க.பாலாசி: பட்டணத்தி....

Monday, April 26, 2010

பட்டணத்தி....


2005 மாசி மாதம்


‘ம்ம்ம்மா.... சாந்தி வருதும்மா

‘எந்த சாந்தி??


‘அதாம்மா தெருவுக்கு மீனு கொண்டாருமே.. அந்த பட்ணத்தி சாந்திதான்ங்....

‘ஏ.... அப்டியா... அவ பொழச்சிட்டாளா.!!!’

‘ம்ம்... எனக்கும் பாத்தொன்ன ஒண்ணுஞ் சொல்லமுடியலம்மா...

••••••••



‘ஏ.. சாந்தி நல்லாயிருக்கியாடி... ?

‘நல்லாருக்கங்கா... நீ எப்டி இருக்க...

‘ம்ம்... நல்லாயிருக்கன்டி... எப்டிடி பொழச்ச...??

‘ம்ம்.. எப்டியோ பொழச்சிட்டேன்கா... என்னத்த பொழச்சி என்ன பண்றது... ஏன்டா இந்த உசிருன்னு தோணுது...

‘ஏண்டி சலுத்துகிறவ.. எத்தனயோ மக்க கடலோட போச்சு.. நீயாச்சும் உசிரோட வந்திருக்கியேன்னு சந்தோஷப்படுறேன்.. .நீயென்னடான்னா இப்டி சொல்றவ.

‘என்னக்கா பண்றது பெத்த பொண்ணு போச்சு, கட்டுன புருஷன் வலையோட போயிட்டான்ங்... நான் மட்டுமிருந்து.....................

‘ஏ... அழுவாதடி... அழுது என்னாத்த ஆவப்போவுது விடு... எல்லாந் தலவிதின்னு நெனச்சிக்கவேண்டியதுதான்...

‘யாருட்டக்கா சொல்லியழுவுறது. உன்னாட்டமாதிரி யாராச்சும் விசாரிக்கமாட்டாங்களான்னுதான் மனசு கடந்து அடிச்சுக்கிது. எங்கணயாவது இந்த சொமைய எறக்கிவைக்கணும்ல.

‘ஏங்க…. பொண்ணுன்னா... ஒரு சின்ன பொண்ணு இருந்துச்சே அதுவா.?? ஒருநாளு பஸ்ல காரைக்காலுக்கு போறதுக்கு அழச்சிட்டு வந்தீங்களே.... ?? (நான்)

‘ஆமந்தம்பி... அதான்... 3ம்ப்பு படிச்சிகிட்டிருந்துச்சு.. லீவுதான வௌயாண்டுட்டு போவுட்டும்ட்டு வீட்லயே உட்டுட்டு நான் இங்க மீனு கொண்டாந்துட்டேன். கடைசியில.....

‘ஏ... சாந்தி அழாத.... என்ன.... விடு..விடு... சரி... சாப்பிட்டியாடி.... ?

‘ம்ம்... சாப்டங்க்கா... என்னத்தக்கா விடுறது... ஆழாக்கு அரிசியாருந்தாலும் அடுப்புகட்டி வேணுமேக்கா... வடிச்சி வச்ச சோத்த அள்ளிதின்னக்கூட மனசு வல்லியேக்கா...

‘ம்ம்... சரி... உடுடி... ஆமா...இப்ப உங்கூட யாரு இருக்கா.?

‘என்ங் மாமியாக் கெழவிதாங்கா இருக்கு.. இங்கண தெருவுக்கு கருவாடு கொண்டாருமே அதான்..

‘ஓ அதுவா...

‘ம்ம்ம்....

‘நீ கொடுக்குற பப்பாளி பழம்னா உசிரா சாப்டுவாக்கா என்ங் பொண்ணு. இன்னைக்கு பாத்தியா....

‘ம்ம்... என்னத்தடி சொல்றது.. அந்த கடவுள் ஏந்தான் இப்டி எங்மக்கள சோதிக்கரான்னு தெரியல... கூம்...ஆமா இந்த குண்டா ஒருத்தி பெரிய கூடையில மீனு கொண்டாருவாளே அவ இருக்காளா?

‘அது தெரியலக்கா.... அது தரங்கம்பாடில்ல.. எனக்கு தெரியாது.

‘சரி... இப்பல்லாம் வீடுல்லாம் கட்டிக்கொடுக்கறானுவோலே.. ஒனக்கு எதுனாவ்து கொடுத்தாங்களா?

‘கிழிச்சானுவோ. சாவப்பொழச்சி கெடந்தப்ப, அள்ளிப்போட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோவ ஒருத்தனும் வரல. வந்தவனுங்கல்லாம் செத்ததுங்க காதுலு கழுத்துல கடந்ததெல்லாம் களவாண்டிட்டுதான் போனானுவோலே தவர வேறொன்னும் செய்யல. என்ங் பொண்ணு காதுல கடந்த தொங்கட்டானக்கூட உடலக்கா. அது செத்துகெடந்த பனமுட்டுல போயி பாத்தப்ப காதுல இருந்த சதயக்கூட வுட்டுவைக்கல நாசமாப்போறபயலுங்க. வயிறெல்லாம் எறியுதுக்கா.


‘அடிப்பாவி... இப்டில்லாமா சனங்க இருக்குதுங்க....


‘எல்லாரும் இல்ல. சும்மாச்சொல்லக்கூடாது அதுலையும் செலபேரு நல்லா உதவுனாங்க. சோறு தண்ணியில்லாமக்கூட ராத்திரி பவலுன்னு பாக்காம எங்ககூடயே நெறையபேரு கடந்தாங்க... பெறகு வந்தவனுங்கல்லாம் அத செய்யுற இத செய்யுறன்னு செஞ்சிட்டு காசு பாக்குறானுங்க. யாருக்கும் சொந்தம்ல பந்தம்ல நடுத்தெருவுல நின்னுகெடக்கோம். எங்களுக்கு கட்டிகொடுக்குற வீட்லக்கூட அதையும் இதையும் அள்ளிப்போட்டு பூசிட்டு மிச்ச காச சுருட்டிட்டானுவோ சண்டாளப்பயலுங்க...




‘ஆமாடி... இந்த கட்சிக்காரனுவோ பண்ற அழிச்சாட்டியம் தெரிஞ்சதுதானே.. விடு.....

‘ம்ம்... சேரிக்கா மீனு வேணுமா?


‘இல்லடிம்மா இன்னைக்கு வெள்ளிக்கெழம எனக்கு வேண்டாம்...ஞாயித்துக்கெழம நல்லா பெரிய மீனா கொண்டா, வறக்குறமாதிரி... இரு எதுத்தால ரேவதி கேட்டா.. கூப்புடுறேன்.


‘தம்பி ரேவதிய கூப்டு சாந்தி மீனு கொண்டாந்திருக்கான்னு சொல்லு.


•••••••••


‘இல்லம்மா அவங்களுக்கு வேண்டாமா.

‘சரி சாந்தி... நீ நேரமா களம்பு... வெய்ய வந்திடும்...


‘ம்ம்ம்... வர்ரங்கா...


••••••••••




51 comments:

vasu balaji said...

பாவி பாவி இப்புடி கொல்றியே!:((. ஊருக்குள்ள கொண்டு போய்ட்ட சாமி. கையக் குடு

பனித்துளி சங்கர் said...

அய்யயோ !
எனக்கு தமிழே மறந்திரும்பொல இருக்கே ஏலே மக்கா ஏலே இப்படி ?

மீண்டும் வருவேன் .

Jackiesekar said...

பாலாசி என்னாச்சு---

Chitra said...

மனதை நெருடி விட்டது. ம்ம்ம்ம்.....

ரோகிணிசிவா said...

//எங்கணயாவது இந்த சொமைய எறக்கிவைக்கணும்ல.’ //

வியாபாரம் முடியலனாலும் மனுசு நிறைந்து போச்சு சாந்திக்கு !!!!
வார்த்தைகள் தான் பாலாசி வாழ வைக்கறது,காசு பணம் அடுத்த விஷயம்
நல்லா எழுதியிருக்கே!

Ahamed irshad said...

தொட்ருச்சு மனச...

Paleo God said...

//வந்தவனுங்கல்லாம் செத்ததுங்க காதுலு கழுத்துல கடந்ததெல்லாம் களவாண்டிட்டுதான் போனானுவோலே தவர வேறொன்னும் செய்யல. என்ங் பொண்ணு காதுல கடந்த தொங்கட்டானக்கூட உடலக்கா. அது செத்துகெடந்த பனமுட்டுல போயி பாத்தப்ப காதுல இருந்த சதயக்கூட வுட்டுவைக்கல நாசமாப்போறபயலுங்க. வயிறெல்லாம் எறியுதுக்கா.’ //

நிஜம்தான்.. இப்படியும் இருக்கிறார்கள்.

:(((

சத்ரியன் said...

//‘சரி... இப்பல்லாம் வீடுல்லாம் கட்டிக்கொடுக்கறானுவோலே.. ஒனக்கு எதுனாவ்து கொடுத்தாங்களா?’

‘கிழிச்சானுவோ. சாவப்பொழச்சி கெடந்தப்ப, அள்ளிப்போட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோவ ஒருத்தனும் வரல. வந்தவனுங்கல்லாம் செத்ததுங்க காதுலு கழுத்துல கடந்ததெல்லாம் களவாண்டிட்டுதான் போனானுவோலே//

ஏழைங்க வயித்தெரிச்சல் சும்மாவா வுட்ரும், உடுங்க.. அவனுகளும் ஒரு நாளைக்கு புளுத்துக்கினு நாறிப்போவானுக.

சுனாமி காட்சி மனக்கண்ணுல ஓடுதே சாமி.

ஈரோடு கதிர் said...

என்ன சொல்றது...

அப்படியே கண் முன்னால நிக்குது பாலாசி.... அந்த மனுசங்களோட கஷ்டம்

Unknown said...

கொடுமைங்க..

நேசமித்ரன் said...

Good write up

keep going !!!

பிரபாகர் said...

சோகத்தை சொல்லி உள்ளுள் ஏகமாய் சோகம்...

பிரபாகர்...

r.v.saravanan said...

நல்லாஎழுதியிருகீங்க பாலாசி

க ரா said...

அய்யா பாலாசி அப்படியே மனச கொன்னுடிச்சு இந்த கதை.

ராமலக்ஷ்மி said...

மிக நன்று பாலாசி.

மணிஜி said...

நல்லாயிருக்கு பாலாசி(க.)

பத்மா said...

நானும் இதெல்லாம் பார்த்தேன் பாலாசி.
நேற்று ஒழுக மங்கலம் போனோம் . மொந்தம்பழம் ஏலம் எடுத்தோம் . ரொம்ப நாளுக்கப்புரம் எலெக்ட்ரிக் காவடி,பாடை காவடிலாம் பார்த்தேன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நீங்கள் கூறும் திருமலைராயன் பட்டிணத்தைச் சேர்ந்த என் நண்பன் ஒருவன் சொல்லிய சுனாமி நிகழ்வைக் கேட்டு அழுதிருக்கேன். இப்போ.. இந்த இடுகை.

சாந்திக்கு மன அமைதி கிடைக்க வேண்டுவோம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அப்படியே கண் முன்னால நிக்குது பாலாசி.... அந்த மனுசங்களோட கஷ்டம்//

yes Balaji

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

கண்ணகி said...

இயல்பான் பேச்சும் நடையும் அப்ப்டியே நேரில் கண்ட துயரம் போல் தைக்கிறது...

சீமான்கனி said...

எதார்த்தமான உரையாடல் பகிர்வு அருமை பாலாசி...அந்த நிகழ்வு மீண்டும் மனசுல வந்து நிக்குது...புது வீடு நல்லா இருக்கு ...வாழ்த்துகள்...

கலகலப்ரியா said...

அருமை பாலாசி...

அரசூரான் said...

நன்றாக பதிவிட்டிருக்கிறீர்கள் பாலாசி. சிட்டிசன் படத்தில் வருவதுபோல் சின்னங்குடி முற்றிலுமாக தமிழக வரை படத்திலிருந்து அழிந்தது என்று நண்பர்கள் சொன்னார்கள்.

ஹேமா said...

என்ன பாலாஜி...திரும்பவும் சுனாமியா !

ஒரு புதுவித அழகுதமிழ்.

இவ்வளவும் விசாரிச்சவங்க மீன் வாங்கியிருக்கலாம் !

நசரேயன் said...

ஒண்ணும் சொல்ல முடியலை..

தாராபுரத்தான் said...

பேசி பேசி பொழப்பை கெடுத்து பூட்டாங்களே...

செந்தில் நாதன் Senthil Nathan said...

நல்ல நடை...

அழுத்தமான வார்த்தைகள்...

ஒரு குறும்படத்துக்கான அத்தனையும் இருக்கு...

பாலாசி..கைய குடுங்க...

AkashSankar said...

உணர்வுபூர்வமான நிகழ்வு...நல்ல பதிவு... எதாச்சும் செய்யனுமே இவங்கள மாதிரி துன்பப்படுகிறவர்களுக்கு...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அருமையான நடை..
மனசு கனத்துவிட்டது..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு பாலாசி..

Anonymous said...

கதைக்கேற்ற மொழி நடை இது தான் பாலாசிக்கு கை வந்த கலையாச்சே....

பிரேமா மகள் said...

மிக எதார்த்தமான கதை..

நாம் அன்றாடம் பார்க்கும் பெண்ணொருத்திக்குள் புதைந்து கிடக்கும் சோகத்தை, எல்லோர் மனதிலும் பதிவு செய்திருக்கிறீர்கள்..

அழகான கடல்தான் சில சமயம் அழவைக்கிறது.. பிரியமானவர்கள் ஒரு முறை இறந்துவிடுகிறார்கள்... அவர்கள் நினைவில் தினம் தினம், செத்துப் பிழைக்கிறோம் நாம்..

சிநேகிதன் அக்பர் said...

மனதை தொட்ட பதிவு.

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
பாவி பாவி இப்புடி கொல்றியே!:((. ஊருக்குள்ள கொண்டு போய்ட்ட சாமி. கையக் குடு//

நன்றிங்க அய்யா..

//Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அய்யயோ !
எனக்கு தமிழே மறந்திரும்பொல இருக்கே ஏலே மக்கா ஏலே இப்படி ?
மீண்டும் வருவேன் .//

வாங்க சங்கர் நன்றி...

//Blogger ஜாக்கி சேகர் said...
பாலாசி என்னாச்சு---//

சும்மாதாங்க... கொஞ்சம் பழச நினைச்சுப்பாத்தேன்... நன்றி...

//Blogger Chitra said...
மனதை நெருடி விட்டது. ம்ம்ம்ம்.....//

எனக்கும்தாங்க... சித்ரா.. நன்றி...

//Blogger ரோகிணிசிவா said...
வியாபாரம் முடியலனாலும் மனுசு நிறைந்து போச்சு சாந்திக்கு !!!!
வார்த்தைகள் தான் பாலாசி வாழ வைக்கறது,காசு பணம் அடுத்த விஷயம்
நல்லா எழுதியிருக்கே!//

நன்றிங்கா... சரியா சொன்னீங்க..

//Blogger அஹமது இர்ஷாத் aid...
தொட்ருச்சு மனச...//

வாங்க அஹமது... நன்றி...

//Blogger 【♫ஷங்கர்..】║▌│█│║││█║▌║ said...
நிஜம்தான்.. இப்படியும் இருக்கிறார்கள்.//

ஆமங்க... நன்றி...

//Blogger ’மனவிழி’சத்ரியன் said...
ஏழைங்க வயித்தெரிச்சல் சும்மாவா வுட்ரும், உடுங்க.. அவனுகளும் ஒரு நாளைக்கு புளுத்துக்கினு நாறிப்போவானுக.
சுனாமி காட்சி மனக்கண்ணுல ஓடுதே சாமி.//

உண்மைதானுங்க.. நன்றிங்க சத்ரியன்...

//Blogger ஈரோடு கதிர் said...
என்ன சொல்றது...
அப்படியே கண் முன்னால நிக்குது பாலாசி.... அந்த மனுசங்களோட கஷ்டம்//

ம்ம்ம்... நன்றிங்க...

//Blogger முகிலன் said...
கொடுமைங்க..//

ஆமங்க... நன்றி...

//Blogger நேசமித்ரன் said...
Good write up
keep going !!!//

நன்றி.. நேசமித்ரன் அய்யா...

க.பாலாசி said...

//பிரபாகர் said...
சோகத்தை சொல்லி உள்ளுள் ஏகமாய் சோகம்..//

நன்றிங்கண்ணா...

//Blogger r.v.saravanan said...
நல்லாஎழுதியிருகீங்க பாலாசி//

நன்றிங்க சரவணன்..

//Blogger இராமசாமி கண்ணண் said...
அய்யா பாலாசி அப்படியே மனச கொன்னுடிச்சு இந்த கதை.//

ம்ம்... நன்றிங்க கண்ணன்...

//Blogger ராமலக்ஷ்மி said...
மிக நன்று பாலாசி.//

நன்றிங்கா...

//Blogger மணிஜீ...... said...
நல்லாயிருக்கு பாலாசி(க.)//

நன்றிங்க ஜீ..

//Blogger padma said...
நானும் இதெல்லாம் பார்த்தேன் பாலாசி.
நேற்று ஒழுக மங்கலம் போனோம் . மொந்தம்பழம் ஏலம் எடுத்தோம் . ரொம்ப நாளுக்கப்புரம் எலெக்ட்ரிக் காவடி,பாடை காவடிலாம் பார்த்தேன்//

அட.. மொந்தம்பழம் ஏலம், பலாப்பழம் ஏலம்லாம் மறக்கமுடியுங்களா.... ரொம்ப நல்லதுங்க... நன்றி....

//Blogger ச.செந்தில்வேலன் aid...
நீங்கள் கூறும் திருமலைராயன் பட்டிணத்தைச் சேர்ந்த என் நண்பன் ஒருவன் சொல்லிய சுனாமி நிகழ்வைக் கேட்டு அழுதிருக்கேன். இப்போ.. இந்த இடுகை.
சாந்திக்கு மன அமைதி கிடைக்க வேண்டுவோம்.//

ஆமங்க.. செந்தில்வேலன்... நன்றி...

க.பாலாசி said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...
yes Balaji//

நன்றிங்க சார்...

//Blogger கண்ணகி said...
இயல்பான் பேச்சும் நடையும் அப்ப்டியே நேரில் கண்ட துயரம் போல் தைக்கிறது...//

நன்றிங்க கண்ணகி...

//Blogger seemangani said...
எதார்த்தமான உரையாடல் பகிர்வு அருமை பாலாசி...அந்த நிகழ்வு மீண்டும் மனசுல வந்து நிக்குது...புது வீடு நல்லா இருக்கு ...வாழ்த்துகள்...//

நன்றிங்க சீமாங்கனி...

//Blogger கலகலப்ரியா said...
அருமை பாலாசி...//

நன்றிங்கா...

//Blogger அரசூரான் said..
நன்றாக பதிவிட்டிருக்கிறீர்கள் பாலாசி. சிட்டிசன் படத்தில் வருவதுபோல் சின்னங்குடி முற்றிலுமாக தமிழக வரை படத்திலிருந்து அழிந்தது என்று நண்பர்கள் சொன்னார்கள்.//

ரொம்ப அழிஞ்சி போவலைங்க.. இன்னும் கொஞ்ச சனம் இருக்குதுங்க... நன்றி...

//Blogger ஹேமா said...
என்ன பாலாஜி...திரும்பவும் சுனாமியா !//

திரும்பவும் இல்லைங்க..வேண்டாம் அந்த கொடுமை... முன்னாடி நடந்ததன் நினைவு அவ்வளவுதான்...

// ஒரு புதுவித அழகுதமிழ்.
இவ்வளவும் விசாரிச்சவங்க மீன் வாங்கியிருக்கலாம் !//

ம்ம்ம்... நன்றிங்க... ஹேமா...

//Blogger நசரேயன் said...
ஒண்ணும் சொல்ல முடியலை..//

நன்றிங்க நசரேயன்..

//Blogger தாராபுரத்தான் said...
பேசி பேசி பொழப்பை கெடுத்து பூட்டாங்களே...//

வாங்க அய்யா... வணக்கம்.. எல்லாம் ஒரு ஆறுதல்தான்...

//Blogger செந்தில் நாதன் Senthil Nathan said...
நல்ல நடை...
அழுத்தமான வார்த்தைகள்...
ஒரு குறும்படத்துக்கான அத்தனையும் இருக்கு...
பாலாசி..கைய குடுங்க...///

நன்றிங்க செந்தில்நாதன்..

//logger ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு.. said...
உணர்வுபூர்வமான நிகழ்வு...நல்ல பதிவு... எதாச்சும் செய்யனுமே இவங்கள மாதிரி துன்பப்படுகிறவர்களுக்கு...//

நன்றிங்க...

க.பாலாசி said...

//பட்டாபட்டி.. said...
அருமையான நடை..
மனசு கனத்துவிட்டது..//

நன்றிங்க பட்டாபட்டி...

//Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...
நல்லா இருக்கு பாலாசி..//

வாங்கக்கா... நன்றி...

//Blogger தமிழரசி said...
கதைக்கேற்ற மொழி நடை இது தான் பாலாசிக்கு கை வந்த கலையாச்சே....//

நன்றிங்கக்கா...

//Blogger பிரேமா மகள் said...
மிக எதார்த்தமான கதை..
நாம் அன்றாடம் பார்க்கும் பெண்ணொருத்திக்குள் புதைந்து கிடக்கும் சோகத்தை, எல்லோர் மனதிலும் பதிவு செய்திருக்கிறீர்கள்..
அழகான கடல்தான் சில சமயம் அழவைக்கிறது.. பிரியமானவர்கள் ஒரு முறை இறந்துவிடுகிறார்கள்... அவர்கள் நினைவில் தினம் தினம், செத்துப் பிழைக்கிறோம் நாம்..//

வாம்மா... நன்றி...

//Blogger அக்பர் said...
மனதை தொட்ட பதிவு.//

நன்றி அக்பர்....

அம்பிகா said...

இதைப் போல் எத்தனை சோகங்கள்...
கொடுமையான நிகழ்வு.

"உழவன்" "Uzhavan" said...

பல விஷயங்களை எளிய உரையாடலின் மூலம் சொல்லிவிட்டீர்கள்.

காமராஜ் said...

நேற்றே படித்துவிட்டேன் மனசு கனமாக இருந்தது. வீட்டுக்கருகில் இரண்டுபேர் பேசிக்கொண்டிருக்கும் ஒலிப்போல இன்னும் அந்த துக்க வார்த்தைகள் கேட்டுக்கொண்டே இருக்கு பாலாஜி.

ரிஷபன் said...

எல்லாரும் இல்ல. சும்மாச்சொல்லக்கூடாது அதுலையும் செலபேரு நல்லா உதவுனாங்க. சோறு தண்ணியில்லாமக்கூட ராத்திரி பவலுன்னு பாக்காம எங்ககூடயே நெறையபேரு கடந்தாங்க...

இந்த வரிகளில் இன்னமும் உயிர்த்திருக்கிறது மானுடம்!

ஆரூரன் விசுவநாதன் said...

மிக அழகாக வரைந்திருக்கிறீர்கள் பாலாசி......எழுதியிருக்கிறீர்கள் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை....

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

Thenammai Lakshmanan said...

பகிர்வில் துன்பம் குறைந்து இருக்கும் பாலாசி அதுதான் தேவை எல்லோருக்கும்

க.பாலாசி said...

//அம்பிகா said...
இதைப் போல் எத்தனை சோகங்கள்...
கொடுமையான நிகழ்வு.//

ஆமங்க அம்பிகா... நன்றி வருகைக்கும்...

//Blogger "உழவன்" "Uzhavan" said...
பல விஷயங்களை எளிய உரையாடலின் மூலம் சொல்லிவிட்டீர்கள்.//

நன்றிங்க உழவன்...

//Blogger காமராஜ் said...
நேற்றே படித்துவிட்டேன் மனசு கனமாக இருந்தது. வீட்டுக்கருகில் இரண்டுபேர் பேசிக்கொண்டிருக்கும் ஒலிப்போல இன்னும் அந்த துக்க வார்த்தைகள் கேட்டுக்கொண்டே இருக்கு பாலாஜி.//

நன்றி அய்யா...

//Blogger ரிஷபன் said...
இந்த வரிகளில் இன்னமும் உயிர்த்திருக்கிறது மானுடம்!//

உண்மைதானுங்க ரிஷபன்... நன்றி...

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
மிக அழகாக வரைந்திருக்கிறீர்கள் பாலாசி......எழுதியிருக்கிறீர்கள் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை....
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்//

மிக்க நன்றிங்க சார்...

//Blogger thenammailakshmanan said...
பகிர்வில் துன்பம் குறைந்து இருக்கும் பாலாசி அதுதான் தேவை எல்லோருக்கும்//

உண்மைங்க... நன்றிங்க தேனம்மை....

'பரிவை' சே.குமார் said...

மனசுல வேதனையை விதைத்துச் செல்லும் கதை.

எழுதியிருக்கும் நடை அருமை.

உண்மைகள் பல உறைந்து கிடக்கிறது.

'பரிவை' சே.குமார் said...

மனசுல வேதனையை விதைத்துச் செல்லும் கதை.

எழுதியிருக்கும் நடை அருமை.

உண்மைகள் பல உறைந்து கிடக்கிறது.

*இயற்கை ராஜி* said...

அழுத்தம். அருமை

அன்புடன் நான் said...

மனம் கணக்கிறது.... பாலாசி....

அந்த அவலத்திலேயும் அரசியல் பண்ணின பன்றிகளை என்ன செய்ய?

க.பாலாசி said...

//சே.குமார் said...
மனசுல வேதனையை விதைத்துச் செல்லும் கதை.
எழுதியிருக்கும் நடை அருமை.
உண்மைகள் பல உறைந்து கிடக்கிறது.//

நன்றிங்க சே.குமார்...

//Blogger *இயற்கை ராஜி* said...
அழுத்தம். அருமை//

நன்றிங்கா...

//Blogger சி. கருணாகரசு said...
மனம் கணக்கிறது.... பாலாசி....
அந்த அவலத்திலேயும் அரசியல் பண்ணின பன்றிகளை என்ன செய்ய?//

குட்டையில் கல்லெறிவதில் பலனில்லையே....

நன்றிங்க கருணாகரசு...

அன்புடன் மலிக்கா said...

படிச்சதும் மனசு
படப்படக்குது
பாடாய் படுது
பாலாஜி..

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO