க.பாலாசி: யானை சவாரி...

Friday, July 2, 2010

யானை சவாரி...அந்திப்பொழுதில் தொடங்குகிறது

அம்மாவுடனான

யானை சவாரி விளையாட்டு


அம்மாவே யானை

மகன்தான் இப்பொழுதும் பாகன்


ஏய் போ, அங்ப்போவாத, ம்ம் படு, எந்திரி......

எண்ணற்ற கட்டளைகளை

அவளிடம் மட்டுமே பிரயோகிக்கிறான்

சிலநேரங்களில் (மெல்ல) அடிப்பதும்கூட...


அப்பாவுடன் விளையாட

இத்தனை சிரமங்களை கொடுப்பதில்லை.


அவ்வப்பொழுது முனகிக்கொள்வாள்

‘அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு’••••••••••••••••••அந்திப்பொழுதில் தொடங்குகிறது

அம்மாவுடனான

யானை சவாரி விளையாட்டு


அம்மாவை யானையாக்குவதில்

சில சவுகர்யங்கள்...


தாய்மையான மேனி

அலுங்காத நடை

பிடிமானத்திற்கு நிறைய அவளுடன்


இன்னும் சொன்னால்

சொல்வெதெல்லாம் அப்படியே செய்வாள்


இறங்கியப்பின்னும்

'எஞ்செல்லமே' என்று

வாரியணைக்கத்தான் கைநீட்டுவாள்


அப்பாவின் முதுகு அப்படியில்லை....
47 comments:

பத்மா said...

ஆஹா பாலாஜி அருமை ....ஆனா அம்மா யானை ரொம்ப கஷ்டப்படும்..
அப்பா யானை தான் நிஜம் போல இருக்கும் ..கொஞ்சம் பயமும் வேணும்ல யானைகிட்டே ?
அழகு கவிதை ...

Praveenkumar said...

தாய்மையின் அன்பை அருமையா சொல்லியிருக்கீங்க..! அருமை..!

ஈரோடு கதிர் said...

|| ‘அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு’ ||

இது தான் குசும்புனு சொல்றதா!!??|| அப்பாவின் முதுகு அப்படியில்லை....||
ம்ம்.. இருக்காது பின்ன..

எங்க வீட்டு பாப்பவ கேட்டுப்பாரு.

யான / குதிர / மாடு எல்லாமே நாந்தான்

ப்ரியமுடன் வசந்த் said...

//அவ்வப்பொழுது முனகிக்கொள்வாள்
‘அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு’//

முதல் கவிதை முடிச்ச விதம் கிளாஸ்...

vasu balaji said...

ங்கொய்யால! அப்பப்ப இப்படி போட்டுத் தாக்குறானே பயபுள்ள. அடியேய். கவிதை அழகாத்தான் இருக்கு. அதெல்லாம் அந்தக்காலம்டி. இப்போ சிசேரியன் ஆயிருச்சின்னு அம்மா யானை கிடையாது. அப்பா யானையெல்லாம் டென்ஷன்ல மதம் பிடிச்சி திரியுது.

கவிதை அருமை!

க ரா said...

நல்லாருக்கு பாலாசி கவிதை ரெண்டும்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

|| அப்பாவின் முதுகு அப்படியில்லை....||
ம்ம்.. இருக்காது பின்ன..

எங்க வீட்டு பாப்பவ கேட்டுப்பாரு.

யான / குதிர / மாடு எல்லாமே நாந்தான்//


அல்லோ மாப்பு. இதுக்கு அர்த்தம் எங்களுக்கு தெரியும்டி;

யானை: உக்காந்த இடத்துலயே அசைஞ்சிட்டு, அங்கயே சாப்புட்டு, உக்காந்தபடியே தூங்கறதால.

குதிரை: அப்பா மறந்துட்டு வருவாங்க பாக்கரீங்களான்னு அம்மாட்ட தினம் பெட் கட்றதால.

மாடு: யப்பா! காசு வேணும்னு கறக்கறதால.

பிரேமா மகள் said...

யானைச் சவாரிக்கு அப்பா யானைதான் சரி..

நேசமித்ரன் said...

என் வீட்டில் நாந்தான் யானை பாலாசி :)

பனித்துளி சங்கர் said...

////அவ்வப்பொழுது முனகிக்கொள்வாள்
‘அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு’
/////


எதார்த்தம் சொல்லும் உண்மைகள் கவிதைகள் அருமை 1

சற்று பதிவின் எழுத்துகளை பெரியதாக மாற்றினால் நன்றாக இருக்கும் வாசிப்பதற்கு . புரிதலுக்கு நன்றி .

சிநேகிதன் அக்பர் said...

அருமை பாலாசி. ஆனாலும் அப்பனே யானையாவதுதான் அதிகம் :)

மங்குனி அமைச்சர் said...

எங்க சார் , இப்ப சாப்பாடு குடுக்கவே ஆள் வைக்குறாங்க , எங்க யானை சவ்வாரி ???

க ரா said...

//ஈரோடு கதிர் said...

|| அப்பாவின் முதுகு அப்படியில்லை....||
ம்ம்.. இருக்காது பின்ன..

எங்க வீட்டு பாப்பவ கேட்டுப்பாரு.

யான / குதிர / மாடு எல்லாமே நாந்தான்//


அல்லோ மாப்பு. இதுக்கு அர்த்தம் எங்களுக்கு தெரியும்டி;

யானை: உக்காந்த இடத்துலயே அசைஞ்சிட்டு, அங்கயே சாப்புட்டு, உக்காந்தபடியே தூங்கறதால.

குதிரை: அப்பா மறந்துட்டு வருவாங்க பாக்கரீங்களான்னு அம்மாட்ட தினம் பெட் கட்றதால.

மாடு: யப்பா! காசு வேணும்னு கறக்கறதால. //

ஹா. ஹா. ஹா. அய்யா கிளாஸ் பஞ்ச் இது. பின்றீங்க.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமை பாலாசி..

கதிர் மற்றும் பாலாண்ணன் பின்னூட்டங்கள் கலக்கல் :)

நான் இன்னும் யானை ஆகல.. ஓரிரு வருடங்கள் கழித்து சொல்கிறேன்.

ஹேமா said...

அப்பாகிட்டயும் பிள்ளைகிட்டயும் மாட்டிக்கிட்ட அம்மா யானை பாவம்தான் !
பாலாஜி...உங்களுக்கென்ன கவிதை எழுதி ரசிக்கிறீங்க.

ஈரோடு கதிர் said...

|| ஹேமா said...
பாலாஜி...உங்களுக்கென்ன கவிதை எழுதி ரசிக்கிறீங்க. ||

ஹேமா..
பாலாசிக்கு ஒரு பொண்ணு பாருங்களேன்..
சீக்கிரம் யானையாக்கிடலாம்

அன்புடன் நான் said...

யானை சாவாரிக்கு யாராக இருந்தாலும் மகிழ்ச்சிதான்.....
பையனுக்கு அம்மா யானை பிடிக்கும்
பொண்ணுக்கு அப்பா யானை பிடிக்கும்
இதுதான் இயல்பு....
உங்க கவிதை மிக ரசனையாக இருக்கிறது... பாராட்டுக்கள் பாலாசி.

வால்பையன் said...

அப்பாவின் முதுகை யானையாக்கினால், உங்க முதுகு பழுத்திருமோ!?

தமிழ் உதயம் said...

அனுபவித்து வரைந்த கவிதை.

அம்பிகா said...

ரசனையான கவிதைக்கு அதிரசனையான பின்னூட்டங்கள்.
அருமை.

ராமலக்ஷ்மி said...

அம்பிகாவை வழிமொழிகிறேன்:)!

priyamudanprabu said...

//அவ்வப்பொழுது முனகிக்கொள்வாள்
‘அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு’//
..........

நல்லாயிருக்கு

http://rkguru.blogspot.com/ said...

கவிதை அருமை...

Starjan (ஸ்டார்ஜன்) said...

இரண்டும் அருமையோ அருமை.. ரொம்ப நல்லாருக்கு..

Jey said...

///அந்திப்பொழுதில் தொடங்குகிறது
அம்மாவுடனான
யானை சவாரி விளையாட்டு///

அந்திப்பொழுதில் தொடங்குகிறது
அப்பாவுடனான
யானை சவாரி விளையாட்டு.

///அம்மாவே யானை
மகன்தான் இப்பொழுதும் பாகன்//

அப்பாவே யானை
மகள் கையில்தான் இப்போது அங்குஷம்.

//அப்பாவுடன் விளையாட
இத்தனை சிரமங்களை கொடுப்பதில்லை.//

அம்மாவுடன் விளையாட
இத்தனை சிரமங்களை
கொடுப்பதில்லை.

//அவ்வப்பொழுது முனகிக்கொள்வாள்
‘அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு’//

அவ்வப்போது முனகிக்கொள்வான்
‘தாயைப்போல பிள்ளை நூலைப்போல பிள்ளை’.

நாங்களும் இப்பாடி மாத்துவோம்ல.
கவிதை அழகாருக்கு அம்மனி.

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லாருக்கு பாலாசி..

புலவன் புலிகேசி said...

தாய்க்கு நிகர் தரணியில் இல்லை பாலாசி. நல்ல கவிதைகள். நன்றி

ரோகிணிசிவா said...

eppudi kannu !!!!!
superb

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு பாலாசி.

பின்னூட்டங்கள், :-))

Anonymous said...

//யானை சாவாரிக்கு யாராக இருந்தாலும் மகிழ்ச்சிதான்.....
பையனுக்கு அம்மா யானை பிடிக்கும்
பொண்ணுக்கு அப்பா யானை பிடிக்கும்
இதுதான் இயல்பு....
உங்க கவிதை மிக ரசனையாக இருக்கிறது... பாராட்டுக்கள் பாலாசி. //

ரிப்பீட்டிக்கறேன்

சீமான்கனி said...

//அவ்வப்பொழுது முனகிக்கொள்வாள்
‘அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு’//


வரிகளை மட்டும் ரசித்தேன்......
இரண்டாவது அருமை பாலாசி....

அகல்விளக்கு said...

superb Anna....

//நாங்களும் இப்பாடி மாத்துவோம்ல.
கவிதை அழகாருக்கு அம்மனி. //

ithu eppola irunthu.... :-)

Paleo God said...

|| அப்பாவின் முதுகு அப்படியில்லை....||
ம்ம்.. இருக்காது பின்ன..

எங்க வீட்டு பாப்பவ கேட்டுப்பாரு.

யான / குதிர / மாடு எல்லாமே நாந்தான்//

ரிப்பீட்ட்டு!! :)))

Unknown said...

ரொம்ப நல்லாயிருக்குங்க :)

ஆடுமாடு said...

நல்லாருக்கு பாலாசி.
வாழ்த்துகள்.

Kiruthigan said...

அருமை.
ஓர் சொல்லில் ஓருலகம் அம்மா...

http://tamilpp.blogspot.com/

r.v.saravanan said...

கவிதை சவாரி சாரி யானை சவாரி மிக மிக நன்று பாலாசி

காமராஜ் said...

அம்மா யானை நிஜம் பாலாஜி. ஆமா இங்கெதுக்கு 'அப்பனுக்குப்பிள்ள' கதிர்
சொல்றது சரிதான்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

'பரிவை' சே.குமார் said...

ஆஹா பாலாஜி...

கவிதை அழகு..!

க.பாலாசி said...

நன்றிங்க பத்மா
நன்றி பிரவின்குமார்
நன்றி கதிர் அய்யா
நன்றி வசந்த்
நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி இராமசாமி கண்ணன்
நன்றி லாவண்யா
நன்றி நேசமித்ரன்
நன்றி பனித்துளி சங்கர்
நன்றி அக்பர்
நன்றி மங்குனி அமைச்சர்
(சரிதானுங்க)
நனறி ச.செந்தில்வேலன்
நன்றி ஹேமா
நன்றி சி. கருணாகரசு
நன்றி வால்பையன்
(அதேதாங்க..)
நன்றி தமிழ் உதயம்
நன்றி அம்பிகா
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி பிரியமுடன் பிரபு
நன்றி rk guru
நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )
நன்றி Jey
(அட கலக்கலுங்க..)
நன்றி ப்ரியாக்கா
நன்றி புலவன் புலிகேசி நண்பா
நன்றி ரோகிணிசிவா அக்கா..
நன்றி பா.ராஜாராம் அய்யா
நன்றி சின்ன அம்மிணி

க.பாலாசி said...

நன்றி seemangani
நன்றி அகல்விளக்கு
நன்றி ஷங்கர்..
நன்றி ஆறுமுகம் முருகேசன்
நன்றி ஆடுமாடு
நன்றி Cool Boy கிருத்திகன்.
நன்றி r.v.saravanan
நன்றி காமராஜ் அய்யா
//ஆமா இங்கெதுக்கு 'அப்பனுக்குப்பிள்ள' கதிர்
சொல்றது சரிதான்.//

அந்த மிரட்டல்களுக்கும், (செல்ல) அடிகளுக்கும்...

நன்றி அன்புடன் அருணா
நன்றி சே.குமார்

அன்பரசன் said...

கவிதை கலக்கல்

சாந்தி மாரியப்பன் said...

ரசனையான கவிதை.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நல்லா இருக்கு உணர்வு பூர்வமா ரசிக்கும் படியாய்...

மோகன்ஜி said...

பாலாஜி,கவிதையில் உங்கள் மென்மையும் ரசனையும் மின்னுகின்றன ,காலைப் பனியின் ஈரம் போல். எழுதுங்கள் நிறையவே... அம்மா யானைகளும் அப்பா யானைகளும் ஊர்ந்து கொண்டே இருக்கின்றன..சவாரி செய்யும் குட்டிகளோ, வேறு விளையாட்டுகளில் நாட்டம் கொண்டு இறங்கி சென்று விடுகின்றன.. வாழ்த்துக்கள்

க. தங்கமணி பிரபு said...

இன்னும் கொஞ்சம்கூட பயணம் செய்யலாமேன்னு நினைக்கையில வந்து விடுகிற நிறுத்தம் மாதிரி டக்குனு முடிச்சிட்டீங்க!

நல்லாயிருக்கு!

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO