க.பாலாசி: பெண்ணவள்... பெண்ணாக...

Friday, September 4, 2009

பெண்ணவள்... பெண்ணாக...

(இந்த படத்தை எடுத்தவர் பெயர் கருவாயன் என்ற சுரேஷ், அவருக்கு நன்றி)


பத்துமாதம் சுமந்தவள்
பெற்றெடுத்த பிள்ளையது
பெண்ணாய் போக...

வருந்திய தகப்பன்
மூன்றுவேளை சோற்றில்
ஒரு முழுவேளை குறைத்து...

அவள் வளர இவன் குறுக...
அழகுற நடந்தவள்...
3ம் அகவைபெற...

கொஞ்சம் சேர்ந்த பணம்
பள்ளிதனில் கொள்ளைபோக...
ஐந்து வருடமும் அவன்பட்டபாடு...

சாரெடுத்த சக்கைதனை
மேலும் பிழிய...
அதிலொழுகும் உதிரம் போல் ஆனது...

பெண்ணவள்... பெண்ணாக...
அவன் கொண்ட இன்பத்தில்...
இமைவடிந்த நீரது இம்சையென்றே காட்டியது.

அஞ்சு பத்து கடன் வாங்கி
அவளை மேல்நிலையில் சேர்த்துவிட...
பள்ளி சென்றவள்...

பிஞ்சொன்று கனிய
வஞ்சமது கொண்டு
கொத்தித் திண்ண காத்திருந்த கழுகினைப்போல்...

காமம் கொண்டு
கண்மறைக்க ஆசிரியன்
எனும் அரக்கனவன்.......................

நாசம்பட்ட வாழ்வுதனை...
பெற்றவனிடம் சொல்ல நாகூச...
அவள் கொண்ட துயரமது குருதியாய்க் குறிப்புணர்த்த...

பொங்கியெழுந்தவன்...எடுத்த கத்தி...
ஆற்றினில் நீராடிய ஆசிரியனவனின்...
................அறுத்தெறிந்தே அடங்கியது...

ஆறது சிவக்க...
அங்கே அறமது சிறக்க...
ஆறாத மனதுடன் வீடு வந்தான்...


தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் தங்களது வாக்கினை பதிவிடவும்....நன்றி...



***********

29 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

வலிக்கிறது :(

ஈரோடு கதிர் said...

இது சிறந்த வரி என்று எதைச் சுட்ட

வலிக்கும் வரிகளை என்னால் இரண்டாம் முறை படிக்க முடியவில்லை

அய்யோ... அந்த குழந்தையின் கண்களை கவிதை படித்த பின் மீண்டும் பார்க்க முடியவில்லை


கவிதையது சிறக்க...
மனம் அது வலிக்க...
தாளாத பாரத்துடன் இட்டேன் பின்னூட்டம்

ஹேமா said...

இப்படியான அரக்கர்களால்தான் உலகில் அநியாயங்கள் பெருகிக் கிடகிறது அவலமாய்.

சீமான்கனி said...

வலியோடு ரசித்தேன் .....
மிருககுணம் படித்தவன்.....அவன்...

தேவன் மாயம் said...

ஆறது சிவக்க...
அங்கே அறமது சிறக்க...
ஆறாத மனதுடன் வீடு வந்தான்..///

இது ஒரு கொடிய கதை- காலச்சுவடு இதழில் வந்துள்ளது!!

வால்பையன் said...

அந்த படத்தை எடுத்தவர் பெயர் கருவாயன் என்ற சுரேஷ் அவருகு நன்றி போட்டுருங்க!

கவிதை நல்லாயிருக்கு!

அன்புடன் அருணா said...

இது போன்ற வலிகள் தாங்க முடிதிலலை....

மகிழ்நன் said...

ஆழ்ந்த வலியின் பதிவு....சமூகம் திருந்த வேண்டும், மாற வேண்டும்

Unknown said...

அழுத்தமான அசையா எழுத்துக்கள்.....

ப்ரியமுடன் வசந்த் said...

கவிதையில் மெருகு கூடுகிறது பாலாஜி

படம் எடுத்த சுரேஷ்க்கு டபுள்பாராட்டுக்கள்

பழமைபேசி said...

நன்று நண்பா!

Cable சங்கர் said...

aஅருமையாய் எழுதியிருக்கீங்க பாலாஜி.. சூப்பர்.

மாதேவி said...

மனத்தைவலிக்கும் கவிதை.

நேற்றுத்தான் "அச்சமுண்டு அச்சமுண்டு"பார்த்தேன்.

vasu balaji said...

ஆசிரியர் தினத்திற்கு
அவமதிப்பாய்
அரக்கன்.

அடிய்வயிறு கலக்கும் படமும் வரிகளும்.

குடந்தை அன்புமணி said...

இப்படியும் சிலர்...
மனம் கனத்துப் போகிறது நண்பா...

ஆரூரன் விசுவநாதன் said...

ஆறுமட்டும் சிவக்கவில்லை, நண்பா
இங்குள்ள யாவரும் தான்.

கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே-

என்ற பாரதிதாசன் வரிகள் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வருகின்றன.

Jaleela Kamal said...

என்ன கொடுமை இது..

க.பாலாசி said...

// Shakthiprabha said...

வலிக்கிறது :(//

நன்றி...

//Blogger கதிர் - ஈரோடு said...
இது சிறந்த வரி என்று எதைச் சுட்ட
வலிக்கும் வரிகளை என்னால் இரண்டாம் முறை படிக்க முடியவில்லை
அய்யோ... அந்த குழந்தையின் கண்களை கவிதை படித்த பின் மீண்டும் பார்க்க முடியவில்லை
கவிதையது சிறக்க...
மனம் அது வலிக்க...
தாளாத பாரத்துடன் இட்டேன் பின்னூட்டம்//

நன்றி...

//Blogger ஹேமா said...
இப்படியான அரக்கர்களால்தான் உலகில் அநியாயங்கள் பெருகிக் கிடகிறது அவலமாய்.//

நன்றி

//Blogger seemangani said... வலியோடு ரசித்தேன் .....
மிருககுணம் படித்தவன்.....அவன்...//

நன்றி..

//Blogger தேவன் மாயம் said...
ஆறது சிவக்க...
அங்கே அறமது சிறக்க...
ஆறாத மனதுடன் வீடு வந்தான்..///
இது ஒரு கொடிய கதை- காலச்சுவடு இதழில் வந்துள்ளது!!//

நன்றி...

க.பாலாசி said...

//வால்பையன் said...
அந்த படத்தை எடுத்தவர் பெயர் கருவாயன் என்ற சுரேஷ் அவருகு நன்றி போட்டுருங்க!//

சரி போட்டிருவோம்...

// கவிதை நல்லாயிருக்கு!//

நன்றி...

//Blogger அன்புடன் அருணா said... இது போன்ற வலிகள் தாங்க முடிதிலலை....//

நன்றி...

//Blogger மகிழ்நன் said...
ஆழ்ந்த வலியின் பதிவு....சமூகம் திருந்த வேண்டும், மாற வேண்டும்//

நன்றி

//Blogger லவ்டேல் மேடி said...
அழுத்தமான அசையா எழுத்துக்கள்.....//

நன்றி...

//Blogger பிரியமுடன்...வசந்த் said... கவிதையில் மெருகு கூடுகிறது பாலாஜி
படம் எடுத்த சுரேஷ்க்கு டபுள்பாராட்டுக்கள்//

நன்றி...

//Blogger பழமைபேசி said...
நன்று நண்பா!//

நன்றி...

//Blogger Cable Sankar said...
aஅருமையாய் எழுதியிருக்கீங்க பாலாஜி.. சூப்பர்.//

நன்றி...

//Blogger மாதேவி said...
மனத்தைவலிக்கும் கவிதை.
நேற்றுத்தான் "அச்சமுண்டு அச்சமுண்டு"பார்த்தேன்.//

நன்றி...

//Blogger வானம்பாடிகள் said...
ஆசிரியர் தினத்திற்கு
அவமதிப்பாய்
அரக்கன்.//
அடிய்வயிறு கலக்கும் படமும் வரிகளும்.//

நன்றி...

க.பாலாசி said...

//குடந்தை அன்புமணி said...
இப்படியும் சிலர்...
மனம் கனத்துப் போகிறது நண்பா...//

நன்றி...

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
ஆறுமட்டும் சிவக்கவில்லை, நண்பா
இங்குள்ள யாவரும் தான்.
கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே-
என்ற பாரதிதாசன் வரிகள் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வருகின்றன.//

நன்றி...

//Blogger Jaleela said...
என்ன கொடுமை இது..//

நன்றி...

க.பாலாசி said...

வருகைத்தந்து தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

கனத்த இதயத்துடன் எழுதிய பதிவாதலால் என்னால் எவருக்கும் விரிவானதொரு பதிலூட்டமிட இயலவில்லை... மன்னிக்கவும்...

மீண்டும் எனது நன்றியினை உரித்தாக்குகிறேன்...

நேசமித்ரன் said...

ஈரமற்ற வாழ்வில் ஊற்றுக் கண்களைத் திறக்கும் நிமிஷங்களுக்காய் தவமிருக்கிறோம் ஒவ்வொருவரும் .இந்தக் கவிதைகைகள் பிரியத்தை வழங்க அல்லது பெற அல்லது பெற்றுத்தர முடிந்தால் வேறென்ன வேண்டும்

க.பாலாசி said...

//நேசமித்ரன் said...
ஈரமற்ற வாழ்வில் ஊற்றுக் கண்களைத் திறக்கும் நிமிஷங்களுக்காய் தவமிருக்கிறோம் ஒவ்வொருவரும் .இந்தக் கவிதைகைகள் பிரியத்தை வழங்க அல்லது பெற அல்லது பெற்றுத்தர முடிந்தால் வேறென்ன வேண்டும்//

நன்றி அன்பரே....

Ashok D said...

26 வயதில் பெரிய விஷயங்களை இவ்வளவு தெளிவாக வார்த்தைகளில் கவிதையாய் வடிப்பது ஆச்சரியமே.

அற்புதம். அருமை.

அன்பேசிவம் said...

நண்பா, அருமை.
ரெளத்ரம் உங்கள் வரிகளில். நிறைய பேர் கவிதை எழுதுகின்றனர், சமூக அக்கறையோடு எழுதுகின்றவர்கள் எண்ணிக்கையில் குறைவே.. ஆகவே நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

க.பாலாசி said...

// D.R.Ashok said...
26 வயதில் பெரிய விஷயங்களை இவ்வளவு தெளிவாக வார்த்தைகளில் கவிதையாய் வடிப்பது ஆச்சரியமே.
அற்புதம். அருமை.//

நன்றி அன்பரே...

//Blogger முரளிகுமார் பத்மநாபன் said...
நண்பா, அருமை.
ரெளத்ரம் உங்கள் வரிகளில். நிறைய பேர் கவிதை எழுதுகின்றனர், சமூக அக்கறையோடு எழுதுகின்றவர்கள் எண்ணிக்கையில் குறைவே.. ஆகவே நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.//

நன்றி அன்பரே....எழுதுகிறேன்...

"உழவன்" "Uzhavan" said...

கல்விக் கொள்ளை முதல் கற்புக்கொள்ளை வரை வலியோடு சொன்னமை சிறப்பானதே.

க.பாலாசி said...

// உழவன் " " Uzhavan " said...
கல்விக் கொள்ளை முதல் கற்புக்கொள்ளை வரை வலியோடு சொன்னமை சிறப்பானதே.//

நன்றி அன்பரே..உங்களின் வருகைக்கு...

அன்புடன் மலிக்கா said...

கண்கள் படித்ததும் வலித்தது உள்ளம்

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO