க.பாலாசி: கிளிமொழி...

Tuesday, June 15, 2010

கிளிமொழி...

தான் வளர்க்கும் கிளியுடன்
விளையாடிக் கொண்டிருந்தாள் அச்சிறுமி.

இவள் பங்கு முடிந்ததும்
கிளியின் முறை தொடங்கியது...

பென்சில், ரப்பர், பேனா
இப்படி ஒவ்வொன்றாய்
ஓரிடத்தில் வைத்து
துணியை இழுத்து மூடிவைத்தது கிளி.

கடைசியாக
அவள் தோட்டையும் கழற்ற
கவ்விகொண்டிருந்தபோது சொல்லியேவிட்டாள்........

‘அப்பா இஞ்சப்பாரேன்......
இது அம்மா மா(த்)ரியே பண்ணுது.....’


44 comments:

நேசமித்ரன் said...

கடைசியில் உதட்டில் மெல்ல விரியும் புன்னகை இக்கவிதையின் வெற்றி பாலாசி

வாழ்த்துகள் :)

அகல்விளக்கு said...

//நேசமித்ரன் said...

கடைசியில் உதட்டில் மெல்ல விரியும் புன்னகை இக்கவிதையின் வெற்றி //

அதேதான் அண்ணா...

அழகுக்கவிதை...

r.v.saravanan said...

கடைசியாக
அவள் தோட்டையும் கழற்ற
கவ்விகொண்டிருந்தபோது சொல்லியேவிட்டாள்........

‘அப்பா இஞ்சப்பாரேன்......
இது அம்மா மா(த்)ரியே பண்ணுது.....’


ஹா ஹா...... சூப்பர் பாலாசி

சௌந்தர் said...

கிளிமொழி நல்ல இருக்கு

அ.முத்து பிரகாஷ் said...

‘அப்பா இஞ்சப்பாரேன்......
இது அம்மா மா(த்)ரியே பண்ணுது.....’
என சொன்னது சிறுமி .
ஆனால் ...
உங்கள் தலைப்போ 'கிளி மொழி '...

ரொம்பவே பிடிச்சிருக்கு !

தாராபுரத்தான் said...

கிள்ளை மொழி..இனிக்குதுங்க .

ரோகிணிசிவா said...

superb

Chitra said...

அழகாய் இருக்குதுங்க.... :-)

ஹேமா said...

வாழ்த்துகள் பாலாஜி.
காதிலே கிள்ளும்
பிள்ளை மொழி கொள்ளை அழகு.

ராமலக்ஷ்மி said...

கிளி மொழி அழகு:)!

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர் பாலாசி

sathishsangkavi.blogspot.com said...

அழகாகவும் ரசிக்கும் படியும் இருக்குது நண்பரே...

vasu balaji said...

பயபுள்ள பூனமாதிரி கமுக்கமா இருந்து பொசுக்குன்னு ஒன்ன வெளீயவிடுறானே:)) கொஞ்சுது கிளி.

dheva said...

கிளிமொழி...

//‘அப்பா இஞ்சப்பாரேன்......
இது அம்மா மா(த்)ரியே பண்ணுது.....//

நல்லாயிருக்குங்க....பாலாசி....! நானே..ஷேர் ஆட்டோ புடிச்சி வர்றேன்...உங்கள பாக்க...எப்டிங்க...இப்டி எல்லாம்....!

ஈரோடு கதிர் said...

அழகு மொழி

Jerry Eshananda said...

கிளி பேசுது.

சீமான்கனி said...

இஞ்சப்பாரேன்......பாலாசிய....

அழகான மொழி..அருமையா இருக்கு...

அன்பேசிவம் said...

பாலாசி தோட்டையுமா தோடையுமா... எனக்கு சரியா புரியலையே.. மன்னிக்கனும். :-)

Unknown said...

அடடா !!

Swengnr said...

அன்பு பதிவரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டிருக்கிறேன். தயவு செய்து கோவிக்காமல் வருகை தருவும். பிடித்திருந்தால் கமெண்ட் போடவும். நன்றி!
http://kaniporikanavugal.blogspot.com/

Unknown said...

என்ன மாதிரியே இருக்கு அழகா !!.. ஹி ஹி

ஜில்தண்ணி said...

அருமை
ரசித்தேன் பாலாசி அண்ணே

Ashok D said...

பாலாசி எங்கயோ போயிட்டீங்கள...

நல்லாயிருக்கு... இப்படியே யோசிங்க ;)

Unknown said...

அருமை பாலாசி..

Romeoboy said...

Nice .. :-)

பனித்துளி சங்கர் said...

அருமை . சிரிக்கவும் , சிந்திக்கவும் செய்தது இறுதியில் இரண்டு வரிகள்

கலகலப்ரியா said...

சூப்பரு.. (மத்தது எல்லாம் எல்லாரும் சொல்லிட்டாய்ங்க..)

புலவன் புலிகேசி said...

சபாஷ் பாலாசி...அட போட வைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

மாதவராஜ் said...

அழகு. அருமை.
பாராட்டுக்கள் பாலாசி.

அன்புடன் நான் said...

கவிதை .... தூள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கல் டிவிஸ்ட்..

க.பாலாசி said...

நன்றி நேசமித்ரன் அய்யா
நன்றி ராசா
நன்றி சரவணன்
நன்றி சௌந்தர்
நன்றி நியோ
நன்றி தாராபுரத்தான்
நன்றி இராமசாமி கண்ணன்
நன்றி ரோகிணியக்கா
நன்றி சித்ரா
நன்றி ஹேமா
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி டி.வி.ஆர். அய்யா
நன்றி சங்கவி
நன்றி வானம்பாடிகள் அய்யா

க.பாலாசி said...

நன்றி தேவா
நன்றி ஈரோடு கதிர் அய்யா
நன்றி ஜெரி ஈசானந்தன் அய்யா
நன்றி seemangani
நன்றி முரளிகுமார் பத்மநாபன்
// பாலாசி தோட்டையுமா தோடையுமா... எனக்கு சரியா புரியலையே.. மன்னிக்கனும். :-)//

இதுக்கு என்னாத்துக்கு நண்பரே மன்னிக்கனும்ங்கற வார்த்தையெல்லாம்..தலையிலநாலு தட்டு நட்டி இது என்னடான்னு கேட்டா சொல்லப்போறேன்...
‘தோடை, தோட்டை’ இடங்களுக்கு தகுந்தவாரு பொருத்திக்கொள்ளலாம். பொருள் ஒன்றுதான். அழுத்தங்களே வித்யாசம். நன்றி முரளி

நன்றி ஆறுமுகம் முருகேசன்
நன்றி Software Engineer
//அன்பு பதிவரே//
நன்றிங்க இஞ்சினியர்...

நன்றி பேநா மூடி
நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi
நன்றி ஜில்தண்ணி
நன்றி D.R.Ashok அண்ணா..
நன்றி முகிலன்
நன்றி ~~Romeo~~
நன்றி பனித்துளி சங்கர்
நன்றி கலகலப்ரியாக்கா
நன்றி புலவன் புலிகேசி
நன்றி மாதவராஜ் அய்யா...
நன்றி சி. கருணாகரசு
நன்றி பட்டாபட்டி..

சிவாஜி சங்கர் said...

Nice Lines... :)

கோமதி அரசு said...

கிளிமொழி நல்லா இருக்கு.

அம்பிகா said...

கிளிமொழி - அழகு.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகு கவிதை... அழகு கிளி மொழி...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப அழகா இருக்கு உங்க கவிதை..
கடைசி வரிகள்... மிக மிக ரசித்தேன்... :)

பிரேமா மகள் said...

கிளி நீங்க வளர்த்ததா?

கமலேஷ் said...

அருமையா இருக்கு நண்பரே...கடைசி வரி எல்லாரையும் தூக்கி சாப்பிடுது போங்க...வாழ்த்துக்கள் நண்பரே...

மங்குனி அமைச்சர் said...

அருமையா இருக்கு

க.பாலாசி said...

நன்றி Sivaji Sankar
நன்றி கோமதி அரசு
நன்றி அம்பிகா
நன்றி அப்பாவி தங்கமணி
நன்றி Ananthi
நன்றி பிரேமா மகள்
(அடி....ங்க...)
நன்றி கமலேஷ்
நன்றி மங்குனி அமைச்சர்

tamilchannel said...

வணக்கம் உறவே

உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..

நன்றி

வலையகம்.கொம்
www.valaiyakam.com

அன்புடன் மலிக்கா said...

கிளிமொழி தமிழ்மொழியாய் ..

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO