க.பாலாசி: அசோகமித்திரனுக்கு சாரல் விருது

Friday, January 7, 2011

அசோகமித்திரனுக்கு சாரல் விருது



அன்பிற்குரிய நண்பருக்கு,
வணக்கம்.
நலம் தானே.
நானும், நண்பர் தேனுகாவும், திரு மா.அரங்கநாதன் அவர்களும் ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கி வரும் சாரல் இலக்கிய விருதின் நடுவர் குழுவில் தேர்வாளர்களாக இயங்கி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இந்த ஆண்டின் சாரல் இலக்கிய விருது முதுபெரும் எழுத்தாளர் 
திரு அசோகமித்திரன்அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

 
உங்கள் வருகையால் விழா மேலும் சிறக்கும். அவசியம் வருக!
நன்றி!


      சாரல் விருது வழங்கும் விழாவும்
ஜேடி ஜெர்ரியின் கலம்காரி நூல் வெளியீட்டு விழாவும்

பங்கேற்போர்:
பிரபஞ்சன்
| ஆர். பி. பாஸ்கரன் | எம்பெருமாள் | ச தமிழ்செல்வன் | பாரதிமணி | இயக்குனர் லிங்குசாமி



அன்று இரவு 8 00 மணிக்கு ஜேடி ஜெர்ரியின் கலம்காரி ஆவணப்படம் திரையிடப்படும்.

இடம்: பிலிம் சேம்பர் அரங்கம், சென்னை,
நாள்:9.01.2011 நேரம் மாலை 6 மணி.

நன்றி கலாப்ரியா

••••••••••••

ஆங்கிலத்திலும் படைப்பிலக்கியங்களை எழுதியவர். கரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், பதினெட்டாவது அட்சக்கோடு உள்ளிட்ட நாவல்களும் காலமும் ஐந்து குழந்தைகளும், இன்னும் சில நாட்கள் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதிய இவர் சாகித்திய அகாதமி விருது பெற்றவர். 2009-ம் ஆண்டில் எழுத்தாளர் திலிப்குமாருக்கும் 2010 ஆம் ஆண்டில் கவிஞர் ஞானக்கூத்தனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

விருதுக்குழு நடுவர்களாக எழுத்தாளர்கள் மா.அரங்கநாதன், ரவிசுப்ரமணியன் கலைவிமர்சகர் தேனுகா செயல்பட்டனர். வரும் ஞாயிற்றுக்கிழமை (9.1.11) அன்று பிலிம்சேம்பரில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், எம்.பெருமாள், ச. தமிழ்ச்செல்வன், பாரதிமணி, இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் பங்கு பெறுகிறார்கள்.

 விளம்பரப் படஉலகில் முன்னணியில் இருக்கும் இயக்குநர்கள் ஜேடி, ஜெர்ரி இருவரும் இந்த இலக்கிய அமைப்பை நடத்தி வருகின்றனர். விழாவில் ஜெர்ரி இயக்கிய கலம்காரி என்ற ஆவணப்படம் திரையிடப்படும்.

நன்றி தினமணி


••••••••••



14 comments:

vasu balaji said...

விருதுக்குப் பெருமை:). பகிர்தலுக்கு நன்றி பாலாசி.

Chitra said...

அருமையான செய்தி. பகிர்வுக்கு நன்றிங்க.

Unknown said...

அவசியம் கலந்துகொள்கிறேன் ...

Unknown said...

பகிர்தலுக்கு நன்றி.

காமராஜ் said...

அருமையான த்கவலும் பகிர்வும்.புத்தாண்டுவாழ்த்துக்கள் பாலா.

'பரிவை' சே.குமார் said...

பகிர்தலுக்கு நன்றி பாலாசி.

பா.ராஜாராம் said...

நிறைவான விஷயம்! பகிர்தலுக்கு நன்றி பாலா!

arasan said...

நல்ல செய்தி பகிர்ந்த உங்களுக்கு நன்றி

Ashok D said...

ஓக்கே பாலாசி :)

செ.சரவணக்குமார் said...

மகிழ்ச்சியான செய்தி. நாஞ்சில் நாடன், அசோகமித்ரன் போன்ற தரமான படைப்பாளிகளுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் அவர்களது வாசகர்களையும் பெருமைப்படுத்தும் செயல். ஐயா அசோகமித்ரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றி பாலாசி.

சத்ரியன் said...

பாலா அண்ணா சொற்களை கடன் வாங்கிக்கொள்கிறேன்.

விருதுக்குப் பெருமை.

பகிர்ந்தமைக்கு நன்றி பாலாசி.

r.v.saravanan said...

விருதுக்குப் பெருமை

பகிர்தலுக்கு நன்றி பாலாசி.

kashyapan said...

1984ம் ஆண்டு என்று நினைவு.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சென்னையில் நாவல் பயிற்சி முகாம் நடத்தியது.அசொகமித்திரன் வந்திருந்தார். அவருடைய "தண்ணீர்" நாவல் பற்றி பேச காஸ்யபனுக்கு வாய்பளிக்கப் பட்டது.தண்ணீர் நாவல் எழுதியது பற்றி அசொகமித்திரன் விளக்கமாக ஆற்றிய உரை பயிற்சியாளர்களுக்கு உதவியாக இருந்ததுஅவருக்கு "சாரல்" விருது அளிகப்பட்டது என்போன்றவர்களுக்கு
மனநிறைவத்தருகிற ஒன்றாகும்.---காஸ்யபன்...

ரவிஉதயன் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி பாலா

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO