க.பாலாசி: ஒரு கூடும் சில குளவிகளும்

Monday, October 25, 2010

ஒரு கூடும் சில குளவிகளும்

நான் வந்த பேருந்தில் ஏறியவர்கள் கணவன் மனைவியாக இருக்கவேண்டும். தொடை உயரம் ஒரு மகன், இன்னொரு குழந்தை அப்பன் தோளில் தூங்கியது. அவர் கையில் பால் பாட்டிலும் தயாராகவே இருந்தது. பேருந்தினுள் நான்குபேர் இடைவெளியில் இருவரும் நின்றுகொண்டார்கள். மூக்கொழுகும் பெரிய மகன் அவளின் காலை கட்டிக்கொண்டான். ஒரு கையால் மேல்கம்பியை பிடித்துக்கொண்டாலும், மறுகையில் துணியடைத்த குச்சிப்பையை வைத்துக்கொண்டாள். ஒருவரின் மூச்சுகாற்று அடுத்தவர் முதுகில் சூட்டைப்பரப்புமளவு கூட்டம். இருவர் இருக்கையில் அமர்ந்திருந்த குண்டு சிறுக்கிகளுக்கு மூன்றுபேர் இருக்கையே தாங்காது. அவர்களின் தள்ளுமுள்ளலும் இவளுக்குத்தான் இடைஞ்சல். அவ்வப்போது விலகும் மாராப்பையும், இடுப்புச்சேலையையும் சரிசெய்துகொண்டாள். அருகருகே நிற்கும் ஆண்களின் இடிசலுக்கும், நடத்துநர் நடையழகுக்கும் ஓர் உடலங்கத்தை அவள் ஒதுக்கிவைத்தே ஆகவேண்டும். இந்த மேடுபள்ள சாலையில் பயணிப்பதில் ஆண்களுக்கே அடிவயிறு கலக்கும் அபாயம் உண்டு. ஐந்தாவது முறையாக பெரிய மகனின் ஒழுகும் மூக்கை முந்தானையால் துடைத்துவிட்டாள். ஒரு வேகத்தடையை கடந்தது பேருந்து. அப்பனிடம் தூங்கிய குழந்தை விழித்துக்கொண்டது. இவளைப்பார்த்து அழத்தொடங்கியது. அவர் பாலைக்கொடுத்து சமாதானப்படுத்த முயன்றார், குடிக்கவில்லை. அனைவரும் கவனிக்க தொடங்கினர், சிலருக்கு எரிச்சலும்கூட. அப்பன் கையில் திமிரிய அந்தப்பொடிசை அவளே வாங்கிக்கொண்டாள். ‘ச்ச்சுச்சூ...ச்ச்சுச்சூ...ஏஞ்செல்லம் அழுவுறீங்க.....’ என்றபடியே இடுப்பில் அமர்த்தி முத்தமிட்டாள், அவ்வளவுதான்....அதுவும் சிரித்தது, அவளும் சிரித்தாள்..... நான் இறங்கவேண்டிய நிறுத்தம் கடந்துவிட்டது.

•••••••

அக்கா மகள் தன் குறிப்பேட்டைக்காட்டி ’மாய்மா...இத பாறேன்’ என்றாள். ‘அ’னா‘வை அழகாக எழுதியிருந்தாள்.

‘ரொம்ப நல்லாயிருக்கே நீங்களா எழுதினீங்க?’என்றேன்.

‘ம்ம்ம்’ என்றாள்.

‘எந்த மிஸ் சொல்லிக்கொடுத்தாங்க?’

‘ஹர்ஸா மிஸ்’

‘ஓ...எங்க மறுபடி எப்டின்னு போட்டுக்காட்டுங்க பார்ப்போம்’

‘பர்ஸ்ட் மேலவொரு ஸ்மால் சர்க்கிள் இப்டி போட்டுட்டியா, அதுக்கு கீழ ஒரு பெரிய எலிப்ஸ், அப்பறம் ரெண்டையும் ஜாயிண்ட் பண்ணி ஒரு கர்வ், நெக்ஸ்ட் ஒரு ஹரிசான்டல் லைன், வெர்டிகிள் லைன். அவ்ளோத்தான்.......’

அக்கா கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள், மாமா பூரித்திருந்தார். ஒன்றாம் வகுப்பு சேரும்போது தமிழ்பண்டிட் பொன்னுசாமி அய்யா என் விரலைப்பிடித்து சிலேட்டில் ‘அ’ எழுதிக்காட்டியதை நினைத்துக்கொண்டிருந்தேன். விட்டத்து மூலையில் ஒட்டடைக்கூட்டினில் சிக்கிய பொன்வண்டை பார்க்கப் பாவமாயிருந்தது.

•••••••••

இப்போதெல்லாம் அவளை நினைத்துப்பார்ப்பதை குறைத்துவிட்டேன். ஓர் அகண்டவாய் ஏனமாக இன்றைய நிலை மாறிவிட்டதாலோ என்னமோ கொண்டதெல்லாம் கொண்டுவிடுகிறது. அவளென்னுள் படிந்த வேகம் ஒரு குறுகிய காலம். ஒரு ஜென்ம பகையும், ஏழு ஜென்ம நினைவுகளையும் மனதிலிருந்து சுரண்டமுடியாமல் செய்துவிட்டாள். ஒரு பெட்டிக்குள் அடைபட்டுள்ள துணிகளாய் வர்ணவர்ணமாய் அவளின் காதல் அடைந்துகிடக்கிறது. அவ்வப்போதைய கனவுகளும், சில பெருவெளி தனிமையும் அணிந்துகொள்வதோடு சரி. முக்கி முனகி நான்கு வருடங்களை கடந்துவிட்டேன். அண்ட சராசரங்களனைத்தும் ஒரே ஜீவனுக்குள் அடக்கிவைத்திருந்திருப்பதாய் பாரமாகவே கழிகிறது பொழுதுகள். ஒரு கழுமரமும் அதிலமர்ந்த காகமுமாய்த்தான் மடிந்து புலரும் பொழுதுகள் கண்ணாம்பூச்சிக்காட்டி ஓடி ஓடி மறைகிறது. எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டி மட்கசெய்துவிடத்தான் பார்க்கிறேன். போகும் வழியெங்கும் சேகரிப்பது குப்பைகளாகவே இருப்பின் எதை எங்கே கொட்ட.

•••••••••

நேற்றைய இரவுப்பொழுதை பேருந்துப்பயணம் மேயந்துகொண்டது. காலையிலதுமிழ்ந்த வெளிச்ச உலகில் மாற்றமேதுமில்லை. சென்றவருடத்தைவிட இப்போது 2 கிலோ எடை அதிகரித்திருக்கிறேன். தா(டி)டை முடிகள் சற்றே கூர்மையடைந்து காணப்படுகிறது. மீசை(?!!!)யில் கருமை அடர்ந்துள்ளது. வலது காதுமடல் மேல் ஒரு வெள்ளை மடையானின் இறகு நீட்சி. சென்றவருடம் இது இல்லை. ஒரு இருட்டறையும், அதிலமர்ந்து வாசிக்கும் தொடர்கதையுமாக இவ்வாழ்க்கை புரண்டுகொண்டேயிருக்கிறது எதுவும் புலப்படாமல் அல்லது படுத்தாமல். வெறுமனே புரட்ட 27 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. வீடு கட்டும் மணலில் காற்கூடு கட்டிக் கழித்த வயதுதான் இப்போதைய கனவுகளை சொரிந்து சுகப்படுத்துகிறது. வேறென்ன சொல்ல. இந்த நாளையினிமையாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

42 comments:

vasu balaji said...

பிறந்தநாள் வாழ்த்துகள் பாலாசி. எழுத்தைப் பரிசாய் எங்களுக்குத் தந்திருக்கிறாய். உன் எழுத்தில் சிக்கிய பொன்வண்டாய் மனம்..சுய பரிசோதனையின் ஒப்பீட்டில் ஒரு பெருமூச்சு மட்டுமே ஒப்பு நோக்கிய கூலி..வரும் ஆண்டு சாதிக்க வாழ்த்துகள் மீண்டும்.

காமராஜ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலாசி.

அன்பேசிவம் said...

வார்த்தைகளற்று
நிசப்தமாய்
வருடம் கடந்த
நம் நட்பிற்கும்,
உன் பிறந்தநாளுக்கும்
’நல்லாயிரு’ என்கிற
ஒற்றை வார்த்தை போதுமானதாயிருக்கிறது,
வாழ்த்துக்களாய்.

நல்லாயிரு நண்பா...

சிவசங்கர். said...

///விட்டத்து மூலையில் ஒட்டடைக்கூட்டினில் சிக்கிய பொன்வண்டை பார்க்கப் பாவமாயிருந்தது.///

அருமை...

சிவசங்கர். said...

Happy birth day...

வலசு - வேலணை said...

வித்தியாசமா எழுதியிருக்கீங்க.
நன்றாயிருக்கிறது

க ரா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாலாசி.

மணிஜி said...

தம்பி...என்ன சொல்ல வருகிறேன் என்று உனக்கு புரியும்.....எழுத்து..இன்னும்....தொடரட்டும்

அன்பரசன் said...

//‘பர்ஸ்ட் மேலவொரு ஸ்மால் சர்க்கிள் இப்டி போட்டுட்டியா, அதுக்கு கீழ ஒரு பெரிய எலிப்ஸ், அப்பறம் ரெண்டையும் ஜாயிண்ட் பண்ணி ஒரு கர்வ், நெக்ஸ்ட் ஒரு ஹரிசான்டல் லைன், வெர்டிகிள் லைன். அவ்ளோத்தான்.......’

ஒன்றாம் வகுப்பு சேரும்போது தமிழ்பண்டிட் பொன்னுசாமி அய்யா என் விரலைப்பிடித்து சிலேட்டில் ‘அ’ எழுதிக்காட்டியதை நினைத்துக்கொண்டிருந்தேன்.//

என்னத்த சொல்ல...

அன்பரசன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Unknown said...

பாலாசி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan said...

ஒரு ஜென்ம பகையும், ஏழு ஜென்ம நினைவுகளையும் மனதிலிருந்து சுரண்டமுடியாமல் செய்துவிட்டாள். //

அட அருமை.. பிறந்தநாளா வாழ்த்துக்கள் பாலாசி:))

அரசூரான் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலாசி.

மாதேவி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Praveenkumar said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே..!! இப்பதிவின் கருத்துகளும் மிக அருமையாக உள்ளது.

கலகலப்ரியா said...

பிறந்தநாள் வாழ்த்துகள் பாலாசி.. இடுகை வழக்கம் போல அலாதி..

Anonymous said...

உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எங்களுக்கு இனிப்பாய் பதிவு உன் எழுத்து நடையாலேயே பதிவு அதில் வரும் ஆக்கமும் மெருகேறுகிறது பாலாசி..

Anonymous said...

எல்லோரும் கேட்குமுன்னே சொல்லிக் கொள்கிறேன் உன்னை என் தம்பி என்று..

sakthi said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலாசி

வினோ said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலாசி.

அருமையான பகிர்வு....

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலாசி. இடுகை அருமை.

Mahi_Granny said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். (நான் வயதைக் கேட்ட போது சொல்லவில்லை ) மெலிதாய் ஒரு புன்னகையுடன் படித்து முடித்தேன் மூன்றாவது பாராவைத் தவிர

Unknown said...

பிறந்தநாள் வாழ்த்துகள்.

எஸ்.கே said...

ரொம்ப அருமையா எழுதி உள்ளீர்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பிறந்தநாள் வாழ்த்துகள் பாலாசி.

ரோகிணிசிவா said...

//எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டி மட்கசெய்துவிடத்தான் பார்க்கிறேன். போகும் வழியெங்கும் சேகரிப்பது குப்பைகளாகவே இருப்பின் எதை எங்கே கொட்ட.//

salute balasi ......solla onum illa ,
happy bday dear

லெமூரியன்... said...

இனிய பிறந்த நாள் நல வாழ்த்துக்கள் நண்பனே..!

\\விட்டத்து மூலையில் ஒட்டடைக்கூட்டினில் சிக்கிய பொன்வண்டை பார்க்கப் பாவமாயிருந்தது..........//

காலத்தின் கோலம்....

வேற என்ன சொல்றதுன்னு தெரியலையே?? :(

நிலாமதி said...

உங்களக்கு பிறந்த நாள்வாழ்த்துக்கள் உரித்தாகுக.

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலாசி.

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துகள் பாலாசி :)

ஈரோடு கதிர் said...

ஒரு தேன்கூடும், சொட்டும் தேனும் என்றும் கூட தலைப்பு வைத்திருக்கலாம்

பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாலாசி.

பதிவு அருமை.. ரசித்து வாசித்தேன். நன்றி.

தாராபுரத்தான் said...

தம்பிக்கு பிறந்த நாளா...வாழ்த்துக்ள்...வாழ்த்துக்கள்.

Chitra said...

வீடு கட்டும் மணலில் காற்கூடு கட்டிக் கழித்த வயதுதான் இப்போதைய கனவுகளை சொரிந்து சுகப்படுத்துகிறது. வேறென்ன சொல்ல. இந்த நாளையினிமையாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


.... அழகு. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

க.பாலாசி said...

மிக்க நன்றிங்க வானம்பாடிகள் அய்யா
நன்றிங்க காமராஜ் சார்
நன்றிங்க (முரளி) நண்பா
நன்றிங்க சிவசங்கர்
நன்றிங்க வலசு - வேலணை
வாங்க இராமசாமி கண்ணண், நன்றிங்க
நன்றிங்க மணிஜீ....
நன்றிங்க அன்பரசன்
நன்றிங்க கே.ஆர்.பி.செந்தில்
நன்றிங்க தேனம்மை லெக்ஷ்மணன்
நன்றிங்க அரசூரான்
நன்றிங்க மாதேவி
நன்றிங்க பிரவின்குமார்
நன்றிங்க கே.ஆர்.பி.செந்தில் said...
நன்றிங்க தேனம்மை லெக்ஷ்மணன்
வாங்க அரசூரான், நன்றி... நன்றிங்க மாதேவி
நன்றிங்க பிரவின்குமார்
ப்ரியாக்கா நன்றி..
வாங்க தமிழரசி அக்கா ரொம்ப நன்றி

க.பாலாசி said...

நன்றிங்க sakthi
நன்றிங்க வினோ
நன்றிங்க ராமலக்ஷ்மி
ரொம்ப நன்றிங்க Mahi_Granny
(வயதை அந்த பதிலூட்டத்திலேயே சொல்லிட்டேனுங்க.. இருந்தாலும் மறுக்காவும் சொல்றேன்.. 28 ஆயிடுச்சுங்க)
நன்றிங்க Sethu
நன்றிங்க எஸ்.கே
நன்றிங்க ச.செந்தில்வேலன் / S.Senthilvelan
நன்றி ரோகிணிசிவா அக்கா
நன்றிங்க லெமூரியன்...
நன்றிங்க நிலாமதி
நன்றிங்க T.V.ஆர் அய்யா
நன்றிங்க Balaji saravana
நன்றிங்க ஈரோடு கதிர்
நன்றிங்க முத்துலெட்சுமி/muthuletchumi
நன்றிங்க தாராபுரத்தான் அய்யா
வாங்க Chitra அக்கா நன்றிங்க..

மாதவராஜ் said...

வசியம் செய்யும் எழுத்து. ரசித்தேன்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலாசி.
மென்மேலும் சிறப்புக்கள் வந்து சேரட்டும்.

க.பாலாசி said...

மிக்க நன்றிங்க மாதவராஜ்

Thanglish Payan said...

Superb..

'பரிவை' சே.குமார் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலாசி.

க.பாலாசி said...

நன்றிங்க பாலா
நன்றிங்க சே.குமார்..

Radhakrishnan said...

அருமை, வாழ்த்துகள் பாலாசி.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO