க.பாலாசி: அக்கம் பக்கம்...

Saturday, February 13, 2010

அக்கம் பக்கம்...


என்வீட்டுப் பறங்கிக்கொடி அடுத்தவர் வீட்டில் படர்ந்து கிடப்பதும், அவர் வீட்டு பூசணிக்கொடி என்வீட்டில் காய்த்துக் குலுங்குவதுமாக இருந்த காலகட்டங்களில் இடையிருந்த மூங்கில் படல் (வேளி) ஒரு தடுப்பாக அந்தக் கொடிகளுக்குகூட தெரிந்ததில்லை. கால மாற்றங்களில் அவரவர் சுயநலங்கள் மற்றும் இன்னபிற பொருளாதார வளர்ச்சியின் மிகைப்பொருட்டு இடையாட்கொண்ட செங்கல் சுவர் எல்லாம் மறித்து, மறைத்து இரு குடும்பங்களுக்கிடையிருந்த உறவுமுறை, நட்புணர்வு, சகோதரத்துவம், மனிதநேயம் போன்றனவற்றை வெட்டிச்சாய்த்து வேரூன்றியது.

என்வீட்டுக்
குழம்பு எதிர்வீடு செல்வதும், அவர்கள் வீட்டு காய்கறிக்கூட்டு என்வீட்டில் மனப்பதுமாக இருந்த மனப்பறிமாற்றங்கள் மற்றும் மூன்றவாது வீட்டில் பிணியுற்ற தாத்தாவிற்கு இங்கிருந்துச் சென்ற சுக்கு கசாயமும், என் பிணி இலகுவாக அங்கிருந்து வரும் அரிசிக்கஞ்சியும் இருதரப்பு பிணக்குகளையும் மூடித்திரையிட்டு இனித்துக்கொண்டிருக்கும். பக்கத்துவீட்டில் ஒரு விசேசமென்றால், அடுத்தவீட்டில் பந்திப்பாய்கள் விரிக்கப்பட்டிருக்கும். வீதியிலொரு துக்கமென்றால் அனேகர் இல்லங்களில் ஒப்பாரிகள் ஒலிக்கும். எந்தவொரு நல்லதுகெட்டதிலும் கிராமத்தானின் வாழ்வுதனை சூது கவ்வியதில்லை (மறுப்புகளும் உண்டு).

ஒரு
அஞ்சல் ஊழியனுக்கு, அடுத்த வீதியிலிருப்பவனை அடையாளம்காட்ட என்வீதிக்காரன் உதவுவான். அங்கிருப்பவனுக்கும் அதே ஞானம் மிகைந்திருக்கும். ஏழைப்பணக்காரத்தனமோ, சாதிமத பேதமோ (வீதிக்குவீதி மேம்பட்டிருந்தாலும்) அடுத்தடுத்த வீடுகளுக்குள் புகுந்திருந்ததில்லை. எல்லாம் மறைந்து, மறந்த இந்நேரத்தில் இன்றும் கிராமத்துச்சுவர்களில் இந்நிலைவாசம் மேற்புழுதியாய் படிந்திருந்தாலும் நகரத்து வாழ்வுதனில் இவைகள் மிகக்குறைந்திருப்பது காணக்கிடப்பது. அடுத்தவீட்டில் குடித்தனம் நடத்துவது நமது உறவினர்தான் என்றறிய ஏதாவது திருமணவீடுகள் காரணமாயிருக்கும். இல்லையேல் அதுவும் தெரியாமற்போகும். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யாரென்று தெரிந்துகொள்ள எவருக்கும் ஆர்வமோ, ஆவலோ இருப்பதில்லை. வந்ததை வாங்கி வெந்ததை உள்நிரப்புவதில் இருக்கும் வேகமும் தாகமும் உறவினை பெருக்குவதிலோ, நட்புணர்வினை மேம்படுத்துவதிலோ மிகுதியாக செலவிடப்படுவதில்லை.

தினம்தினம்
காலையில் முகத்தில் பூசிக்கொள்ளும் முகப்பூச்சியினூடே அவ்வப்போது நமது நாகரிகமெனும் அரிதாரத்தையும் சேர்த்திட்டுக்கொள்கிறோம், எவரும் காணாதவாறு. இன்றென் நிலைமையை என்வீட்டுப்பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டுப்போவதில் என்மனமும் சங்கடங்கொள்ளத்தான் செய்கிறது. இலக்கில்லா திசையில் உயிர்மட்டும் தாங்கி உயரஉயர பறக்கும், ஒரு ஊர்க்குருவியாக நானும்.


48 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

present baalasi

அன்புடன் நான் said...

நல்ல பதிவு... பாலாசி, படிக்கையில் மனம் தான் கசங்குகிறது....

ராமலக்ஷ்மி said...

//பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யாரென்று தெரிந்துகொள்ள எவருக்கும் ஆர்வமோ, ஆவலோ இருப்பதில்லை. வந்ததை வாங்கி வெந்ததை உள்நிரப்புவதில் இருக்கும் வேகமும் தாகமும் உறவினை பெருக்குவதிலோ, நட்புணர்வினை மேம்படுத்துவதிலோ மிகுதியாக செலவிடப்படுவதில்லை.//

உண்மைதான்:(! நல்ல இடுகை!

shortfilmindia.com said...

நிஜம் எப்பவுமே வலிக்க்கத்தான் செய்கிறது பாலாசி..
கேபிள் சங்கர்

அகல்விளக்கு said...

உண்மைதான்....

வாழ்க்கை சுருங்குகிறது....

Ashok D said...

பாலாசி ஏதாவது கோபமா நம்ம side தலைவெக்கறதில்ல.. சொன்ன திருத்திக்கறோம் :)

Unknown said...

நாம் அதை மாற்றலாம் நண்பா,
என் மகனின் விளையாட்டுபொருட்கள் நிச்சயம் உயிரற்றிருக்காது.

புலவன் புலிகேசி said...

//என்வீட்டுக் குழம்பு எதிர்வீடு செல்வதும், அவர்கள் வீட்டு காய்கறிக்கூட்டு என்வீட்டில் மனப்பதுமாக இருந்த மனப்பறிமாற்றங்கள் மற்றும் மூன்றவாது வீட்டில் பிணியுற்ற தாத்தாவிற்கு இங்கிருந்துச் சென்ற சுக்கு கசாயமும், என் பிணி இலகுவாக அங்கிருந்து வரும் அரிசிக்கஞ்சியும் இருதரப்பு பிணக்குகளையும் மூடித்திரையிட்டு இனித்துக்கொண்டிருக்கும்.///

இப்பவும் ஊர்ப்பக்கமெல்லாம் அப்படித்தான் இருக்காங்க தல..இந்த சென்னை மாதிரி பட்டினத்துல நீன்க சொன்ன மாதிரி எதிர் வீட்டிலிருப்பவன் யாரெனத்தெரிவதில்லை...அருமையா சொல்லிருக்கீங்க தல

ஈரோடு கதிர் said...

//அடுத்தவீட்டில் குடித்தனம் நடத்துவது நமது உறவினர்தான் என்றறிய ஏதாவது திருமணவீடுகள் காரணமாயிருக்கும்//

இஃகிஃகி

இந்த கல்யாணத்துல என்ன வகையான சாப்பாடுன்னு பார்க்கவே நேரம் பத்தறதில்லை..

இதுல எந்த வீட்ல சொந்தக்காரங்க இருக்காங்கன்னு வேற கவனிக்கனுமா?

நல்ல பகிர்வு பாலாசி

தாராபுரத்தான் said...

நகரத்தில் பூட்டிய வீட்டின உள்ளேயே குழந்தைகளை வெளையாடச் சொல்லி வேடிக்கை பார்க்கிறார்கள்.என்ன செய்வது.நல்ல பதிவு.

ரிஷபன் said...

பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யாரென்று தெரிந்துகொள்ள எவருக்கும் ஆர்வமோ, ஆவலோ இருப்பதில்லை.

உண்மை

நேசமித்ரன் said...

நல்ல பதிவு

Unknown said...

நல்ல பகிர்வு. இதெல்லாம் பட்டணங்களில் செத்து நாள் பல ஆகிவிட்டது.

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை நண்பா..
அழகாகச் சொன்னீர்கள்...
மனிதர்கள் இயந்திரங்களாக மாறிவருகிறார்கள்.........

vasu balaji said...

என்னமா எழுதற சாமி:). hats off

பழமைபேசி said...

மெருகு கூடின எழுத்து நடை......

//நாகரீகமெனும் //

நாகரிகமெனும்...

க.பாலாசி said...

//பழமைபேசி said...
மெருகு கூடின எழுத்து நடை......
//நாகரீகமெனும் //
நாகரிகமெனும்..//

நன்றி அய்யா... திருத்தினேன்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல பதிவு பாலாசி. நாகரிடம் என்னும் அரிதாரம் தான் இன்றைய இறுக்கத்திற்கே காரணம் :(

நசரேயன் said...

ம்ம்ம்

அண்ணாமலையான் said...

முறையா சொன்னீங்க தல

ஹேமா said...

நாகரீகம் கூடியதால் வாழ்வு அசுர வேகம்.வேலியில்லாமல் ஓட்டையாய் கிடந்த இடத்தில் மதில்.மனித மனங்களுக்குள்ளும்தான்.
நல்ல பதிவு பாலாஜி.

கண்மணி/kanmani said...

well said

கார்த்திகைப் பாண்டியன் said...

ஏன்..?
நியாயமான கேள்விகள்..

சிநேகிதன் அக்பர் said...

தரமான எழுத்து பாஸ்.

மனதை கவர்ந்தது.

சீமான்கனி said...

நல்லா பகிர்வு பாலாசி...னேசம்தே...நமக்கும் அதுல பங்கு உண்டுதானே...நல்லதே நடக்கும்...

Chitra said...

தினம்தினம் காலையில் முகத்தில் பூசிக்கொள்ளும் முகப்பூச்சியினூடே அவ்வப்போது நமது நாகரிகமெனும் அரிதாரத்தையும் சேர்த்திட்டுக்கொள்கிறோம், எவரும் காணாதவாறு.

............ true. யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை. அதான் வேதனையான விஷயம்.

ப்ரியமுடன் வசந்த் said...

வந்ததை வாங்கி வெந்ததை உள்நிரப்புவதில் இருக்கும் வேகமும் தாகமும் உறவினை பெருக்குவதிலோ, நட்புணர்வினை மேம்படுத்துவதிலோ மிகுதியாக செலவிடப்படுவதில்லை.//

நெசந்தேன் பாலாசி... சீனியர் சிட்டிசன்கள் இருக்குறவரைக்கும் இருக்கும் இந்த பழக்கம் அவிங்க சொல்லிக்குடுக்குறதுதேன் இந்த பழக்கம் என்ன செய்யலாம் அவிய்ங்கள?

ரைட்டிங் சூப்பர்ப்...

தமிழ் அமுதன் said...

நல்ல பகிர்வு பாலாசி

அம்பிகா said...

\\பக்கத்துவீட்டில் ஒரு விசேசமென்றால், அடுத்தவீட்டில் பந்திப்பாய்கள் விரிக்கப்பட்டிருக்கும்.\\


\\வந்ததை வாங்கி வெந்ததை உள்நிரப்புவதில் இருக்கும் வேகமும் தாகமும் உறவினை பெருக்குவதிலோ, நட்புணர்வினை மேம்படுத்துவதிலோ மிகுதியாக செலவிடப்படுவதில்லை\\.

\\இலக்கில்லா திசையில் உயிர்மட்டும் தாங்கி உயரஉயர பறக்கும், ஒரு ஊர்க்குருவியாக நானும்.\\

அருமையான இடுகை. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.

பா.ராஜாராம் said...

மிக அருமையான நடையில் மிக,மிக அருமையான பதிவு!

கலகலப்ரியா said...

ரொம்ப அருமையான எழுத்து... நடை... அசத்தல் பதிவு பாலாசி...

திவ்யாஹரி said...

நல்ல பதிவு பாலாசி...

பாபு said...

//இன்றென் நிலைமையை என்வீட்டுப்பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டுப்போவதில் என்மனமும் சங்கடங்கொள்ளத்தான் செய்கிறது. //

வேதனையான விஷயம்

வால்பையன் said...

ப்ளாகில் நட்பு பாராட்டுவது அதிகமாயி, பழைய நட்புகள் தொலைந்து கொண்டிருக்கிறது!

நேற்று தான் பழைய நண்பனை ஒருவனை அழைத்து சென்று பீர் வாங்கி கொடுத்தேன்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ அந்த காலத்தை நினைவுபடுத்திட்டீங்க...கஞ்சி வடிச்சதும் என் தோழி என் வீட்டுக்கு கொண்டுவந்து தருவா.. தலை அலசவோ, சேலைக்கு போடவோ..

நல்லவேளை தில்லியில் பில்டிங்கின் ஆறுவீட்டில் ஒரு வீடாவது அடைபடாத கதவுகளும் அக்கறையுமா கிடைச்சிருக்கறத நினைச்சு மகிழ்ந்துக்கவேண்டியது தான்..

சுந்தரா said...

மிக அருமையான பதிவு...அவசியமானதும்கூட.

ஆரூரன் விசுவநாதன் said...

மேம்பட்ட எழுத்து நடை, தெளிவான விவரனை, மிக அழகான பதிவு, அவசியமானதும் கூட.......

உங்கள் எழுத்தில் கூடிய மெருகு ஆச்சரியப்பட வைக்கிறது. மகிழ்ச்சியையும் தருகிறது....

வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

நன்றி T.V.ராதாகிருஷ்ணன்

நன்றி Blogger சி. கருணாகரசு

நன்றி Blogger ராமலக்ஷ்மி

நன்றி கேபிள் சார்...

நன்றி Blogger அகல்விளக்கு

நன்றி Blogger D.R.Ashok

நன்றி Blogger முரளிகுமார் பத்மநாபன்
(மிக்க மகிழ்ச்சி நண்பா... வார்த்தையாய் மட்டுமிருக்கக்கூடாது)

நன்றி புலவன் புலிகேசி
(சரிதான் நண்பா...)

நன்றி Blogger ஈரோடு கதிர்
(அதானே.....)

நன்றி Blogger தாராபுரத்தான் அய்யா...
(உண்மைதான்)

நன்றி Blogger ரிஷபன்

நன்றி Blogger நேசமித்ரன்

நன்றி Blogger முகிலன்

க.பாலாசி said...

நன்றி முனைவர்.இரா.குணசீலன்

நன்றி Blogger வானம்பாடிகள்

நன்றி Blogger பழமைபேசி said...

நன்றி Blogger ச.செந்தில்வேலன்

நன்றி Blogger நசரேயன்

நன்றி Blogger அண்ணாமலையான்

நன்றி Blogger ஹேமா

நன்றி Blogger கண்மணி/kanmani

நன்றி Blogger கார்த்திகைப் பாண்டியன்
(நாசூக்கா சொல்லணும்னா பொருள் தேடல்)

க.பாலாசி said...

நன்றி அக்பர்

நன்றி Blogger seemangani

நன்றி Blogger Chitra

நன்றி Blogger பிரியமுடன்...வசந்த்

நன்றி Blogger ஜீவன்

நன்றி Blogger அம்பிகா

நன்றி Blogger பா.ராஜாராம் அய்யா...

நன்றி Blogger கலகலப்ரியா said...

நன்றி Blogger திவ்யாஹரி

நன்றி Blogger பாபு

நன்றி Blogger வால்பையன்
(ஒருத்தருக்குத்தானா???)

நன்றி Blogger முத்துலெட்சுமி/muthuletchumi
(பரவாயில்ல உங்களுக்கு ஒரு வீடாவது கிடைச்சிருக்கு...)

நன்றி Blogger சுந்தரா

நன்றி Blogger ஆரூரன் விசுவநாதன்

பிரேமா மகள் said...

சென்னையில் ரெண்டு வருடமாக இருக்கிறேன். நேற்று என் வீட்டுக்கு பக்கத்து வீட்டினரின் திருமணம். ஆனால் அவர்கள் பெயர் கூட தெரியாது எனக்கு. என்ன சொல்வது?

"உழவன்" "Uzhavan" said...

மிக மிக நல்ல இடுகை பாலாஜி. அருமை

Anonymous said...

இன்றைய நிலையை பதிவாக்கியிருக்கீங்க....
யோசிக்கவைக்கிறது

க.பாலாசி said...

நன்றி பிரேமா மகள்
(நல்லவேளை...)

நன்றி "உழவன்" "Uzhavan"

நன்றி தமிழரசி

priyamudanprabu said...

வந்ததை வாங்கி வெந்ததை உள்நிரப்புவதில் இருக்கும் வேகமும் தாகமும் உறவினை பெருக்குவதிலோ, நட்புணர்வினை மேம்படுத்துவதிலோ மிகுதியாக செலவிடப்படுவதில்லை.//
///////

மனச தொட்டுடீக

க.பாலாசி said...

நன்றி பிரியமுடன் பிரபு

KARTHIK said...

தல வழக்கம் போல நடை வாய்ப்பே இல்ல போங்க

பதிவு அருமை

நானும் நீங்களும் கூட ஒரு வகை பக்கத்துவீடுதான் தல :-))

க.பாலாசி said...

//கார்த்திக் said...
தல வழக்கம் போல நடை வாய்ப்பே இல்ல போங்க
பதிவு அருமை
நானும் நீங்களும் கூட ஒரு வகை பக்கத்துவீடுதான் தல :-))//

நன்றிங்க தலைவரே...நாம ஒரே வீடுதானுங்க...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO