க.பாலாசி

Monday, August 31, 2009

கதம்பம்...

இளமைவிகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு...



பள்ளியில் படித்த வரலாற்று பாடங்கள்...
பாதி பாதி ஞாபகம்...
சென்று பார்க்கையில் சிதிலமடைந்த செங்கற்கள்,
பாதுகாப்பு பணியில் சில வௌவால்கள் மட்டும்...

*******

பாக்கெட் பால் விலைவுயர்வு....
கலங்கும் கணவான்கள்...
தாய்ப்பாலின்
முக்கியத்துவம் உணரும் தாய்மார்கள்...

*******

அலைந்து திரிந்து கடன்வாங்கி,
வரதட்சணை கொடுத்த
கணவனைப் பற்றி கவலையில்லை...
பெண்ணின் பிரசவம் எண்ணி துயருரும் மனைவிக்கு...

*******

நகைகள், இரு சக்கர வாகனம், சீர்வரிசைகள்...
எதுவும் உணர்த்தவில்லை...
முதலிரவில் மனைவியின்
தாலி மட்டும் குத்துகிறது...

******

4 லட்சம் பட்டதாரிகள்
4000 ரூபாய் சம்பளத்திற்கு காத்திருக்கும் வேளை...

போராட்டத்தில் பொழுதை போக்குபவர்களுக்கு...
15 ஆயிரம் +++ போதவில்லையாம்...

*******

மழைவேண்டி ஊரே வேண்டுகிறது...
வருண பகவான் கண் திறந்தார்...மழை, வெள்ளம்...
காக்காய், குருவி கூட உயிருடன் இல்லை...
மறுபடியும் பள்ளிகொண்டார் பகவான்...

*******

தலைவரின் பிறந்தநாளில்
ன்னதான திட்டமாம்...அதற்கு
அயராது உழைக்கும் தொண்டன்...
பட்டினியில் பிள்ளை குட்டிகள்...

*******

பத்து சதவீத வட்டிக்கு வாங்கிய கடன்
தினமும் துரத்தும் தவணைக்காரன்...
நான் சொல்லும் பதில்...
‘அடுத்த எலக்ஸன் வரட்டும்...’

**********



தமிழ்மணத்திலும், தமிலிஸ்லிலும் உங்கள் ஓட்டினை பதிவிடவும்...

Saturday, August 29, 2009

துடைக்கப்படா துயரங்கள்....

செத்துப்போன குருவிகளின் மீதமிருக்கும் சிறகுகளையும் ஒடிப்பதுபோல்,
ஈசலாய் கிளம்பிய இலங்கை ராணுவம்,
நம் தமிழர்களின் ஒன்றிரண்டு மீந்து போன உயிர்களையும் ஒடித்துகொண்டிருக்கிறது...
ஈழத்தமிழனின் வலியையும், உணர்ச்சிகளையும் மட்டுமே புரிந்துகொள்ளும் நம்மால்
எதிர்த்து போராட இன்று முடியாவிட்டாலும்,
நம் போராடும் குணத்தில் ஒரு முயற்சியாக

நம் குரலாவது ஓங்கி ஒலிக்கட்டும்...
ஒரு பதிவின் வழியாக...

கீழே உள்ள படம் அவர்களின் ஈவு இரக்கமற்ற செயலை உலகிற்கு உணர்த்த அவர்களே எடுத்து காட்டியது...




இந்த ஒளியிடல் ஒரு மிகச்சிறிய உதாரணம் மட்டுமே...
இதைவிட எண்ணிலடங்கா கொடுமைகள்,
துயரங்கள், வேதனைகள்...

உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் பகிரும் நம் நெஞ்சங்கள்
உரக்க கத்தட்டும் ஓர் நாள்...

இன்னும் சிலரது குரல்கள்....
தங்கமணிபிரபு
சடகோபன் முரளிதரன்
கதிர் (ஈரோடு)
நர்சிம்
காமராஜ்



Friday, August 28, 2009

நகையும் சுவையும்....


இவரோட படத்துக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை....

வாய்விட்டு சிரிச்சா பன்றிக்காய்ச்சல் ஈசியா பரவிடும்ங்ற கொள்கையின் படி இங்கே சில சுவைகள்...

ஒரு சமயம் டீக்கடைக்கு போனப்ப, இரவுவேளைங்கறதுனால ‘அண்ணே ஒரு ஷகிலா டீ போடுங்கண்ணே’ அப்டின்னேன்...

அந்த ஆளு என்ன நெனைச்சாரோ தெரியல கொஞ்சம் முழிச்சாரு...

சரின்னு நானே... ‘ஆடை’யில்லாம டீப்போடுங்கன்னு சொன்னேன், அப்பதான் அவருக்கு புரிஞ்சி ...சிரிச்சிகிட்டே போட்டுகுடுத்துட்டு, ‘பாத்து தம்பி பொறுமையா குடிங்க, சூடாயிருக்கும்னு’ சொல்லிட்டு அவரு வேலைய பாக்க ஆரம்பிச்சிட்டார்..

உனக்கு தேவைதாண்டான்னு வந்துட்டேன்...

