க.பாலாசி: வேதனை
Showing posts with label வேதனை. Show all posts
Showing posts with label வேதனை. Show all posts

Tuesday, January 12, 2010

அரைவயிற்றுக் கஞ்சி...

மண்ணடுப்பு
மண்பானை

புதுஅரிசி

உருண்டைவெல்லம்

காய்கறிக்கூட்டு

கரும்புக்கட்டு

மஞ்சள்கொத்து

இஞ்சிக்கொத்து

சாணப்பிள்ளையார்

அருகம்பில்

தும்பைப்பூ

துவையள்.... என...

பஞ்சாங்க முறைப்படி

பாரம்பரிய படையலிட்டு...

வருணபகவானின்

வரம் வேண்டுவது

பக்கத்துமாடி

படித்தவர் வீட்டில்
.

மழை

வெள்ளத்தில்...

உயிரெனப் பயிரை

பறிகொடுத்த

விவசாயிக்கு

அன்றும் வரமாய்...

அரைவயிற்றுக் கஞ்சியே...


பொங்கலோப்பொங்கல்...


இக்கவிதை உரையாடல் கவிதை போட்டிக்காக...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO