும் உண்மைகள்.
இந்த விவசாயத்தை வானமும் கண்டுகொள்வதில்லை.... வகைவகையாய் வாழ்பவனும் கண்டுகொள்வதில்லை...
சோற்றுக்கு அல்லாடும் நிலை வெகு விரைவில் வரும்...
நல்ல கேள்விகளுடன் கூடிய பதிவு...
நன்றி காமராஜ் அய்யா..
நன்றி Blogger ராமலக்ஷ்மி
நன்றி Blogger cheena (சீனா) அய்யா...
நன்றி Blogger தேவன் மாயம்
நன்றி Blogger ஜெயந்தி
நன்றிBlogger பழமைபேசி அய்யா
நன்றி ஷங்கர்..
நன்றி Blogger புலவன் புலிகேசி நண்பா...
நன்றிBlogger T.V.ராதாகிருஷ்ணன்
நன்றி Blogger ரிஷபன்
நன்றி Blogger முரளிகுமார் பத்மநாபன் நண்பரே....
நன்றி Blogger வானம்பாடிகள்
நன்றி கலகலப்ரியா
நன்றி Blogger முகிலன்
நன்றி Blogger அரசூரான்
நன்றி Blogger திவ்யாஹரி
நன்றி Blogger கார்த்திகைப் பாண்டியன்
நன்றி Blogger சே.குமார்
நன்றி Blogger Chitra
நன்றி Blogger ச.செந்தில்வேலன்
// கொஞ்சம் எழுத்துக்களை பெரியதாக்கினால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.//
அடுத்தமுறை சரிசெய்கிறேன்...
நன்றி ஹேமா
(இளைப்பாறுவதை மட்டுமே செய்யாமலிருப்பது)
நன்றி Blogger தாராபுரத்தான் அய்யா...
நன்றி Blogger தமிழரசி
நன்றி Blogger seemangani
நன்றி Blogger அன்புடன் மலிக்கா
நன்றி Blogger கண்ணகி
நன்றி Blogger ஈரோடு கதிர் அய்யா...
(சரிதான்)
நன்றி Blogger அகல்விளக்கு
நன்றி Blogger பேநா மூடி
(உங்க அப்பா மட்டுமில்ல நண்பா...)
நன்றி Blogger "உழவன்" "Uzhavan"
நன்றி Blogger குடந்தை அன்புமணி
நன்றி Blogger ரோஸ்விக்
nalla azhaamaana karuthu.
Find my scribbling at:
http://encounter-ekambaram-ips.blogspot.com/
keep blogging
கோவை, பெரியார் மாவட்ட விவாசாயிகளின் நிலையை யதார்த்தமாக சொல்லியிருக்கின்றீர்கள். நன்றி.
நியாயமானக் கேள்விதான் பாலாசி...... போராடியேனும் உழவுத்தொழிலை காப்பாற்ற வேண்டும்... அப்போதுதான்..... கிராமமும்.... கிராம மனிதர்களும் நகரம் (நரகம்) நோக்கி நகரமாட்டார்கள்.
நன்றி YUVARAJ S
நன்றி Blogger பித்தனின் வாக்கு
நன்றி Blogger சி. கருணாகரசு
ஆழமான பதிவு....தொடருங்கள்...
Post a Comment