ஒரு தடவ ஹோட்டலுக்கு சாப்பிடப்போனேன். நான் எப்போது அந்த ஹோட்டலுக்கு எதிர்த்த ஹோட்டல்ல சாப்பிடுறது வழக்கம். இது இந்த ஹோட்டல்காரனுக்கு தெரிஞ்சிருக்கும்போல... பில்லு போடுறவரு கேட்டாரு ‘ஏம்பா எப்போதும் எதிர்த்த ஹோட்டலுக்குதான போவ.. இன்னைக்கு என்ன இந்தபக்கம்னு?’. நான் சொன்னேன் அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுன்னு எங்கம்மா சொல்லியிருக்காங்க.. அதனால தான் இங்கவந்தேன்னு... அவரும் எதோ புரிஞ்சமாதிரியே தலைய ஆட்டிட்டு விட்டுட்டார்...

கல்யாண மண்டபத்துல ஒரு பையன் அவங்க அம்மாவப்பாத்து ‘ஏன்மா கழுத்துல மாலை போட்டிருக்குற அக்கா அழறாங்க’ன்னு கேட்க, அவங்க அம்மா ‘அந்த பொண்ணு அவங்க அப்பா, அம்மாவ பிரியப்போறதால அழறா’ன்னு சொன்னாங்க...

மறுபடி பையன் ‘ஏன்மா அந்த மாலை போட்டிருக்குற அங்கிள் மட்டும் சிரிச்சிகிட்டே நிக்கிறார்?’ அப்டின்னான். அதுக்கு அவங்க அம்மா ‘அவன் உங்க அப்பா மாதிரிடா, நாளைலேர்ந்து அழ அரம்பிச்சுடுவான்னு...


ஒரு அன்பர் வீட்டுக்கு சாப்பிட போயிருந்தேன். சாப்பிட்டுகிட்டு இருக்கிறப்ப தன்னோட பொண்டாட்டியப்பாத்து ‘ஏன்டி இவ்வளவு காரமாவா கொழம்பு வைக்கிறதுன்’னு கேட்டார். அந்தம்மா வெறித்தனமா ஒரு பார்வ பார்த்துட்டு போயிட்டாங்க...அப்பறம் அவர்ட சொன்னேன்...‘சமைச்சு போட்டு உதவாங்கும் கணவன்களும் இருக்காங்க... உங்களமாதிரி சமைச்சத சாப்பிட்டு உதவாங்கும் கணவன்களும் இருக்காங்க’ன்னு. அதுக்கு அவரு ஹா..ஹா..ன்னு சிரிச்சார்...‘சிரிக்காதீர்...இதில் நீர் எந்த ரகம் என்று உங்களுக்கு தெரியும்’ அப்டின்னேன்.

அப்பறம் நீங்க வேணும்னா டிராஃபிக் போலீஸ்கிட்ட இப்படி பேசிப்பாருங்க...உங்களுக்கும் நகைச்சுவை தானா வரும்....மாமியார் வீட்டில்....

டி.போ: நீர்தான் இந்த வண்டிக்கு சொந்தக்காரரோ?

நீங்க: ஆம். நீர்தான் யூனிபார்ம் போட்டு வழிப்பறி செய்பவரோ?...

(லைசென்ஸ் மற்றும் எதுவும் இல்லாத உங்களிடம்)

டி.போ: ஏது... லைசன்ஸ் இல்லாமலே இவ்வளவு தூரம்...

நீங்க: நட்பு நாடியது...அதனால் டாஸ்மாக் வரையில்...

டி.போ: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.

நீங்க: என்னவென்று?

டி.போ: லைசென்ஸ் இல்லை, சரக்கடித்து விட்டு வண்டிஓட்டியது, வண்டிக்கு ஆர்.சி. இல்லை, இன்சூரன்ஸ் இல்லை, ஓவர் ஸ்பீடு, ஹெட் லைட்டில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை...இப்படி....எடுத்துரைத்தால் கணக்கிலடங்காதது....

நீங்க: சரி இப்ப என்னான்ற?

டி.போ: ஃபெயின் கட்டணும், கோர்டுக்கு போகணும்...இதெல்லாம் வேண்டான்னா எடு 500 ரூபாய்...

நீங்க (கோபமாக): யாரைக்கேட்கிறாய் பணம்? எதற்கு போடுகிறாய் ஃபெயின்? எங்களுடன் வண்டியில் வந்தாயா? அங்கே ஸ்கூட்டியில் போகும் ஃபிகரை ஓவர்டேக் செய்து கீழே விழுந்தாயா? சிக்னலில் மாட்டி சிறைபட்டு நின்றாயா? பூட்டிய டாஸ்மாக்கில் பிளாக்கில் ஒரு க்வாட்டர் வாங்கித்தந்தாயா? சைடிஸ் வாங்க காசு இல்லாமல் அடுத்தவர் பிளேட்டில் உள்ள வெள்ளரியை திருடித்தந்தாயா? நான் கால் தடுமாறும் நேரத்தில் பைக்கின் கிக்கரை உதைத்து உதவினாயா? மாமனா? மசசானா? ................னே...

குறிப்பு: நகைச்சுவைங்கிறது....நாம வாக்கிங் போகும் போது கட்டி இழுத்துகிட்டு போற நாய்க்குட்டி மாதிரி இருக்கணும்... கொஞ்சம் அவுத்துவுட்டாலும் அடுத்தவங்களை கடிச்சு குதறிடும்...

மேலே உள்ள இடுகை எவர் மனதையேனும் புண்படுத்துமாயின் மன்னிக்க...

பிடித்திருந்தால் தமிழ்மணம் மற்றும் தமிலிஸ்-யில் தங்களின் வாக்குகளை பதிவிடவும்...



**********

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO