க.பாலாசி: ஒரு குழந்தையின் குமுறல்...

Friday, September 25, 2009

ஒரு குழந்தையின் குமுறல்...


எங்கப்பா சுதந்திரத்திற்கு போராடினார்...
தற்பெருமையுடன் மகன்...
அவன் வீட்டில்...கூண்டுக்குள் குருவிகள்...

பிறந்தநாள், நினைவுநாளில்
அலங்கரிக்கப்படும் தலைவர்களின் சிலைகள்...
மற்ற நாட்களில் காக்கையின் கண்காணிப்பில்...

தீவிரவாதிகளை தேடும் பணியில்
பாதுகாப்பு படையினர்...வீடுவீடாக வேட்டை...
ஏழைப்பெண்களின் ஆடைகளை அவிழ்த்துவிட்டு...

மந்திய அமைச்சர்...விமானத்தில்...
இரண்டாம் வகுப்பில் பயணம்...
கட்சித் தொண்டன் கோவணத்துடன் பெருமை...

வரியேய்ப்பை தோலுரிக்கும் திரைப்படம்...
நடிகருக்கு தேசிய விருது...வருமான வரித்துறையின்
திடீர் ஆய்வில் சிக்கியது சில கோடிகள்...

குடும்பக் கட்டுபாட்டின் அவசியம்
கூப்பாடு போட்டும் பயனில்லை...
பெண்ணாய்ப் பிறந்தால் தெரிகிறது...

நாடாளுமன்றத்திலும் தமிழில்
பதிலளிக்கவேண்டும்...அமைச்சர் ஆரவாரம்...
அவர் பேரன் ஆங்கிலத்தில் மட்டும் தேர்ச்சி...


தமிழ்மணத்திலும், தமிலிஸ்ஸிலும் உங்களது வாக்கினை செலுத்தவும்....நன்றி...

30 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

super

பழமைபேசி said...

நன்று!

ஈரோடு கதிர் said...

//மந்திய அமைச்சர்...விமானத்தில்...
இரண்டாம் வகுப்பில் பயணம்...
கட்சித் தொண்டன் கோவணத்துடன் பெருமை...//

அடடா! அருமை பாலாஜி


எல்லாமே வெட்கப்பட வைக்கும்
சுருக்கென நெஞ்சில் தைக்கும்
வரிகள் தம்பி

வாழ்த்துகள்

vasu balaji said...

யதார்த்தம் கருவேல முள்ளாய்த் தைக்கிறது. அருமை பாலாஜி

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாஜி.......

சீக்கிரம் ஆட்டோ வரப்போகுது ஆபிஸுக்கு.....ஜாக்கிரதை....

டமிள் நாட்ல.......
உங்.....பேச்.....சரியில்ல...

ஹி....ஹி....

அருமை

கார்த்திகைப் பாண்டியன் said...

யதார்த்தம்..

தினேஷ் said...

உண்மை

shortfilmindia.com said...

நெஜம்..

கேபிள் சங்கர்

சுரேஷ்குமார் said...

அனைத்தும் நிஜம்.கலக்குங்க பாலாஜி.

க.பாலாசி said...

நன்றி...T.V.Radhakrishnan

நன்றி...Blogger பழமைபேசி

நன்றி...Blogger கதிர் - ஈரோடு

நன்றி...வானம்பாடிகள்

நன்றி...Blogger ஆரூரன் விசுவநாதன்

நன்றி...Blogger கார்த்திகைப் பாண்டியன்

நன்றி...Blogger சூரியன் said

நன்றி...Blogger shortfilmindia.com (கேபிள் சங்கர்)

நன்றி...Blogger சுரேஷ்குமார்

வால்பையன் said...

அருமை நண்பரே!

ஹேமா said...

பாலாஜி,புட்டுப் புட்டு உடைச்சு வக்கிறீங்க.இப்பிடிப் பப்ளிக்ல உடைக்கலாமோ !நீங்க பத்திரம்.

புலவன் புலிகேசி said...

நல்ல கருத்துக்கள்...அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்...........

தேவன் மாயம் said...

இப்படி உண்மைகளைப் போட்டு உடைக்கலாமா!

பிரபாகர் said...

முன்னமே நிறைய பேர் எனது வேலையை செய்துவிட, பாராட்ட ஒன்றுமில்லை...

மிளிர்கிறீர்கள், சுருக்கச்சொன்னால்...

பிரபாகர்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

Radhakrishnan said...

முரண்பாடுகளை சுட்டிக்காட்டும் அழகிய கவிதை.

swizram said...

//வரியேய்ப்பை தோலுரிக்கும் திரைப்படம்...
நடிகருக்கு தேசிய விருது...வருமான வரித்துறையின்
திடீர் ஆய்வில் சிக்கியது சில கோடிகள்...//

நீங்க யாரபத்தி பேசுறிங்க பாஸ்??!!

சொன்னதெல்லாம் நிஜம்...

Ashok D said...

பிரமாதம் பாலாஜி keep it up

ப்ரியமுடன் வசந்த் said...

சூப்பர் அல்லாமே சுடும் நிஜங்கள்

Unknown said...

அருமை..

க.பாலாசி said...

நன்றி...வால்பையன்

நன்றி...Blogger ஹேமா

நன்றி...Blogger புலவன் புலிகேசி

நன்றி...Blogger தேவன் மாயம்

நன்றி...Blogger பிரபாகர்

நன்றி...Blogger முத்துலெட்சுமி/muthuletchumi

நன்றி...Blogger வெ.இராதாகிருஷ்ணன்

நன்றி...Blogger ரசனைக்காரி

நன்றி...Blogger D.R.Ashok

நன்றி..Blogger பிரியமுடன்...வசந்த்

நன்றி...Blogger பட்டிக்காட்டான்..

அன்புடன் அருணா said...

கலக்கல்ஸ்! பூங்கொத்து!

க.பாலாசி said...

நன்றி...அன்புடன் அருணா

Unknown said...

அருமையான கவிதை பாலாஜி...!! சிந்திக்க வைத்தது....

Sadagopal Muralidharan said...

நல்லா இருக்கு. நல்லாக்காட்டமா, கவிதை.
ஒருவருக்கு ஒரு வரி புரிந்து சிலவற்றைத்தவிர்த்து, சிலவற்றைப்பின்பற்றினாலே வெற்றிதான்.
வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

நன்றி...லவ்டேல் மேடி

நன்றி...Blogger Sadagopal Muralidharan

அன்புடன் மலிக்கா said...

உண்மைகள் ஊமையாக்கூடது என்ற நல்லெண்ணம் மிக அருமை பாராட்டுக்கள்

க.பாலாசி said...

//அன்புடன் மலிக்கா said...
உண்மைகள் ஊமையாக்கூடது என்ற நல்லெண்ணம் மிக அருமை பாராட்டுக்கள்//

நன்றி மலிக்கா....

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

உமது மனக்குமுறல் புரிகிறது நண்பரே

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO