க.பாலாசி: நாடோடிகள்...

Monday, September 7, 2009

நாடோடிகள்...

எனது கல்லூரி நாட்களில், எனது ஊரினைச்சார்ந்த ஒருவன் என்னுடன் சக மாணவனாக வந்து சேர்ந்தான். எனக்கும் நண்பனானான். அவனது ஊர் எங்கள் வீட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில்தான் இருந்தது. அதனால் தினமும் என் வீட்டிற்கு வருவான். இப்படி வந்துபோய்க்கொண்டிருக்கையில் எனது பால்ய நண்பனொருவனுக்கு அவனை அறிமுகப்படுத்தி வைத்தேன்.

இருவரும் ஒரு ஜாதிக்காரர்களாக இருக்கவே என்னைவிட இருவரும் நெருங்கிய நண்பர்களாகிப்போனார்கள். அதனால் பின்னாளில் (2, 3 மாதத்திற்கு பிறகு) அவர்கள் இருவரும் கல்லூரி முடிந்ததும் மாலை நேரங்களில் சொந்தமாக வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தார்கள். நானும் அவ்வப்போது அவர்களுடன் சென்று அடுத்தடுத்த தெருவில் இருக்கும் வீடுகளுக்கு வசூலுக்கு சென்றுகொண்டிருந்தேன்.

இப்படியாக நாட்கள் கழிய கல்லூரி நண்பன் வட்டிக்கு பணம் கொடுத்த ஒரு வீட்டிலுள்ள பெண்ணுடன் பழக்கம் ஏற்படுத்திகொண்டான். அந்த பெண் அப்போது 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.


அக்டோபரில் உருவான அவர்களது காதல் ஜனவரிமாதம் வரையே தொடர்ந்தது. இந்த விஷயம் பெற்றவர்களுக்கு தெரிந்துபோக, அவர்கள் அப்பெண்ணிற்கு வரன் தேட ஆரம்பித்தார்கள். அந்த பெண் பள்ளிக்கு சென்றுகொண்டுதான் இருந்தாள். பள்ளிக்கு செல்லும் நேரங்களில் என் நண்பனும் அவளும் பேசிக்கொண்டார்கள். அப்போது அந்த பெண் என் நண்பனிடம் இந்த விஷயங்களைக் கூற, அவன் எடுத்த முடிவு இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போவது.

இதை எங்களிருவரிடமும் கூற நாங்களும் ஒத்துக்கொண்டோம். சரியாக ஜனவரிமாத இறுதி என்று நினைக்கிறேன். (அவர்களிருவரும் காதலிக்க ஆரம்பித்து மூன்று மாதங்களே ஆன நிலை) அவர்கள் ஓடிப்போவதற்கான ஏற்பாடுகளை எனது பால்ய நண்பன் செய்துகொண்டிருந்தான். அவனுக்கு தெரிந்த கேரள நண்பர்களிடம் சொல்லி, இவர்களை அங்கே அனுப்ப ஏற்பாடு செய்திருந்தான்.

சரியாக அன்றைய இரவு, அந்தப்பெண் அவளது மூட்டைமுடிச்சிகளை எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள். நான்தான் அவளை சைக்கிளில் அழைத்து சென்று 5 கி.மீ. தொலைவில் உள்ள ஊரின் பஸ் ஸ்டான்டில் விட்டேன். அவர்கள் இருவரும் எனக்கு முன்னமே காத்திருந்தார்கள். ஒருவழியாக எங்களிடம் இருந்த கொஞ்ச பணத்தையும் கொடுத்து இருவரையும் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, நாங்களிருவரும் வீட்டிற்கு வந்தோம். மணி சரியாக 10.00 ஆனது.

அன்றைக்கு இரவே 11 மணியளவில், பெண்ணின் தகப்பன் எனது பால்ய நண்பன் வீட்டிற்கு வந்துவிட்டார். பிறகு என்னையும் அழைக்க எனது வீட்டிற்கும் ஆள் வந்துவிட்டது. நானும் சென்றேன். நண்பன் வீட்டின் வாசலில் பெண் வீட்டார் சார்பாக அவரது தெரு மக்களே கூடியிருந்தனர். அப்போதுதான் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது.

அந்த நேரத்தில் பெண்ணின் தந்தை வயிற்றில் அடித்துக்கொண்ட அழுதது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

ஒரு பெண்ணை பெற்று, வளர்த்து, படிக்கவைத்து, ஆளாக்கி அவளுக்குரிய தேவைகளை பிச்சையெடுத்தாவது பூர்த்தி செய்து, அவள் வளர்ந்து ஆளாக அடிவயிற்றில் நெருப்பினை கட்டிக்கொண்டதுபோல பெற்றோர்கள் அடையும் வேதனை அவர்களுக்குதான் தெரியும்.

அப்போதுதான் உணர்ந்தேன் நாம் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று. எங்களிருவரிடமும் அவர்கள் எப்படி எப்படியோ கேட்டுப்பார்தார்கள். நாங்கள் உண்மையை சொல்லவேயில்லை. பிறகு போலிஸ் கேஸாகி அடிவாங்காமல் மட்டும் தப்பித்து வந்துவிட்டோம்.

இந்த நிகழ்ச்சி நடந்து ஒரு வாரம் வரை எனது குடும்பமும், நண்பனது குடும்பமும் படாதபாடுபட்டோம். எங்களது குடும்பங்களே இந்த பாடு பட்டார்கள் என்றால், ஓடிப்போன இருவரின் குடும்பங்களும் எவ்வளவு வேதனையில் இருந்திருப்பார்கள்.

பிறகு பையனின் தகப்பனார் அவர்களின் ஊரில் உள்ள பெரிய மனிதர்களை அழைத்துவந்து சமாதானம் பேசி முடித்தார்கள். பிறகு அந்த நண்பன் இருக்கும் இடத்தை நாங்கள் கூற அந்த இடத்திற்கு அவர்கள் செல்லவில்லை என்பது அப்போதுதான் தெரியும். பிறகு எங்கே சென்றார்கள் என்ற கேள்விக்கு பதில் ஓடிப்போன பையனின் அண்ணனிடம் இருந்து வந்தது. அவர்களிருவரும் அவனது அண்ணனிடமே தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

பிறகு எல்லோரும் சமாதானமாகி எல்லாம் சுபம்.

நானும் எனது பால்ய நண்பனும் கொஞ்ச நாள் எங்கள் ஊரில், ஷாஜகான் என்றே அழைக்கப்பட்டோம்.(ஏனென்றால் ஷாஜகான் படம் அப்போதுதான் வந்தது)

சரியாக ஆறு வருடங்கள் ஆகிறது. இன்றும் எனது மனதில், நான் வாழ்வில் செய்த பெரிய தவறாக கருதுவது அவர்களிருவரையும் பஸ் ஏற்றிவிட்டதுதான். என்னதான் இன்று மாமனார் மருமகன் என்று இருவரும் சிரித்துக்கொண்டிருந்தாலும், அன்றைய நாளில் பெண்ணைப்பெற்றவனாய் வயிற்றில் அடித்துக்கொண்டு அழுத சம்பவங்கள், அந்த நேரத்தில் எங்கள் மீது அவர் விட்ட சாபங்கள் இவையாவுமே வீணாகவில்லை. இன்றளவும் ஏதோ ஒரு விஷயங்களில் நாங்களிருவருமே அதற்கான தண்டனைகளை அனுபவித் துக்கொண்டிருக்கிறோம்.

பின்னாளில் எனக்கு கிடைத்த தண்டனை எனது காதலியை நான் இழக்க நேரிட்டது. அவள், அவள் கணவனுடன் வாழ்கிறாள், நான் அவள் கனவுடன் வாழ்கிறேன்.

இந்த 27ம் அகவையில் நான் கடந்து வந்த பாதையினை திரும்பிப்பார்க்கிறேன், என் பாதையிலும் சில எறும்புகள் இறந்துகிடக்கின்றன...தமிழ்மணத்திலும், தமிலிஸ்சிலும் தங்களது வாக்கினை பதிவிடவும்... நன்றி...
**********

31 comments:

ஜெட்லி... said...

//அவள், அவள் கணவனுடன் வாழ்கிறாள், நான் அவள் கனவுடன் வாழ்கிறேன்.
//

நல்ல நடை பாலாஜி...
வாழ்த்துக்கள்...

ஈரோடு கதிர் said...

//அவள் கணவனுடன் வாழ்கிறாள், நான் அவள் கனவுடன் வாழ்கிறேன்.//

உங்க ஃபீலிங் புரியுது

ஏன் உங்க பால்ய நண்பன் ஏதும் உதவ வில்லையா

//பின்னாளில் எனக்கு கிடைத்த தண்டனை எனது காதலியை நான் இழக்க நேரிட்டது.//

இது சாபத்தின் விளைவு என்று நினைக்க வேண்டியதில்லை

//அந்த நேரத்தில் எங்கள் மீது அவர் விட்ட சாபங்கள் இவையாவுமே வீணாகவில்லை//.

//இன்றளவும் ஏதோ ஒரு விஷயங்களில் நாங்களிருவருமே அதற்கான தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.//

ஒருவேளை நீங்கள் பஸ் ஏற்றி விடாமல் காதலித்தவர்கள் (ஒருவேளை) தங்கள் உயிரை விட்டிருந்தால்.

அதையெல்லாம் நினைத்து இவ்வளவு ஃபீல் பண்ணாதிங்க..

சீக்கிரம் ஒரு பொண்ணத் தேடுங்க

//என் பாதையிலும் சில எறும்புகள் இறந்து கிடக்கின்றன...//

பார்த்து நடந்திருக்கலாமே பாலாஜி. இஃகிஃகி

பழமைபேசி said...

நண்பா.... வாழ்க்கையில ஒரு சில நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தும்... ஆனால், அதை நினைத்து வருத்தப்படத் தேவையில்லை.... பாடம் கற்றுவிட்டீர்கள்... let's move on......

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

வால்பையன் said...

//நான் கடந்து வந்த பாதையினை திரும்பிப்பார்க்கிறேன், என் பாதையிலும் சில எறும்புகள் இறந்துகிடக்கின்றன...//


கவித மாதிரி கீது தல!

Cable சங்கர் said...

நல்லாருக்கு பாலாஜி..

க. தங்கமணி பிரபு said...

நல்லாயிருக்கு பாலாஜி.
நல்ல நடை.
கலக்குங்க!

துபாய் ராஜா said...

நாடோடிகள் வெற்றிக்கு இதுபோன்ற அனுபவங்கள்தான் காரணம்.

இரும்புத்திரை said...

நல்லாயிருக்கு பாலாஜி.
கலக்குங்க!

செத்து போன எறும்பு சித்தெறும்பா இல்ல கட்டெறும்பா

Ashok D said...

விறுவிறுப்பான நடை.. அதை விட வேகமான புல்லட் ரெயில் மாதிரி..
கடைசியில் கலங்கவும் வைச்சிட்டீங்க பாலாஜி..

vasu balaji said...

நல்லா சொல்லி இருக்கீங்க. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஏதாவது மிக நல்லதாக நடக்கும்போது உங்கள் உதவியே காரணமாகத் தோன்றலாம்.

ஆரூரன் விசுவநாதன் said...

அவள் கணவனுடன் வாழ்கிறாள், நான் அவள் கனவுடன் வாழ்கிறேன்.
அருமை.....

அன்புடன்
ஆரூரன்

ஹேமா said...

பாலாஜி,சிலசமயங்கள் வயதுக் கோளாறு ஆர்வமிகுதியில் செய்யும் காரியங்கள் எத்தனையோ பேரைத்
தாக்கும்.எஙகளுக்கும் அதை உணரும் பக்குவம் வரும் வரை புரிந்து கொள்ள முடிவதில்லை.
புரிந்திருந்தால் செய்திருக்க மாட்டோம்தானே !

ப்ரியமுடன் வசந்த் said...

இப்போ நல்லாயிருக்காங்கதான பாலாஜி

சந்தோஷமா இருந்தா சரித்தான்....

நிஜமா நாந்ததை கண்முன்னாடி கொண்டுவந்துவிட்டீர்கள்.....

Anonymous said...

//ஒரு பெண்ணை பெற்று, வளர்த்து, படிக்கவைத்து, ஆளாக்கி அவளுக்குரிய தேவைகளை பிச்சையெடுத்தாவது பூர்த்தி செய்து, அவள் வளர்ந்து ஆளாக அடிவயிற்றில் நெருப்பினை கட்டிக்கொண்டதுபோல பெற்றோர்கள் அடையும் வேதனை அவர்களுக்குதான் தெரியும்.//

உணர்ந்து எழுதியிருக்கீங்க.

thiyaa said...

மிகவும் நன்றாக உள்ளது

thiyaa said...

நான் பார்த்தேன் பிடிச்சிருக்கு

குடந்தை அன்புமணி said...

ஈரோடு கதிர் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன். ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி எங்குமில்லை’ என்ற பாடலை நான்கு முறை கேளுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

க.பாலாசி said...

//ஜெட்லி said...
நல்ல நடை பாலாஜி...
வாழ்த்துக்கள்...//


//கதிர் - ஈரோடு said...
உங்க ஃபீலிங் புரியுது//

நன்றி...(அப்பாடி புரிஞ்சிகிட்டாங்கப்பா)

//ஏன் உங்க பால்ய நண்பன் ஏதும் உதவ வில்லையா//

சில சட்ட சிக்கல்கள்...

// இது சாபத்தின் விளைவு என்று நினைக்க வேண்டியதில்லை//

அப்படியா..

// ஒருவேளை நீங்கள் பஸ் ஏற்றி விடாமல் காதலித்தவர்கள் (ஒருவேளை) தங்கள் உயிரை விட்டிருந்தால்.//

அதுவும் யோசிக்கவேண்டிய விஷயம்தான்..

//அதையெல்லாம் நினைத்து இவ்வளவு ஃபீல் பண்ணாதிங்க..//

சரி விடுங்க....

//சீக்கிரம் ஒரு பொண்ணத் தேடுங்க//

அததான நானும் தேடிகிட்டு இருக்கேன்..

//பார்த்து நடந்திருக்கலாமே பாலாஜி. இஃகிஃகி//

இளமை...என் கண்ணை மறைத்துவிட்டது...என்ன செய்வது...

நன்றி...தங்களின் வருகை மற்றும் கருத்திற்கு..

//பழமைபேசி said...
நண்பா.... வாழ்க்கையில ஒரு சில நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தும்... ஆனால், அதை நினைத்து வருத்தப்படத் தேவையில்லை.... பாடம் கற்றுவிட்டீர்கள்... let's move on......//

ஓ.கே.. நண்பா...நீங்க சொன்னா கரைட்டாதான் இருக்கும்...நன்றி நண்பா..

//வால்பையன் said...
கவித மாதிரி கீது தல!//

எவ்ளோ பீலிங்கோட எழுதியிருக்கேன்...கவிதன்னு சொல்லிட்டீங்களே தல...

நன்றி வாவாவாவால் பையன்...

//Cable Sankar said...
நல்லாருக்கு பாலாஜி..//

நன்றி கேபிளய்யா...

க.பாலாசி said...

//க. தங்கமணி பிரபு said...
நல்லாயிருக்கு பாலாஜி.
நல்ல நடை.
கலக்குங்க!//

நன்றி...தங்கமணிசார்...அடிக்கடி வாங்க...

//Blogger துபாய் ராஜா said...
நாடோடிகள் வெற்றிக்கு இதுபோன்ற அனுபவங்கள்தான் காரணம்.//

சரிதான்....வாருங்கள் துபாய்ராஜா...நன்றி தங்களின் வருகைக்கு...

//Blogger இரும்புத்திரை அரவிந்த் said...
நல்லாயிருக்கு பாலாஜி.
கலக்குங்க!//

நன்றி நண்பா....

//செத்து போன எறும்பு சித்தெறும்பா இல்ல கட்டெறும்பா//

என்னா வில்லத்தனம்...

//Blogger D.R.Ashok said...
விறுவிறுப்பான நடை.. அதை விட வேகமான புல்லட் ரெயில் மாதிரி..
கடைசியில் கலங்கவும் வைச்சிட்டீங்க பாலாஜி..//

நன்றி அன்பரே உங்களின் வருகைக்கு...

//Blogger வானம்பாடிகள் said...
நல்லா சொல்லி இருக்கீங்க. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஏதாவது மிக நல்லதாக நடக்கும்போது உங்கள் உதவியே காரணமாகத் தோன்றலாம்.//

பல நல்லதுகள் நடந்திருக்கு...ஆனாலும் இந்த கரும்புள்ளிதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கிறது...இப்போ கொஞ்சம் குறைஞ்சிருக்கு...

நன்றி வானம்பாடிகள் அய்யா...

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
அவள் கணவனுடன் வாழ்கிறாள், நான் அவள் கனவுடன் வாழ்கிறேன்.
அருமை.....
அன்புடன்
ஆரூரன்//

நன்றி ஆரூரன் சார்....

தங்கராசு நாகேந்திரன் said...

//என் பாதையிலும் சில எறும்புகள் இறந்து கிடக்கின்றன...//

//"பார்த்து நடந்திருக்கலாமே பாலாஜி. இஃகிஃகி"//

மனுசன் என்னமா ஒரு ஃபீலிங்க்கோட சொன்னத இந்த ஈரோட்டுகாரர் எப்படி கமண்ட் அடிக்குறாரு பாருங்க

யாரங்கே ஈரோடு கதிரை நூறு கட்டெறும்பு விட்டு கடிக்க விடுங்க.

க.பாலாசி said...

//ஹேமா said...
பாலாஜி,சிலசமயங்கள் வயதுக் கோளாறு ஆர்வமிகுதியில் செய்யும் காரியங்கள் எத்தனையோ பேரைத்
தாக்கும்.எஙகளுக்கும் அதை உணரும் பக்குவம் வரும் வரை புரிந்து கொள்ள முடிவதில்லை.
புரிந்திருந்தால் செய்திருக்க மாட்டோம்தானே !//

ஆமாம் தோழி....நன்றி தங்களின் வருகை மற்றம் கருத்திற்கு...

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
இப்போ நல்லாயிருக்காங்கதான பாலாஜி சந்தோஷமா இருந்தா சரித்தான்....//

ஆமாம் நண்பா...நல்லாவே இருக்காங்க....

//நிஜமா நடந்ததை கண்முன்னாடி கொண்டுவந்துவிட்டீர்கள்.....//

நன்றி நண்பா...

//Blogger சின்ன அம்மிணி said...
உணர்ந்து எழுதியிருக்கீங்க.//

நன்றி சின்ன அம்மிணி....

//Blogger தியாவின் பேனா said...
மிகவும் நன்றாக உள்ளது
நான் பார்த்தேன் பிடிச்சிருக்கு//

நன்றி தியா...தங்களின் முதல் வருகைக்கு...

//Blogger குடந்தை அன்புமணி said...
ஈரோடு கதிர் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன். ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி எங்குமில்லை’ என்ற பாடலை நான்கு முறை கேளுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.//

உண்மைதான்...இப்போது உணர்கிறேன்...

நன்றி அன்பரே உங்களின் வருகை மற்றும் கருத்திற்கு.....

க.பாலாசி said...

//தங்கராசு நாகேந்திரன் said...
மனுசன் என்னமா ஒரு ஃபீலிங்க்கோட சொன்னத இந்த ஈரோட்டுகாரர் எப்படி கமண்ட் அடிக்குறாரு பாருங்க//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

நம்ம பீலிங்க புரிஞ்சிகிட்ட ஆளு நீங்கதான்..

//யாரங்கே ஈரோடு கதிரை நூறு கட்டெறும்பு விட்டு கடிக்க விடுங்க.//

பரவால்ல விடுங்க...மன்னிச்சுடுவோம்...

நன்றி அன்பரே உங்களின் முதல் வருகை மற்றும் கருத்திற்கு...

vasu balaji said...

வாழ்த்துகள் பாலாஜி. யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் நாடோடிகள்

க.பாலாசி said...
This comment has been removed by the author.
க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
வாழ்த்துகள் பாலாஜி. யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் நாடோடிகள்//

நன்றி...அன்பரே..இந்த செய்தியை தங்கள் மூலம் நான் அறிந்தமைக்கு...

ஈரோடு கதிர் said...

ஹய்யா...

குட்பிளாக் இடுகை

வாழ்த்துகள்

க.பாலாசி said...

//கதிர் - ஈரோடு said...
ஹய்யா...
குட்பிளாக் இடுகை
வாழ்த்துகள்//

நன்றி அன்பரே...எல்லாம் உங்கள் தூண்டுகோல்தான்....

anujanya said...

வாவ், நல்லா அனுபவங்களை எழுதி இருக்கீங்க. நண்பர்கள் சொல்ற மாதிரி, இனிமேலும் வருத்தப் படாமல், வாழ்கையை தொடருங்கள். நிறைய மகிழ்ச்சியான திருப்பங்களும் வரும். நிறைய வாசித்து, நிறைய எழுதுங்க பாலாஜி

அனுஜன்யா

க.பாலாசி said...

//அனுஜன்யா said...
வாவ், நல்லா அனுபவங்களை எழுதி இருக்கீங்க. நண்பர்கள் சொல்ற மாதிரி, இனிமேலும் வருத்தப் படாமல், வாழ்கையை தொடருங்கள். நிறைய மகிழ்ச்சியான திருப்பங்களும் வரும். நிறைய வாசித்து, நிறைய எழுதுங்க பாலாஜி//

மிக்க நன்றி அன்பரே...தங்களின் வருகை மற்றும் கருத்திற்கு....எழுதுகிறேன்...

Unknown said...

//..

//ஏன் உங்க பால்ய நண்பன் ஏதும் உதவ வில்லையா//

சில சட்ட சிக்கல்கள்... //

அடப்பாவி அடுத்தவன் பொண்டாட்டியவா விரும்புனிங்க..???

(சும்மா தமாசுக்கு..!!)

நல்ல அனுபவம் நண்பா..

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO