க.பாலாசி: கவிதை (அட நம்புங்க)
Showing posts with label கவிதை (அட நம்புங்க). Show all posts
Showing posts with label கவிதை (அட நம்புங்க). Show all posts

Wednesday, February 3, 2010

ஊதியம் காண...

இமைமூடி இனி உறங்கா அதிகாலையை
கொசுவின் கொஞ்சலோடு சேர்த்தணைக்கையில்
மேற்போர்வை விலக்கி குளிர்ச்சுமைக்
கூட்டிய மின்விசிறியை அமர்த்திவிட்டு

பதம்கொண்டு சுருண்டிருந்த மேனியை
நீட்டி ஒருபுறம் குவித்து, கவ்விக்கொண்டிருந்த
கனவினை உதறி, காலையைக்காண...
பனிச்சிலிர்ப்புடன் எழுந்து தொடர்கையில்

சொச்சநேரக் கருமைத்தாக்கி உட்சென்று
உள்ளுக்குள் புதைந்திருந்த மீதத்துயிலைத்
தொட்டிழுக்காமல்....அருந்திய தேநீரது
இதமாய் உள்நாக்குச் சுட்டுக்குளிர...

கடந்துச்சென்ற கல்லூரிப்பெண்ணவளின்
இயல்பில்
சொக்கிச் சுணங்கி மீண்டும்
பகற்கனவில்
படுத்துக்கொண்ட மனதுடன்
அலுவலகம் சென்றேன்...ஊதியம் காண...



  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO