க.பாலாசி: ஐயம் இன்றி அறிந்தன போல

Saturday, July 25, 2009

ஐயம் இன்றி அறிந்தன போல

"சாவில் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும், என்றன் சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்" - "ஈழக்கவினர்" முனைவர் கே.சச்சிதானந்தான் கூறியது


எத்தனை மொழிப்பற்றுள்ள, வலிமையுள்ள கவிஞனும் சொல்லக்கூடியவார்த்தைகள்தான் என்றாலும், இந்த ஈழக்கவிழனின் வார்த்தைகளுக்கு ஈடாகுமாஎன்று தெரியவில்லை.


அமெரிக்கா தொடங்கி இலங்கைவரை ஒழிக்கப்படாத ஒரே சொல் இனவாதம். அன்றைய கருப்பின மக்கள் அமெரிக்க ஏகாதிபத்யன்களால் அடிமைப்படுத்தப்பட்டு, அடக்கப்பட்டு கண்ட துயரங்கள் இன்றைய நமது ஈழத்தமிழர்களுக்கு ஒப்பாக மேலோங்கி இருக்க காரணமும் அதுவே.


அவர்களை காப்பாற்ற ஒரு மார்டின் லூதர்கிங், ஒரு ஆப்ரகாம் லிங்கன், ஒரு ஹோ சி மின், ஒரு நெல்சன் மண்டேலா போன்ற தன்னலமில்லா தலைவர்கள் இருந்தார்கள். பலநுற்றாண்டுகள் போராட்டத்திற்கு பின் தனது அடிமை எனும் சாத்தானை ஓட ஓட விரட்டினார்கள், கிறார்கள், வார்கள்.

இன்றைய நிலையில் கருப்பின மக்கள் இல்லையேல் அமெரிக்காவிற்கு இந்தசர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்க வாய்ப்பில்லைதான்.


இதே நிலை நாளை இலங்கையிலும் ஏற்படலாம். ஆனால் அதுவரை தமிழ்இனம்இருக்குமா என்பது அந்நாட்டு ஆளும் வர்க்கத்தின் கையில் இருக்கிறது. ஏனெனில்தமிழ்நாடோ, அல்லது இந்திய அரசோ அதில் கவனம் கொள்ளப்போவதில்லை.


தமிழன் மட்டும் உறக்கக் கத்தி,

உயரக் கத்தியை நீட்டி உயிர்விடப்போகிறான்.

பேணிப்பாதுகாக்க ஒன்றும் இருக்கப்போவதில்லை,

அவன் இவ்வுலகில் விட்டுசெல்லும் பேதமையைத் தவிர.


ஏனிந்த நிலை, ஏனிந்த அவலம், எல்லாம் இனம், இனம் எனும் சாபக்கேடு. தான், தான்எனும் தன்னலம். எந்த இனமும் தன்இனத்தை இந்த அளவுக்குஅழித்துகொள்வதில்லை. கேட்க இனி எவனும் பிறக்கபோவதில்லை நானும்கேட்காதவரை.


சங்கம் வைத்து தமிழ்வளர்த்த எனக்கு

என் தங்கத்தமிழனை காக்க தெரியவில்லை என்றால்

என் அங்கமும் எதற்கு,

அதனுள் வாழும் மான பங்கமும் எதற்கு.


சொல்லமுடியாது நாளையே என் தமிழகத்தின் நிலையும் இதே ஈழத்தமிழனின்நிலையோடு ஒத்துபோகலாம். அதனாலோ என்னவோ இன்றைய தமிழர்களுக்கும்தமிழர்களாக வாழ பிடிப்பதில்லை. நல்ல மாற்றம், இதுவும் இல்லையேல் தமிழனைஇந்த அரசியலே, அரசியல்வாதிகளே கொன்றுவிடுவார்கள்.


இன்னொரு பிரபாகரனே இலங்கையில் பிறந்தாலும், அவனும் அவன் குடிகளும்இதுபோலவே அழிக்கப்படும். அதற்கும் எல்லா நாடுகளும் உதவிக்கரம் நீட்டும். அப்போதும் தமிழன் என்று பெயர் சொல்லி தமிழனின் குருதியை குடித்து வாழும்அரசியல் அட்டை பூச்சிகள் அவர்களின் பெயரைச்சொல்லி நாடகமாடும். கோபாலபுரத்திலிருந்து கோமோ நிலைக்கு போனாலும் தன் குலம் காக்கவும், தன்தமக்கையின் வளம் காக்கவும் போராடும். அன்றைய நாள் தமிழகத்திலும் ஒருபிரபாகரன் பிறக்கலாம், பாலாஜி என்ற பெயருடன்.

தெய்வக் கனல் விளைத்து காக்குமே - நம்மைச்
சேரு மிரு ளழியத் தாக்குமே.
கை வைத்தது பசும்பொன் னாகுமே - பின்பு
காலன் பய மொழிந்து போகுமே.
7 comments:

Unknown said...

// ஆனால் அதுவரை தமிழ்இனம்இருக்குமா என்பது அந்நாட்டு ஆளும் வர்க்கத்தின் கையில் இருக்கிறது. ///


தமிழன் ரத்தத்தை புத்தனுக்கு காவு கொடுக்கும் விந்தைநாடு இலங்கை...!!!!
புத்தனும் ரத்தம் குடிக்கும் காவுச் சிலையானது இந்த கலிகாலத்தில் ...!!


// தமிழனின் குருதியை குடித்து வாழும்அரசியல் அட்டை பூச்சிகள் அவர்களின் பெயரைச்சொல்லி நாடகமாடும். கோபாலபுரத்திலிருந்து கோமோ நிலைக்கு போனாலும் தன் குலம் காக்கவும், தன்தமக்கையின் வளம் காக்கவும் போராடும். //


சாட்டையடி வரிகள்....!!!

Cable சங்கர் said...

பாலாஜி.. இப்படி கூட எழுதிவீங்க்ளோ..?

க.பாலாசி said...

லவ்டேல் மேடி said...
//தமிழன் ரத்தத்தை புத்தனுக்கு காவு கொடுக்கும் விந்தைநாடு இலங்கை...!!!!
புத்தனும் ரத்தம் குடிக்கும் காவுச் சிலையானது இந்த கலிகாலத்தில் ...!!//

உண்மைதான் லவ்டேல்மேடி. அந்த நிலைக்கு புத்தனையும் தள்ளிவிட்டுவிட்டார்கள் சிங்களர்கள்.


//சாட்டையடி வரிகள்....!!!//

மிக்க நன்றி. தங்களின் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு.

க.பாலாசி said...

Cable Sankar said...
//பாலாஜி.. இப்படி கூட எழுதிவீங்க்ளோ..?//

கண்டிப்பா சார். இப்படியும் எழுதுவேன்.

ஈரோடு கதிர் said...

இங்கே குற்றாவாளியென்று யாரை நோக்கி விரல் சுட்ட...

ஒவ்வொரு தப்பித்தலுக்கும் பின்னால் ஒரு காரணத்தை நாம் வலுவாகத்தானே வைத்திருக்கிறோம், காரணம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள் தானே நான் உட்பட

//அன்றைய நாள் தமிழகத்திலும் ஒருபிரபாகரன் பிறக்கலாம்,//

பிறந்தால் மகிழ்ச்சி

க.பாலாசி said...

//இங்கே குற்றாவாளியென்று யாரை நோக்கி விரல் சுட்ட...//

சரிதான். யாரை குற்றம் சொல்வது. நாமே குற்றவாளிகள் எனும்போது.

நன்றிகள். தங்களின் வருகைக்கு.

Sadagopal Muralidharan said...

வீறுகொண்ட எழுத்துக்கு பாராட்டு.
தமிழன் அழுகவும், அழவும், அலையவுமே பிறந்தவன்.
நாம் தமிழன் எனும்போது நம்மை, நம்மைபோன்றவரை பொருள்கொள்கிறோம்.
அதுதான் காரணம். தமிழ்நாட்டில் பிறந்ததாலேயே தமிழன் என்றாகாது. தமிழ்த்தாய்க்கு பிறந்தாலே தமிழன் என்றாகிவிட முடியாது.
கோ. புரம் ஆகட்டும், போ. தோட்டம் ஆகட்டும், தை. புரம் ஆகட்டும். துக்ளக் ஆகட்டும், ஆ. வி, ஜூ. வி, த. எக்ஸ்பிரஸ், தி ஹிந்து ஆகட்டும்.
தமிழனாக எடுத்துக்கொள்ள முடியுமா?
தனநலம், தன்னலம் இன்றி செயல்படும், சிந்திக்கும் தமிழ் எண்ணம் கொண்டோர் மட்டுமே அவர் எங்கு, யார்க்கு பிறந்திருந்தாலும் தமிழர்கள்.
இங்கு நான் ஒன்றைச்சொல்ல விரும்புகிறேன். ஒரே சமயத்தில், நீங்கள் - த.ம.பி,(http://chinthani.blogspot.com) சிந்தனியிலும், இதே, ஒரே சிந்தனை. என்னே ஒற்றுமை.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO