க.பாலாசி: இதாங்க நடந்துச்சு....

Tuesday, May 11, 2010

இதாங்க நடந்துச்சு....‘ஏன்டி புள்ளையப்போட்டு அடிக்கிறவ.?’

‘ம்க்கும்... புள்ளைக்கொண்ணுன்னா வந்திடுவீங்களே... துண்ட முறுக்கி தோள்ல போட்டுகிட்டு’

‘நீ..இங்க வாராசா.. ஏங் அம்மா அடிக்கிறா?’

‘ஆமா... அப்டியே கேட்டாளும் சொல்லவாப்போவுது. எங்கிட்டன்னா வாயடிக்கிறதப்பாரு...’

‘சரிடி... என்னாப்ப....??’

‘ங்ங்ங்.... காலு மொலைச்சிடுச்சுல்ல தொரைக்கு... கீழத்தெருலேர்ந்து மேலத்தெருவுக்கு வெள்ளாட களம்பிட்டாரு.’

‘அதுக்கேன்டி அலுத்துக்கிறவ. புள்ளைங்கன்னா வீட்டுக்குள்ளறயே பொத்திப்பொத்தியா வச்சிக்கமுடியும். அங்கணஇங்கண போயீ வெள்ளாடத்தானடி செய்யுங்க... அதுக்குப்போயி பெரிய இவளாட்டம்... ’

‘நீங்க இப்டியே சப்போட்டு பண்ணி பேசுங்க.. இப்ப இருக்குற மேலத்தெரு பசங்கள்லாம் சரியில்ல... அதுங்கள்ட பேசிப்பேசி... இப்ப இதுவும் எதுத்துப்பேச ஆரம்பிச்சிடுச்சி... ’

‘சரி வுடு... எல்லாம் சரியாப்போயிடும்...’

‘க்க்கும்... இப்டிச்சொல்லுற வாயித்தான்... நாளைக்கு கண்ணுகுட்டி வளத்த கழுசடயப்பாருன்னு சொல்லும். அப்ப வச்சிக்கிறேன் உங்கள... ’

‘அடிப்போடீ... மொட்டத்தலைக்கும் மொழங்காலுக்கும் இப்ப முடிச்சிப்போடுறவ. வளப்புங்கறது இதுயில்ல தெரிஞ்சிக்க...’

‘ஆமா... நாவொன்னும் தெரியாம கெடக்கேங்... நீங்க வாங்க சொல்லிக்கொடுக்க... ’

‘அடியே என்னாடி... நானும் பாக்கிறவ சத்தம் ஓவராப்போவுது...பாத்துக்க..’

‘அப்டியே உம்மகிட்ட சத்தம்போட்டுட்டாலும் அடங்கிப்போயிடுவீரு... பேச வந்துட்டாரு.. பேச்சு.. போய்யா சும்மா... ’

‘ஏய்... வாய மூடிட்டு..மொதல்ல.. சும்மாயிருடி...’‘எதுச்சொன்னாலும் அப்டியே அடக்கிடுங்க... குடும்பத்துக்கே இதே பொழப்பாப்போச்சு..’

‘ஏய்..என்னய எதுனாச்சும் சொல்லு எங்குடும்பத்த சொல்லாத...ஆமா... ’

‘யோ..போயா.. உங்குடும்பத்தப்பத்தி எனக்கு தெரியாதா... எங்கப்பன் பேச்ச கேட்காம நான் உன்னத்தான் கட்டுவன்னு அடம்புடுச்சி கட்டுனனுல்ல.. எனக்கு இதும்வேணும், இன்னமும் வேணும்..’

‘அதுமாதிரிதான்டி நானும், ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா... எந்தலையெழுத்து உன்ன கட்டிகிட்டு மாரடிக்க வேண்டிகெடக்கு...’

‘ஆமா சும்மா கூட்டிட்டு வந்தமாதிரி பேசுற.. 15 பவுனு நகய எப்பன்ட விடாப்புடியா வாங்குணப்ப இந்த மாரு அடிச்சுக்கலையா... ’

‘அடியே எதுத்து எதுத்து பேசுறவ... அப்பறம் போட்டேன்னு வய்யி... தாங்க மாட்ட..’

‘ஆமாய்யா.. என்னய எப்பன் அதுக்குத்தான் பெத்து உட்ருக்கான்... அடிப்ப நீயி...??!!!’

(ப்ப்ப்ளார்.............)

‘ஆத்தாடி.....யோவ்... அடிச்சிட்டில்ல... இத்தன நாளு இல்லாம கைய நீட்ரளவுக்கு ஆயிட்டீல்ல.. இனிமே உங்கூட வாழமுடியாதுய்யா... நான் எப்பன் வீட்டுக்கு களம்புறேன்.’

‘போடீ...போடீ.... இவ இல்லன்னா வாழமுடியாது பாரு... பெரிய இவ... ’

‘ஆமாய்யா... இப்ப ஒனக்கு தெரியாது. நாளைக்கு எவடா கொஞ்சம் தண்ணி காச்சி ஊத்துவான்னு தெருவுல நிப்ப பாரு... அப்பதான் தெரியும்... ’

‘அடிப்போடீ.. ஆனா அந்த மடம்... ஆவாட்டிப்போனா சந்தமடம்.... ’

‘நாங்களம்புறன்ய்யா... நாளபின்ன எப்பன் வீட்டுக்கு வருவீல்ல .. சமாதானம் பேசிட்டு...அப்ப வச்சிக்கிறேன் உன்னய... ’

‘பூன கண்ண மூடுனா பூலோவம் இருண்டுடாதிடீ.. தெரிஞ்சிக்க... நாங் ஒருக்காலும் வரமாட்டேன்... ’

‘அதையும்தான் பாப்போம்...அப்பனும் புள்ளயுமா கெடங்க... ’

•••••••••

‘அம்மே..... அம்மே.......... எனக்கு அம்மா வேணும்...ம்ம்ம்....ம்ம்ம்..........’

‘என்ன நொம்மே... அதான் போயிட்டாள்ல.... எல்லாம் உன்னால... இனிமே மேலத்தெருவுக்கு வெள்ளாட போவ நீயி.... எங்க அந்த குச்சி.....

‘(போடு... 1.......2...........3...........)’

‘அவ்வ்வ்வ்வ்வ்வ்........................................... ’
66 comments:

அகல்விளக்கு said...

ஸ்டார்ட் மீஜிக்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

vasu balaji said...

எழுத்துலயே ஒரு குடும்பத்த காட்டிட்டியே ராசா! என்னப்பனே! சிரிச்சி மாளல:))

அகல்விளக்கு said...

//என்ன நொம்மே... அதான் போயிட்டாள்ல.... எல்லாம் உன்னால... இனிமே மேலத்தெருவுக்கு வெள்ளாட போவ நீயி.... எங்க அந்த குச்சி..... //


Youuuuu toooooo Naina.........

ஈரோடு கதிர் said...

எய்ய்ய்ய்யா...

ஊருக்குப் போனியே.... சரி

அப்புறம் என்ன பொண்டாட்டிகிட்ட கோவிச்சிக்கினு வந்துட்டியா!!!

அடி உனக்குத்தான் உழுந்துச்சா

dheva said...

சின்ன பயலால எவ்ளோ பிரச்சினை...! பாலாசி.... நீ கல்யாணம் பண்ணுடி.....உனக்கு இருக்கு! நம்ம ஊரு (தஞ்சாவூருதேன்..) வழக்கு சுப்பரப்பு!

பத்மா said...

பாவம் பாலா.அந்த பிள்ளை .மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி தான் .
சண்டை செம கலக்கல்

பத்மா said...

கதிர் !பொண்டாட்டி கிட்ட கோச்சுகிட்டா?
என்ன பாலா சொல்லவே இல்ல?
லட்டு கொடுக்கன்னு கதை விட்டீங்களா ?

பத்மா said...

ஈரோட்டு காரங்க எல்லாம் ஒரே சமயத்துல பதிவு போடுவாங்களோ?

க ரா said...

ஹா. ஹா. ஹா. கலக்கல் பாலாசி.

கண்ணகி said...

சிரிச்சு......சிரிச்சு....

Ashok D said...

இவ்வளவு டயலாக்ஸா... ஒரு மூனு நாளு வரிகளிலேபோதுமே கோர்ட்வரைக்கும் போறதுக்கு

’ஆண் அடங்கிதான் போகனும்’ என்கிற உண்மையை பதிவுல மறைமுகமா வைச்சியிருக்கீங்க பாருங்க... அங்கதான் நிக்கறீங்க.. பாலாசி ஸ்ராங்கா :))

இப்படிக்கு
அடக்கிவாசிக்கும் பரிதாப ஆண்கள் சங்கம் :(

பத்மா said...

அசோக்கு அண்ணன் நீங்களா அடக்கி வாசிக்கறது? சொன்னாங்க

Chitra said...

‘ஆமாய்யா... இப்ப ஒனக்கு தெரியாது. நாளைக்கு எவடா கொஞ்சம் தண்ணி காச்சி ஊத்துவான்னு தெருவுல நிப்ப பாரு... அப்பதான் தெரியும்... ’

‘அடிப்போடீ.. ஆனா அந்த மடம்... ஆவாட்டிப்போனா சந்தமடம்.... ’


....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... சிரிச்சு முடியல.

Ashok D said...

//அசோக்கு அண்ணன் நீங்களா அடக்கி வாசிக்கறது? சொன்னாங்க//

பத்மாக்கா.. நம்ம வீரமான பின்னூட்டங்கள்லாம் பாத்து ஏமாந்துடாதீங்க..

வீட்ல ’அவங்க பேச நான் கேக்க’ அவ்வளவுதான் :(

பிரபாகர் said...

எங்க சாமி இத பார்த்தீரு! அப்படியே பின்னி பெடலெடுத்திருக்கிறீரு!

அருமை இளவல்!

பிரபாகர்...

க.பாலாசி said...

//D.R.Ashok said...
பத்மாக்கா.. நம்ம வீரமான பின்னூட்டங்கள்லாம் பாத்து ஏமாந்துடாதீங்க..
வீட்ல ’அவங்க பேச நான் கேக்க’ அவ்வளவுதான் :(//

அவங்க பேச நான் கேக்க... நான் கேக்க அவங்க பேச...அவங்க பேச நான் கேக்க... இப்படித்தான சொல்றீங்க....

Radhakrishnan said...

மேலத்தெரு என்ன, வீட்டுக்குள்ள இருக்கு... அசத்தல் பாலாசி

Ashok D said...

//அவங்க பேச நான் கேக்க... நான் கேக்க அவங்க பேச...அவங்க பேச நான் கேக்க... இப்படித்தான சொல்றீங்க..//

அதான் ஷாட்டா சொல்லிட்டேனே..அப்புறமென்ன விளக்கமெல்லாம்...

அரசியல்ல இதெல்லாம் சகஜம்மப்பா :)))

அன்புடன் நான் said...

கலக்கல்... கடைசில் செம... ரகல!!!

பத்மா said...

சீனியர் சொன்னா கேட்டுகோங்க பாலா

தமிழ் அமுதன் said...

;;)))

அரசூரான் said...

கடைசி வரைக்கும் கீழத்தெருவுலயும் மேலத்தெருவுலயும் என்ன நடந்ததுன்னு சொல்லவே இல்லியே....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

வீட்டுக்குள் நடக்கும் சண்டையைப் படித்து சிரிப்பு வந்தாலும், இந்தச் சண்டையைப் பார்க்கும் அந்தக் குழந்தையின் மன நிலையையும் எதிர்காலத்தையும் நினைத்தால் பயமாக இருக்கிறது.

Ashok D said...

ம்ம்ம்... நம்ம வந்தாலே... சிலர் ஓடிற்ராங்க... இந்த அகல்விளக்குக்கு என்ன ஆச்சு...

அதானே...

பா.ராஜாராம் said...

:-))

நல்லாருக்கு பாலாஜி.

மகனே அசோக்,

// வீட்ல ’அவங்க பேச நான் கேக்க’ அவ்வளவுதான் :(//

ப்ரோபைல இருக்கிற போட்டோவுல பேராண்டி நிற்பது நினைவு வந்துச்சு.

ஒன்னும் தப்பு இல்ல, மகன்ட்ட இருந்தும் கத்துக்கலாம்.

உங்கட்ட இருந்து நான் கத்துக்கலையா இப்போ. :-))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பாலாசி.. கண் முன்னால ஒரு வீட்டக் காட்டீட்டீங்க.

கடைசியா.. அவங்க அப்பன் பையன் அடிக்கிறது.. :))

Ashok D said...

ஐய்யோ..சாமி.... சித்தப்ஸு வந்தாட்டாருப்பா... ஒடுங்கடா..சாமி..

உடனே..சபைய கலைங்கப்பா...

என்கிட்டயிருந்து கத்துகிட்டும் ஒழுங்கா கவித எழுத மாட்டேன்றிங்களே... சரி சரி போக போக கைகூடும்.. :)))

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஒரு விளம்பரம் தான் நினைவுக்கு வருது. பரிசு வாங்கி வந்த குழந்தை பரிதாபமாக நிற்க, தாயும் தந்தையும் பரம்பரைப் பெருமை பேசி சண்டை இட குழந்தை பாவம் போல் பரிசு வாங்கி வந்ததை நினைவு படுத்தும் விளம்பரம். நன்றாக உள்ளது.

பா.ராஜாராம் said...

//என்கிட்டயிருந்து கத்துகிட்டும் ஒழுங்கா கவித எழுத மாட்டேன்றிங்களே... சரி சரி போக போக கைகூடும்.. :)))//

கட்டுன கை, கட்டுன படி...( சித்தீ... தீ.. தீ... தீ... ) .....(.எங்கிட்டு கவிதை எழுத மகனே.. :-)

இதெல்லாம் சரி...தியேட்டர்ல படத்தை மாத்துங்க பாசு..

பின்னூட்டத்திலேயே காலத்தை ஓட்டாம.. :-)

கலகலப்ரியா said...

=)) superappu..

சீமான்கனி said...

//‘அடிப்போடீ.. ஆனா அந்த மடம்... ஆவாட்டிப்போனா சந்தமடம்.... ’//

உவமைலாம் பயங்கரமா போட்டு பின்னி பெடலேடுக்குரீங்க அப்பு...அன்னகி மனசுல பதிஞ்சது இன்னக்கி பதிவா வந்துருசாக்கும்...சும்மாகாச்சுக்கும்...ஹி..ஹி..சுபெரப்பு...

Romeoboy said...

ஹா ஹா ஹா .. ஜபர் ..

எனது வலைத்தளம் மாற்றப்பட்டு உள்ளது. நேரம் இருப்பின் வந்துசெல்லவும்.

http://romeowrites.blogspot.com/

ஹேமா said...

பாலாஜி...நிறைய அனுபவம்போல !அப்பிடியே வரிக்கு வரி !

ராஜ நடராஜன் said...

மூணு மூஞ்சிய ஒட்ட வச்சுட்டா அசல் பாரதிராஜா கதைவசனம்தான்!

Unknown said...

கண்ணுகுட்டி வளத்த கழுசடயப்பாரு
ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா...
ஆனா அந்த மடம்... ஆவாட்டிப்போனா சந்தமடம்.... ’
‘பூன கண்ண மூடுனா பூலோவம் இருண்டுடாதிடீ

அட ங்கொப்புராண சூப்பரா இருக்கப்பு.

புலவன் புலிகேசி said...

ஜீப்பரு தல...அப்புடியே காட்சில்லாம் கண்ணு முன்ன ஓடிச்சி....

சுந்தரா said...

சிரிச்சு சிரிச்சு...முடியல.

பாவம் அந்தப் புள்ளதான்.ரெண்டு பக்கத்திலேருந்தும் அடி.

பிரேமா மகள் said...

நல்லாயிருக்கற குடும்பத்தில கும்மி அடிச்சிட்டியே அண்ணாச்சி?

Sabarinathan Arthanari said...

நல்லாருக்குங்க பாலாஜி

Anonymous said...

சிரிச்சி வச்சோம்ல....

Admin said...

நல்லாத்தான் எழுதுறிங்க

Ashok D said...

//பின்னூட்டத்திலேயே காலத்தை ஓட்டாம.. :-)//

சித்தப்ஸ் இதான் ஜாலியா ஓடுது..

கவித எழுதறதுன்னா .. மூளையெல்லாம் யூஸ் பண்ண வேண்டியிருக்கு :(

ராமலக்ஷ்மி said...

'இதாங்க நடந்துச்சு'ன்னு ரொம்ப சாதுவா நல்ல புள்ளயாட்டாம் சொல்றீங்களே:)))))!!!

காமராஜ் said...

ஆஹா... பாலாஜி
உரையாடலே கதையாகி,கவிதையாகி,
நகைச்சுவையோடு கொஞ்சம் அறிவும் சொல்லுது.

க.பாலாசி said...

நன்றி அகல்விளக்கு ராசா..

நன்றி வானம்பாடிகள் அய்யா

நன்றி கதிர் அய்யா..

நன்றி தேவா..

நன்றி பத்மா அக்கா..
(கதிர் சும்மா லுல்லுலாயிக்கு சொல்றார்...நம்பாதீங்க)

நன்றி டி.வி.ஆர்..

நன்றி இராமசாமி கண்ணன்..

நன்றி கண்ணகி..

நன்றி அசோக் அண்ணா...

நன்றி சித்ரா....

நன்றி பிரபாகர் அண்ணா...

நன்றி வி. இராதாகிருஷ்ணன்..

க.பாலாசி said...

நன்றி சி.கருணாகரசு

நன்றி அரசூரான்..

நன்றி ஜீவன்

நன்றி முகிலன்
(உண்மைதான்.. ஒரு பரிதாபத்திற்குரிய நிலைமை இக்குழந்தைகளுக்கு...)

நன்றி பா.ராஜாராம்

நன்றி ச. செந்தில்வேலன்

நன்றி நாய்க்குட்டி மனசு

நன்றி கலகலப்பிரியா...

நன்றி சீமாங்கனி

நன்றி ரோமியோ

நன்றி ஹேமா
(புனைவுதாங்க..)

நன்றி ராஜ நடராஜன்...

க.பாலாசி said...

நன்றி தாமோதர் சந்துரு

நன்றி புலிகேசி...

நன்றி சுந்தரா

நன்றி பிரேமா மகள்

நன்றி சபரிநாதன்

நன்றி தமிழரசி

நன்றி சந்ரு

நன்றி ராமலக்ஷ்மி அக்கா..

நன்றி காமராஜ் அய்யா....

மீண்டும் நன்றிகள் அசோக் அண்ணா....

தாராபுரத்தான் said...

பெரும்பாலன குடும்பங்களில் குழந்தைகளால்தான் சண்டையே வருது..அதிலேயும் ஒரு சுவை இருக்கத்தான் செய்யுதுங்கோ தம்பி..

r.v.saravanan said...

தாமதத்திற்கு சாரி

ஆரம்பத்திலே பொண்டாட்டி அடிக்கிறப்ப கம்ம்னு இருக்க வேண்டியது தானே

கடைசியில் பொண்டாட்டி அடிச்சதை தான் இவரும் செய்கிறார்

எழுத்து வழக்கு அருமை பாலாசி

'பரிவை' சே.குமார் said...

ஹ... ஹ... ஹ....

சரித்தான் போங்க...

இப்படியும் எழுதலாமோ...

நல்லாயிருக்கு.

கமலேஷ் said...

ரொம்ப நல்லா சுவாரஸ்யமா இருக்குங்க...வாழ்த்துக்கள்...

"உழவன்" "Uzhavan" said...

சூப்பரா எழுதியிருக்கீங்க பாலாஜி

சத்ரியன் said...

//‘க்க்கும்... இப்டிச்சொல்லுற வாயித்தான்... நாளைக்கு கண்ணுகுட்டி வளத்த கழுசடயப்பாருன்னு சொல்லும். அப்ப வச்சிக்கிறேன் உங்கள... ’//

ம்ம்ம்ம்ம்! இப்ப என்ன பண்ணனும்னு சொல்லுடி மொதல்ல.

சத்ரியன் said...

//ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா... எந்தலையெழுத்து உன்ன கட்டிகிட்டு மாரடிக்க வேண்டிகெடக்கு...//

அடப்பாவமே..! இன்னுங் கண்ணாலங் கட்டலன்னு சொல்லிட்டு திரிஞ்சியே சாமி...!

சத்ரியன் said...

//‘(போடு... 1.......2...........3...........)’//

எலே எப்பா,
இந்த எழவ மொதல்லயே செஞ்சிருந்தா என்னா கொறஞ்சி போயிருக்கும் ஒனக்கு.?

சத்ரியன் said...

//‘அவ்வ்வ்வ்வ்வ்வ்........................................... ’//

பாவம்... ! வரப்போறவளச் சொன்னேன். நீ எதுக்கு சிலுத்துக்கிற?

சத்ரியன் said...

//நன்றி ஹேமா
(புனைவுதாங்க..)//

இங்க மட்டும் என்னா எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கு...?

”பதிவராமை”யக் கூப்ட்ருவேன். ஆமா.

க.பாலாசி said...

நன்றி தாராபுரத்தான் அய்யா

நன்றி ஆர்.வி.சரவணன்
(நீங்க வந்ததே சந்தோஷங்க)

நன்றி சே.குமார்..

நன்றி கமலேஷ்..

நன்றி உழவன்..

நன்றி சத்ரியன்...
(ரவுண்டு கட்டிட்டீங்கப்போலருக்கு..)

Anonymous said...

:-D

r.v.saravanan said...

நன்றி ஆர்.வி.சரவணன்
(நீங்க வந்ததே சந்தோஷங்க

நன்றி பாலாசி
எனது வலை தளத்திற்கு நேரமிருக்கும் போது வருகை தரவும்

ரோஸ்விக் said...

:-)))) அசத்தல் மக்கா...

ஹுஸைனம்மா said...

வீட்டுக்கு வீடு..

கொஞ்ச நாள்ல அப்பாவும் தெளிஞ்சுடுவார், எப்ப வாயத் திறக்கணும், எப்ப கண்டுக்காம இருக்கணும்னு!! :-))

க.பாலாசி said...

நன்றி புனிதா...

மீண்டும் நன்றி சரவணன்..வருகிறேன்..

நன்றி ரோஸ்விக்...

நன்றி ஹுஸைனம்மா

Nathanjagk said...

ரைட்டு. மேலத்தெரு பசங்க கூட ஏன் விளையாடக் கூடாதாம்?

Nathanjagk said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

அன்பின் பாலாசி

அருமை அருமை - நடை அருமை - மொழி அருமை - கருத்து அருமை - எண்ணங்கள் அருமை - அததனையும் அருமை - நச்சென்ற இறுதி முடிவு

நல்வாழ்த்துகள் பாலாசி
நட்புடன் சீனா

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO