க.பாலாசி: கனவுகள் மேயும் காடு...

Thursday, August 5, 2010

கனவுகள் மேயும் காடு...


மௌனத்து சீற்றங்கள் உறையத்தொடங்குகிறது இரவெங்கும். அலைகள் கொணரும் நுரையும், நுரையைக்கொள்ளும் கடலும் சொல்லும் சங்கதிகள், கனவுகளின் வழியொழுக அடைத்துக்கொள்கின்றன சிந்தைகள் யாவும். பெருவெளிப் புன்னைமரம் உச்சியில் கொண்ட முற்கூட்டுடன் தனிமையில் அமர காத்திருக்கிறது காக்கையைப்போலவே மனமும். அரவங்களோ, அசைவுகளோ தெரிந்திடின் சீறிட்டு கரையத்தான் செய்கிறது அதற்கும். ஏனிந்த இரவு, வெறுமை, தனிமை, தாகம், மனதுடனான தர்க்கம், சிந்தையற்ற நிலை, உழைப்பதற்ற ஓய்வு? இவைகொண்டு எதோவொன்றை கருகிய இருளோ, மூடிய இமைக்குள் இருட்டினில் தவிக்கும் விழிகளோ சொல்லிக்கொண்டே விழுங்கிப்பார்க்கிறது. சீரனமின்றி தவித்தும், சிரமேற்று தொங்கியும் உதிராத தணல் உடலெங்கும்.

சாளரமற்ற அறையில் புழுக்கத்துடன் சேர்த்து ஆயிரம், லட்சம், கோடியென கொடிகொடியாய் பரந்துபரந்து விரிந்துகொண்டேயிருக்கின்றன புள்ளிகளனைத்தும். சாம்பலான வார்த்தைகளை சேர்த்து குழைத்து குழைந்து நாவினடி ஊறும் கோழை எச்சில்கள்யாவும் படுத்தப்படியே உமிழ்ந்து உடலெங்கும் எச்சங்களாய் எச்சில்கள். அனிச்சைக் கட்டளைகள் பிறந்து கரங்களிரண்டும் துடைத்து துவைத்து மேலெங்கும் ஈரக்கீரல்கள். சற்றைக்கொருதரம் சுவர்க்கோழிகளின் கீச்சிடும் குரல் குத்திக்குத்தி கிழிக்கிறது செவியின் உட்சுவற்றை. எதோவொரு நாதம் கிணற்றிற்க்குள்ளிருந்து அம்மா அம்மாயென்பதைப்போல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. இரண்டுமுறை திடுக்கிடுகிறது கண்கள். கால்களின் ஆடுசதைகளில் படிந்த கோரைப்பாயின் வரிகளைத் தடவத்தடவ சுகமேற்கிறது. அனூடே மயிர்கால்களும் சிலிர்த்துக்கொள்கிறது.

உடைந்த மதிற்சுவரினடி மடிந்த எறுப்புச்சாரிகளில் ஒவ்வொன்று கைகால்களிழந்து முக்கி முனகி தப்பிக்கப் பார்ப்பதாய் மனமும் நினைவுகளும் இந்த கனவினை உதறிவிட்டு எங்கோ ஓடத்தான் விழைகிறது. முடிகிறதா? இல்லையே. தாயிடம் அருந்திய பாலின்று பூர்வீக மணத்துடன் நாசியை மூடிக்கொண்டே பயணிக்கிறது. காய்ச்சலில் சுருண்டிருக்கும் நாவிற்கு அவளின் சுக்குக் கசாயம் இனிக்கிற மாதிரியும் தெரிகிறது. கசக்கிற மாதிரியும் தெரிகிறது. ருத்ராச்சையை மென்றபடி நாத்திகம் பேசும் கடவுள், பார்வதியை ஏன் பக்கமிருந்து ஒதுக்கினான். பாம்புகள் எங்கே? மணிமுடியெங்கே? அதன் வழிச்சிதறும் கங்கையெங்கே? அவனின் தாண்டவம் ஏன் அதிராமல் அசைகிறது? என்ன நினைவில் திளைத்திருக்கிறோம். யானறியாமல் எல்லாமே பச்சரிசிக் கஞ்சிக்குள்ளும், நெத்திலிக் கருவாட்டுக்குள்ளுமே நடக்கிறதே. என்ன விந்தையிது!!.
உடல் சுடுகிறதா? அணல் உடலாயிருக்கிறதா? எதைச்சொல்கிறது இந்த தனிக்கனவு?

இதோ இந்த இரவின் அஸ்தமனம் தொடங்கிவிட்டாற்போல் தெரிகிறது. கீழ்வானமும், கீழிமையும் செந்நிறத்தை விரட்டத்தொடங்கிவிட்டன. உடற்படிந்த உப்பு படிமங்கள் போர்வையுடன் சேர்ந்து கொட்டுகிறது. உள்மனமும், உத்திரத்து விசிறியும் தன்னகத்தேகொண்ட அகந்தையை அழித்துக்கொள்கிறது. எங்கோ மச்சிவீட்டின் மதிலை மூடின மல்லிகைக்கொடி, மலர்களை பிரசவிக்கிறதுபோலும். காற்றெங்கும் வாசம், காற்றெங்கும் கானம், காற்றெங்கும் அகமும் புறமும் மிதக்கிறது. பகலவனின் வெண்மை உடலை இதமாக பிடித்துக்கொள்கிறது. அடடா
! என்ன சுகம் இந்த உடலில்! காய்ச்சல் நின்றபின் கிடைத்த இந்த உடலில்தான் எத்தனை மினுமினுப்பு!, எத்தனை அழகு!, எத்தனைக்குளிர்ச்சி!. வரும் இரவும் இந்த தனிமையைக் குத்திக்காட்டும் கனவுகளுடன்தான் வருமோ?!! சூன்யமான அந்த கருமை வராமலிருந்தால்தான் என்ன? அப்பப்பா, இந்த விடியல் இப்படியே தொடர்ந்தாலே நலம்...நலம்...நலம்...
38 comments:

vasu balaji said...

ஜூரம் தேவலாமா பாலாசி?:(. படிக்க படிக்க ஜுரம் வந்து விட்ட உணர்வு.

ரோகிணிசிவா said...

alaghzu description ,

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்ம்........

பிரபாகர் said...

வர்ணனையில அசத்துறீங்க இளவல்... அருமை.

பிரபாகர்...

அகல்விளக்கு said...

ஆஹா...
அழகான விவரிப்பு அண்ணா....

Unknown said...

பிரமாதம் தல...

க ரா said...

அற்புதமான எழுத்து பாலாசி :)

சிநேகிதன் அக்பர் said...

ஒரு கவிஞனுக்குரிய மொழி நடையில் அசத்துகிறீர்கள் பாலாசி.

காய்ச்சலா? இப்போ தேவலைதானே.

சத்ரியன் said...

தனிமை... விடியலைத்தான் விரும்புகிறதோ?

அன்பரசன் said...

வார்த்தைகள் பிரமாதம்.
எனக்குதான் பாதி புரியல..

sathishsangkavi.blogspot.com said...

அழகான வரிகள்... நல்ல விளக்கம்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கட்டுரை நாயகனின் நிலையை அறையில், மனதளவில், உள்ளக்குமுறல்கள் என விவரித்து வடித்துள்ளது சிறப்பு.

அடுத்த நிலைக்கு செல்லும் முயற்சிக்கு வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகான விவரிப்பு

ஹேமா said...

பாலாஜி....சுகம் வந்திடும்.வாங்க சீக்கிரம்.தனிமையும் இரவும் பயமானதா இல்லை இல்லை எல்லாம் மனம்தான் !

dheva said...

எனக்கு ஒரு நாள் ஜுரம் வந்த இரவு ஒரே குழப்பமான சிந்தனைகள் கனவு போல தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்க விழிப்புக்கும் உறக்கத்துக்கும் இடையில் பிரஞ்ஞை அற்று உடல் சூட்டோடு வாய்க்கசப்போடும் கண்ணெரிச்சலோடு அழுத்திய அந்த இரவை படித்து முடித்தவுடன் ....உங்களுக்கும் சுகம் இல்லாமல் இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்தவுடன் அந்த சூழ் நிலையை எழுத்தில் கொண்டு வந்த படைப்பாளிக்கு வந்தனங்கள் சொல்ல வார்த்தைகளின்றி வெறுமனே ஏதோ எழுதிவிட்டு போகிறேன் பாலாசி....

மல்லிகைச் செடி பூவை பிரசவித்ததா???? வாவ் வாவ்....என்னே கற்பனை வளம்.....!

படைப்பாளிக்கு என் வந்தனங்கள்...! சூப்பர் பாஸ்!

சீமான்கனி said...

குழப்பங்களை குழைத்த மனதுக்கு மலர்செண்டுகளுடன் வாழ்த்துகள் பாலாசி...

தாராபுரத்தான் said...

தம்பி உடம்பை பார்த்துங்க...

நசரேயன் said...

நல்லா சுக்கு காபி போட்டு குடிக்கணும்

நேசமித்ரன் said...

ஜே.ஜே . சில குறிப்புகளில் இப்படி ஒரு பத்தி வரும் பாலாசி பின்னட்டையிலும் அந்த வரிகள் எடுத்துப் போட்டிருப்பார்கள்

நினைவு வந்தது நண்பா

இன்னும் கொஞ்சம் நன்றாக வந்திருக்கலாமோ ? ம்ம் :)

பனித்துளி சங்கர் said...

பதிவின் தலைப்பு மிகவும் அருமை . நேர்த்தியான எழுத்து நடையில் ஒரு சிறந்த பதிவு அருமை . வார்த்தைகள் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது . .

'பரிவை' சே.குமார் said...

வர்ணனை அருமை.

காமராஜ் said...

காய்ச்சல் என்பது நோயல்ல.அது நோய்தீர்ர்க்கும் நேரம்.காய்சல் என்பது ஓய்வல்ல அது மூளையின் செயலைத் துரிதப்படுத்தும் மடங்கு மடங்காக.நடந்தவைகளை அசைபோட கிடைக்கிற தருணம் அது.அப்ப்டியே மிதக்கவிட்டுருக்கிறீர்கள் பாலாஜி.

அம்பிகா said...

அழகான வர்ணனை, எழுத்து நடை.

க.பாலாசி said...

நன்றி வானம்பாடிகள் அய்யா
(சரியாயிடுச்சுங்க)
நன்றி ரோகிணிசிவா
நன்றி ஆரூரன் அய்யா
நன்றி பிரபாகர் அண்ணா
நன்றி அகல்விளக்கு ராசா
நன்றி கே.ஆர்.பி.செந்தில்
நன்றி இராமசாமி கண்ணன்
நன்றி அக்பர்
(சரியாயிடுச்சுங்க அக்பர்)
நன்றி சத்ரியன்
(அப்டித்தான்னு நினைக்குறேனுங்க)
நன்றி அன்பரசன்
நன்றி சங்கவி
நன்றி ச.செந்தில்வேலன்
நன்றி டி.வி.ஆர் அய்யா
நன்றி ஹேமா
நன்றி தேவா
நன்றி சீமாங்கனி
நன்றி தாராபுரத்தான் அய்யா
நன்றி நசரேயன்
நன்றி நேசமித்ரன்
(வரும் முறைகளில் முயல்கிறேன்)
நன்றி சங்கர்
நன்றி சே.குமார்
நன்றி காமராஜ் அய்யா
நன்றி அம்பிகா

r.v.saravanan said...

உங்கள் எழுத்து நடை அருமை நண்பா வாழ்த்துக்கள்

sakthi said...

அருமை

பாலாசி

கலகலப்ரியா said...

கவித்துவமான புனைவு பாலாசி... :)..

மா.குருபரன் said...

அழகான வர்ணனை பாலாசி

பின்னோக்கி said...

வர்ணனைகளில் அசத்தியிருக்கிறீர்கள். மிக அருமை

சாந்தி மாரியப்பன் said...

அசத்தலான வர்ணனை. காய்ச்சலுடன் கழியும் அரைமயக்கப்பொழுதுகளை நினைவுபடுத்துகிறது.

அ.முத்து பிரகாஷ் said...

நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் ஒரு பகுதியை வெளியிட்டிருப்பதர்க்கு நன்றி ... நாவல் வெளியீடு எப்போது தோழா !

க.பாலாசி said...

நன்றி r.v.saravanan
நன்றி sakthi
நன்றி கலகலப்ரியா
நன்றி மா.குருபரன்
நன்றி பின்னோக்கி
நன்றி அமைதிச்சாரல்
நன்றி நியோ
(அட...ஏங்க நண்பரே...)

ஆடுமாடு said...

எழுத்தில் முதிர்ச்சி தெரிகிறது.
வாழ்த்துகள் பாலாசி.

ராமலக்ஷ்மி said...

தமிழ் தவழும் காடு...

வாழ்த்துக்கள் பாலாசி.

ஜோதிஜி said...

தொடர்ந்து உங்களை படித்து வருவதன் மூலம் நான் உணர்ந்தது.

எதையும் மேம்போக்காக எடுத்து எழுத முடியாத அற்புத நடையழகு உங்களுடையது.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

மிகவு நன்றாக இருக்கின்றது... உங்கள் எழுத்துகளின் கோர்வை அழகிய அணியாய்...

வாழ்த்துகள் நண்பரே...

க.பாலாசி said...

//ஆடுமாடு said...
எழுத்தில் முதிர்ச்சி தெரிகிறது.
வாழ்த்துகள் பாலாசி.//

நன்றிங்க தலைவரே..

//Blogger ராமலக்ஷ்மி said...
தமிழ் தவழும் காடு...
வாழ்த்துக்கள் பாலாசி.//

நன்றிங்க ராமலக்ஷ்மி

//Blogger ஜோதிஜி said...
தொடர்ந்து உங்களை படித்து வருவதன் மூலம் நான் உணர்ந்தது.
எதையும் மேம்போக்காக எடுத்து எழுத முடியாத அற்புத நடையழகு உங்களுடையது.//

நன்றிங்க ஜோதிஜி

//Blogger தஞ்சை.வாசன் said...
மிகவு நன்றாக இருக்கின்றது... உங்கள் எழுத்துகளின் கோர்வை அழகிய அணியாய்...
வாழ்த்துகள் நண்பரே...//

நன்றிங்க வாசன்..

கண்ணகி said...

சீக்கிரமாவூட்டுல சொல்லி பொண்ணு பார்க்க சொல்லுங்க...ரொமப கனமான யோசனைகள்...அசத்தல்...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO