க.பாலாசி: இதுக்காகவே சாவனுங்க...

Thursday, April 1, 2010

இதுக்காகவே சாவனுங்க...

“அட எங்கக்கா... காலங்காத்தால கட்ன சேலயோட களம்பிட்ட...

“அடியே கூறுகெட்டவளே சேதி தெரியாதாடி ஒனக்கு...


“என்னக்கா
சொல்ற... ??

“க்கும்... அறப்படிச்சவன் அங்காடிக்குப் போனாக்கா அள்ளவும் மாட்டானாங், கொள்ளவும் மாட்டானான். அந்த கதையால்ல இருக்கு. நீ அறப்புக்கு போனதும்போதும் அக்கம்பக்கத்துல என்ன நடக்குதுன்னே தெரிஞ்சிக்கிறதில்ல... நம்ம சந்தராவோட புருஷன் செத்துட்டானான்டி..


“அய்யோ என்னக்கா சொல்ற நீயி..
!!!!!! எடத்தெருவுலேர்த்து பாலு கொண்டாருமே அந்தக்கவோட வீட்டுக்காரனா.

“அட ஆமாடி.. நல்லாத்தான் இருந்தேன். என்ன எழவுன்னு தெரியல... பொசுக்குன்னு போயிட்டான். நல்ல சாக்காடு மனுசனுக்கு.

“அந்தக்காவ பொட்டும்பூவுமா ராசாத்தி மவன் கல்யாணத்துல பாக்குறப்போ அப்டியே மவாலட்சுமி மாதிரி இருக்குமேக்கா.. இனிமே அது மொவத்த எப்டி பாக்குறது??

“சரி... ஒன் வீட்டுக்காரன் எங்கடி.. ??

“அது இன்னைக்குன்னு பாத்துதான் வாழக்கொள்ளையில எல அரக்க போயிருக்கு. அண்ணன் வீட்ல இருந்தா அப்டியே அதுக்கு சேதி சொல்லிடசொல்லுக்கா.

“எங்கூட்டு மனுஷன் முன்னாடியே அங்கண போயிட்டான்டி. இரு என்மொவன அனுப்புறேன்.

“அக்கா இரு...இரு... அங்கண வர்ரறு அந்த மனுஷனாட்டந்தான் தெரியுது...

“அட உன் வீட்டுக்காரன்தாண்டி...

“என்னாங்கிறங் வாசல்ல நின்னு கதயளந்துகிட்டு நிக்கிற. பக்கத்துதெருவுல கலியன் செத்துட்டானாம்ல. காலைலேர்ந்து ஒரு பயலும் எனக்கு சேதிய சொல்லல. இப்பதான் பாண்டிபய வந்து சொன்னான். களம்பலையா நீயி.

இப்பதேன் அக்கா சொன்னுது... அதான் ஓங்கிட்ட சேதிசொல்லிட்டு போலான்னு பாத்தேன்.

“சரி.. .நான் கௌம்புறேன். நீங்க ரெண்டுபேருமா குறுக்கால வந்து சேருங்க..

***************

இப்டி ஒரு பேச்ச கேட்க முடியும்னா அது கிராமத்துலையாத்தான் இருக்குங்க. எங்கண எவன் செத்தாலும் சும்மா சேதி தெரிஞ்சா போதும். யாரு என்னங்கறது அப்பறம்தான். என்ன வேலவெட்டியாயிருந்தாலும் அங்கணயே போட்டுட்டு சோறுதண்ணிகூட இல்லாம சாவு வீட்லயே அடக்கம் பண்றவரைக்கும் காத்துகெடப்பாங்க. பொம்பளைங்க ஒருபடி மேலதான். அதுங்க ஒப்பாரியில்லன்னா செத்தவன் அனாத மாதிரிதான். எடத்தெரு பொம்பள, கீழத்தெரு பொம்பளைய கட்டிகிட்டு அழும். கீழத்தெரு பொம்பளைக்கு பக்கத்துல செத்தவனோட அக்காகாரி உக்காந்திருக்கும். அது எந்த தெருவு என்ன சாதி... ம்கூம்.. .ஒண்ணுத்தையும் பாக்காதுங்க.

வீட்லேர்ந்து மூக்க சிந்திகிட்டே வருவாங்க. அந்த வாசப்படிய தொடும்போது பாக்கணுமே...அதுங்க மார்ல அடிச்சிக்கிறத...நமக்கு நெஞ்சிவலியே வர்றமாதிரி இருக்கும். அவ்வளவு உணர்ச்சியோட இருக்கும். எங்கணயாவது தப்பு சத்தம் கேட்டாக்கா வீட்ல ஒட்காந்துகிட்டு எங்கம்மா பொலம்பிகிட்டிருக்கும். எவனுக்கோ நல்ல சாக்காடுன்னு. செத்தது ஆம்பளையா பொம்பளையான்னு கூட அதுக்கு தெரியாது.


செத்தவன் வூட்ல சொந்தக்காரங்க நிக்கிறாங்களோ இல்லையோ.. பெரத்தி சனங்கதான் நெறைய நிக்கும். தப்படிக்குறவனுக்கு சொல்லுறதுல ஆரம்பிச்சி வாக்கரிசி போடுறவரைக்கும் எல்லாரும் கூட நிப்பாங்க. இந்த கூட்டத்த பாக்குறப்ப நாமளும் இந்தமாதிரி நாலுபேர சம்பாதிச்சிட்டுதான்டா சாவனும்னு தோணும். வாழ்ந்தாலும் செத்தாலும் ஒன் ஒறவே வேனான்னுட்டு போனவன்கூட செத்துட்டான்னு சேதி தெரிஞ்சா மொத ஆளாவந்து சொந்தத்துக்கு சேதிசொல்லிகிட்டு நிப்பான். வாய்க்கா சண்டயில வறப்ப பறிகொடுத்தவனும், பங்காளி சண்டயில பங்கு கெடைக்காதவனும்கூட முன்னாடிவந்து பந்தகாலு நட்டுகிட்டு நிப்பானுங்க.


பொம்பளைங்க மட்டும் சும்மாவாயென்ன...


என்ன சொல்லி அழுதாலும்... ஆங்ங்ங்... அ.............

பாவிமனம் தாங்கலையே..... ஆங்ங்ங்ங்.... அ..........

என்ன ஆறுதல் சொன்னாலும்.... ஆங்ங்ங்ங்...அ.......

பாழும் மனம் ஆறலையே................................ யக்கா........


இப்டி உன்னய தவிக்க உட்டுட்டு போயிட்டானேங்ங்ங்ங்ங்...


யப்பாடி இத கேட்டாலே கல்லு மனசுக்காரனுக்குகூட கடகடன்னு கண்ணுலேர்ந்து தண்ணி கொட்டாதுங்களா இல்லியா...!!!

போன மனுஷன குளிப்பாட்டி முழுக்காட்டி பாடையில போட்டு, பேரன் பேத்திங்க, இல்லன்னா சொந்தக்காரங் கையில தீவெட்டிய குடுத்து, எல்லாரையும் மூணு சுத்து சுத்திவர சொல்லி, கையில அரிசியக்குடுத்து வாயிலப்போடச்சொல்லும்போது ஒடையாத நெஞ்சையும், கலங்காத கண்ணயும் எங்கணவும் பாக்கமுடியாதுங்க... அதோட பாடைய தூக்கும்போது இந்த பொம்பளைங்க வைக்குற கூப்பாடு இருக்கே... நண்டு சிண்டுங்க எல்லாஞ்சேந்து ஒப்பாரி வைக்குங்க. என்னத்த சொல்றது... இதுக்காகவே சாவனுங்க... அப்டியே செத்தாலும் கிராமத்துல (சொந்தவூருல) சாவனுங்க....

சரி உடுங்க... கண்ணுல வரப்போற செரங்குக்கு கண்ணாடிய பாத்து என்ன ஆவப்போவுது...





72 comments:

Vidhoosh said...

என்னன்னு பின்னூட்டம் இடரது ... ஆங்...

ஆடுமாடு said...

நல்லாருக்கு பாலாசி.

எங்க ஊர்ல மாடத்தி பாட்டி, மாடத்திப் பாட்டின்னு ஒருத்தி இருந்தா. ஊருல யாரு செத்தாலும் அவா வந்துதான் ஒப்பாரி பாடிட்டு மாரடிப்பா.

'தாயாரே தாயாரே'ன்னு பொம்பளைங்க கூடி அடிக்கிறப்ப, நமக்கு என்னமோ போல ஆவும்.

ஆனா, 90 வயசுல செத்துப்போன மாடத்திப் பாட்டி சாவுக்கு ஒரு நாதியில்ல ஒப்பாரி பாடவும், மாரடிக்கவும்.

ஊர்க்காரங்க, டீசண்டா ஆயிட்டாங்களாம்ல !

நல்லா எழுதியிருக்குங்க.
வாழ்த்துகள்.

க.பாலாசி said...

//ஆடுமாடு said...
நல்லாருக்கு பாலாசி.
எங்க ஊர்ல மாடத்தி பாட்டி, மாடத்திப் பாட்டின்னு ஒருத்தி இருந்தா. ஊருல யாரு செத்தாலும் அவா வந்துதான் ஒப்பாரி பாடிட்டு மாரடிப்பா.

'தாயாரே தாயாரே'ன்னு பொம்பளைங்க கூடி அடிக்கிறப்ப, நமக்கு என்னமோ போல ஆவும்.

ஆனா, 90 வயசுல செத்துப்போன மாடத்திப் பாட்டி சாவுக்கு ஒரு நாதியில்ல ஒப்பாரி பாடவும், மாரடிக்கவும்.

ஊர்க்காரங்க, டீசண்டா ஆயிட்டாங்களாம்ல !

நல்லா எழுதியிருக்குங்க.
வாழ்த்துகள்//

மிக்க நன்றி அய்யா... எங்கூருல தனியா ஒப்பாரி வைக்கவும், மாரடிக்கவும் பொம்பளைங்க கெடையாதுங்க... எல்லாமும் சொந்தக்காரங்களும், பெரத்தி சனங்களும்தாங்க...

பிரபாகர் said...

கிராமத்துல இப்படித்தான் இருக்கும் பாலாசி.... அருமையா கண்ணுக்கு முன்னால கொண்டுவந்திருக்கீங்க!

கலக்குங்க இளவல்... ஓட்டு வீட்டில இருந்து அப்புறமா!

பிரபாகர்.

Chitra said...

அதோட பாடைய தூக்கும்போது இந்த பொம்பளைங்க வைக்குற கூப்பாடு இருக்கே... நண்டு சிண்டுங்க எல்லாஞ்சேந்து ஒப்பாரி வைக்குங்க. என்னத்த சொல்றது... இதுக்காகவே சாவனுங்க... அப்டியே செத்தாலும் கிராமத்துல (சொந்தவூருல) சாவனுங்க....

சரி உடுங்க... கண்ணுல வரப்போற செரங்குக்கு கண்ணாடிய பாத்து என்ன ஆவப்போவுது...


....... ஆஆஆ......... அண்ணா, காலங்கார்த்தால இப்படி ஒப்பாரி வச்சிட்டீகளே...... அண்ணா, புலம்ப வச்சிட்டீகளே........ நல்லத்தான் வச்சுருக்கீகளே.....

பிரேமா மகள் said...

என்ன சொல்லி அழுதாலும்... ஆங்ங்ங்... அ.............
பாவிமனம் தாங்கலையே..... ஆங்ங்ங்ங்.... அ..........
என்ன ஆறுதல் சொன்னாலும்.... ஆங்ங்ங்ங்...அ.......
பாழும் மனம் ஆறலையே................................ யக்கா........

//அப்புறம் சொல்லவே யில்லையே...//

அகல்விளக்கு said...

//இதுக்காகவே சாகணும்//

சரியாச் சொன்னீங்க....

க.பாலாசி said...

//Chitra said...
....... ஆஆஆ......... அண்ணா, காலங்கார்த்தால இப்படி ஒப்பாரி வச்சிட்டீகளே...... அண்ணா, புலம்ப வச்சிட்டீகளே........ நல்லத்தான் வச்சுருக்கீகளே.....//

அட அங்கண இப்பதான் விடிஞ்சிருக்கா... சரி..சரி... என்னயப்போயி அண்ணான்னு சொல்லிட்டீங்களே அக்கா..... இந்த கொடுமைய எங்கபோயி சொல்லுவேன்... ஆங்ங்ங்...அ......

பழமைபேசி said...

யோவ்....நாங்கெல்லாம் வெளியூர்ல இருக்கம்...இப்படி.... இவ்வளவு நல்லா எழுதி, மனசைக் கெடுக்கிறயே பாவி?!

அய்யோ...அய்யய்யோ...நான் எங்க சாவன்னு எனக்கே தெரியலையே....
என்ன சொல்லி அழுதாலும், எங்க சாவன்னு தெரியலையே....ஃஃஃக் ஃஃஃக்...
ஊரு நடுத்தெருவுல சனமெல்லாம் காத்திருக்க...
வடக்கமுன்னா தேரு போகுமே.....
ஆனா இந்தப் பாவி உசுரு எங்க போகுமுன்னு தெரியலையே...ஃஃக்...ஃஃஃக்......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//.. அப்டியே செத்தாலும் கிராமத்துல (சொந்தவூருல) சாவனுங்க.... //


நிசம்தான் பாலாசி..சமீபத்தில, என்னோட சீன நண்பன் இறந்துட்டான்..( ஹார்ட் அட்டாக்)..
அவங்க வீட்டுக்குப்போனா, அவங்க குடும்பம், மற்றூம் சில இந்திய நண்பர்கள்.. மொத்தமே 15 பேருதான் இருப்போம்.. எங்க பாஸு, அவனும் ஒரு சீனப்பயல், புதைக்கப்போறப்ப, 2 நிமிசம் வந்துட்டு பொழப்ப பாக்க போயிட்டான்..

அடுத்த வாரம், அவனுடைய வேலை இடத்துக்கு, மாற்று ஆள் வந்தாச்சு..

பழைச மற்ந்து அவனவன் வேலையப் பார்க்க போயிட்டான்..
அவ்வளவுதான் வாழ்க்கை..

இத நினைச்சா.. நம்ம ஊரு எவ்வளவோ மேல்..நம்ம துக்கத்தில பங்கெடுக்க , ஆயிரம் பேரு இருக்காங்க..

க.பாலாசி said...

//பழமைபேசி said...
யோவ்....நாங்கெல்லாம் வெளியூர்ல இருக்கம்...இப்படி.... இவ்வளவு நல்லா எழுதி, மனசைக் கெடுக்கிறயே பாவி?!
அய்யோ...அய்யய்யோ...நான் எங்க சாவன்னு எனக்கே தெரியலையே....
என்ன சொல்லி அழுதாலும், எங்க சாவன்னு தெரியலையே....ஃஃஃக் ஃஃஃக்...
ஊரு நடுத்தெருவுல சனமெல்லாம் காத்திருக்க...
வடக்கமுன்னா தேரு போகுமே.....
ஆனா இந்தப் பாவி உசுரு எங்க போகுமுன்னு தெரியலையே...ஃஃக்...ஃஃஃக்......//

அய்யா... நீங்களுமா... ஆங்ங்ங்...அ....

க.பாலாசி said...

//Vidhoosh(விதூஷ்) said...
என்னன்னு பின்னூட்டம் இடரது ... ஆங்...//

நன்றிங்க விதூஷ்... ஏதாவது சொல்லுங்க...

க.பாலாசி said...

//பிரபாகர் said...
கிராமத்துல இப்படித்தான் இருக்கும் பாலாசி.... அருமையா கண்ணுக்கு முன்னால கொண்டுவந்திருக்கீங்க!
கலக்குங்க இளவல்... ஓட்டு வீட்டில இருந்து அப்புறமா!
பிரபாகர்.//

நன்றிங்கண்ணா.. வாங்க.. அதெல்லாம் பொறுமையாவே ஆவட்டும்....

க.பாலாசி said...

//பிரேமா மகள் said...
அப்புறம் சொல்லவே யில்லையே...//

தெரிஞ்சா சொல்லமாட்டமா... மறந்திடுச்சு... நன்றிம்மா...

க.பாலாசி said...

//அகல்விளக்கு said...
//இதுக்காகவே சாகணும்//
சரியாச் சொன்னீங்க....//

நன்றிங்க ராசா....

க.பாலாசி said...

//பட்டாபட்டி.. said...
நிசம்தான் பாலாசி..சமீபத்தில, என்னோட சீன நண்பன் இறந்துட்டான்..( ஹார்ட் அட்டாக்)..
அவங்க வீட்டுக்குப்போனா, அவங்க குடும்பம், மற்றூம் சில இந்திய நண்பர்கள்.. மொத்தமே 15 பேருதான் இருப்போம்.. எங்க பாஸு, அவனும் ஒரு சீனப்பயல், புதைக்கப்போறப்ப, 2 நிமிசம் வந்துட்டு பொழப்ப பாக்க போயிட்டான்..

அடுத்த வாரம், அவனுடைய வேலை இடத்துக்கு, மாற்று ஆள் வந்தாச்சு..
பழைச மற்ந்து அவனவன் வேலையப் பார்க்க போயிட்டான்..
அவ்வளவுதான் வாழ்க்கை..
இத நினைச்சா.. நம்ம ஊரு எவ்வளவோ மேல்..நம்ம துக்கத்தில பங்கெடுக்க , ஆயிரம் பேரு இருக்காங்க..//

வாங்க தலைவரே... கேக்கவே கஷ்டமாத்தாங்க இருக்கு... நன்றிங்க வருகைக்கு...

ராஜ நடராஜன் said...

எங்க மேலயெல்லாம் கோவமாக்கும்:(

என்னத்த சொல்லுவேனோ
எங்க போயு பாடுவேனோ
ஒரு பாட்டி கூட ஒப்பாரிக்கு வரமாட்டாளே
ஊ......கூ....ம்
நல்லா இருந்த ஊர
மெசுன வச்சு பொசுக்குறானே
எத்தன பேரு மண்ணுக்குள்ள போவ
தவம் செஞ்சு வந்தாகளோ
ஊ....கூ....ம்

செத்தவன பொதக்காமே
தீ வெச்சும் சுடறீங்களே
போறவந்தான் நல்லாத்தான் போகட்டுமேன்னு
பிரமிடு கட்டுன எகிப்துகாரன் கேட்டானே
ஊ....கு......ம்ம்ம்ம்ம்.....

மூக்குச்சளி.

(போர சனம் போகத்தான் செய்யும்.பாட்டு பாடி தொண்டையெல்லாம் வரண்டு போச்சு.தண்ணீ குடி இந்தா)

vasu balaji said...

முன்ன மூர்மார்கட் இருந்துச்சே அப்ப பெரிய எழுத்து ஒப்பாரிப்பாடல்கள்னு பொஸ்தகம் போட்டுருந்தாங்க. பட்டணமாச்சா. பாழாப்போற பட்டணத்துல இதுக்கும் கூலிக்கு ஆளு கெடைக்கும். அந்தம்முனி சலுவ சொல்லி அழுதா மத்தவங்க ஆஆஆங்னு மூக்கு சிந்தி பக்கத்தாளு முதுகுல தொடைக்கிறது.:)) படுபாவிப் பயல எதுக்குதான் ஏங்க வைக்கிறதுன்னு இல்லையா.

ஆடுமாடு said...

//மிக்க நன்றி அய்யா... எங்கூருல தனியா ஒப்பாரி வைக்கவும், மாரடிக்கவும் பொம்பளைங்க கெடையாதுங்க... எல்லாமும் சொந்தக்காரங்களும், பெரத்தி சனங்களும்தாங்க...//

பாலாசி, 'ஐயா'போடற அளவுக்கு இன்னும் எனக்கு வயசாகல. பச்சப்புள்ளய போயி இப்படிலாம் சொல்லலாமா?

அப்புறம், எங்கூர்லயும்தான். தனியா யாரும் கிடையாது. மாடத்திப் பாட்டிங்கறவ, ஊருக்கே சொந்தம் மாதிரிதான். ஊர்ங்கறது தம்மாத்துண்டு ஊருதாங்க.

வாழ்த்துகள்.

க.பாலாசி said...

//ஆடுமாடு said...
பாலாசி, 'ஐயா'போடற அளவுக்கு இன்னும் எனக்கு வயசாகல. பச்சப்புள்ளய போயி இப்படிலாம் சொல்லலாமா?
அப்புறம், எங்கூர்லயும்தான். தனியா யாரும் கிடையாது. மாடத்திப் பாட்டிங்கறவ, ஊருக்கே சொந்தம் மாதிரிதான். ஊர்ங்கறது தம்மாத்துண்டு ஊருதாங்க.
வாழ்த்துகள்.//

ஓகோ.. அப்டிங்களா...

நீங்களும் நம்மளமாதிரி கொழந்ததானுங்களா... தப்பா நெனச்சிட்டனுங்க... மீண்டும் நன்றிகள்....

க.பாலாசி said...

//ராஜ நடராஜன் said...
எங்க மேலயெல்லாம் கோவமாக்கும்:(
என்னத்த சொல்லுவேனோ
எங்க போயு பாடுவேனோ
ஒரு பாட்டி கூட ஒப்பாரிக்கு வரமாட்டாளே
ஊ......கூ....ம்
நல்லா இருந்த ஊர
மெசுன வச்சு பொசுக்குறானே
எத்தன பேரு மண்ணுக்குள்ள போவ
தவம் செஞ்சு வந்தாகளோ
ஊ....கூ....ம்
செத்தவன பொதக்காமே
தீ வெச்சும் சுடறீங்களே
போறவந்தான் நல்லாத்தான் போகட்டுமேன்னு
பிரமிடு கட்டுன எகிப்துகாரன் கேட்டானே
ஊ....கு......ம்ம்ம்ம்ம்.....
மூக்குச்சளி.
(போர சனம் போகத்தான் செய்யும்.பாட்டு பாடி தொண்டையெல்லாம் வரண்டு போச்சு.தண்ணீ குடி இந்தா)//

அட வாங்க தலைவரே... நான் வச்ச ஒப்பாரியோட நீங்க வைக்குறது நல்லாருக்கே... நன்றிங்க...

ராமலக்ஷ்மி said...

அதுக்காக இப்படி ஒரு தலைப்பு வைக்கக் கூடாதுங்க...

நல்லா எழுதியிருக்கீங்க...!

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
முன்ன மூர்மார்கட் இருந்துச்சே அப்ப பெரிய எழுத்து ஒப்பாரிப்பாடல்கள்னு பொஸ்தகம் போட்டுருந்தாங்க. பட்டணமாச்சா. பாழாப்போற பட்டணத்துல இதுக்கும் கூலிக்கு ஆளு கெடைக்கும். அந்தம்முனி சலுவ சொல்லி அழுதா மத்தவங்க ஆஆஆங்னு மூக்கு சிந்தி பக்கத்தாளு முதுகுல தொடைக்கிறது.:)) //

ஓ.கோ.. இதுக்கே காசுக்கு ஆளா... பரவாயில்லையே... நல்லவேள எங்கூரு இன்னும் அந்தளவுக்கு போவலைங்க...

//படுபாவிப் பயல எதுக்குதான் ஏங்க வைக்கிறதுன்னு இல்லையா.//

என்னங்க... பண்றது.. நமக்கெல்லாம் வயசாயிடுச்சுல்ல...

க.பாலாசி said...

//ராமலக்ஷ்மி said...
அதுக்காக இப்படி ஒரு தலைப்பு வைக்கக் கூடாதுங்க...//

சரிதானுங்க... இருந்தாலும்.......!!!

// நல்லா எழுதியிருக்கீங்க...!//

நன்றிங்கக்கா...

சிநேகிதன் அக்பர் said...

பொருளாதாரம் உயர்ந்தா மனிதாபிமானம் கொறஞ்சிடுமா பாலாசி.

நேசமித்ரன் said...

நல்லா எழுதி இருக்கீங்க பாலாசி

வாழ்த்துகள்

வேறென்ன இருந்து என்ன சாவுக்கு அழ மனுஷன் இல்லாட்டி

க.பாலாசி said...

//அக்பர் said...
பொருளாதாரம் உயர்ந்தா மனிதாபிமானம் கொறஞ்சிடுமா பாலாசி.//

பொருளாதாரம் மட்டுமில்லீங்க தலைவரே... இப்பதிக்கு எது வளந்தாலும் மனிதாபிமானந்தாங்க கொறையுது...

க.பாலாசி said...

//நேசமித்ரன் said...
நல்லா எழுதி இருக்கீங்க பாலாசி
வாழ்த்துகள்//

நன்றிங்க அய்யா...

//வேறென்ன இருந்து என்ன சாவுக்கு அழ மனுஷன் இல்லாட்டி//

சரிதானுங்க...

Jerry Eshananda said...

அனாயாசமான எழுத்து நடை,,கிராமியம் வாழ்கிறது.

Unknown said...

அப்பிடியே கிராமத்தை கண்ணுக்கு முன்னாடி கொண்டு வந்திருச்சிண்ணே உங்க எழுத்து.

//கண்ணுல வரப்போற செரங்குக்கு கண்ணாடிய பாத்து என்ன ஆவப்போவுது...//

கையிலனு தான சொல்லுவாங்க?

பா.ராஜாராம் said...

மண்வாசனை!

கலகலப்ரியா said...

சூப்பருமா... கலக்கல்..

பத்மா said...

நல்லா இருக்கு .கஷ்டமாவும் இருக்கு .அழ வேண்டும் அதற்கு தான் இத்தனையும் .அழுது அன்றோடு மறந்திடவும் வேண்டும்
அழாமல் காலம் முழுதும் சுமப்பதற்கு பதில் வெட்கத்தை விட்டு அழணும்.அடுத்து ஒரு நகைச்சுவை எழுதுங்க பாலாஜி

சீமான்கனி said...

எதார்த்தமான எழுத்து நடை பாலாசி...
ஆமாம் இது ஒரு சடங்காவே நடந்து இருக்கு...மைக்-லாம் போட்டு விடிய விடிய அழுவாங்க...

cheena (சீனா) said...

அன்பின் பாலாசி

மனம் அழுகிறது பாலாசி

கிராமப்புறங்களில் நடந்த நடக்கும் இயல்பான நிகழ்வு - அருமையாக இடுகையாக மாற்றப்பட்டிருக்கிறது. எழுதும் விதம் - தேர்ந்தெடுத்த சொற்கள் நெஞ்சத்தின் நெகிழ்வினில் வந்து விழுந்த சொற்கள் - அடடா அடடா

அருமை அருமை பாலாசி - பாராட்ட சொற்கள் கிடைக்க் வில்லை பாலாசி

தலைப்பின் படியே இதற்குக் கூட ஆசை வருகிறதே பாலாசி

நல்வாழ்த்துகள் பாலாசி
நட்புடன் சீனா

அம்பிகா said...

கிராமிய மணம் அப்படியே எழுத்தில்.
ஊரோட வாழணும்னு எழுதக் கூடாதா?

மாயாவி said...

என்ன பாலாசி,
பேப்பர்ல Obituary Notice பார்க்கிற வயசு வந்தாச்சா!!?

எதுக்குப் போகாட்டியும் சாவுக்கு போகனும்.

ரோகிணிசிவா said...

அடா ,
இது சி@பாலாசி,
எழுதியதியதா ,
நான் என்னமோ பாரதிராஜா படம்
கதை வசனமுன்னு
இல்ல படிக்க வந்தேன் !!!!

பையபுள்ள அசத்திடான்!!!

ப்ரியமுடன் வசந்த் said...

class writing...

செத்தவீடு ஞாபகத்துக்கு வர்றது தடுக்க முடியல பாலாசி....

புலவன் புலிகேசி said...

கிராமத்துல எங்க அத்தை பையன் செத்தப்ப நடந்த நிகழ்வு மாதிரியே இருந்தது பாலாசி. உண்மைதான். அது போன்று ந்ல்லவர்கள் வாழுமிடத்தில் இறக்க வேண்டும்.

காமராஜ் said...

பாலாஜி என்ன இது அப்டியே ஊர்ல இருந்தாப்ல இருக்கு.சொலவடயெல்லாம்
போட்டு எழுப்பு ஒழவடிச்ச மாதிரி மண் மணக்கப்பூ.

சிவாஜி said...

நல்ல அனுபவத்த கொடுத்திருக்கிங்க பாலாசி... அருமையான பதிவு! நன்றி!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு பாலாசி

Unknown said...

எப்படியப்பு இப்படியெல்லாம் எழுதுறீங்க
சூப்பரப்பு.

Paleo God said...

செத்தபின் காது மட்டுமாவது கேட்கலாம் போல..!

மதார் said...

நான் சின்ன வயசுல பார்த்தா சாவு வீடுங்க எல்லாம் கண்ணு முன்னாடி தெரிய வச்சிடீங்க.

க.பாலாசி said...

//ஜெரி ஈசானந்தன். said...
அனாயாசமான எழுத்து நடை,,கிராமியம் வாழ்கிறது.//

மிக்க நன்றி அய்யா...வருகைக்கும்...

//Blogger இராமசாமி கண்ணண் said...
நல்லா எழுதீருகிங்க பாலாசி. நன்றி.//

நன்றி கண்ணன்...

//Blogger முகிலன் said...
அப்பிடியே கிராமத்தை கண்ணுக்கு முன்னாடி கொண்டு வந்திருச்சிண்ணே உங்க எழுத்து.//

உங்களுக்கும் நான் அண்ணனா... (அவ்வ்வ்வ்வ்.....)

// கையிலனு தான சொல்லுவாங்க?//

எங்க வந்தாயென்னங்க... உடம்புதானே... எனக்குத் தெரிஞ்சு கண்ணுதாங்க... நன்றி கருத்திற்கு...

//Blogger பா.ராஜாராம் said...
மண்வாசனை!//

நன்றி அய்யா...

//Blogger கலகலப்ரியா said...
சூப்பருமா... கலக்கல்..//

நன்றிக்கா...

//Blogger padma said...
நல்லா இருக்கு .கஷ்டமாவும் இருக்கு .அழ வேண்டும் அதற்கு தான் இத்தனையும் .அழுது அன்றோடு மறந்திடவும் வேண்டும்
அழாமல் காலம் முழுதும் சுமப்பதற்கு பதில் வெட்கத்தை விட்டு அழணும்.அடுத்து ஒரு நகைச்சுவை எழுதுங்க பாலாஜி//

ஆமாங்க... அழுகையெனும் மருந்துக்கு எந்த நோயும் குணமாகும்... எழுதுறேன்ங்க... நன்றி....

க.பாலாசி said...

//seemangani said...
எதார்த்தமான எழுத்து நடை பாலாசி...
ஆமாம் இது ஒரு சடங்காவே நடந்து இருக்கு...மைக்-லாம் போட்டு விடிய விடிய அழுவாங்க...//

சரிதானுங்க... விடியவிடியத்தான்... நன்றி சீமாங்கனி...

//Blogger cheena (சீனா) said...
அன்பின் பாலாசி
மனம் அழுகிறது பாலாசி
கிராமப்புறங்களில் நடந்த நடக்கும் இயல்பான நிகழ்வு - அருமையாக இடுகையாக மாற்றப்பட்டிருக்கிறது. எழுதும் விதம் - தேர்ந்தெடுத்த சொற்கள் நெஞ்சத்தின் நெகிழ்வினில் வந்து விழுந்த சொற்கள் - அடடா அடடா
அருமை அருமை பாலாசி - பாராட்ட சொற்கள் கிடைக்க் வில்லை பாலாசி
தலைப்பின் படியே இதற்குக் கூட ஆசை வருகிறதே பாலாசி
நல்வாழ்த்துகள் பாலாசி
நட்புடன் சீனா//

மிக்க நன்றி அய்யா... தங்களின் பின்னூட்டம் எனக்கு இன்னும் தெம்பைத்தருக்கிறது...

//Blogger அம்பிகா said...
கிராமிய மணம் அப்படியே எழுத்தில்.
ஊரோட வாழணும்னு எழுதக் கூடாதா?//

ம்ம்... எழுதலாங்க... வாழும்போது யாரும் கண்டுக்க செத்தபெறவுதானே எல்லாரும் கூடுறாங்க... அதான்.. நன்றிங்க...

//Blogger மாயாவி said...
என்ன பாலாசி,
பேப்பர்ல Obituary Notice பார்க்கிற வயசு வந்தாச்சா!!?
எதுக்குப் போகாட்டியும் சாவுக்கு போகனும்.//

அப்டியொன்னும் வயசாகலைங்க... கண்டிப்பா சாவுக்கு போகணுங்க... நன்றி வருகைக்கு...

//Blogger ரோகிணிசிவா said...
அடா ,
இது சி@பாலாசி,
எழுதியதியதா ,
நான் என்னமோ பாரதிராஜா படம்
கதை வசனமுன்னு
இல்ல படிக்க வந்தேன் !!!!
பையபுள்ள அசத்திடான்!!!//

நன்றிங்க டாக்டர்... வணக்கமும்...

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
class writing...
செத்தவீடு ஞாபகத்துக்கு வர்றது தடுக்க முடியல பாலாசி....//

நன்றிங்க வசந்த்...

//Blogger புலவன் புலிகேசி said...
கிராமத்துல எங்க அத்தை பையன் செத்தப்ப நடந்த நிகழ்வு மாதிரியே இருந்தது பாலாசி. உண்மைதான். அது போன்று ந்ல்லவர்கள் வாழுமிடத்தில் இறக்க வேண்டும்.//

ஆமங்க புலிகேசி... நன்றி...

//Blogger காமராஜ் said...
பாலாஜி என்ன இது அப்டியே ஊர்ல இருந்தாப்ல இருக்கு.சொலவடயெல்லாம்
போட்டு எழுப்பு ஒழவடிச்ச மாதிரி மண் மணக்கப்பூ.//

நன்றிங்க அய்யா...

க.பாலாசி said...

//சிவாஜி said...
நல்ல அனுபவத்த கொடுத்திருக்கிங்க பாலாசி... அருமையான பதிவு! நன்றி!//

நன்றிங்க சிவாஜி...

//Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...
நல்லாருக்கு பாலாசி//

நன்றிங்கய்யா...

//Blogger தாமோதர் சந்துரு said...
எப்படியப்பு இப்படியெல்லாம் எழுதுறீங்க
சூப்பரப்பு.//

வாங்க சார்...நன்றி கருத்திடலுக்கும்...

//Blogger 【♫ஷங்கர்..】║▌│█│║││█║▌║ said...

செத்தபின் காது மட்டுமாவது கேட்கலாம் போல..!//

அதேதாங்க... ஆனா கேட்குமுன்னு நினைக்கிறேன்... நன்றி...

//Blogger மதார் பட்டாணி said...
நான் சின்ன வயசுல பார்த்தா சாவு வீடுங்க எல்லாம் கண்ணு முன்னாடி தெரிய வச்சிடீங்க.//

வாங்க மதார்... நன்றி....

தாராபுரத்தான் said...

நல்லதுக்கு போகவில்லை என்றாலும் கெட்டதுக்கு போயே ஆக வேண்டும் என்பது நமது மண்ணின் தனிச்சிறப்பு. அதை படம் பிடித்து காட்டியமைக்கு நன்றி.

ஈரோடு கதிர் said...

எங்க ஊரு பக்கத்துல கூரையில சோறு போடுறப்போதான் மனசெல்லாம் கலங்கிப்போகும்

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

http://www.thalaivan.com/button.html


Visit our website for more information http://www.thalaivan.com

இளமுருகன் said...

கிராமம் கிராமம் தான்
நகரம் நரகம் தான்

Ahamed irshad said...

எழுத்தின் பார்வை கூர்மை. வாழ்த்துக்கள் பாலாசி....

அன்புடன் மலிக்கா said...

என்னகொடுமையின்னு இதுக்குதான் சொல்லனும்.

அச்சோ அழுவுரவங்களுக்காக சாவனுமா ஏன் பாலாஜி
முதல ஒரு விலங்கப்போடுங்க இல்லைனா ஒரு விலங்கில் மாட்டிக்கீங்க ஹா ஹா

பனித்துளி சங்கர் said...

என்னங்க இப்பவே பயமுறுத்துரீங்க . நேர்த்தியாக எழுதி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி !

பத்மா said...

please read the comments in my recent post

சாந்தி மாரியப்பன் said...

டேப்ரிக்கார்டர்ல ஒப்புக்கு ஒப்பாரி,கொள்ளி வைக்கத்தேவையில்லாம மின்மயானம், இதுதான் இன்றைய நிலைமை. இதுக்காக இப்படி ஒரு தலைப்பு வைக்கணுமா,..நூறாண்டு வாழ்க நீங்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//என்னத்த சொல்றது... இதுக்காகவே சாவனுங்க... அப்டியே செத்தாலும் கிராமத்துல (சொந்தவூருல) சாவனுங்க.... //

நல்லா சொன்னீக, நகரத்துல சாகறதுக்கு நரகத்துக்கே போலாம்

Vidhya Chandrasekaran said...

:((

Balakumar Vijayaraman said...

மண்மணம் கமழும் எழுத்து.

Thenammai Lakshmanan said...

உண்மை பாலாசி இப்படி எல்லாம் நல்ல மனுஷங்க இன்னும் கிராமத்துலதான் இருக்காங்க

சத்ரியன் said...

//பொம்பளைங்க ஒருபடி மேலதான். அதுங்க ஒப்பாரியில்லன்னா செத்தவன் அனாத மாதிரிதான்.//

பாலாசி,

பின்றியே மாப்ள..!

சத்ரியன் said...

//மாடத்தி பாட்டி, மாடத்திப் பாட்டின்னு ஒருத்தி இருந்தா.//

இதென்ன கொடுமையா இருக்கு? ரெண்டு மாடத்தி பாட்டிய சொல்லிட்டு , ஒருத்தின்னா எப்படி ஒத்துக்க முடியும்?

சத்ரியன் said...

//இந்தப் பாவி உசுரு எங்க போகுமுன்னு தெரியலையே...ஃஃக்...ஃஃஃக்......//

பாலாசி,

இந்தாளுக்கு எதுக்கு இப்பவே துக்கம் தொண்ட அடைக்குது....?

சத்ரியன் said...

//படுபாவிப் பயல எதுக்குதான் ஏங்க வைக்கிறதுன்னு இல்லையா.//

பாலா ஐயாவோட ஆதங்கத்துல நானும் ஒரு கை போடறேன்.

சாமக்கோடங்கி said...

நான் ஒரு ஜெர்மன் பெண்மணியுடன் வண்டியில் போய்க கொண்டிருக்கும்போது அவர்கள் நம்மைப் பற்றி நிறைய விசாரித்தார்கள்..அதில் ஒன்று.. "இறப்பின்போது அனைவரும் கூடி உக்கார்ந்து அழுகிறார்களே, அப்போது ஒரு ஒலி எழுப்புகிறீர்களே அது எப்படி...? ஒருவர் இறந்து கிடக்கும்போது எப்படி ஸ்ருதி சுத்தமாகப் பாட முடிகிறது...? எப்படி அனைவரும் ஒரே ராகத்தில் அழகான குரலில் பாடுகிறீர்கள்..? எனக்கு புரியவே இல்லை..."

அனைத்துக்கும் பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை..

நீங்க சொல்லுங்களேன்... நன்றி...

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு...

வேறொன்னும் சொல்ல மனசுக்கு தெரியலை...

வாழ்த்துக்கள்..!

சசிகுமார் said...

நல்லாயிருக்கு பாலாசி, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

//தாராபுரத்தான் said...
நல்லதுக்கு போகவில்லை என்றாலும் கெட்டதுக்கு போயே ஆக வேண்டும் என்பது நமது மண்ணின் தனிச்சிறப்பு. அதை படம் பிடித்து காட்டியமைக்கு நன்றி.//

நன்றிங்க அய்யா...

//Blogger ஈரோடு கதிர் said...
எங்க ஊரு பக்கத்துல கூரையில சோறு போடுறப்போதான் மனசெல்லாம் கலங்கிப்போகும்//

ஓ... ம்ம்ம்.... நன்றி...

//Blogger இளமுருகன் said...
கிராமம் கிராமம் தான்
நகரம் நரகம் தான்//

நன்றி இளமுருகன்...

/Blogger அஹமது இர்ஷாத் said...
எழுத்தின் பார்வை கூர்மை. வாழ்த்துக்கள் பாலாசி....//

நன்றி... இர்ஷாத்...

//Blogger அன்புடன் மலிக்கா said...
என்னகொடுமையின்னு இதுக்குதான் சொல்லனும்.
அச்சோ அழுவுரவங்களுக்காக சாவனுமா ஏன் பாலாஜி
முதல ஒரு விலங்கப்போடுங்க இல்லைனா ஒரு விலங்கில் மாட்டிக்கீங்க ஹா ஹா//

ஓ,. நன்றிங்க மலிக்கா...

//Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
என்னங்க இப்பவே பயமுறுத்துரீங்க . நேர்த்தியாக எழுதி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி !//

நன்றிங்க சங்கர்...

//Blogger padma said...
please read the comments in my recent post//

ம்ம்ம்...

//Blogger அமைதிச்சாரல் said...
டேப்ரிக்கார்டர்ல ஒப்புக்கு ஒப்பாரி,கொள்ளி வைக்கத்தேவையில்லாம மின்மயானம், இதுதான் இன்றைய நிலைமை. இதுக்காக இப்படி ஒரு தலைப்பு வைக்கணுமா,..நூறாண்டு வாழ்க நீங்கள்.//

என்னங்க பண்றது... சந்தோஷமா வச்ச தலைப்புதாங்க இது... நன்றி...

//Blogger அப்பாவி தங்கமணி said...
நல்லா சொன்னீக, நகரத்துல சாகறதுக்கு நரகத்துக்கே போலாம்//

ஆமங்க... நன்றி அப்பாவி தங்கமணி...

//Blogger வித்யா said...
:((//

நன்றி வித்யா...

//Blogger வி.பாலகுமார் said...
மண்மணம் கமழும் எழுத்து.//

நன்றிங்க வி.பாலகுமார்...

//Blogger thenammailakshmanan said...
உண்மை பாலாசி இப்படி எல்லாம் நல்ல மனுஷங்க இன்னும் கிராமத்துலதான் இருக்காங்க//

ஆமாங்க... நன்றி முதல் வருகை மற்றும் கருத்திற்கு...

//Blogger சத்ரியன் said...
பாலாசி,
பின்றியே மாப்ள..!//

வாங்க மாமா...

// இதென்ன கொடுமையா இருக்கு? ரெண்டு மாடத்தி பாட்டிய சொல்லிட்டு , ஒருத்தின்னா எப்படி ஒத்துக்க முடியும்?//

அவ்வ்வ்வ்.... ஏதோ தெரியாம சொல்லிட்டாருங்க...விடுங்க..

// பாலாசி,
இந்தாளுக்கு எதுக்கு இப்பவே துக்கம் தொண்ட அடைக்குது....?//

தெரியலைங்களே...

// பாலா ஐயாவோட ஆதங்கத்துல நானும் ஒரு கை போடறேன்.//

ம்ம்... நல்லா போட்டுக்குங்க...

நன்றிங்க மாம்ஸ் (அவ்வ்வ்வ்) சத்ரியன்...

//Blogger பிரகாஷ் (எ) ாமக்கோடங்கி said...
நான் ஒரு ஜெர்மன் பெண்மணியுடன் வண்டியில் போய்க கொண்டிருக்கும்போது அவர்கள் நம்மைப் பற்றி நிறைய விசாரித்தார்கள்..அதில் ஒன்று.. "இறப்பின்போது அனைவரும் கூடி உக்கார்ந்து அழுகிறார்களே, அப்போது ஒரு ஒலி எழுப்புகிறீர்களே அது எப்படி...? ஒருவர் இறந்து கிடக்கும்போது எப்படி ஸ்ருதி சுத்தமாகப் பாட முடிகிறது...? எப்படி அனைவரும் ஒரே ராகத்தில் அழகான குரலில் பாடுகிறீர்கள்..? எனக்கு புரியவே இல்லை..."
அனைத்துக்கும் பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை..
நீங்க சொல்லுங்களேன்... நன்றி...//

அழுகையின் ராகம் பெண்களுக்கு ஒன்றுதாங்க.. சிரிப்பின் மொழிவேணும்னா வெவ்வேறாக இருக்கலாம்... அதுதான் அந்த ஒத்தராகத்திற்கான காரணம்...

//Blogger சே.குமார் said...
நல்லாயிருக்கு...
வேறொன்னும் சொல்ல மனசுக்கு தெரியலை...
வாழ்த்துக்கள்..!//

நன்றிங்க சே.குமார்...

//Blogger சசிகுமார் said...
நல்லாயிருக்கு பாலாசி, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

நன்றிங்க நண்பரே...

அரசூரான் said...

ஆஹா... இங்க இடத்தெரு, அங்க சத்தியாணம் வாய்க்கால், தம்பி தெருத் தெருவா சுத்தி பின்னி பெடல் எடுக்குறீங்க. கலக்குங்க.

NAGARJOON said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Shree Padma Nrityam Academy
SPNAPA
Padma Subrahmanyam
Bala Devi
Bala Devi Chandrashekar
Bharata Natyam
BharataNatyam Classes
Bharatanatyam Teachers
Indian Classical Dance
BharataNatyam Schools in Princeton
BharataNatyam Schools in New Jersey
BharataNatyam Schools in Livingston
BharataNatyam Schools in Edison
BharataNatyam
Guru for Bala Devi
Indian Dance Guru
Indian Classical Dance Guru
BharataNatyam Guru
Bharatanatyam Teacher

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO