காலைல எந்திருச்சு, காப்பிகூட குடிக்காம, பல்ல வௌக்கி, குளிச்சுட்டு எட்டுமணிக்கெல்லாம் ஸ்போக்கன் இங்லீஸ் கிளாசுக்கு போயிட்டு, திரும்ப ஒன்பதுமணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு, ஆபிசுல வந்து அப்பாடான்னு உட்காந்தா முதலாளிகள் தொல்லை. சரி கடக்கு கழுதன்னு அவங்க சொன்ன வேலையை முடிச்சுட்டு என்னடா செய்யலாம்னு யோசிக்கறப்ப நம்ம பிளாக்குல எந்த புண்ணியவானாவது வந்துட்டு மேய்ஞ்சுட்டு போயிருக்காங்களான்னு பாப்போம்னு ஓப்பன் பண்ணா ஒரு பெரிய ஒண்னுமில்லை.
சரி நம்மளோடதுதான் இந்த நிலைமையில இருக்கே, அடுத்த வூடு எப்படி இருக்குன்னு போய் பாப்போன்னு போனா, அவனுக்கு என் கண்டனம், இவனுக்கு என் கண்டனம்னு சகட்டுமேனிக்கு உள்குத்து அரசியல். அடுத்தவூடுன்னா இப்படிதானோ?.
அடபோங்கப்பா நீங்களும் உங்க பிளாக்கும்னு வெறுத்து நாம பாலோ பண்றவங்களையாவது பாக்கலாம்னா, படித்த கண்டனங்களோட ஒரு லிங்க் இதுலையும் இருக்கு.
எதோ நான் பாக்குற நாலைந்து பேர் (எனக்கு தெரிந்த) தான் உண்டு தன் வேலையுண்டுன்னு அவங்கவங்க வேலையில கரைட்டா இருக்குறாங்க. சரி அவங்களோட நம்ம பார்வையை நிறுத்திக்கலாம்னு நெனைச்சா முடியல. யாரார திட்டுறாங்க எதுக்கு திட்டுறாங்கன்னு பாக்கனும்னு ஒரு ஆர்வத்துல போயி பாத்தா ஒவ்வொரு உள்குத்துக்கும் ஒரு லிங்க்க போட்டு அதபடிக்க வைக்குறாங்க. சரின்னு அங்கபோனா அங்க ஒரு பெரிய கதையே இதப்பத்தி இருக்கு. அப்ப்பா.... முடியலடா சாமி.
இப்படியே ஒன்னுவொன்னா முடிச்சிட்டுபோயி கடைசியில பாத்தா அடச்சீ இதுக்கா கத்திக்கிட்டு இருக்காங்கன்னு தோனுது.
என்னவொரு ஆச்சரியம்னா பதிவுலகில் பழம் திண்னு கொட்டைபோட்டவங்கதான் இதமாதிரி செய்யறாங்க.
ஒருவேளை அனுபவம் இல்லாததாலவோ என்னமோ இன்னும் நான் என் கண்டனத்தை போடல.
இன்னொன்னு கவனிச்சீங்கன்னா, இப்படி கண்டனக்கனைகள் தொடுக்கும் எல்லோருக்கம் என்னோட கண்டனங்களை இப்பதிவில் நான் தெரிவிக்கவில்லை. (ஒருவாரமா எந்த பதிவும் போடாம எல்லா பிளாக்கையும் மேஞ்சுப்பாத்ததுல நான் தெரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதான்.)
•••••••••
Tuesday, July 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
இப்பதிவுக்கு என் கண்டனங்கள்.. (வாழ்த்துக்கள்):)
//Cable Sankar said...
இப்பதிவுக்கு என் கண்டனங்கள்.. (வாழ்த்துக்கள்):)//
ரொம்ப நன்றிங்க சார். தங்களின் வாழ்த்துகளுக்கும், கண்டனத்துக்கும்.
//யாரார திட்டுறாங்க எதுக்கு திட்டுறாங்கன்னு பாக்கனும்னு ஒரு ஆர்வத்துல போயி //
இதுதான் நாமே நமக்கு ஆப்பு வச்சிக்கிறது..
பாலாஜி மிக அருமையாக, மென்மையாக பதிவுலக சண்டையை கையாண்டுள்ளீர்கள்
உங்கள் எழுத்து நடை இலகுவாக இருக்கிறது, நிறைய எழுதுங்கள்
//இதுதான் நாமே நமக்கு ஆப்பு வச்சிக்கிறது..//
நம்ம தெருவுல நடக்குற சண்டைய குறைந்த பட்சம் வேடிக்கையாவது பாக்கலாம்ங்ற ஆர்வம்தான் சார்.
//பாலாஜி மிக அருமையாக, மென்மையாக பதிவுலக சண்டையை கையாண்டுள்ளீர்கள்
உங்கள் எழுத்து நடை இலகுவாக இருக்கிறது, நிறைய எழுதுங்கள்//
நன்றிங்க சார். முயற்சிக்கிறேன்.
இரும்பு சூடானால் மட்டும் போதாது.
பல அடிகளைபெற்றால் மட்டுமே உருப்பெறும்.
கண்டனங்கள் உங்களை உருப்படுத்தும்.
படுத்து(!)வதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.
கண்டனங்கள் மாற்றுக்கருத்துகளே தவிர சண்டையல்ல.
உண்மையை யார் வேண்டுமானால் சொல்லலாம். ஏற்றுக்கொண்டால் நன்றி. ஏற்றுக்கொள்ளாவிட்டால் மிக்க நன்றி.
//உண்மையை யார் வேண்டுமானால் சொல்லலாம். ஏற்றுக்கொண்டால் நன்றி. ஏற்றுக்கொள்ளாவிட்டால் மிக்க நன்றி.//
சரிதான் சார். கண்டனங்களை ஒருவரிடத்தில் நேரடியாக தெரிவிக்கலாமே, அதை எதற்கு பகிரங்கப்படுத்தவேண்டும். அதற்கென ஏன் ஒரு பதிவையே பயன்படுத்தவேண்டும். அப்படி செய்வதென்னவோ நாம் அவர்மீது வைத்திருக்கும் ஒரு நல்ல அபிப்ராயத்தை கெடுப்பதுபோல் ஆகிறது.
அப்படிப் போடுங்க பாலாஜி! யாராவது ஒருவருக்காவது புரியாம போயிடுமா என்ன! அது சரி நீங்க ப்ளாக்கர்ஸ்குள்ள இருக்கற சண்டை பற்றி சொல்றீங்களா? இல்ல யாரும் யாரையும் கண்டிக்ககூடாதுன்னு சொல்றீங்களா?
//அது சரி நீங்க ப்ளாக்கர்ஸ்குள்ள இருக்கற சண்டை பற்றி சொல்றீங்களா? இல்ல யாரும் யாரையும் கண்டிக்ககூடாதுன்னு சொல்றீங்களா?//
இது நம் பதிவர்களுக்குள் நடக்கும் சண்டையைப்பற்றி மட்டும்தான். இங்கே கண்டனம் என்பது நான் நாசுக்காக பயன்படுத்தியிருக்கும் வார்த்தை. மிக மோசமான மோதலே பதிவர்களுக்குள் நடந்துகொண்டிருக்கிறது. தலைப்பு என்னவோ கண்டனம் என்றுதான் இருக்கிறது. ஆனால் உள்ளே.....சரி விடுங்க. எல்லாம் ஒரு நாளில் மாறும், ஆனால் எல்லாம் ஒரே நாளில் மாறாது என்று நினைக்கிறேன்.
நன்றிங்க சார் உங்கள் வருகைக்கு.
பி.கு. நான் குறிப்பிட்ட அந்த நாலைந்து நீங்களும் ஒருவர்.
என்னை மன்னிக்கவும்.
இந்த வெளையாட்டுக்கு நான் வரலை.
//என்னை மன்னிக்கவும்.
இந்த வெளையாட்டுக்கு நான் வரலை.//
இப்படி சொன்னா எப்புடி பாஸ், நாம என்ன அப்படியா பழகியிருக்கோம், சும்மா வாங்க பாஸ்.
இந்த சண்டை, சச்சரவு, பொறாமை, ஏச்சு இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுங்கோ.
ஏதோ வந்தமா? மனசுலே பட்ட கருத்தை சொன்னமா? அதோட ஏத்துக்கிறதும் எதுக்காமே போறதும் அவங்க அவங்க மனசைபோறுத்தது. அதான் நம்ம கொள்கைங்கோ.
என்னோட சொதந்தரம் அடுத்தவரோட மூக்கு நுனி மட்டும் தானுங்கோ.
இதேன் எனக்கு புரிஞ்சது. அதையைத்தேன் சொன்னனுங்கோ.
மத்தபடி பதிவைபார்ப்பேன். பின்னூட்டமும் போடுவேன்.
//மத்தபடி பதிவைபார்ப்பேன். பின்னூட்டமும் போடுவேன்.//
நன்றிங்கோ....
Post a Comment