க.பாலாசி: ஒட்டுவாரொட்டி...

Wednesday, July 21, 2010

ஒட்டுவாரொட்டி...

முருகேசனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் முருகேசனுக்கு பத்திகொண்டுதான் வரும்.

‘ஒருநாளைக்கு பதினஞ்சாயரத்து சொச்சம் பேராவது பொழங்குற எடத்துல க... பயலுங்க ஒரு பக்கத்தால மட்டும்தான் ஒண்ணுக்க இருக்க கட்டிவிட்டுருக்கானுங்க. அந்தப்பக்கத்தால ஒண்ணு கட்டினா இவனுவ வீட்டுக்காசு கொறஞ்சமாதிரி நெனப்பு. இந்த செவத்துல பொழுதுக்கும் நின்னு ஒண்ணுக்கடிச்சு நாறடிக்கிறத பயலுங்கல என்னத்த சொல்றது. பாழப்போனவனுங்களுக்கு புத்தியிருக்குமா என்னான்னே தெரியல. எல்லாம் முழுக்காலு சட்டையும் சவடாலுமாத்தான் திரியிரானுங்க, ஒரு பயலுக்காச்சும் இப்டி பொதுவால நின்னு இருக்கோமே இதுனால வர கெடுதல நெனச்சுப்பாத்தானுங்களா? நாத்தம் நாத்தம் அண்டசயிக்கல’
இது முருகேசனின் அன்றாட புலம்பல்.

‘ஏப்பா கொஞ்சம் தள்ளிதான் போங்களாம்பா.. அங்கணத்தான் கட்டிவுட்டுருக்காங்கல்ல’
இப்டியும் சிலநேரம் கத்திப்பார்ப்பான். ‘நல்லது சொன்னா எவங்கேக்குறான்.. நாசமாப்போச்சு..நமக்கென்ன’ என்று நினைப்பதுதான். ஆனாலும் அவனால் முடிவதில்லை. ‘பங்காளி ஆத்தர அவசரத்துக்கு போறதுதான். இதெல்லாமா பாத்துகிட்டுருப்பாங்க, அழிஞ்ச கொல்லையில ஆடு மேஞ்சான்ன? மாடு மேஞ்சான்ன??’ன்னு பக்கத்துக்கடை பங்காளி சொல்வதுண்டு. ‘சும்மாகெட பங்காளி. எனக்கு கெட்டக்கோவம் வந்திடும்’ என்பான்.

அன்றைக்கு ஆறுமணிக்கு கடைதிறக்கவேண்டியவன் ஏழு மணி ஆகிவிட்டது. அவசரஅவசரமாக வந்தவன் ‘இந்த கொண்டாங்கொடுத்தான் ஒறவே வேண்டான்னு நெனைக்கறதுதான். என்னப்பண்ணி தொலையறது. வந்ததுங்களுக்கு எதாவது செஞ்சித்தொலைய வேண்டிக்கடக்கு’ மனதிற்குள் புலம்பியவாறே ‘கிரிச்’ யென்ற உருமலோடு இயங்கும் சட்டரை மேலே தூக்கினான். கொல்லைப்பக்கமுள்ள ஒரு கழிவரையையும் சொந்தங்கள் அடைத்துக்கொண்டது ஞாபகம் வந்தது. ‘எல்லாத்தையும் அடக்கலாம் போலருக்கு, இத அடக்க முடியறதில்ல. கடையத்தெறந்திட்டு போலாம்னா இப்டி அடிவயித்தால படுத்துதே. நேத்தைக்கு நைட்டு இந்த அரிசி கணக்கா உள்ள மாத்தரைய (Cetirizine) சாப்டது தப்பாப்போச்சு. நிமிசத்து ஒருவாட்டியா வரும். கருமம் புடுச்சவனுங்க. சலி அலர்ஜின்னாலும் சரி, அரிப்பு, புண்ணுன்னாலும் சரி இதததான் தர்ரானுங்க.’ அதற்குள் யாரோ கடைக்கு வந்துவிட்டார்கள்.

‘வாங்கம்மா என்ன வேணும்?’.
‘ஆப்பில் என்னவெல’.
‘கிலோ 140’
‘அரகிலோ போடுங்க’
‘ம்ம்ம்’
‘பை வச்சிருக்கீங்களா?’
‘இருக்கு’
‘இந்தாங்க.... காலைலேயே நூறுவாய தர்ரீங்களே. சில்லர இல்லைங்களா?’
‘இல்லப்பா’
‘பங்காளி இந்த நூறுவாய ஒடச்சி கொடேன்.’
‘காலைல ஏது பங்காளி. இல்ல...’
‘இரும்மா, எதுத்தால பூக்கடயில வாங்கியாரேன்.’

‘ச்ச..ச்ச.. அடிவயத்தவேற லேசா வலிக்கற மாரி இருக்கே. இனிமேலும் முடியாது. யாவாரத்தையும் உடமுடியல. நல்லவேள சில்லர வாங்க இங்கவந்தோம். அப்டியே போயிட்டு வந்திடவேண்டியதுதான்’ கீழண்டப்பக்கமாய் உள்ள இடுப்பளவு சிமெண்ட் கிராதிப்போட்டு அடைத்திருந்த அந்த இலவச சிறுநீர் கழிப்பிடத்திற்குள் நுழைந்தான். உள்ளபோனதுதான் தாமதம்...‘அடக்கருமம் புடிச்சவங்களா இங்கயா வந்து பேண்டு வப்பானுங்க, நாறப்பயலுக. காலங்காத்தால, ஹ்கூம், கொல்லுன்னு மொய்க்கிற ஈக்கூட்டத்த பாத்தாலே பயமாயிருக்கு. வாயில நல்லா வருது. என்னாத்த சொல்லி திட்டறது. இப்ப எங்கப்போறது?. ம்கூம்....... அவசரத்துக்கு பாவமில்ல. இன்னைக்கு இந்த செவத்தாலையே போவவேண்டியதுதான். இங்க கூட பரவாயில்ல போலருக்கு. மூக்க பொத்திகிட்டே இருந்துக்கலாம்’ குற்றவுணர்ச்சியும் தானாக பொத்திக்கொண்டது.

•••••••••••••••

ராமநாதனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் ராமநாதனுக்கு பத்திகொண்டுதான் வரும்.........................................


37 comments:

vasu balaji said...

ஏன் ராசா, மாத்திரை பேரு எல்லாம் சொல்றதப்பார்த்தா அனுபவப் புனைவு மாதிரில்லா இருக்கு. அருமையா வச்சப்ப்பாரு உள்குத்து. பார்க்கலாம் எத்தன பேரு கண்டு பிடிக்கிறாங்கன்னு:)

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்ம்......

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/ம்ம்ம்ம்....../

ஏன்? நீர்ச்சுருக்கோ:))

க ரா said...

நல்லா இருக்கு பாலாசி. அய்யா என்னவோ உள்குத்து, வெளிகுத்துன்னு என்னவ்வோ சொல்றாரு. நமக்கு ஒன்னும் புரிபடல. அப்புறம் வாரேன் :)

'பரிவை' சே.குமார் said...

ராமனாதனண்ணன் கடையில உட்கார்ந்து அந்த செவத்தைப்பார்த்த அனுபவமோ...
அது சரி மாத்திரையில உள்குத்து இருக்கு போல... ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்...

நல்ல கதை.... ரொம்ப நல்லாயிருக்கு.

சிநேகிதன் அக்பர் said...

கதை நல்லாயிருக்குங்க பாலாசி.

இதே மாதிரி இந்த கதையும் இருக்குன்னு நினைக்கிறேன்.

http://sinekithan.blogspot.com/2009/07/blog-post_23.html

அகல்விளக்கு said...

ஆருண்ணே அது.....

எங்கயோ கேட்ட பேரு மாதிரில்ல இருக்கு...

அன்புடன் நான் said...

கருமம் புடுச்சவனுங்க. சலி அலர்ஜின்னாலும் சரி, அரிப்பு, புண்ணுன்னாலும் சரி இதததான் தர்ரானுங்க.’ //

வானம்பாடி அய்யா சொன்னது இதுவா?

பாலாசி அப்படியே அந்த எடத்துல நின்னது போல இருக்கு.... படிக்கும் போது.

பிரபாகர் said...

நல்ல அனுபவப் புனைவு(?) இளவல்...

சரளமா எழுதறீங்க! வாழ்த்துக்கள்...

பிரபாகர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரொம்ப நல்லாயிருக்கு.

ஹேமா said...

அச்சோ...அச்சோ நாத்தம் தாங்க முடியேல்ல.நாறுது....!

பாலாஜி...நம்ம நாடுகளில இதைத் திருத்தணும்ன்னா நிறையக் கஸ்டம்.அதை *வாசம்*ன்னு மனசால ஏத்துக்கிட்டு வாழப்பழகிக்கணும் !

நேசமித்ரன் said...

பாலாசி

நன்று! நுட்பம் கை கூடியிருக்கிறது
சொல்லாமற் சொல்லுதலில்

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு பாலாசி.

சீமான்கனி said...

//குற்றவுணர்ச்சியும் தானாக பொத்திக்கொண்டது.//

வட்டார வழக்கில் படிக்க எழிதை இருக்கு பாலாசி...ஆமா ??புனைவா இது???பிடிபடலை...

கலகலப்ரியா said...

கதை மேலோட்டமா படிச்சேன்... தலைவலி புரிய விட மாட்டேங்குது... இன்னொரு வாட்டி ட்ரை பண்றேன்... :)... இன்னொரு நாள்...

பனித்துளி சங்கர் said...

அய்யா வானம்பாடிகள் சொன்னார்களே என்று எதோ உள்குத்து இருக்கும் , இருக்கும் என்று தேடி , தேடி இப்ப எனக்கு வெளியே குத்துது . பதிவு நல்ல இருக்கு நண்பரே . இது எல்லாம் அனுபவமா இல்லை புனைவா ? ! பகிர்வுக்கு நன்றி

கமலேஷ் said...

இது சாபம் ஒன்னும் பண்ண முடியாது.

காமராஜ் said...

ரொம்ப அருமையான
எழுத்து பாலாசி.
வேகம் கூடுகிறது.
அழகு.

Jerry Eshananda said...

மனசுல ஒட்டிகிச்சு.

Unknown said...

போது கழிப்பிடத்திற்கு அவசரத்திற்கு போனால் அப்புறம் ரெண்டு நாளைக்கு சோறுதண்ணி இறங்காது..

r.v.saravanan said...

நல்லாஎழுதியிருக்கீங்க பாலாசி

Kumky said...

புனைவு அருமை...

உள்குத்தென்ன...?

ஒரு பத்து கடைகள் இருக்குமா...?

:))

Thenammai Lakshmanan said...

குப்பை கொட்டுபவ்ர்கலையும்இந்த லிஸ்ட்ல சேர்த்துக்கலாம் பாலாசி.. தேடிப் போய் அடுத்த வீட்டுச் சுவரோரம் கொட்டுவாங்க.. ஆனான்ல் சென்னையில் பரவாயில்லை.. நடை பெருக்கும் பெண் வாங்கிட்டுப் போயிடுறா..
அவரவராதான் மாறணும்..

ரோஸ்விக் said...

புனைவை படிச்சேன் நல்லாப் புரிஞ்சது...
பாலா அண்ணேன் தலையில கைய வச்சுகிட்டு சும்மா இல்லாம.. உள்குத்துன்னு பத்தவச்சிட்டு போயிட்டாரு... அது என்னன்னு யோசிச்சாதான் தலை வலிக்குது.
என்னது நானும் அந்த மாத்திரையை சாப்பிடவா... அட போயா இங்க எதுத்த சுவத்துல இருந்தா ஒருவாரம் ஊரை கூட்டி கழுவ விட்டுருவானுக... :-)

"உழவன்" "Uzhavan" said...

 என்ன பண்ண? எல்லாரும் பண்ணுறதுதான்..

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
ஏன் ராசா, மாத்திரை பேரு எல்லாம் சொல்றதப்பார்த்தா அனுபவப் புனைவு மாதிரில்லா இருக்கு. அருமையா வச்சப்ப்பாரு உள்குத்து. பார்க்கலாம் எத்தன பேரு கண்டு பிடிக்கிறாங்கன்னு:)//

அனுபவமில்லாம என்னத்த சொல்றது. பொதுவாவே அந்த மாத்திரையோட தன்மை அதுதான்...

நன்றிங்க..

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
ம்ம்ம்ம்......//

நன்றிங்க சார்..

//Blogger வானம்பாடிகள் said...
ஏன்? நீர்ச்சுருக்கோ:))//

ஸ்ஸ்ஸ்ஸ்............

//Blogger இராமசாமி கண்ணண் said...
நல்லா இருக்கு பாலாசி. அய்யா என்னவோ உள்குத்து, வெளிகுத்துன்னு என்னவ்வோ சொல்றாரு. நமக்கு ஒன்னும் புரிபடல. அப்புறம் வாரேன் :)//

உள்குத்துமில்ல வெளிக்குத்துமில்லைங்க... சும்மாதான்... நன்றிங்க

//Blogger சே.குமார் said...
ராமனாதனண்ணன் கடையில உட்கார்ந்து அந்த செவத்தைப்பார்த்த அனுபவமோ...
அது சரி மாத்திரையில உள்குத்து இருக்கு போல... ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்...
நல்ல கதை.... ரொம்ப நல்லாயிருக்கு.//

நன்றிங்க குமார்..

//Blogger அக்பர் said...
கதை நல்லாயிருக்குங்க பாலாசி.
இதே மாதிரி இந்த கதையும் இருக்குன்னு நினைக்கிறேன்.
http://sinekithan.blogspot.com/2009/07/blog-post_23.html//

நன்றிங்க அக்பர்... படித்தேன்...

//Blogger அகல்விளக்கு said...
ஆருண்ணே அது.....
எங்கயோ கேட்ட பேரு மாதிரில்ல இருக்கு...//

அதுவும் தெரிஞ்சிபோச்சா... நன்றி ராசா..

//Blogger சி. கருணாகரசு said...
வானம்பாடி அய்யா சொன்னது இதுவா?
பாலாசி அப்படியே அந்த எடத்துல நின்னது போல இருக்கு.... படிக்கும் போது.//

இருக்கலாம்.. நன்றிங்க கருணாகரசு...

//Blogger பிரபாகர் said...
நல்ல அனுபவப் புனைவு(?) இளவல்...
சரளமா எழுதறீங்க! வாழ்த்துக்கள்...
பிரபாகர்...//

நன்றிங்கண்ணா...

//Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...
ரொம்ப நல்லாயிருக்கு.//

நன்றிங்க அய்யா..

//Blogger ஹேமா said...
அச்சோ...அச்சோ நாத்தம் தாங்க முடியேல்ல.நாறுது....!
பாலாஜி...நம்ம நாடுகளில இதைத் திருத்தணும்ன்னா நிறையக் கஸ்டம்.அதை *வாசம்*ன்னு மனசால ஏத்துக்கிட்டு வாழப்பழகிக்கணும் !//

சரிதானுங்க... நன்றி ஹேமா...

க.பாலாசி said...

//நேசமித்ரன் said...
பாலாசி
நன்று! நுட்பம் கை கூடியிருக்கிறது
சொல்லாமற் சொல்லுதலில்//

நன்றிங்க அய்யா..

//Blogger செ.சரவணக்குமார் said...
ரொம்ப நல்லாயிருக்கு பாலாசி.//

நன்றி சரவணக்குமார்..

//Blogger சீமான்கனி said...
வட்டார வழக்கில் படிக்க எழிதை இருக்கு பாலாசி...ஆமா ??புனைவா இது???பிடிபடலை...//

நன்றிங்க நண்பா.. .புனைவுதான்..

//Blogger கலகலப்ரியா said...
கதை மேலோட்டமா படிச்சேன்... தலைவலி புரிய விட மாட்டேங்குது... இன்னொரு வாட்டி ட்ரை பண்றேன்... :)... இன்னொரு நாள்...//

வாங்க..வாங்க.. பெறவு வந்து பொறுமையா படிங்க... நன்றி...

//Blogger !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அய்யா வானம்பாடிகள் சொன்னார்களே என்று எதோ உள்குத்து இருக்கும் , இருக்கும் என்று தேடி , தேடி இப்ப எனக்கு வெளியே குத்துது . பதிவு நல்ல இருக்கு நண்பரே . இது எல்லாம் அனுபவமா இல்லை புனைவா ? ! பகிர்வுக்கு நன்றி//

நன்றிங்க சங்கர்... புனைவுதான்...

//Blogger கமலேஷ் said...
இது சாபம் ஒன்னும் பண்ண முடியாது.//

ஆமங்க கமலேஷ்... நன்றி...

//Blogger காமராஜ் said...
ரொம்ப அருமையான
எழுத்து பாலாசி.
வேகம் கூடுகிறது.
அழகு.//

நன்றிங்க அய்யா..

//Blogger ஜெரி ஈசானந்தன். said...
மனசுல ஒட்டிகிச்சு.//

நன்றிங்க அய்யா..

//Blogger கே.ஆர்.பி.செந்தில் said...
போது கழிப்பிடத்திற்கு அவசரத்திற்கு போனால் அப்புறம் ரெண்டு நாளைக்கு சோறுதண்ணி இறங்காது..//

மெய்யாலும்தாங்க... எல்லாமே அப்டியில்லை... நன்றி செந்தில்...

//Blogger r.v.saravanan said...
நல்லாஎழுதியிருக்கீங்க பாலாசி//

நன்றி சரவணன்...

//Blogger கும்க்கி said...
புனைவு அருமை...
உள்குத்தென்ன...?
ஒரு பத்து கடைகள் இருக்குமா...?
:))//

வாங்க தலைவரே... நன்றி எந்த குத்துமில்லைங்க...

//Blogger thenammailakshmanan said...
குப்பை கொட்டுபவ்ர்கலையும்இந்த லிஸ்ட்ல சேர்த்துக்கலாம் பாலாசி.. தேடிப் போய் அடுத்த வீட்டுச் சுவரோரம் கொட்டுவாங்க.. ஆனான்ல் சென்னையில் பரவாயில்லை.. நடை பெருக்கும் பெண் வாங்கிட்டுப் போயிடுறா..
அவரவராதான் மாறணும்..//

ஆமங்க...அதுவும்தான்... நன்றி தங்களின் கருத்துக்கு

//Blogger ரோஸ்விக் said...
புனைவை படிச்சேன் நல்லாப் புரிஞ்சது...
பாலா அண்ணேன் தலையில கைய வச்சுகிட்டு சும்மா இல்லாம.. உள்குத்துன்னு பத்தவச்சிட்டு போயிட்டாரு... அது என்னன்னு யோசிச்சாதான் தலை வலிக்குது.
என்னது நானும் அந்த மாத்திரையை சாப்பிடவா... அட போயா இங்க எதுத்த சுவத்துல இருந்தா ஒருவாரம் ஊரை கூட்டி கழுவ விட்டுருவானுக... :-)//

ஹா..ஹா... நன்றிங்க ரோஸ்விக்...

//Blogger "உழவன்" "Uzhavan" said...
என்ன பண்ண? எல்லாரும் பண்ணுறதுதான்..//

நன்றிங்க உழவன்..

ரிஷபன் said...

கதை போலவே இல்லை.. அந்த இடத்திற்கு போய் வந்த மாதிரி..

கண்ணகி said...

எழுத்து நடை சரளமாக வருகிறது...

ஈரோடு கதிர் said...

என்னப்பா..

மொட்டமாடியிலயிருந்து பஸ் ஸ்டாண்டு தெரியுதோ

...பட்

எழுத்து நடை வெகு அருமை

தாராபுரத்தான் said...

அவசர உலகம்.. புதிய பார்வை..நல்லா இருக்குங்கோ..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வட்டார வழக்கில் அருமையான புனைவு பாலாசி. உங்க ஊரு வட்டார வழக்கு நன்றாக வருகிறது. அப்படியே மெருகேற்றவும்.

பிரதீபா said...

பாஷை பாஷை.. நம்ம பாஷை :-) கதை படிச்சு சிரிச்சேன், ரசிச்சேங்க.

Mahi_Granny said...

நல்லாவே இருக்கு தம்பி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பர் அப்பு...

sakthi said...

ரொம்ப நல்லாயிருக்கு பாலாசி

பவள சங்கரி said...

நல்லா சொன்னீங்க சார். புரிய வேண்டியவங்களுக்கெல்லாம் புரிஞ்சா சரி...ம்ம்ம்ம்ம்ம் என்னத்த சொல்ல!

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO