க.பாலாசி: ஒளிகளின் நீட்சி...

Friday, August 20, 2010

ஒளிகளின் நீட்சி...

பட்டிக்குள் அடைபட்ட செம்மறியாட்டுக் கூட்டமென ஆசாபாசங்களை துறக்க பழகிவிட்டது இந்த காலும், கையும். விஞ்ஞான துணுக்கினை வீட்டிற்குள் அமர்த்திவிட்டு அடைகாக்கத்துணிந்த உடலும், மேலிமையை புருவங்கள் கட்டிவைக்க விடியல் வீழ்வதறியாமல் வெறித்திருக்கும் கண்களும் எதையெதையோ தின்றுகொண்டிருக்கின்றன.

நிற்க...

ராஜன் ஜவுளிக்கடைக்காரர் வீட்டுக்கு வந்தபொழுதான் தெரிந்ததெனக்கு தொலைக்காட்சிப்பெட்டியின் மகிமை. நக்கீரர் தெருவுக்குள் இந்த வி.வளர்ச்சியை இழுத்துக்காட்டிய பெருமை ராஜனுக்கு. வாசல் சன்னலில் தொங்கும் திரைச்சீலையை விலக்கி ஒட்டிஒட்டி பத்துப்பதினைந்து கால்கள் ஒன்றன்மேல் ஒன்றாக நின்று பருவமடைந்தவளை பதுங்கியிருந்து பார்த்தார்போல் படங்கள் பார்த்த பொழுதுங்கள் இப்போதுமந்த வீட்டின் வாசலில் நிழலாய் நிற்கிறது. பிறகு குருசாமி வீட்டில், அடுத்து ஹரி வீட்டில் இப்படியாக நீமுந்தி, நான் முந்தியென அவரவர் கௌரவம் வீட்டுக்கூடாரத்தை கருப்பு வெள்ளையாக்கியது. யார் வீட்டில் படம் பார்க்கலாமென ஒத்தையா ரெட்டையா போட்டு பார்த்திருக்கிறேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அப்படியில்லை. இந்த ஹை.ஃபி வானொலிப்பெட்டியும், அதில ஒலிக்கும் காரைக்கால் பண்பலையும் அவர்களின் அதிகபட்ச விஞ்ஞானமாக எண்ணியிருந்தனர். வேறெந்த பற்றும் அவர்களை ஆட்கொள்ளவில்லை. அப்பாவுக்கு இதுவரையும்கூட.

அவரைக்குளம் மாரியம்மன் கோவிலில் வள்ளித்திருமணத்தையும், மயான காண்டத்தையும் கொன்றுவிட்டு சாஸ்த்தா கடையிலிருந்து வாடகைக்கு அந்த தொ.கா. பெட்டியும், ஒரு ஒளிநாடா இயக்கு கருவியும் எடுத்து வைத்தனர். திருவிளையாடலில் ஆரம்பித்து வருஷம் 16 ஓடிக்கொண்டிருக்கும்பொழுது விடிந்தேவிடும். ‘பாரு,பாரு.... எந்த காமுட்டி கோயில்லடா தீவெட்டி புடிச்சே?‘ன்னு வாத்தியார் தலையில் தட்டும்பொழுதான் பள்ளியிலிருப்பதாய் கண்களுக்கு சுரணைவரும்.

‘ஏம்பாலாஜி சவுளிக்கடக்காரு வூட்ல படம் போடுற மெஷினு வந்திருச்சாம்ல. பாத்தியா நீயி’ ன்னு அப்போது கேட்ட அலமேலு அவ்வாவும்(பாட்டி) குத்துக்காலிட்டு திண்ணையிலமர்ந்து ‘இந்த ராசாயா கெழவிக்கும் அது மொவனுக்கு காலைலேந்து எதோ சண்டையாம்லடி நவநி, ஒனக்கு தெரியுமா?’ என்று ஊர் வம்புகளை உலையுடன் சேர்த்து கொதிக்கவைத்த அஞ்சுகம்அம்மாலும், குஞ்சம்மாளும் இப்போது உரலுக்குள் குத்துண்ட நெல்லாக வாசலை எட்டிப்பார்ப்பதில்லை. உறவுகளை வளர்த்ததும், ஊர்வம்புகளை வெற்றிலைப்பாக்குடன் கதைத்ததுமாகயிருந்த பாட்டிகளின் வெறித்தனமான ஆட்சி இப்போது தொ.கா.பெட்டி இயக்குகருவிப் பொத்தான்களுடன்.

ரூபாய் 400 ஓ 600 ஓ மாதாமாதம் உதவித்தொகையாக வாங்கும் ஆதரவற்றோர்கள், கம்பிவழி அலைவரிசை இணைப்புக்கு ரூபாய் 100 யை இழக்கத்தயாராகிவிட்டனர். காரணம் அரசு அளித்த இலவச தொ.கா.பெட்டி. பொங்கித்தின்ன ஒரு ரூபாய் அரிசி கிடைப்பதும் அவர்களின் பலம். ஊன்றமுடியா காலுடன் வாழ்நாளின் உச்சியிலேறி உச்சிப்பிள்ளையாரைப்பார்த்த மகிழ்ச்சி அவர்களின் கண்களில் தொலைக்காட்சித் தொடர்களை காண்கையில் தெரிகிறது. தொடர்களைக்காண வீடுகள் தேடியலைந்த ஏக்கமும், தாகமும் தணிந்துவிட்டதெண்ணி ஒரு பெருமிதமும்கூட. நல்லதோ கெட்டதோ அவர்களின் வாழ்நாள் உறக்கம் முழுவதும் ஏதோவொரு தொ.காட்சித்தொடரின் நாயகியின் கண்ணீரில் கனவுகளாக கடந்துபோகுமென்பது மட்டும் திண்ணமாகத்தெரிகிறது.

எப்படியாயினும் ‘ந்த, ஏன் மாத்தர? 8 மணிக்கெல்லாம் போட்டுடுவான். வய்யி‘ என இப்போது அம்மாவும் அதட்டும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற காணம் தொடங்கும்முன் அலமேலுவை, சவுந்தர்ராசு நயினா வீட்டில்போய் அமர்த்திவிட்ட ஒளிகளின் நீட்சியை இப்போதுதான் உணர்கிறேன்.


33 comments:

அன்பேசிவம் said...

mmm... oliyum oLiyunm...:-)
antha naal niyaabaka nenjile vanthathe, nanbane nanbane nanbene.....

intha naal andru pol illaiye athu een? een? een?

ரோகிணிசிவா said...

pakathu veetla parhta ramayanam , maha bahratham ,
first sontha tv la senti menta karnan padam -thatha fav parthathu ellamae remind paniteenga balasi !!!!

vasu balaji said...

வாஸ்தவம். வசதியிருக்கிறப்ப பார்க்கத் தோணலை. வசதியில்லாதப்ப ‘ஒசிபிஸா’ வைக்கறீங்களா அரை மணி நேரந்தான்னு கீழுட்டுல கேக்கறதுக்குள்ள கூசிச் செத்துட்டேன்.

ரிஷபன் said...

//நல்லதோ கெட்டதோ அவர்களின் வாழ்நாள் உறக்கம் முழுவதும் ஏதோவொரு தொ.காட்சித்தொடரின் நாயகியின் கண்ணீரில் கனவுகளாக கடந்துபோகுமென்பது மட்டும் திண்ணமாகத்தெரிகிறது. //
வாஸ்தவம். டிவி இல்லாத நாட்களில் அடுத்த வீட்டில் கூனி குனிந்து பார்த்த அவஸ்தைகள் இப்போதும் மறக்கவில்லை. யதார்த்தமான பதிவு.

Thenammai Lakshmanan said...

நல்லதோ கெட்டதோ அவர்களின் வாழ்நாள் உறக்கம் முழுவதும் ஏதோவொரு தொ.காட்சித்தொடரின் நாயகியின் கண்ணீரில் கனவுகளாக கடந்துபோகுமென்பது மட்டும் திண்ணமாகத்தெரிகிறது//
உண்மை பாலாசி.. ஆனால் டி விக்கு அடிமையாகாத பெருமையில் இருந்தேன்.. ஆனால் அதை முகப் புத்தகம் ., வலைத்தளம் அட்த்த் நொறுக்கி விட்டது..:((

Ahamed irshad said...

True Topic..

ஹேமா said...

பாட்டி தொலைக்காட்சி பார்க்கத்தொடங்கிவிட்டதால் குழந்தைகளுக்குப் பாட்டிப் பழங்கதைகள் கிடைக்காமல் போகிறது பாலாஜி !

Paleo God said...

அம்மி அம்மி அம்மி மிதித்து

அகில உலக தமிழ் மகனையெல்லாம் மிதித்த அம்மி அல்லவா அது! :)

Jerry Eshananda said...

What a title..... i like this.

சீமான்கனி said...

நீந்தி களைத்து கரைதொட்டு திரும்பி பார்க்கும் உணர்வை தந்த பாலாசியின் ஒளியின் நீட்சி அழகு....வாழ்த்துகள்....

Unknown said...

எங்கூர்ல டிவி வந்தப்ப ஒசரமான சவுக்கு கம்புல ஆண்டெனா கட்டி வச்சிருபாக கடே காரவுக வூட்ல.. புள்ளி புள்ளியா.. ஒளியும் ஒளியும் பாக்குறதுக்கு..ஆளுக்கு கால் ரூவா வாங்குவான் கடே காரு மவன்...

இப்ப ஊரெலாம் பொட்டி... கடே காரு வூட்ல போன மாசம் இருந்த கலிஞ்சரு பொட்டியும் அடவு வச்சுதான் சீவனமே....

sakthi said...

இந்த மெகா சீரியலை கண்டுபிடிச்சவங்கலை என்னசொல்றதுன்னே தெரியலப்பா அநியாயத்துக்கு அதுக்கு அடிமையாயிட்டாங்க

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்குங்க பாலாசி.

நண்பர் முரளியை வழிமொழிகிறேன்.

sakthi said...

‘பாரு,பாரு.... எந்த காமுட்டி கோயில்லடா தீவெட்டி புடிச்சே?‘ன்னு வாத்தியார் தலையில் தட்டும்பொழுதான் பள்ளியிலிருப்பதாய் கண்களுக்கு சுரணைவரும்.

same blood

கலகலப்ரியா said...

||பட்டிக்குள் அடைபட்ட செம்மறியாட்டுக் கூட்டமென ஆசாபாசங்களை துறக்க பழகிவிட்டது இந்த காலும், கையும். விஞ்ஞான துணுக்கினை வீட்டிற்குள் அமர்த்திவிட்டு அடைகாக்கத்துணிந்த உடலும், மேலிமையை புருவங்கள் கட்டிவைக்க விடியல் வீழ்வதறியாமல் வெறித்திருக்கும் கண்களும் எதையெதையோ தின்றுகொண்டிருக்கின்றன.||

ம்ம்...

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப நல்ல எழுதியிருக்கிங்க பாலாசி.

தொலைக்காட்சியின் நீட்சி மிக அதிகம்.

பா.ராஜாராம் said...

பாலாசி,

அடுத்த மாது காமு நீர்தான். அப்படியே உரிக்கும் மண்மணம்!

பா.ராஜாராம் said...

தலைப்பு,

இன்னும் அழகு.

Unknown said...

ரொம்ப நல்லாயிருக்குங்க பாலாசி

பவள சங்கரி said...

ஆரம்பமே தூள் ! தலைப்பு அதைவிட. உண்மைதான் பாலாசி, இன்றைய நிலையை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்.

கண்ணகி said...

எழுத்து உங்கள் வசப்பட்டுவிட்டது...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பாலாசி, தொ.கா.பெட்டி இல்லாத காலம் முதல் இன்று வரை நடந்துள்ள மாற்றத்தை அழகாக வடித்துள்ளீர்கள். உங்கள் எழுத்து நடை "சீக்கிரம் முடித்து விட்டீர்களோ" என்று எண்ண வைக்கிறது.

அகல்விளக்கு said...

நல்லா சொல்லியிருக்கீங்க அண்ணா...

தொ.கா.யினால் வந்த (நொந்த) மாற்றம்...

சத்ரியன் said...

ஏ..அப்பு,

சும்மா வெளுத்து வாங்குறீயளே!

ஓசியா கெடைக்குறதுன்னா.. நம்ம மக்க..எல்லாத்தையும்....விடுங்க பாலாசி.வயித்தெரிச்சல் தான் மிச்சமாகுது.

ராமலக்ஷ்மி said...

நிதர்சனத்தை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள் பாலாசி.

ஜெயசீலன் said...

உண்மையை உள்ளபடியே எழுதியமைக்கு பாராட்டுக்கள்... எழுத்து நடைக்கு நூறு மதிப்பெண்கள்...

ஜோதிஜி said...

குழந்தைகள் இப்போது புரிந்து கொண்டு விட்டார்கள். வீட்டுக்குள் ஒரு பெட்டி போலத்தான் இருக்கிறது. எந்த உறுத்தலும் இல்லாமல்.

நம் கையில் தான் இருக்கிறது.

ஊரில் முதல் நாள் பார்த்த ஞாபகம் வருகிறது.

r.v.saravanan said...

உண்மை நிலையை உணர்த்தும் இடுகை
உங்கள் எழுத்து நடை அருமை பாலாசி

பத்மா said...

ஹ்ம்ம் ரொம்ப நல்லா இருக்கு பாலாசி.அது ஒரு பெரும் பேய் ..இப்படி மக்களை பிடித்து ஆட்டுகிறதே ?

க.பாலாசி said...

நன்றி முரளிக்குமார்
நன்றி ரோகிணிசிவா
நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி ரிஷபன்
நன்றி தேனம்மை
நன்றி அஷமது இர்ஷாத்
நன்றி ஹேமா
நன்றி ஷங்கர்
நன்றி ஜெரி ஈசானந்தன்
நன்றி சீமாங்கனி
நன்றி கே.ஆர்.பி.செந்தில்
நன்றி சக்தி
நன்றி செ.சரவணக்குமார்
நன்றி கலகலப்பிரியா
நன்றி அக்பர்
நன்றி பா.ராஜாராம் அய்யா
நன்றி கலாநேசன்
நன்றி நித்திலம் சிப்பிக்குள் முத்து
நன்றி கண்ணகி
நன்றி ச.செந்தில்வேலன்
நன்றி அகல்விளக்கு ராசா
நன்றி சத்ரியன்
நன்றி ராமலஷ்மி
நன்றி ஜெயசீலன்
நன்றி ஜோதிஜி
நன்றி ஆர்.வி.சரவணன்
நன்றி பத்மா

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லாயிருக்குங்க பாலாசி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல எதார்த்தமான பதிவு

Chitra said...

உங்களின் தனித்துவ எழுத்து நடையில், பதிவு அருமை. :-)

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO