க.பாலாசி: சுக்குமி ளகுதி ப்பிலி...

Friday, September 24, 2010

சுக்குமி ளகுதி ப்பிலி...

கொல்லவாசல் பைப்படிகிட்ட இருக்கிற வாழமரத்துகள்ல எப்பவும் வாழத்தாரு இருந்துகிட்டேயிருக்கும். பக்கத்துல சுந்தர் பொண்டாட்டி கேட்டாலுஞ்சரி, எதுத்த வீட்டு ரேவதிக்கா கேட்டாலுஞ்சரி அலக்க எடுத்துப்போயி ரூவாய்க்கு மூணுன்னு பறிச்சிக்கொடுக்கிற அம்மா இப்பவும் அதேமாதிரிதான் இருக்கு. நானிங்கவந்து நைட்டு ரெண்டு பொரட்டாவ பிச்சிப்போட்டுட்டு கடமொடங்கற வயத்துக்கு பக்கத்து பொட்டிக்கடையில ‘அண்ணா ஒரு பழம்னா?’ ன்னு கேட்டா ‘மூனார்வா கண்ணு’ங்றாங்க. பொழைப்பத்த அம்மாக்கு பொழைக்கத்தெரியலையா இல்ல எனக்கான்னு தெரியல. இந்த பட்டணத்து பொழப்புக்கு பரதேசியாவே போயிருக்கலாம் போலருக்கு.

••••••••••••

ரெண்டுரூவாய தெருமொன ராவுத்தர் கடைக்கு கொண்டுப்போனா ஒர்வாய்க்கு எப்பாருக்கு ஒரு பீடிக்கட்டும், அம்மாக்கு கா(ல்)ர்ரூவா வெத்தல அதோட லாட்டரி சீட்டுக்கு நடுவுல வைச்சித்தர சுண்ணாம்போட கார்ரூவா கொட்டப்பாக்கு, கார்ரூவாய்ககு ரெங்கவிலாஸ் போயல வாங்குனா போதும். மிச்ச கார்ரூவா எனக்கு வாய்க்கரிசி. எல்லா வெலையேர்னப்பறம் எப்பாரும் எம்மாவும் எல்லாத்தையும் விட்டுட்டுதுங்க. வாங்கித்தின்ன அந்த ஒத்தக்காசு முட்டாய நானுந்தான் விட்டுட்டேன், எரும மாட்டுக்கு பெரும வந்தா மாத்ரி.

•••••••••••••

அந்த ‘ரயிவேகேட்’டு வழியா பள்ளிக்கூடம் போறப்பல்லாம் பாத்திருக்கேன், காசிக்கடக்காரு பொண்டாட்டி மூணு மூங்கிக்கூடையில அரிசிய கோபுரமாத்ரி குவிச்சி வய்ச்சி விய்க்கும். அய்யார் இருவது, ஆயிரத்தம்பது இன்னொன்னு ஞாபகம் வல்ல. மூன்ரூவா, நால்ரூவாய தாண்டியிருக்காது. எதுக்காலயிருந்த பண்டாரங்கடைக்கும் இந்தம்மாவுக்கும் சரியான போட்டிவேற. அந்தாளுகடையில வாங்கினா கிலோவுக்கு இருக்கவேண்டிய ஒன்னேகால்படி அரிசி தலைய தட்டி நிக்கும். இந்தம்மாவோடத குவிச்சு கொட்டலாம். காலப்போக்குல இந்தம்மா கூடயையும் சேர்த்து வித்துட்டு புள்ளைங்க சம்பாதிக்கறதே போதும்னு ஊட்டோட உட்காந்திட்டு. அந்த பண்டாரங்கடை எப்பவும்போல தலைதட்டித்தான் கெடக்கு. இன்னளவுக்கும் அவங்கடையும் வளரல, அவன்ட வாங்குற அரிசிய அளந்தா அந்த கா(ல்)ப்படி தலையும் வளரல.

••••••••••••

ஒரு ஆச்சர்யம் எப்போதும் மனசுல இருக்கறதுண்டு. இந்த மயிலாம்பாள் எங்கவீட்டுக்கு வாடிக்கைப் பால் கொடுக்க ஆரம்பச்சி இதோட 15 வருஷமாவது இருக்கும். அதுக்கு முன்னாடி சவுந்தலா. இடையில அம்மாக்கும் மயிலாம்பாளுக்கு கழனித்தண்ணி எடுக்கறதுல சண்ட வந்தப்ப கொஞ்சகாலம் சரசு, பெறகு சந்திராவீடு. காலையில கால் லிட்டரு, அந்திக்கு கா லிட்டரு. மூணுபேத்துக்கு தாராளமா போதும். இந்தமாடு கறவ விட்டுட்டா அடுத்து அது, அதுவுமில்லன்னா இன்னொன்னு. பரவாயில்ல மாட்டுக்கு தீவனம் பருத்திக்கொட்ட வாங்கிப்போட்டு பால் கறந்து யாவாரம்பண்ணி தெனப்பொழப்புக்கு மாரடிக்கிற முனுசாமி மாமாக்கும் அப்பப்ப அஞ்ச பத்த செலவுக்கு கொடுத்துட்டு மூணு பொம்பளப்புள்ளைகளை கரையேத்தியிருக்குன்னா மயிலாம்பா வளக்கிற மாடுகள்ல எதோவொன்னு பேரோட மட்டுமில்லாம நெசமாவே லெட்சுமியா இருந்திருக்கு.

•••••••••••

இந்த மண்வெட்டி கால்ல விழுந்தாலுஞ்சரி, அருவா இல்லைன்னா கோடாளி எப்டிக்காயம்பட்டாலும் எலந்த இலைய மஞ்சளோடச் சேர்த்து மைய அரச்சி போட்டாப்போதும் வெட்டுக்காயம் சீக்கரமா ஆறிடும். காய்ச்சல் தலைவலின்னா சித்தரத்தைய அம்மியில வச்சி லேசா ரெண்டு தட்டு தட்டி மண்ஞ்சட்டியில போட்டு காய்ச்சி பனங்கல்கண்டையும் சேர்த்து ஒரு அரை டம்ளர் கப்புன்னு அடிச்சா புடிச்ச சனியன் அத்தோட போயிடும். என்னத்த நெஞ்சிச்சளி புடிச்சாலும் தாத்தனுக்கு இதான் வைத்தியம். கொசுக்கடிச்சி சொரிஞ்சி புண்ணாப்போன என்னொடம்புக்கு அந்த டியோடின் மருந்து போடலைன்னா ஆறமாட்டேன்னு அடம்புடிக்குது. என்ன யெழவு ஒடம்புன்னு தெரியல. பல்லுப்போன கெழவிக்கு சொல்லும்போனக்கதையா, பழையச்சோத்தையும பச்ச மிளகாய்யையும் விட்டுட்டு கண்ட கருமாந்தரத்தையும் தின்னா மாத்ரையாலத்தான் ஒடம்பு வளரும்.

•••••••••••••

அன்னப்பாலுக்கு சிங்கி அடிச்ச காலம்போயி ஆவின் பாலுக்கு சக்கரை தேடுற நேரத்துல திங்கிறது செரிச்சா போதும்னு ஆயிப்போச்சு இந்த மானங்கெட்டபொழப்பு.41 comments:

ரோகிணிசிவா said...

அம்மாயி ஊருக்கு போயி,அவிங்க மடில தல வெச்சு கதை கேட்ட மாதிரி இருந்துச்சு , நன்றி பாலாசி

தேவன் மாயம் said...

அருமை பாலாசி!!!

தேவன் மாயம் said...

எளிமையாக இருந்த கிராம வாழ்க்கை போய் எல்லாம் சிரம்மாக ஆகிவிட்டது உண்மை!

சிவாஜி said...

அழகோ அழகு!

பவள சங்கரி said...

எரும மாட்டுக்கு பெரும வந்தா மாத்ரி.............பழமொழி பூந்து வெள்ளாட்றீங்க அப்பு.........மயிலாம்பாள் வாழ்க்கை மனதில் நிற்கிறது பாலாசி.நாட்டு வைத்தியம் கூட நிறைய தெரிந்து வைத்திருப்பீர்கள் போல, நல்ல இடுகை. பகிர்வுக்கு நன்றிங்க, வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

வட்டார மொழிவழக்கில் எழுதுவது ஒரு சவாலான விசயம். வாழ்த்துகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லாமே நல்லா இருக்கு.. பாலாசி

Jerry Eshananda said...

கோடம்பாக்கத்தின் கதவுகளை தட்டக்கூடிய அளவுக்கு திறமை இருக்கிறது பாலாசிக்கு.நிச்சயமாக நீங்கள் கவனிக்கப்பட வேண்டிய நபர்.

கண்ணகி said...

எங்கியோ போய்ட்டிருக்கீங்க பாலாசி....

பழமைபேசி said...

பாலாசி...பாலாசி

dheva said...

பாலாசி..@


ஏன் கேக்குறீங்க.... பாலாசி....எல்லாதையும் விட்டுப்புட்டு வந்து பொழிக்கிற பொழப்ப நாம சிந்திச்சு பாத்த நமக்கே ரொம்ப அருவெறுப்பா இருக்குது...

கடந்த காலத்த ஒரு ஏக்கமா சொல்லியிருக்காதோட போகப்புடாதா உங்க எழுத்து இழுத்து புடிச்சு துபாய் வரைக்குமா எனக்கு படம் மாதிரி காமிக்கணும்...

நான் வெறுமனே யோசிச்சி உக்காந்திக்கிட்டு இருக்கேன்....பாலாசி..!

நேசமித்ரன் said...

வழங்கு மொழி வசீகரிக்கும் சொல்லாடலும் ஊடாக தொலைந்த வாழ்வைப் பேசும் இவ்விடுகை நீண்ட மதிய உறக்கத்திற்கு பிறகு கார்மேகம் சூழத்தரும் மெல்லிய இருளில் பனை வெல்லமிட்டுப் பருகும் சுக்கு பானமாய் இருக்கிறது

காமராஜ் said...

இப்டீயே அழுது அழுது எழுத்திக்கிட்டே போறதத்தவற வேற என்ன செய்ய பாலா.அம்பூட்டு சத்தோட கெடச்ச சாப்பாட்டெல்லாம் விதியேன்னு சாப்பிட்டோ ம்.ஒன்னுமே இல்லாத( தவிட்டுல கூட சத்துண்டு) அதும் இல்லாத இந்த நூடுல்ஸுக்கு என்னென்ன விளம்பரம்.
ரகரகமாப்பொண்ணுங்க வேற .

கொடுமப்பூ.

T.V.ராதாகிருஷ்ணன் said...

nice post

r.v.saravanan said...

நல்லா இருக்கு பாலாசி

ஈரோடு கதிர் said...

தம்பி
கையக்குடு ராசா
கண்ணுல ஒத்திக்கனும் போல இருக்கு

ராமலக்ஷ்மி said...

//மாத்ரையாலத்தான் ஒடம்பு வளரும்.//

இது மட்டுமில்ல, எல்லாமே நெத்தியடியா நல்லாயிருக்கு!

அன்பரசன் said...

:)
ரைட்டு

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

தம்பி
கையக்குடு ராசா
கண்ணுல ஒத்திக்கனும் போல இருக்கு//

அய்யாங். இந்த பின்னூட்டம் எங்கிட்ட ஆட்டயபோட்டது. ச்செரி செரி. அவருக்கு குடுத்துட்டு குடு ராசா:)). எழுத்தெல்லாம் வரிசல வந்து நின்னு என்னைய போடேன் என்னைய போடேன்னு நிக்குமோ?

அம்பிகா said...

சுக்கு, மிளகு, திப்பிலி வைத்தியம், கிராமங்களில் கூட அருகி வருகிறது. பழசையெல்லாம், பதிவா எழுதி ஆற்றிக் கொள்ள வேண்டியது தான் போல. அருமையா எழுதியிருக்கீங்க பாலாசி.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

Nice bala..

அரசூரான் said...

சுக்கு மிளகு திப்பிலி... வாசனையா வந்திருக்கு பாலாசி.

ஆரூரன் விசுவநாதன் said...

//இந்த பட்டணத்து பொழப்புக்கு பரதேசியாவே போயிருக்கலாம் போலருக்கு.//

ரெண்டுக்கும் பெரிய வித்தியாசமிலீங் பாலாசி


ம்ம்ம்....கலக்கல் பாலாசி

நிலாமதி said...

நிகழ்காலத்தில் கடந்து வந்த காலத்தை எண்ணி எழுதியிருகிறீர்கள். பாராடுக்கள்.

கலகலப்ரியா said...

அருமை.. (டெம்ப்ளேட் இல்ல...)

Mahi_Granny said...

ராசம் வாசித்த போதே வயதை கேட்கத் தோன்றியது.. இப்போது புழக்கத்தில் இல்லாத வார்த்தைகள் எல்லாம் அருமையாய் வந்திருக்கு. சில இடுகைகள் வாசிக்கும் போது பெருமையாய்இருக்கும் ,( ஆஹா என்னால் கூட தமிழ் ப்ளாக் வாசிக்கும் அளவுக்கு கணினி உபயோகிக்க முடிகிறது என்று. நிறைய இடுகைகள் அப்படித் தோன்ற வைக்கும் . அவைகளில் இதுவும் ஓன்று ) . காரமில்லாத மிகவும் ருசியான மருந்து. வாழ்த்துக்கள்

அகல்விளக்கு said...

என்னத்த சொல்ல அண்ணா...

ஒரு காலத்துல பட்டில இருக்குற ஆடுமாடுங்கள ஓட்டிட்டு மலைங்காட்டுக்குள்ள போனா அந்தி சாயுற வரைக்கும் ஆடுங்கதான் பொழப்பு.... திரும்ப அதுங்கள ஓட்டிட்டு வந்து பட்டில அடைச்சுட்டு அங்கனயே கட்டையப் போட்டா எது ஆடு எது மனுசன்னு தெரியாது... இப்பல்லாம் எது கம்பியூட்டரு, எது மெசினு. யாரு மனுசன்னே தெரிய மாட்டேங்குது...

ரொம்ப தூரம், கடந்து வந்துட்டோம்ணா..... :(

Chitra said...

அன்னப்பாலுக்கு சிங்கி அடிச்ச காலம்போயி ஆவின் பாலுக்கு சக்கரை தேடுற நேரத்துல திங்கிறது செரிச்சா போதும்னு ஆயிப்போச்சு இந்த மானங்கெட்டபொழப்பு.


...... நீங்க எழுதும் விதம் ரொம்ப பிடிச்சு இருக்குது.

அன்பேசிவம் said...

நானெல்லாம் ருசிக்கு திங்கிற வகையறா... என்னமோ மாதிரி இருக்கு நண்பா பதிவைப் படிச்சதும்....
:-)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ரசித்தேன்.:-)))))))

ஹேமா said...

உங்க ஊர் மொழிவழக்கு எப்போது இனிமை ரசனி பாலாஜி.மயிலாம்பாள்களின் கிராமப்புற வாழ்வு இன்று மாறியிருக்கிறதுதானே !

சீமான்கனி said...

உங்க பக்க வட்டார மொழி வகையா மாட்டிருக்குறது உங்க வாய்லயா கைலயா தெரியல மனசுக்கு ரெம்ப நெருக்கம இருக்கு....

cheena (சீனா) said...

அன்பின் பாலாசி

வட்டார வழக்கு - கிராமப்புற வட்டார வழக்கு - பிறந்தது முதல் பல ஆண்டுகள் பேசிப் பழகிய வட்டார வழக்கு. நகரில் வசித்தாலும் மறக்காத வட்டார வழக்கு. எழுதும் திறமை பாராட்டுக்குரியது பாலாசி.

அத்தனையும் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுகிறது. மனம் இரசிக்கிறது. நடந்த நிகழ்வுகளை அசை போட்டு ஆனந்தித்து எழுதி மகிழ்ந்து பகிர்ந்தமை நன்று நன்று பாலாசி.

ரூபாக்கு மூணு - மூனார்வா - வித்தியாசம் தவிர்க்க இயல வில்லையே

ரெண்டு ரூவாக்கு அத்தனை பேருக்கும் வாங்கிக் கொடுத்த கணக்கு சரியா நினைவுல இருக்கு இன்னமும். பலே பலே. "மிச்ச கார்ரூவா எனக்கு" முற்றுப் புள்ளி வைத்திருக்கலாமே ! அடுத்த சொல்லினைத் தவிர்த்திருக்கலாம்.

அவனும் வளரல - அந்தக் காப்படி தலயும் வளரலே

பசுமாடு லெச்சுமி கூட லெச்சுமியும் வூட்ல இருந்ததனாலே தான் மயிலாம்பா மூணு பொண்ணுகள கரயேத்தி இருக்காங்க.

மருத்துவத்துறையின் மாற்றம் தவிர்க்க இயலாத ஒன்று . அன்றைய இயற்கை உணவு இப்பொழுது இல்லை .

சிந்தனை அருமை பாலாசி

ஜோதி : சவாலான விஷயம்
ஜெரி : கோடம்பாக்கம் செல்ல திறமை
நேசமித்ரன் : பனை வெல்லம் போட்டு சுக்கு பானம் பருகும் சூழ்நிலை
கதிர் மற்றும் பாலா : கையக் கண்ணுல ஒத்திக்கறது
பாலா : எழுத்தெல்லாம் வரிசைலே நிக்குதாம்
அகல்விளக்கு : மனுசனுக்கும் கம்பியூட்டருக்கும் வித்தியாசமே தெரில

பாலாசி - இடுகையை இரசித்ததைப் போலவே மறுமொழிகளும் ரசிக்கப்பட்டன.

நன்று நன்று பாலாசி
நல்வாழ்த்துகள் பாலாசி
நட்புடன் சீனா

'பரிவை' சே.குமார் said...

"சுக்குமி ளகுதி ப்பிலி..."

அருமை பாலாசி.

ஹுஸைனம்மா said...

உங்களைப் போலவே என் ஆதங்கமும்.. வட்டார வழக்கில அருமையாய் வந்துள்ளது..

//காய்ச்சல் தலைவலின்னா சித்தரத்தைய அம்மியில வச்சி லேசா ரெண்டு தட்டு தட்டி மண்ஞ்சட்டியில போட்டு காய்ச்சி பனங்கல்கண்டையும்//

இப்பவும் பழசை மறக்காத பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்; ஆனால் கால ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கவே மருந்து மாத்திரைகளும் தேவைப்படுகின்றன.. இன்றைய நாகரீகத்தில் முன்னேறியது மனிதர்கள் மட்டுமல்ல, கிருமிகளும்தான்.. இப்பவெல்லாம் நாட்டு மருந்துக்கு அடங்குவதில்லை..

ஹுஸைனம்மா said...

//cheena (சீனா) said...

பசுமாடு லெச்சுமி கூட லெச்சுமியும் வூட்ல இருந்ததனாலே தான் மயிலாம்பா மூணு பொண்ணுகள கரயேத்தி இருக்காங்க.//

அதானே...

Unknown said...

ஏழுகடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி போனால் தான் முடியும் என்ற ரீதியில் எங்களை பயமுறுத்தினார்கள்... வலைப்பூ-வை உருவாக்க வேண்டும் என துவங்கியப்போது. இருந்தபோதிலும் மிக எளிது என நம்பிக்கையூட்டிய "நண்பேன்டா"களின் உதவியால் இன்று bharathbharathi.blogspot.com என்ற தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம். இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. மேலும் ஆலோசனைகளைத் தாருங்கள்.

இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

நன்றி..

அன்புடன்...
பாரத்பாரதி-க்காக

எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...

க.பாலாசி said...

//ரோகிணிசிவா

அம்மாயி ஊருக்கு போயி,அவிங்க மடில தல வெச்சு கதை கேட்ட மாதிரி இருந்துச்சு , நன்றி பாலாசி//

நன்றிங்க்கா

//Blogger தேவன் மாயம் said...
அருமை பாலாசி!!!
எளிமையாக இருந்த கிராம வாழ்க்கை போய் எல்லாம் சிரம்மாக ஆகிவிட்டது உண்மை!//

நன்றிங்க டாக்டர்

//Blogger சிவாஜி said...
அழகோ அழகு!//

நன்றிங்க சிவாஜி

//Blogger நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
எரும மாட்டுக்கு பெரும வந்தா மாத்ரி.............பழமொழி பூந்து வெள்ளாட்றீங்க அப்பு.........மயிலாம்பாள் வாழ்க்கை மனதில் நிற்கிறது பாலாசி.நாட்டு வைத்தியம் கூட நிறைய தெரிந்து வைத்திருப்பீர்கள் போல, நல்ல இடுகை. பகிர்வுக்கு நன்றிங்க, வாழ்த்துக்கள்.//

நன்றிங்க நித்திலம் மேடம்

//Blogger ஜோதிஜி said...
வட்டார மொழிவழக்கில் எழுதுவது ஒரு சவாலான விசயம். வாழ்த்துகள்//

நன்றிங்க ஜோதிஜி

//Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...
எல்லாமே நல்லா இருக்கு.. பாலாசி//

நன்றிங்க மேடம்..

//Blogger ஜெரி ஈசானந்தன். said...
கோடம்பாக்கத்தின் கதவுகளை தட்டக்கூடிய அளவுக்கு திறமை இருக்கிறது பாலாசிக்கு.நிச்சயமாக நீங்கள் கவனிக்கப்பட வேண்டிய நபர்.//

வாங்க சார்.. நன்றி...

//Blogger கண்ணகி said...
எங்கியோ போய்ட்டிருக்கீங்க பாலாசி....//

நன்றிங்க கண்ணகி

//Blogger பழமைபேசி said...
பாலாசி...பாலாசி//

நன்றிங்க அய்யா

//Blogger dheva said...
பாலாசி..@
ஏன் கேக்குறீங்க.... பாலாசி....எல்லாதையும் விட்டுப்புட்டு வந்து பொழிக்கிற பொழப்ப நாம சிந்திச்சு பாத்த நமக்கே ரொம்ப அருவெறுப்பா இருக்குது...

கடந்த காலத்த ஒரு ஏக்கமா சொல்லியிருக்காதோட போகப்புடாதா உங்க எழுத்து இழுத்து புடிச்சு துபாய் வரைக்குமா எனக்கு படம் மாதிரி காமிக்கணும்...

நான் வெறுமனே யோசிச்சி உக்காந்திக்கிட்டு இருக்கேன்....பாலாசி..!//

வாங்க தேவா... நன்றிங்க..

க.பாலாசி said...

//நேசமித்ரன் said...
வழங்கு மொழி வசீகரிக்கும் சொல்லாடலும் ஊடாக தொலைந்த வாழ்வைப் பேசும் இவ்விடுகை நீண்ட மதிய உறக்கத்திற்கு பிறகு கார்மேகம் சூழத்தரும் மெல்லிய இருளில் பனை வெல்லமிட்டுப் பருகும் சுக்கு பானமாய் இருக்கிறது//

ரொம்ப நன்றிங்க நேசன் அண்ணா..

//Blogger காமராஜ் said...
இப்டீயே அழுது அழுது எழுத்திக்கிட்டே போறதத்தவற வேற என்ன செய்ய பாலா.அம்பூட்டு சத்தோட கெடச்ச சாப்பாட்டெல்லாம் விதியேன்னு சாப்பிட்டோ ம்.ஒன்னுமே இல்லாத( தவிட்டுல கூட சத்துண்டு) அதும் இல்லாத இந்த நூடுல்ஸுக்கு என்னென்ன விளம்பரம்.
ரகரகமாப்பொண்ணுங்க வேற .
கொடுமப்பூ.//

சரிதாங்க.. நன்றிங்க அய்யா..

//Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...
nice post//

நன்றிங்க டி.வி.ஆர்.அய்யா

//Blogger நசரேயன் said...
ம்ம்ம்//

நன்றி ந(நா)சர்..

//Blogger r.v.saravanan said...
நல்லா இருக்கு பாலாசி//

நன்றிங்க சரவணன்..

//Blogger ஈரோடு கதிர் said...
தம்பி
கையக்குடு ராசா
கண்ணுல ஒத்திக்கனும் போல இருக்கு//

வாங்க எத்தனப்பேரு... நன்றிங்க..

//Blogger ராமலக்ஷ்மி said...
இது மட்டுமில்ல, எல்லாமே நெத்தியடியா நல்லாயிருக்கு!//

நன்றிங்க ராமலக்ஷ்மி..

//Blogger அன்பரசன் said...
:)
ரைட்டு//

நன்றி அன்பரசன்..

//Blogger வானம்பாடிகள் said...
அய்யாங். இந்த பின்னூட்டம் எங்கிட்ட ஆட்டயபோட்டது. ச்செரி செரி. அவருக்கு குடுத்துட்டு குடு ராசா:)). எழுத்தெல்லாம் வரிசல வந்து நின்னு என்னைய போடேன் என்னைய போடேன்னு நிக்குமோ?//

வாங்க உங்களுக்குமா... நன்றிங்க..

க.பாலாசி said...

//அம்பிகா said...
சுக்கு, மிளகு, திப்பிலி வைத்தியம், கிராமங்களில் கூட அருகி வருகிறது. பழசையெல்லாம், பதிவா எழுதி ஆற்றிக் கொள்ள வேண்டியது தான் போல. அருமையா எழுதியிருக்கீங்க பாலாசி.//

நன்றிங்க அம்பிகா

//Blogger திருநாவுக்கரசு பழனிசாமி said...
Nice bala..//

நன்றிங்க பழனி

//Blogger அரசூரான் said...
சுக்கு மிளகு திப்பிலி... வாசனையா வந்திருக்கு பாலாசி.//

நன்றிங்க அரசூரான்..

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
ரெண்டுக்கும் பெரிய வித்தியாசமிலீங் பாலாசி
ம்ம்ம்....கலக்கல் பாலாசி//

ஓ..சரிதாங்க... நன்றிங்க..

//Blogger நிலாமதி said...
நிகழ்காலத்தில் கடந்து வந்த காலத்தை எண்ணி எழுதியிருகிறீர்கள். பாராடுக்கள்.//

நன்றி நிலாமதி

//Blogger கலகலப்ரியா said...
அருமை.. (டெம்ப்ளேட் இல்ல...)//

தெரியும்... நன்றி ப்ரியாக்கா..

//Blogger Mahi_Granny said...
ராசம் வாசித்த போதே வயதை கேட்கத் தோன்றியது.. இப்போது புழக்கத்தில் இல்லாத வார்த்தைகள் எல்லாம் அருமையாய் வந்திருக்கு. சில இடுகைகள் வாசிக்கும் போது பெருமையாய்இருக்கும் ,( ஆஹா என்னால் கூட தமிழ் ப்ளாக் வாசிக்கும் அளவுக்கு கணினி உபயோகிக்க முடிகிறது என்று. நிறைய இடுகைகள் அப்படித் தோன்ற வைக்கும் . அவைகளில் இதுவும் ஓன்று ) . காரமில்லாத மிகவும் ருசியான மருந்து. வாழ்த்துக்கள்//

அது ஆயிடுச்சுங்க 27... ரொம்ப நன்றிங்க..

//Blogger அகல்விளக்கு said...
என்னத்த சொல்ல அண்ணா...
ஒரு காலத்துல பட்டில இருக்குற ஆடுமாடுங்கள ஓட்டிட்டு மலைங்காட்டுக்குள்ள போனா அந்தி சாயுற வரைக்கும் ஆடுங்கதான் பொழப்பு.... திரும்ப அதுங்கள ஓட்டிட்டு வந்து பட்டில அடைச்சுட்டு அங்கனயே கட்டையப் போட்டா எது ஆடு எது மனுசன்னு தெரியாது... இப்பல்லாம் எது கம்பியூட்டரு, எது மெசினு. யாரு மனுசன்னே தெரிய மாட்டேங்குது...
ரொம்ப தூரம், கடந்து வந்துட்டோம்ணா..... :(//

ஆமங்க ராசா... நன்றிங்க..

//Blogger Chitra said...
...... நீங்க எழுதும் விதம் ரொம்ப பிடிச்சு இருக்குது.//

நன்றிங்க சித்ரா..

//Blogger முரளிகுமார் பத்மநாபன் said...
நானெல்லாம் ருசிக்கு திங்கிற வகையறா... என்னமோ மாதிரி இருக்கு நண்பா பதிவைப் படிச்சதும்....
:-)//

என்னையும் சேர்த்துக்குங்க நண்பா.. நன்றி...

//Blogger ஸ்ரீ said...
ரசித்தேன்.:-)))))))//

நன்றிங்க ஸ்ரீ(தர்)

க.பாலாசி said...

//ஹேமா said...
உங்க ஊர் மொழிவழக்கு எப்போது இனிமை ரசனி பாலாஜி.மயிலாம்பாள்களின் கிராமப்புற வாழ்வு இன்று மாறியிருக்கிறதுதானே !//

ஆமங்க.. நன்றி ஹேமா...

//Blogger சீமான்கனி said...
உங்க பக்க வட்டார மொழி வகையா மாட்டிருக்குறது உங்க வாய்லயா கைலயா தெரியல மனசுக்கு ரெம்ப நெருக்கம இருக்கு....//

நன்றிங்க சீமான்கனி..

//Blogger cheena (சீனா) said...
அன்பின் பாலாசி
வட்டார வழக்கு - கிராமப்புற வட்டார வழக்கு - பிறந்தது முதல் பல ஆண்டுகள் பேசிப் பழகிய வட்டார வழக்கு. நகரில் வசித்தாலும் மறக்காத வட்டார வழக்கு. எழுதும் திறமை பாராட்டுக்குரியது பாலாசி.
அத்தனையும் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுகிறது. மனம் இரசிக்கிறது. நடந்த நிகழ்வுகளை அசை போட்டு ஆனந்தித்து எழுதி மகிழ்ந்து பகிர்ந்தமை நன்று நன்று பாலாசி.

ரூபாக்கு மூணு - மூனார்வா - வித்தியாசம் தவிர்க்க இயல வில்லையே//

1 ரூபாய்க்கு மூன்று, மூனார்வா= ரூ.3.50 பை.

// ரெண்டு ரூவாக்கு அத்தனை பேருக்கும் வாங்கிக் கொடுத்த கணக்கு சரியா நினைவுல இருக்கு இன்னமும். பலே பலே. "மிச்ச கார்ரூவா எனக்கு" முற்றுப் புள்ளி வைத்திருக்கலாமே ! அடுத்த சொல்லினைத் தவிர்த்திருக்கலாம்.//

ஓ..சரிங்க அய்யா..

// அவனும் வளரல - அந்தக் காப்படி தலயும் வளரலே

பசுமாடு லெச்சுமி கூட லெச்சுமியும் வூட்ல இருந்ததனாலே தான் மயிலாம்பா மூணு பொண்ணுகள கரயேத்தி இருக்காங்க.

மருத்துவத்துறையின் மாற்றம் தவிர்க்க இயலாத ஒன்று . அன்றைய இயற்கை உணவு இப்பொழுது இல்லை .

சிந்தனை அருமை பாலாசி

ஜோதி : சவாலான விஷயம்
ஜெரி : கோடம்பாக்கம் செல்ல திறமை
நேசமித்ரன் : பனை வெல்லம் போட்டு சுக்கு பானம் பருகும் சூழ்நிலை
கதிர் மற்றும் பாலா : கையக் கண்ணுல ஒத்திக்கறது
பாலா : எழுத்தெல்லாம் வரிசைலே நிக்குதாம்
அகல்விளக்கு : மனுசனுக்கும் கம்பியூட்டருக்கும் வித்தியாசமே தெரில

பாலாசி - இடுகையை இரசித்ததைப் போலவே மறுமொழிகளும் ரசிக்கப்பட்டன.

நன்று நன்று பாலாசி
நல்வாழ்த்துகள் பாலாசி
நட்புடன் சீனா//

ரொம்ப நன்றிங்க சீனா அய்யா..

//Blogger சே.குமார் said...
"சுக்குமி ளகுதி ப்பிலி..."
அருமை பாலாசி.//

நன்றிங்க குமார்..

//Blogger ஹுஸைனம்மா said...
உங்களைப் போலவே என் ஆதங்கமும்.. வட்டார வழக்கில அருமையாய் வந்துள்ளது..
இப்பவும் பழசை மறக்காத பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்; ஆனால் கால ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கவே மருந்து மாத்திரைகளும் தேவைப்படுகின்றன.. இன்றைய நாகரீகத்தில் முன்னேறியது மனிதர்கள் மட்டுமல்ல, கிருமிகளும்தான்.. இப்பவெல்லாம் நாட்டு மருந்துக்கு அடங்குவதில்லை..//

அதேதாங்க...ஹுஸைனம்மா நன்றிங்க..

நன்றி பாரத் பாரதி...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO