க.பாலாசி: வெவ்வேறானவை...

Friday, August 27, 2010

வெவ்வேறானவை...

..


சீப்பிலிருந்த தலைமுடியை
கைவிரலில் சுருட்டிக்கொண்டிருந்தாள்

எப்ப வந்த? என்று கேட்பதற்குமுன்...

வாந்த...ஊர்ல இருக்கியா? என்றாள்..

இல்ல இன்னைக்குத்தான்...
ஆமா நீ? சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டேன்

நேத்து வந்தேன்..

உம்பொண்ணா இது?

ம்ம்...

தூக்கியணைத்து.. முத்தமிட்டேன்
குழந்தையாய் பார்த்தாள்...

நல்லவேளை
சின்னபொண்ணும், ராசுபொண்டாட்டியும்
ஊரிலில்லை.


**********************

காரம் கூடின குழம்புக்கு
அவ்வப்போது பாட்டியும் திட்டுவாள்

த்தூ.. என்னாக் கொழம்புடியிது
புளிப்பு வாயில வய்க்கமுல்ல
இது அப்பா

‘ஒண்ணும் வாங்கியாரதில்ல..
வரட்டும் வச்சிக்கிறேன் இந்த மனுஷனை’

வைதுகொண்டிருப்பாள் அம்மா...
அலமாரிக்கு மட்டும் கேட்கும்படி.


*********************

சோப்பு சீப்பெல்லாம்
தனியா வச்சிக்கணும்யா..

இந்தா இதுல
பவுடரும் எண்ணையும் இருக்கு

பாய்த் தலையாணில்லாம்
நீ மட்டுந்தான வச்சிக்கிற...

என்று சொன்ன அப்பாவின்முன்

நண்பனின் சட்டையை அணிந்திருந்தேன்...
அவர் சட்டைசெய்யவில்லை.


...

53 comments:

vasu balaji said...

உலகமே கவிதையாத்தான் கெடக்கோ. உன்னை மாதிரி உள்வாங்கி அனுபவிக்கிறா மாதிரி தெரியலை பாரு எனக்கு. ரொம்ப அழகு பாலாசி.

vasu balaji said...

//உள்வாங்கி அனுபவிக்கிறா மாதிரி தெரியலை பாரு எனக்கு//

உள்வாங்கி அனுபவிக்கிறா மாதிரி சொல்லத் தெரியல பாரு எனக்கு:)

ஜெயந்த் கிருஷ்ணா said...

கடைசி ஓன்று மிகவும் அருமை..

காமராஜ் said...

சொல்லில் முகம் தெரிகிறது பாலாசி.சொல்லாதவற்றில் கனம் கூடுகிறது.அம்மா அப்பா அவள் வேறென்ன இருக்கிறது அன்புகொள்ள.கவிதை சுண்டி இழுக்குது பாலாசி.

RAJA RAJA RAJAN said...

ரொம்ப நாலருக்கு...

வெளுத்து வாங்குங்கோ...!

http://communicatorindia.blogspot.com/

க ரா said...

அருமை பாலாசி...
//வைதுகொண்டிருப்பாள் அம்மா...
அலமாரிக்கு மட்டும் கேட்கும்படி.//
இதெல்லாம் அப்பாக்கள் கால்த்தோட முடிஞ்சி போச்சு இல்லயா பாலாசி :)

பவள சங்கரி said...

மூன்றாவது கவிதை அருமை. எனக்குப் பிடித்தது. வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

ஏ... சாமீ!

ஒன்னு வுடாம ஞாபகப்படுத்துறீயே அப்பு. படிக்க படிக்க மனசுல படமா இல்ல ஓடுது!

அன்புடன் நான் said...

மிக கவனமா கவனித்து உணர்ந்ததை ... அதே மொழியில் கவிதையாக்கிய விதம் மிக அருமை.
வாழ்த்துக்கள்.

sakthi said...

வைதுகொண்டிருப்பாள் அம்மா...
அலமாரிக்கு மட்டும் கேட்கும்படி.

கிளாஸ் யா

அப்படியே என் அம்மாவை ஞாபகப்படுத்தும் வரிகள்

priyamudanprabu said...

ரொம்ப நாலருக்கு...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அருமையான கவிதைகள் பாலாசி

r.v.saravanan said...

கவிதை வரிகள் அருமை பாலாசி வாழ்த்துக்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

நல்லாயிருக்குங்க பாலாசி.....

அம்பிகா said...

அனைத்தும் அருமை.
நல்லாயிருக்கு பாலாசி.

அம்பிகா said...

அனைத்தும் அருமை.
நல்லாயிருக்கு பாலாசி.

dheva said...

ஒரு இனம் புரியாத உணர்வுகளை கிளறி விடுகிறது கவிதைள்.....

//வாந்த...ஊர்ல இருக்கியா? என்றாள்..//

ஒரு பள்ளிக் கூட காதல் பளீச் சென்று தோன்றி மறைந்தது பாஸ்!

Chitra said...

எதார்த்த விஷயங்கள் கூட, கவிதையில் நன்கு மிளிர்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

ராமலக்ஷ்மி said...

அருமை.

இரண்டாவதில் அம்மா பாவம்.

மூன்றாவதில் பாவம் அப்பாவும்:)!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//வைதுகொண்டிருப்பாள் அம்மா...
அலமாரிக்கு மட்டும் கேட்கும்படி//

அருமை பாலாசி.

ஈரோடு கதிர் said...

இரண்டாவதும் மூன்றாவது என்னவென்னவோ சொல்கிறது

அடைகாத்து வரும் கவிதை கனமாக இருக்கிறது பாலாசி!!!

ஜோதிஜி said...

உள்வாங்கி அனுபவிக்கிறா மாதிரி சொல்லத் தெரியல பாரு எனக்கு:)


உண்மை.

க. தங்கமணி பிரபு said...

நல்லாயிருக்குங்க பாலாசி! கவிதையா வாசிக்கறத விட துண்டு துண்டு சொந்த அனுபவங்களின் படிமானமா படிச்சா சுவை கூடுது போல!

லா. ச.ரா போல நீங்க இத உரைநடையாவே எழுதினா இன்னும் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்!

வாழ்த்துக்கள்!

க. தங்கமணி பிரபு said...

ஆனா இரண்டாவதும் மூண்றாவதும் நல்ல கவிதை அனுபவம்!

2. வேதனையும் பழைய நினைவுகளும் மண்டியது.

அப்பாவுக்கு பயந்த அம்மா, இப்போது முதுமையில் எனக்கு பயக்கிறாள்!என் இருப்பிலாத போது யாருக்கோ பதிலாக என் பெண்டாட்டியை வைகிறாள்! எழவு கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரம் மறுக்கப்பட்ட தலைமுறை பெண்களால், பல தலைமுறைகள் பின்னுக்கு வாழ்கிறோம்! நல்ல பதிவு பாலாசி!

3. அழுகைதான், வேறென்ன!
எத்தனை நல்ல அப்பா!
அவர் இறந்ததை விடவும்
அவர் வயதை கடக்கையில்
வலிகளோடு புரிகிறது....
எத்தனை நல்ல அப்பா!

நல்லாயிருக்கு பாலாசி!
வரப்போகும் வயதுகளில் இன்னும் நிறைய அழுவேன் போல!

ஹேமா said...

இயல்பாயிருக்கு
மூன்று கவிதையும் பாலாஜி.
முதலாவது ஏக்கம்.
இரண்டாவது இயலாமை.
மூன்றாவது பாசத்தோடு முடியாமை என்று சொல்லலாமா !

சீமான்கனி said...

//நண்பனின் சட்டையை அணிந்திருந்தேன்...
அவர் சட்டைசெய்யவில்லை.//


ஹாஸ்டல் காலங்கள் கண்முன்னே...'செம்'மையா இருக்கு "வெவ்வேறானவை" பாலாசி...வாழ்த்துகள்...

Unknown said...

//வைதுகொண்டிருப்பாள் அம்மா...
அலமாரிக்கு மட்டும் கேட்கும்படி.//

மிகவும் அருமை..

ஜில்தண்ணி said...

/// அலமாரிக்கு மட்டும் கேட்கும்படி.///

/// நண்பனின் சட்டையை அணிந்திருந்தேன்...
அவர் சட்டைசெய்யவில்லை ///

அனுபவித்தது அப்படியே வெளிவந்துவிட்டது :)

ரசித்தேன் அண்ணே :)

Vidhoosh said...

:0 எல்லாமே சூப்பர்ங்க

ஆடுமாடு said...

யதார்த்தம் பாலாசி.
வாழ்த்துகள்

செ.சரவணக்குமார் said...

என்ன சொல்றது பாலாசி. இப்படி மக்க மனுசங்கள உசுரோட படைப்புல நடமாடவிடுறீகளே.. நன்றிங்க.

பத்மா said...

எல்லாரும் எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. நான் சொல்ல வேற என்ன இருக்கு ?
ஒவ்வொரு பதிவுக்கும் மெருகு ஏறிகிட்டே போகுது .. ஒரு நாள் பாலாசிய எனக்கும் தெரியும் என பெருமையுடன் சொல்லும் நாளும் வரப்போகிறது ..வாழ்த்துக்கள் பாலாசி

Ashok D said...

பா.ரா. கவிதையெல்லாம் படிச்சுட்டு... நீங்க ரொம்ப கெட்டுபோயிட்டீங்க பாலாசி...

சும்மா லொள்ளுபா...

கவிதையெல்லாம் அன்பையே சொல்லுகிறது... மனதையும் அள்ளுகிறது... :)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை அருமை அருமை .

ஜெயசீலன் said...

ரொம்ப ரொம்ப ரசிச்சேன் பாலாசி... வட்டார கவி மொழியில் பிண்றீங்க... வேறென்ன சொல்ல!!! வாழ்க வளமுடன்....!!!!!

தாராபுரத்தான் said...

விபரமான கவிதைகள்..

அகல்விளக்கு said...

ரொம்ப அருமை அண்ணா....

பழமைபேசி said...

அனுபவிச்சு எழுதறீங்க நண்பா!!!

ரோகிணிசிவா said...

last kavithai en hostel days and frnd oda saree mathi katti daddy kita thituvangunathu ellam niyabaga paduthiruchu boss

அண்ணாமலை..!! said...

ரொம்ப அருமைங்க நண்பரே!
கொஞ்ச நாளாக உங்கள் வலைப்பக்கத்திற்கு வரமுடியாமல் ஏதோ ஒரு விட்ஜெட் தடைசெய்தது!
இப்போது ஓ.கே!

r.v.saravanan said...

உங்கள் தளத்தின் வடிவமைப்பு பிரமாதம் பாலாசி

Aathira mullai said...

ஒவ்வொன்றும் ஒரு கதையைச் சொல்லுது. மனதை அள்ளுது.. அதிலும் முதல் கவிதை..அபாரம்..பாலாசி..

க.பாலாசி said...

நன்றி வானம்பாடிகள் அய்யா..

நன்றி வெறும்பய

நன்றி காமராஜ் அய்யா

நன்றி ராஜ ராஜ ராஜன்

நன்றி இராமசாமி கண்ணண்
(அதுவும் சரிதானுங்க)

நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றி சத்ரியன்

நன்றி சி. கருணாகரசு

நன்றி sakthi

நன்றி பிரியமுடன் பிரபு

நன்றி மணி (ஆயிரத்தில் ஒருவன்)

நன்றி r.v.saravanan

நன்றி ஆரூரன் விசுவநாதன்

க.பாலாசி said...

நன்றிங்க அம்பிகா

நன்றி dheva

நன்றி Chitra

நன்றி T.V.ராதாகிருஷ்ணன் அய்யா

நன்றி ராமலக்ஷ்மி

நன்றி திருநாவுக்கரசு பழனிசாமி

நன்றி ஈரோடு கதிர்

நன்றி ஜோதிஜி

நன்றிங்க க. தங்கமணி பிரபு
(முயற்சிக்கிறேங்க..நீண்ட நாட்களுக்கு பிறகான தங்களின் பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது)

நன்றி ஹேமா
(ம்ம்ம்..சொல்லலாம்)

நன்றி சீமான்கனி

நன்றி கலாநேசன்

நன்றி ஜில்தண்ணி - யோகேஷ்

நன்றிங்க Vidhoosh

நன்றிங்க ஆடுமாடு

நன்றி செ.சரவணக்குமார்

நன்றிங்க பத்மா

க.பாலாசி said...

நன்றி D.R.Ashok அண்ணா

நன்றி ஸ்ரீ

நன்றி Jayaseelan

நன்றி தாராபுரத்தான் அய்யா

நன்றி அகல்விளக்கு ராசா

நன்றி பழமைபேசி அய்யா

நன்றி ரோகிணிசிவா
(ஒ.கே. பாஸ்)

நன்றி அண்ணாமலை..!!

நன்றி r.v.saravanan
(மீண்டும்)

நன்றிங்க ஆதிரா
(முதல் வருகை மற்றும் கருத்திற்கு)

Ahamed irshad said...

கவிதைகள் அருமை...

logu.. said...

Kanamana varthaigal..

iyalbai irukku.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நண்பா எல்லாம் கலக்கலா சூப்பரா இருக்கு...

//நண்பனின் சட்டையை அணிந்திருந்தேன்...
அவர் சட்டைசெய்யவில்லை.//

உண்மையான வரிகள்...

மிக்க மகிழ்ச்சி சில ஞாபகங்களை அசைபோட வைத்தமைக்கு...

தமிழ்நதி said...

சிலசமயங்களில் அப்பாக்கள் விவரமாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.:)

அரசூரான் said...

பாலாசி, மூன்றும் முத்து.
“வாந்த...” மனதை வருடுகிறது.

க.பாலாசி said...

நன்றிங்க இர்ஷாத்

நன்றி logu..

நன்றி தஞ்சை.வாசன்

நன்றி தமிழ்நதி

நன்றி அரசூரான்

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாசி......ம்ம்ம்....

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO