க.பாலாசி: மறந்தால்தானே...நினைக்கனும் மாமா...

Wednesday, September 2, 2009

மறந்தால்தானே...நினைக்கனும் மாமா...


இருள்கவ்வ எழும்பும் விளக்குகள், சில தூர இருளினை மறைத்து, உருண்டோடி... பத்துமணி ஆகும் தருவாயில்... இரைவுண்டு நான் உறங்கச்செல்லும் வேளைதனில் தானும் உறங்கும்...

கண்ணயரும் நேரத்தில் ஏதாவதொரு மெல்லிய இதமான இசையைப்பருக எண்ணி... செல்லிடப்பேசியில் பதிவுசெய்யப்பட்ட ஒரு பாடலை ஒலிக்கவிட்டேன்...மெல்ல இளகிய அந்தப்பாடல்...

குடகுமலை காற்றில் ஒரு பாட்டு கேட்குதா என் பைங்கிளி...

இந்த பாடலின் வரிகளில் உள்ளார்ந்து மூழ்கி உறைந்து உறங்கிப்போனேன்...சில ஞாபகங்கள் மட்டும் இடையிடையே உறவாடின...

நானும் அவளும் சண்டையிட்டு பிரிந்துபோன நிலையில், நான் ஏதோ ஒன்று கேட்க, அவள் தனது வலிகளை ஒரு கடிதத்தில் வடித்திருந்தாள். அதில் அவள், இந்த பாடலின் ஒரு வரியான மறந்தால்தானே நினைக்கனும் மாமா...நினைவே நீதானே...நீதானே... என்று குறிப்பிட...

அதைப் படித்தமாத்திரத்தில் கண்ணில் ஒழுகிய நீரின் ஒருபகுதி கன்னம்தொட, அறியாதவனாய் உருகிப்போனேன். பின் அவள் மீது எனக்கிருந்த காதல், இன்னும் அதிகமானது. வாசல் நீரிட்டு, வாயிற்படிதனில், அவள் இடும் கோலத்தில் சிக்குண்ட புள்ளியினைப்போல் சிக்கிக்கொண்டேன்.

அவளின் பிறந்தநாளான அன்று வீட்டிற்கு சென்று பார்த்தேன். ஓர் புதிய பட்டுச்சேலையில் நின்றிருந்தாள். அவள் கட்டிய சேலையில் மடித்து சொருகிய தலைப்பினில் மாட்டிக்கொண்ட எறும்புக்கு எந்த திசை தெரியும்? என் நிலையும் அதேதான்... பின் சுயநினைவு கொண்டவனாய் சுதாரித்து அவளைப்பார்க்க...அவள் என்னைப்பார்க்க...மெல்லிய புன்னகையில் வழியும் எச்சிலின் சுவையும் சுகமாய்போனது...

பிரிதொருநாளில்...


எங்களிருவரின் கரம்சேர...
உடல் அணைய...
கடற்கரை மணலில்
கால்பதித்த வேளைதனில்...
தொட்டுச்சென்ற அலைகளெல்லாம்,
தன்னிலைமறந்து தானாட...
அதனுடன் சேர்ந்து
ஆங்கே மீன்களுமாட...
இனித்துப்போனது கடல்...

பின்னே அலைக்கு பயந்தவளாய்
அவள் ஓட..அவள் பின்னே நானுமோட...
துரத்தி வந்த அலைகள்

சுனாமி என்ற பெயரினைப் பெற்றது...


தொடர்ந்து வந்த அலைகள்
எங்களிருவரையும் அணைத்துக்கொள்ள
அதனுள் அடங்கிப்போன நாங்களில்...

அவள் மட்டும் அடங்கிவிட்டாள்...

இறந்துபோன அவளை என் நெஞ்சில் அணைத்துகொண்டு கதற....


நான் அழுத கண்ணீரின் மிகையால்

காவிரி கடைமடை வரை பாய...
ஓருடல் கலந்த நீரினால்
மீண்டும்
இயல்புநிலையுடன்
கரிக்கத் தொடங்கியது கடல்...

பிறகு, கானக்கருங்குயிலே....காதல் ஒர் பாவமடி....காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி...என்ற பாடல் ஒலிக்க எழுந்துபார்க்கிறேன்... செல்லிடப்பேசியில் நான் வைத்த எழுப்புமணி...நேரம் 7am என்று காட்ட பாடலைமட்டும் அணைத்துவிட்டு படுத்துவிட்டேன்...


தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் தங்களது வாக்கினை பதிவிடவும்....நன்றி...**********

14 comments:

ஈரோடு கதிர் said...

//மாட்டிக்கொண்ட எறும்புக்கு எந்த திசை தெரியும்?//

எப்படி பாலாஜி இப்படி... அழகு நண்பா!!!

//கரம்சேர...
உடல் அணைய...//

ஆகா... அற்புதம்

//அவள் மட்டும் அடங்கிவிட்டாள்//
ஏன் இந்தக் கொலவெறி... ஒரு கனவு கண்டா... அதில காதலிய உயிரோட விடுங்கப்பா

//7am அணைத்துவிட்டு படுத்துவிட்டேன்//

திரும்பவும் தூக்கமா?

ஆனா... எழுத்து நடை ரசிக்க தீனி போடுகிறது. தொடருங்கள்

சீமான்கனி said...

ரசித்து ருசித்து படித்தேன்....அருமையோ அருமை....
ப்ச் .....-- அழகு நண்பா..

ஆரூரன் விசுவநாதன் said...

நான் அழுத கண்ணீரின் மிகையால்
காவிரி கடைமடை வரை பாய...

அப்படியாவது காவிரி கடைமடை வரை பாயுமா?.....

வலி மிகுந்த வரிகள். நெஞ்சம் கணக்கிறது.

சுரேஷ்குமார் said...

//நான் அழுத கண்ணீரின் மிகையால்
காவிரி கடைமடை வரை பாய...
ஓருடல் கலந்த நீரினால் மீண்டும்
இயல்புநிலையுடன் கரிக்கத் தொடங்கியது கடல்...//

ரசித்தேன்.

வால்பையன் said...

//இனித்துப்போனது கடல்...//

இந்த ஒருவரியில் காதலின் ஆழம் புரியுது தல!

ப்ரியமுடன் வசந்த் said...

//பின்னே அலைக்கு பயந்தவளாய்
அவள் ஓட..அவள் பின்னே நானுமோட...
துரத்தி வந்த அலைகள்
சுனாமி என்ற பெயரினைப் பெற்றது...//

இட்டுக்காட்டியது அழகு....

ஹேமா said...

பாலாஜி,எழுப்புமணி நேரம்-அறிந்துகொண்டேன்.இதேபோல Miss call அறிந்தால் சொல்லுங்கள்.

கனவிலதானா ஆட்டம் ஓட்டம் பாட்டு எல்லாம் !ஏன் கவலையா முடிச்சிட்டீங்க ?

க.பாலாசி said...

//கதிர் - ஈரோடு said...
எப்படி பாலாஜி இப்படி... அழகு நண்பா!!!
ஆகா... அற்புதம்//

மிக்க நன்றி...

//ஏன் இந்தக் கொலவெறி... ஒரு கனவு கண்டா... அதில காதலிய உயிரோட விடுங்கப்பா//

அதெப்படி விட்டுட்டா நானில்ல மாட்டிப்பேன்...

// திரும்பவும் தூக்கமா?//

ஆவ்வ்வ்வ்வ்.....

ஆனா... எழுத்து நடை ரசிக்க தீனி போடுகிறது. தொடருங்கள்

மிக்க நன்றி....
-------------------

//Blogger seemangani said...
ரசித்து ருசித்து படித்தேன்....அருமையோ அருமை....
ப்ச் .....-- அழகு நண்பா..///

மிக்க நன்றி நண்பா....
----------------------

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
அப்படியாவது காவிரி கடைமடை வரை பாயுமா?.....//

எல்லாம் ஒரு புனைவுதான்...

//வலி மிகுந்த வரிகள். நெஞ்சம் கணக்கிறது.//

அய்யா...இது ஜஸ்ட் கதை மட்டுமே....

க.பாலாசி said...

//சுரேஷ்குமார் said...
ரசித்தேன்.//

நன்றி நண்பரே....

//Blogger வால்பையன் said...
//இனித்துப்போனது கடல்...//
இந்த ஒருவரியில் காதலின் ஆழம் புரியுது தல!//

ஓ.கே...தல..நன்றி வருகைக்கு...

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
இட்டுக்காட்டியது அழகு....//

மிக்க நன்றி வசந்த்....

//Blogger ஹேமா said...
பாலாஜி,எழுப்புமணி நேரம்-அறிந்துகொண்டேன்.இதேபோல Miss call அறிந்தால் சொல்லுங்கள்.//

சொல்லலாமே...எந்த மிஸ்ஸ கேட்கிறீங்க...

//கனவிலதானா ஆட்டம் ஓட்டம் பாட்டு எல்லாம் !ஏன் கவலையா முடிச்சிட்டீங்க ?//

என்ன பண்றது டச்சிங் வேணும்ல...

மிக்க நன்றிங்க்கா...உங்கள் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு...

RAMYA said...

அழகு ஒவ்வொரு வரிகளும் மிகவும் ரசிக்க முடிந்தது :)

க.பாலாசி said...

//RAMYA said...
அழகு ஒவ்வொரு வரிகளும் மிகவும் ரசிக்க முடிந்தது :)//

மிக்க நன்றி...தங்களின் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு...

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்கு நண்பா

நாடோடி இலக்கியன் said...

ரசனையான பதிவு.

மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துகள்.

க.பாலாசி said...

//" உழவன் " " Uzhavan " said...
நல்லாருக்கு நண்பா//

நன்றி அன்பரே...

//நாடோடி இலக்கியன் said...
ரசனையான பதிவு.//

மிக்க நன்றி அண்ணா...

//மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துகள்.//

உங்களின் உந்தலில் முயற்சிக்கிறேன்..

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO