க.பாலாசி: மினிமம் கேரண்டி...

Monday, July 20, 2009

மினிமம் கேரண்டி...
இந்த படத்துக்கும் இந்த பதிவுக்கும் கொஞ்சம் சம்பந்தம் உண்டு. அது கடைசியில்...

1. புகையிலை பழக்கத்தை தடுக்கும் வகையில் மத்திய அரசு பீடி, சுருட்டு சிகரெட், மற்றும் புகையிலை, மூக்குபொடி ஆகிய பாக்கெட்டுகளில் எச்சரிக்கை செய்யும் வகையில் மண்டை ஓடு, தேள், மற்றும் ஆரோக்கியம் இல்லாத நுரையீரல் படத்தை வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

2. உடலை கெடுக்கும் போதை பொருட்களில் அபாய எச்சரிக்கை படங்கள் இல்லாமல் வெளியிட்டால் பொருட்களின் தயாரிப்பாளர்கள் மீது 5 ஆண்டு ஜெயில், ரூ.10 ஆயிரம் அபராதம் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், விற்பனை செய்யும் வியாபாரிகள், வினியோகஸ்தர்கள் மீது ஒரு ஆண்டு ஜெயில், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இவையெல்லாம் செய்திகள் மட்டுமே. நமக்கு அது தேவையில்ல.

சரி இப்புடி செஞ்சதுனால புகையிலை புழக்கம் நம்ம மக்கள் மத்தியில குறைந்திருக்கா? ன்னு கேட்டா, அப்படி ஒன்னும் நடக்கலன்னுதான் நெனைக்குறேன். மாறா நம்ம எம்.எல்.ஏவும், எம்.பியிம், பண்ணையாரும் மற்றும் ஒருசில பணக்கார மனுசங்களும் தன்னோட சொத்தா வைச்சுருந்த சாராயக்கடைய அரசே ஏத்துக்கிட்டு நடத்துனதுக்கு அப்பறம் எப்படி குடிமகனெல்லாம் குடிமக்களா மாறுனாங்களோ அது மாதுரி அரசாங்கமே அங்கீகாரம் குடுத்து இதுகளை விக்கறமாதிரி ஆயிடுச்சு.

பாக்கட்டுல எலும்புக்கூடோ, இல்ல தேளு, பூரான், கரப்பான்பூச்சு இதுகள மாதிரி எதுனாச்சும் போட்டு இல்லன்னா மேற்படி வாங்குற மக்கள்லாம் இதுகள் இல்லாத பாக்கெட்டோ, டப்பாவோ பழசுன்னு முடிவுபண்ணி வாங்கறத நிறுத்திடுறாங்க (அந்த கடையில மட்டும்).

ஆக புகையோ புகையில சார்ந்த எதுவோ பகையை கடக்காரக்கிட்ட வளக்குதே ஒழிய புகைக்கிட்ட வளக்கல. இதுல ரொம்ப பாதிக்கப்படது யாருன்னா நம்ம சேட்டு மக்கள்தான். எப்படின்னா அவங்கதான் அட்டபெட்டிகணக்குல பாக்கும் பாக்கு சார்ந்த பொருளும் வாங்கி வைச்சுகிட்டு விக்க முடியாம திண்டாடுறாங்க. பாவம் அவங்களுக்கு எம்.பிக்கிட்டயோ, எம்.எல்.ஏ கிட்டயோ சொல்லி யாராவது உதவுங்கப்பா...தையிரியமிருந்தா...

இப்ப அரசாங்கம் செஞ்சிக்கிட்டு இருக்குற ஒரு நல்ல காரியம், மேற்படி படங்கள போடாத பொருள எல்லாம் கண்டுபிடிச்சு அழிச்சுட்டு புதுசா வர சரக்குகளை மட்டும் விக்கனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு செய்யறதுதான். இதுனால எல்லா (புகை)குடி மக்களும் புதுசா வந்த சரக்க மட்டுமே யூஸ் பண்ற நெலம உண்டாயிட்டு. சோ, நம்ம உடலுக்கு பிரஸ்ஸான வியாதிதான் வருமே ஒழிய பழசல்லாம் வராது. அரசாங்கத்தோட மினிமம் கேரண்டி அடிப்படையில புகையிடலாம் வாங்க...

இப்ப படத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தமுன்னா, இதுல எதுக்காச்சும் நாம வாடிக்கயாளரா இருந்ததா காதலிய இழுத்துகிட்டு ஓட முடியாது, ஏன்னா ஓடவே முடியாது.

இதுக்குமேல புகையோட 25 அருமைபெருமையெல்லாம் தெரிஞ்சுக்க கீழ உள்ள இடத்துல உங்க எலிய கடிக்கவுடுங்க...சாரி கடிச்சா போகல, அதனால கடிச்சிகிட்டுபோயி எங்க போடனுமோ போட்டுக்குங்க.

http://sathik-ali.blogspot.com/2009/02/25.html

இந்த லிங்க் மட்டும் தெரியாம சுட்டதுதான். எல்லாரும் தெரிச்சுக்கறதுக்காக. ஆனால் பதிவு என்னுடையது. அந்த நண்பர் என்னை மன்னிப்பாராக.


குறிப்பு:- இங்க நீங்க போடுற ஓட்டுக்கு ஓட்டுரிமை அவசியமில்லை. பதிநாயக கடமை உண்டு.••••••••••

7 comments:

ரவி said...

அவரிடம் அனுமதி பெற்றீர்களா ?

க.பாலாசி said...

Blogger செந்தழல் ரவி said...

//அவரிடம் அனுமதி பெற்றீர்களா ?//

அதாவது நான் அங்கு இட்டுள்ள லிங்க்தான் அவருடையது.

ஈரோடு கதிர் said...

//காதலிய இழுத்துகிட்டு ஓட முடியாது, ஏன்னா ஓடவே முடியாது.//


பாலாஜி முதல்ல காதலியவே இழுக்க முடியாதே... அப்புறம் எங்க ஓடறது

//உங்க எலிய கடிக்கவுடுங்க...சாரி கடிச்சா போகல//

ஏன் பாலாஜி எலியும் ரெண்டு தம் போட்டுருச்சோ..


நல்ல பதிவு...
கொடுத்த லிங்க் மூலம் படித்த பதிவும் அருமை...

வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் said...

இனிய சிநேககிதமே...

என் அன்பை இதில் பகிர்ந்துள்ளேன்

http://maaruthal.blogspot.com/2009/07/blog-post_20.html

ஏற்றுக்கொள் தோழமையே...

நன்றிகளுடன்
கதிர்

Admin said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள் தொடருங்கள்...

Sadagopal Muralidharan said...

பொகையவிட்டுட்டீங்களே.
மூச்சு முட்டுது. கண்ணு தெரியலே. இருமல் வருது.
இன்று வரை பி(பீ)டித்தவர்களுக்கும், இனிமேல் பிடிப்பவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை.
தவறாக அழிக்கும் அரசாங்க ஊழியர்களுக்கும், தவறாக எண்ணும் சமூகத்திற்கும் ஒரு சாடல்.
கொஞ்சம் உருப்படியான (உள்ளத்தை கிள்ளும்/கொல்லும்) தகவல்கள்.
வளர்க உங்கள் மக்கள் தொண்டு.
பின்குறிப்பு:
ஒழிக்க ஒரே வழி. எந்த நாயும் {(ITC), (WILLS), (GOLDFLAKES), (KINGFISHER)} குடிநீர், உணவு சார்ந்த நொறுக்கு தீனிகள். அந்தபெயரை வைத்துக்கொண்டு இவர்கள் இந்திய கிரிக்கெட், டென்னிஸ், புட்பால் அணிகளுக்கு பணஉதவி செய்கிறார்கள். அதனாலேயே எல்லாமும்.

க.பாலாசி said...

செந்தழல் ரவி said...
//அவரிடம் அனுமதி பெற்றீர்களா ?//

நன்றிங்க செந்தழல் ரவி தங்களின் வருகைக்கு.

கதிர் said...
//பாலாஜி முதல்ல காதலியவே இழுக்க முடியாதே... அப்புறம் எங்க ஓடறது

ஏன் பாலாஜி எலியும் ரெண்டு தம் போட்டுருச்சோ..

நல்ல பதிவு...
கொடுத்த லிங்க் மூலம் படித்த பதிவும் அருமை...

வாழ்த்துக்கள்//

ரொம்ப நன்றிங்க சார்.

கதிர் said...
//இனிய சிநேககிதமே...
என் அன்பை இதில் பகிர்ந்துள்ளேன்
http://maaruthal.blogspot.com/2009/07/blog-post_20.html
ஏற்றுக்கொள் தோழமையே...//
நன்றிகளுடன் கதிர்//

கண்டிப்பாக தங்களின் அன்பையும் பண்பையும் ஏற்றுக்கொள்கிறேன். தகுதியுள்ளவன்தான் என்று தாங்கள் உணரும் பட்சத்தில்.

சந்ரு said...
//நல்ல பதிவு வாழ்த்துக்கள் தொடருங்கள்...//

நன்றி தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்க்கும்.

Sadagopal Muralidharan said...
//வளர்க உங்கள் மக்கள் தொண்டு.
பின்குறிப்பு:
ஒழிக்க ஒரே வழி. எந்த நாயும் {(ITC), (WILLS), (GOLDFLAKES), (KINGFISHER)} குடிநீர், உணவு சார்ந்த நொறுக்கு தீனிகள். அந்தபெயரை வைத்துக்கொண்டு இவர்கள் இந்திய கிரிக்கெட், டென்னிஸ், புட்பால் அணிகளுக்கு பணஉதவி செய்கிறார்கள். அதனாலேயே எல்லாமும்.//

உண்மைதான். ஒன்று நாம வீட்டை பூட்டி வச்சிக்கனும், இல்ல திருனாப்பாத்து திருந்தனும். இது எது சரிங்கறது அவங்கவங்களின் பார்வையில் உள்ளது.

நன்றி சடகோபன் சார். உங்களின் விமர்சனத்திற்கும், வாழ்த்துக்கும்.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO