க.பாலாசி: யரலவழள

Tuesday, April 26, 2011

யரலவழள

*

அடுப்பினுள் தூங்கும் அந்தப் பூனைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
எதுவுமில்லா வீட்டில்
எலியும் இருக்காதென்று.

•••

யாசித்துக் கிடைக்காத
பிச்சையை வீதியெங்கும்
வீசிச்செல்கிறான் பிச்சைக்காரன்
சாபமாக....

•••

பசியில் இறந்தவன்
உயிர்நாற்றம் குப்பையில் 
சிதறிக்கிடக்கிறது
தலைவாழை இலையுடன்

•••

பகலில் தூங்கி 
இரவில் எழுகிறது
காய்ந்த வயிற்று   
வேசியின் சேலை.


34 comments:

இளங்கோ said...

அருமையான கவிதைகள்.

r.v.saravanan said...

முதல் கவிதை அருமை பாலாசி

vasu balaji said...

ம்ம். பசி அடிப்படைங்கறதால இடையினம் தலைப்பா? எதைப் பாராட்டன்னு தெரியலை. கடைசி கவிதை அபாரம்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
அடுப்பினுள் தூங்கும் அந்தப் பூனைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
எதுவுமில்லா வீட்டில்
எலியும் இருக்காதென்று.
////

வறுமையின் உச்சம்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
யாசித்துக் கிடைக்காத
பிச்சையை வீதியெங்கும்
வீசிச்செல்கிறான் பிச்சைக்காரன்
சாபமாக....////

வீழ்ந்து எழாத ஒரு கிராமத்தின் உச்சம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
பசியில் இறந்தவன்
உயிர்நாற்றம் குப்பையில்
சிதறிக்கிடக்கிறது
தலைவாழை இலையுடன்////

இது வலியின் உச்சம்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
பகலில் தூங்கி
இரவில் எழுகிறது
காய்ந்த வயிற்று
வேசியின் சேலை.////

ஒரு சமுக அவலத்தின் உச்சம்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இருக்கும் கவிதைகளில் ஒளிவிசுகிறது கவித்துவத்தின் ஆளுமை...

வாழ்த்துக்கள்..

பனித்துளி சங்கர் said...

எந்தக் கவிதையை ரசிப்பது என்று தெரியவில்லை . எந்தக் கவிதையைப் பற்றி சிந்திப்பது என்று புரியவில்லை . ஒவ்வொன்றும் சிறப்புதான் அருமை .

க ரா said...

எங்கிருந்து பிடிக்கறீங்க பாலாசி .. அருமை..

காமராஜ் said...

அத்தனை கவிதையும் அருமை.
கிடைக்காத பிச்சையை வீசீச்செலவது அபாரம்.

ராமலக்ஷ்மி said...

மிக நன்று பாலாசி.

அகல்விளக்கு said...

அனைத்தும் அருமை...

ஓலை said...

Wow! Wow! WoW!

ஹிந்தி கவி சம்மேளன் நடக்கும் போது, கவிஞர் ஒரு வரி சொல்லி முடித்தவுடன் உடன் எல்லோரும் 'வாவ்' 'வாவ்' என்பாங்க.

நாங்க அதைத் தான் சொல்லுறோம் இப்ப.

அன்பேசிவம் said...

நண்பா, அருமை, எந்த வடிவத்தில் எழுதினாலும் அதில் ஒரு கலக்கு கலக்குறிங்க,... வாழ்த்துகள்.. :-)

ஜோதிஜி said...

ஒவ்வொரு முறையும் தாமதமாக வந்து மகிழ்ச்சியாக செல்கின்றேன்.

ஹேமா said...

எல்லாமே சிந்தனைச் சிதறல்களாய் அருமையா இருக்கு பாலாஜி !

Kumky said...

அபாரம்...ஜெமோலாஜி..

க ரா said...

//கும்க்கி said...
அபாரம்...ஜெமோலாஜி..
//
இத ரிப்பிட்லேன்னா சாமி குத்தமாகிக்போகும்.. எல்லாரும் ரிப்பிட்டுருங்க மக்கா !

பிரதீபா said...

ஒவ்வொன்றும் அறைகிறது .

Ashok D said...

Third one is best one man... others nice

(why English.. becoz Tamizan)

பத்மா said...

balaci nee kavignan

ஈரோடு கதிர் said...

அசத்தல் பாலாசி!

தாராபுரத்தான் said...

பாலாசியின் அசத்தல்..ங்க

arasan said...

நெஞ்சை கிள்ளும் உண்மைகள் ... அனைத்தும் அருமை ...

sakthi said...

யப்பா நாலே வரிகளில் நச்ன்னு நாலு கவிதை அசத்திட்டீங்க பாலாசி

சத்ரியன் said...

அட சாமீய்,

அந்த கடைசி நாலு வரி.....!

க.பாலாசி said...

நன்றி இளங்கோ
நன்றி சரவணன்
நன்றி வானம்பாடிகள் அய்யா
(ம்ம்ம்)
நன்றி சௌந்தர்
நன்றி பனித்துளி சங்கர்
நன்றி இராமசாமி அண்ணா
நன்றி காமராஜ் அய்யா
நன்றிங்க ராமலஷ்மி
நன்றி அகல்விளக்கு ராஜா
நன்றி ஓலை சேது அண்ணா
நன்றி முரளி
நன்றி ஜோதிஜி
நன்றிங்க ஹேமா
நன்றி கும்க்கி
(விடமாட்டீங்களா நீங்க...)
நன்றிங்க பிரதீபா
நன்றி அசோக் அண்ணா
நன்றிங்க பத்மா மேம்
நன்றி ஈரோடு கதிர் அய்யா
நன்றி தாராபுரத்தான் அய்யா
நன்றி அரசன்
நன்றிங்க சக்தி
நன்றி சத்ரியன்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நீண்ட நாளாய் வர நினைத்து இன்றுதான் கனவுகள் மேயும் காட்டுக்குள் நுழைகிறேன் பாலா.

டெம்ப்ளேட் க்ளாசிக்.

யரலவழள நெடுநாளைக்கு பசியின் வன்மையைப் பேசியபடி இருக்கும்.

விடுபட்டவைகளையும் வாசிக்கத் துவங்குகிறேன் பாலா.

அ.முத்து பிரகாஷ் said...

வாழை இலையின் நறுமணத்தை இனி ரசிக்க முடியாது என்னால் ...

மெல்லினம் விட ஊசியாய் மெல்ல இறங்குகிறது ...

முகவை மைந்தன் said...

நல்ல பாடல்கள். சிறு வெண்பா முயற்சி கீழே.

அடுப்புள் உறங்கும் அலவறியா தேதுமிலா
வீட்டில் எலியுமிரா தென்று

இரந்தும் பெறாதான் இகழ்ந்தான் தெருவில்
கரந்துண்போர் வாழ்வைக் கடிந்து

சிநேகிதன் அக்பர் said...

தலைப்பும் , கவிதைகள் சொல்லும் கருத்தும் மனதை ஏதோ செய்கிறது.

Marimuthu Murugan said...

அனைத்தும் அருமை

Sakthi said...

heart became so burden

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO