க.பாலாசி: பாட்டி...

Friday, November 12, 2010

பாட்டி...

வெற்றிலைக்காம்பை கிள்ளி
வெகுசுலபமாய்
வாசல் குப்பைகளில்
போட்டுவிடுகிறாள்

நீண்டுத் தொங்கும்
காதுமடல் குண்டலத்தை
இழுத்து விளையாடும் விரல்களிலிருந்து
விடுதலையும் கிடைத்தாயிற்று

உறங்கச்செய்யப் பாடும்
‘என் செல்லமே கண்ணுறங்கு’
தாலாட்டும் கதைகளும்
நின்று காலமாகிவிட்டது

முந்தியில் முடிந்திருக்கும்
ஒன்றிரண்டு ரூபாயைப்பிடுங்கி
கடுக்காய் மிட்டாய் வாங்கிச்
சாப்பிடவும் யாருமில்லை

குடலேற்றம் வந்தால்
முதுகை தட்டி வயிற்றை நீவி
குணமாக்கவேண்டிய கடமையும்
இல்லாமல் போனது

எங்கள் வீட்டில்...
மின்சாரம் நின்றால் திரும்பிப்பார்க்க
அம்மியும் இருக்கிறது
அவளும் இருக்கிறாள்.


..

38 comments:

vasu balaji said...

/எங்கள் வீட்டில்...
மின்சாரம் நின்றால் திரும்பிப்பார்க்க
அம்மியும் இருக்கிறது
அவளும் இருக்கிறாள்./

நாலு வரியில சாச்சுப்புட்டியே மக்கா. வண்ணமா பந்தல் போட்டு வாழ்ந்த வாழ்வச் சொல்லி அத்தனையும் தொலைச்சு இருட்டில் ஜடமாய்..ம்ம்ம்
வர வர அந்தக்காலத்துல கருப்பு வெள்ளை டிவில வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியுமுக்கு காத்திருக்கும் ஒரு கூட்டம். அப்படி ஆகிபோச்சு. வெள்ளி வந்தா பாலாசி எப்ப இடுகை போடுவாருன்னு. அசத்து ராஜா.

ராமலக்ஷ்மி said...

//எங்கள் வீட்டில்...
மின்சாரம் நின்றால் திரும்பிப்பார்க்க
அம்மியும் இருக்கிறது
அவளும் இருக்கிறாள்.//

அருமை பாலாசி.

ஈரோடு கதிர் said...

அசத்தல்

ரோகிணிசிவா said...

ம் , ராசாத்தி ன்னு கூப்ட தாத்தா # ஐ மிஸ்

காமராஜ் said...

தாத்தாக்களை விடவும் பாட்டிகள் பலபடிகள் மேலே நிற்க காரணம் கைப்பக்குவம்.தலைமுறைகளைப்பூமியில் விதைத்தவளாயிற்றே.அனுபவச்சுருக்கங்களோடு வீட்டுக்குள் கிடக்கும் சஞ்சீவ மலை இல்லையா அவள் ?.

Unknown said...

இது டிவி பொட்டிகளின் காலம்...

அகல்விளக்கு said...

நிதர்சனம்....

அன்பேசிவம் said...

சாவடிக்கிற நண்பா...

பிரபாகர் said...

அய்யா சொன்னதுதான்.... அசத்து தம்பி!...

Anonymous said...

கடைசி வரிகள் காவியம் பாலாசி...

அம்பிகா said...

/எங்கள் வீட்டில்...
மின்சாரம் நின்றால் திரும்பிப்பார்க்க
அம்மியும் இருக்கிறது
அவளும் இருக்கிறாள்./
அருமையான வரிகள்.

ஜோதிஜி said...

என்னோட பாட்டியைப் பற்றி எழுத தூண்டு கோலாக இருக்கிறது.

க ரா said...

அருமை பாலாசி :)

Ramesh said...

அருமை. அந்த ரசனை கலங்கடிக்குது மனதை உணர்வைத் தேடி.....
கடைசிபராவே போதும்

பவள சங்கரி said...

அருமை பாலாசி. எளிமையும், நிதர்சனமும் சேர்ந்து தோழமையை ஏற்படுத்துகிறது பாலாசி. வாழ்த்துக்கள்.

Unknown said...

அருமை.

Ashok D said...

நல்லாயிருக்கு பாலாசி.. இழந்தது நிறைய இருக்கு

ராஜ நடராஜன் said...

ரசனை என்று சொல்ல வந்தேன்.

மீண்டுமொரு பாட்டி அழைக்கிறாள்.

ராஜ நடராஜன் said...

பெரும்பாலும் நான் பின்னூட்டங்களோடு கடை தாவுவது வழக்கம்.சில சமயம் விதி விலக்காக ஓட்டும் உண்டு.இந்த ஓட்டு பாட்டிக்கு.

ஜெயசீலன் said...

:)

அன்பரசன் said...

பிரமாதம்ங்க.

கலகலப்ரியா said...

touchy..

ஹேமா said...

என் அம்மம்மா,தாத்தா கவிதைக்குள் !

Prasanna said...

அபாரம்.. !

தாராபுரத்தான் said...

குடலேற்றம் வந்தால்
முதுகை தட்டி வயிற்றை நீவி
அருமைங்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

. ரொம்ப நல்லாயிருக்கு...

r.v.saravanan said...

அசத்தல் பாலாசி

Anonymous said...

ரொம்ப அருமை பாலாசி

Ahamed irshad said...

ம்..அபார‌ம்ங்க‌ பாலாசி..

ஹுஸைனம்மா said...

ம்ம்.. நானும் ஒரு காலத்தில் பாட்டியாகணுமே என்று நினைத்தால் பயமா இருக்கு..

விநாயக முருகன் said...

கவிதை அருமை பாலாசி

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

pichaikaaran said...

அருமையான கவிதை...

ஒவ்வொரு வரியும் இனிமை

vimalanperali said...

அம்மியரைக்க மட்டுமே பயனாகிப் போனாள் பாட்டி.நினைக்கவே மனது கனக்கிறதுதான்.வாழ்க்கைக்கு இயந்திரங்கள் உதவியது போய்,இயந்திரங்களின் அடிமையாகிப் போனோமோ நாம் என்கிற சந்தேகமும் வராமல் இல்லை.

ஹரிஸ் Harish said...

அருமை பாலாசி..தொடருங்கள்..

க.பாலாசி said...

நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றிங்க ராமலக்ஷ்மி
நன்றி கதிர் அய்யா
நன்றி ரோகிணிக்கா
நன்றி காமராஜ் அய்யா
நன்றி கே.ஆர்.பி.
நன்றி அகல்விளக்கு ராசா
நன்றி முரளி
நன்றி பிரபாகர் அண்ணா
நன்றி தமிழரசிக்கா
நன்றி அம்பிகா மேடம்
நன்றி ஜோதிஜி
நன்றி இராமசாமி கண்ணன்
நன்றி டி.வி.ஆர்
நன்றி றமேஸ்

க.பாலாசி said...

நன்றி நித்திலம் மேடம்
நன்றி சேது
நன்றி அசோக் அண்ணா
நன்றி நடராஜன்
நன்றி ஜெயசீலன்
நன்றி அன்பரசன்
நன்றி ப்ரியாக்கா
நன்றி ஹேமா
நன்றி பிரசன்னா
நன்றி தாராபுரத்தான்
நன்றி வெறும்பய
நன்றி சரவணன்
நன்றி பாலாஜி சரவணா
நன்றி இர்சாத்
நன்றி ஹுசைனம்மா
நன்றி விநாயகமுருகன்
நன்றி அருணா மேடம்
நன்றி பார்வையாளன்
நன்றி விமலன்
நன்றி ஹரிஸ்.

arasan said...

நிதர்சன உண்மை...
ரொம்ப நல்லா இருக்கு பாலாசி...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO