க.பாலாசி: ராஜாவும் ராணியும்...

Saturday, September 19, 2009

ராஜாவும் ராணியும்...


நம்ம ராஜாவுக்கு எப்பவுமே அவசரம்தாங்க...ஏன் சொல்றேன்னு கேட்கிறீங்களா? மேல படிங்க...

அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வெளிநாட்டுக்கு போனவன் போன மாசம் தான் வந்தான். வந்ததும் வராததுமா வீட்ல சொல்லி பொண்ணுப் பாக்க சொல்லிட்டான். பயபுள்ளைக்கு அப்டி ஒன்னும் வயசாகல. 28 தான் அவுது. இன்னும் 3 மாசத்துல மறுபடியும் வெளிநாட்டுக்கு போவனுமாம். அதுக்காகதான் இவ்ளோ அவசரம்.

வீட்லையும் ஒரே பையன்தான இப்பவே முடிச்சிடுவோம்டு பொண்ணு பாக்க ஆரம்பிச்சாங்க. அவங்க அப்டி ஆரம்பிச்சதும்...பையனுக்கு தலகாலு புரியல தெனமும் பொட்டுதான்... பூவுதான்... சென்ட்டுதான்....என்ன நெனைச்சிகிட்டு இருப்பானோ தெரியாது. தரையில நடக்கறதாவே பல நேரத்துல நெனைக்கமாட்டான் போலருக்கு. ராத்திரியில படுக்க போறப்பவும் பொம்பளைங்க மூஞ்சில தடவுர எல்லா கருமத்தையும் தடவிகிட்டு, தலைய சீவிகிட்டுதான் படுக்குறான். கேட்டா வரலாறு முக்கியம்ங்கிறான். அடப்பாவி வரலாறுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம், என்னத்த சொல்றது. இப்டியே ரெண்டு வாரம் ஓடுச்சு.

ஒரு வழியா பக்கத்துல பத்து கிலோமீட்டர் தூரத்துல ஒரு பொண்ண பாத்து எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டாங்க. பொண்ண பாக்குறத்துக்கு முன்னாடியே தலகீழா நடந்தவன் இப்ப சும்மா இருப்பானா. என்னா ஆட்டம்...பாட்டம்...எதுக்கு இவ்வளவு ஆசயோட அலையிரான்னே தெரியல. பழுத்த மட்ட பச்ச மட்டைய பாத்து சிரிச்ச கதையா ஊருல உள்ள கல்யாணம் ஆவாத பசங்கள ஓட்டுறதே வேலயா செய்யுறான். இவன பாத்தாலே அந்த பசங்கல்லாம் ஆளவுட்றா சாமின்னு வீட்ட வுட்டே வெளிய வரமாட்டுங்கிறானுங்க.

கல்யாண நாளு நெருங்க நெருங்க வீட்டுக்குள்ளயே முடங்கிட்டான். அப்டி என்னதான் பண்றான்னு போயி பாத்தா வெயில்ல வந்தா கருத்துடுவான்னு அவங்க ஆத்தாகாரி சொல்லிருச்சாம். இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல, ஏற்கனவே நீ பிரிண்டர் டோனர் கலருல செகப்பாதானடா இருக்கன்னு சொன்னா....உனக்கு பொறாமடாங்கறான். அப்பறம் இன்னொரு கூத்து வேற நடக்குது. அவன் வீட்டு ஹால் இருந்த டி.வி.ய இப்ப கொண்டு போயி ரூமுல வச்சிருக்கான். இத ஏன்டா இங்க வைச்சிருக்கன்னு கேட்டா...கலைஞர் சொல்றமாதிரி பொது அறிவ வளத்துக்கன்னு சொல்றான். எங்க போயி முடிய போவுதோ தெரியிலையே?

சும்மா சொல்லக்கூடாது கல்யாண வேலையெல்லாம் ஒன்டிக்காரனாவே நின்னு செஞ்சிட்டான். நாங்களும் அப்பப்ப போயி எதாவது செஞ்சோம். கல்யாணமும் ஒருவழியா முடிஞ்சிது. மத்த சடங்குல்லாம் பொறுமையாவே நடந்துகிட்டு இருந்துச்சு. ஏன் இவ்வளவு ஆம வேகத்து எல்லா நடக்குதுன்னு பாத்தா நம்ம ராஜாவோட வேளதான்னு தெரிஞ்சுது. ஏன்னா எல்லா வேலையும் பொறுமையா நடந்தாதான் சீக்கிரம் பொழுது போவுமாம். ம்ம்ம்ம்......

பொண்ணோட வீடல ரூம் வசதி இல்லன்னுட்டு இவங்க வீட்லையே முதலிரவ வைச்சிக்க சொல்லிட்டாங்க. அப்பறம் அவன் எங்கள கூப்டு அவனோட ரூம அலங்காரம் பண்ண சொன்னான். நாங்களும் புதுசா சீர்வரிசையா வந்த இரும்பு கட்டில கொண்டாந்து போட்டு அத சுத்தி பூவெல்லாம் வாங்கியாந்து சும்மா ஜம்முன்னு அலங்காரம் பண்ணினோம். பயபுள்ள வந்து பாத்தான். நல்லாருக்குன்னு சொல்ல வேண்டாம், சுமாரா இருக்குன்னாவது சொல்லியிருக்கலாம்ல. ஒன்னுமே சொல்லல. சீக்கிரம் கிளம்புகடான்னு சொல்லிட்டான். எங்களுக்கு வந்துதே கோபம். சரி பரவாயில்ல அப்பறமா பேசிக்கலாம்னு கௌம்பிட்டோம்.

அன்னைக்கு நைட்டு ரூமுல ரொம்ப நேரமா காத்துகெடந்திருப்பான் போல. எவ்வளவு நேரம்தான் பூவாசனைய மட்டும் மோந்துகிட்டு இருக்குறது. புரட்டாசி மாசம்ங்கறதால கொஞ்சமா குளிர்வேற. பையனுக்கு அவதி தாங்கல. மெதுவா கதவு தெறந்துது. ராணி மெல்லமா நடந்து வரா. பையன் வச்சகண்ணு வாங்காம பாக்குறான். கையில பால் சொம்பு, அதுக்குமேல கவுத்து வைச்ச டம்ளரு. அவ குணிஞ்ச தல நிமிறல. வெக்கத்தோட தாக்கம் அவளோட நடையிலேயே தெரியுது. கழுத்துல புது தாலிய தொட்டும் தொடாமலும் மல்லியப்பூ. வரதட்சணையா வந்த நகையில பாதிய அப்பவே அவனோட ஆத்தாக்காரி வாங்கி பீரோக்குள்ள வைச்சிருப்பா போல. ரெண்டு மூணு செயின் மட்டும் மாராப்பு மேல தெரியுது. கிட்ட வரதுக்குள்ள பால கூட வாங்கி வைக்கல. காஞ்சமாடு கம்மங்கொல்லையில பாஞ்ச கணக்கா ஒரே பாய்ச்சல்தான். அவனோட வேகமும், அவளோட தாகமும் ஒரே திசையில பயணிச்சு கட்டில் மேல தொப்புன்னு விழுந்தாங்க. (நாங்க பாக்கல... எல்லாம் ஒரு கற்பனதான்)

அப்பறம் என்ன?... விழுந்த வேகத்துல கட்டிலு காலு கழண்டு போயி.....அவனுக்கு பின்னாடி மண்டையும், அவளுக்கு முன்னாடி மண்டையும் உடைச்சிடுச்சு. ரெண்டு மனசும் ஒன்னா போனதால ரெண்டு பேருக்குமே ரெண்டு ரெண்டு தையல். டாக்டரு இன்னும் ஒருவாரம் கழிச்சிதான் ரெண்டுபேரும் சேரனும்னு சொல்லிட்டாரு.

ம்...போங்க போங்க... போயி வேலய பாருங்க....

டிஸ்கி: ஏன் கட்டிலு காலு கழண்டுதுன்னு கேளுங்க, நாங்க அலங்காரம் பண்ணி முடிச்சவொடனே எங்கள வெளியில தொரத்திவுட்டான்ல. அதனால அவனுகிட்ட சாக்குபோக்கு சொல்லி ரூமுக்கு போயி இடதுகை பக்கம் இருக்குற காலோட நட்ட கழட்டி உட்டுட்டேன். இது தெரியாம என்னமாதிரியே இன்னொருத்தனும் போயி வலதுகை பக்கம் இருக்குற நட்ட கழட்டிவுட்டுருக்கான்.


தமிழ்மணத்திலும், தமிலிஸ்ஸிலும் உங்களது வாக்கினை பதிவிடவும்...நன்றி




19 comments:

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...2

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

சுரேஷ்குமார் said...

//பையனுக்கு தலகாலு புரியல தெனமும் பொட்டுதான்... பூவுதான்... சென்ட்டுதான்....என்ன நெனைச்சிகிட்டு இருப்பானோ தெரியாது. தரையில நடக்கறதாவே பல நேரத்துல நெனைக்கமாட்டான் போலருக்கு. ராத்திரியில படுக்க போறப்பவும் பொம்பளைங்க மூஞ்சில தடவுர எல்லா கருமத்தையும் தடவிகிட்டு, தலைய சீவிகிட்டுதான் படுக்குறான். கேட்டா வரலாறு முக்கியம்ங்கிறான்.
//
"....பூவுதான்" சரியா பாலாஜி.

க.பாலாசி said...

//"....பூவுதான்" சரியா பாலாஜி.//

பேச்சு வழக்குல அப்டிதானே சொல்கிறோம் அன்பரே...

Ashok D said...

என்ன பாலாஜி.. உங்கள கவிஞன்னு நினைச்சேன். கதையில் காமடிய உட்டு இந்த அடி அடிக்கிறீங்க. நைஸ்

ஈரோடு கதிர் said...

//சீக்கிரம் கிளம்புகடான்னு சொல்லிட்டான்.//

அவ்வளவு நேரம் விட்டுவெச்சதே தப்பு

//அவனுகிட்ட சாக்குபோக்கு சொல்லி ரூமுக்கு போயி பீச்சாங்கை பக்கம் இருக்குற காலோட நட்ட கழட்டி உட்டுட்டேன். இது தெரியாம என்னமாதிரியே இன்னொருத்தனும் போயி சோத்தாங்கை பக்கம் இருக்குற நட்ட கழட்டிவுட்டுருக்கான்.//

அடப் படுபாவிகளா! இது உங்களுக்கே அடுக்குமா!

தம்பி பாலாஜி உங்கல்யாணத்துக்கு நாங்க வர்றோம் ரூமை அலங்காரம் பண்ண...


அப்புறம் நாங்களும் அதப்பத்தி இடுகை போடவேணுமில்ல

கலக்கல் காமடி

பிரபாகர் said...

//அவனுக்கு பின்னாடி மண்டையும், அவளுக்கு முன்னாடி மண்டையும் உடைச்சிடுச்சு.//

அய்யா, இந்த மாதிரி ரெண்டுபேர், இல்லையில்லை நீர் ஒருவரே போதும். எல்லோரோருடைய முதலிரவும் உருப்பட்டாப்ல தான்...

பிரபாகர்.

vasu balaji said...

/கதிர் - ஈரோடு said...
தம்பி பாலாஜி உங்கல்யாணத்துக்கு நாங்க வர்றோம் ரூமை அலங்காரம் பண்ண...

:)). அதாஞ்சரி. ஆமாம். அன்னைக்கு அத்தன சோகத்துலயும் மாட்டுக்காரன் சாக்கு, இப்போ இந்த ராசா. ஒரு மார்க்கமாத்தான் போய்க்கிருக்கு.

பண்ற அழிச்சாட்டியமெல்லாம் பண்ணிபோட்டு அத டிஸ்கில போட்டா விட்றுவாய்ங்களோ.

மேடி உசாரு.

கலக்கல் பாலாஜி

க.பாலாசி said...

//தமிழ் முல்லை said...
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!
முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...2
வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!//

நன்றி உங்களின் அழைப்பிற்கு....

//D.R.Ashok said...
என்ன பாலாஜி.. உங்கள கவிஞன்னு நினைச்சேன்.//

கவிஞனா? யாருப்பா அது...இப்டியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகலமாக்கிட்டாங்களே....

//கதையில் காமடிய உட்டு இந்த அடி அடிக்கிறீங்க. நைஸ்//

மிக்க நன்றி தோழரே...

க.பாலாசி said...

//கதிர் - ஈரோடு said...
அவ்வளவு நேரம் விட்டுவெச்சதே தப்பு//

அலங்காரம் செய்யறதுன்னா சும்மாவா?...

// அடப் படுபாவிகளா! இது உங்களுக்கே அடுக்குமா! தம்பி பாலாஜி உங்கல்யாணத்துக்கு நாங்க வர்றோம் ரூமை அலங்காரம் பண்ண...அப்புறம் நாங்களும் அதப்பத்தி இடுகை போடவேணுமில்ல//

அப்டி ஒரு நிலம வந்தா என் ரூமுல கட்டிலே போடமாட்டேனே....இப்ப என்ன பண்ணுவீங்க...

//கலக்கல் காமடி//

நன்றி அண்ணா...

//Blogger பிரபாகர் said...
அய்யா, இந்த மாதிரி ரெண்டுபேர், இல்லையில்லை நீர் ஒருவரே போதும். எல்லோரோருடைய முதலிரவும் உருப்பட்டாப்ல தான்...//

உங்களுக்கு பொறாம....

நன்றி அன்பரே...

க.பாலாசி said...

வானம்பாடிகள் said...
// :)). அதாஞ்சரி. ஆமாம். அன்னைக்கு அத்தன சோகத்துலயும் மாட்டுக்காரன் சாக்கு, இப்போ இந்த ராசா. ஒரு மார்க்கமாத்தான் போய்க்கிருக்கு.//

ஒரு கிளுகிளுப்பு வேணும்ல...என்ன நான் சொல்றது...

// பண்ற அழிச்சாட்டியமெல்லாம் பண்ணிபோட்டு அத டிஸ்கில போட்டா விட்றுவாய்ங்களோ.//

உங்களுக்கு புரியாம போயிட கூடாது பாருங்க அதனாலதான்...

//மேடி உசாரு.//

நானும் அவரதான் தேடிகிட்டு இருக்கேன். கிடைக்க மாட்றாரு...கல்யாண வேலையில பிஸியா இருப்பாரு போலருக்கு...

நன்றி அய்யா உங்களின் வருகைக்கு...








கலக்கல் பாலாஜி

பழமைபேசி said...

////D.R.Ashok said...
என்ன பாலாஜி.. உங்கள கவிஞன்னு நினைச்சேன்.//

கவிஞனா? யாருப்பா அது...இப்டியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகலமாக்கிட்டாங்களே....//

அவையடக்கம்? இருக்கட்டு, இருக்கட்டு... கதை சுவாரசியமா இருக்குங்கோய்...

JACK and JILLU said...

நல்ல காமெடி கதை... உங்கள நம்ம்ம்பி கூப்பிட்டாரு பாருங்க அலங்காரம் பண்ண.. அதை நினைச்சாத்தான் பாவமா இருக்கு

நாகா said...

Nice and Funny Balaji :)

ப்ரியமுடன் வசந்த் said...

அடப்பாவிகளா..

கலக்கல் காமெடிங் பாலாஜி

Beski said...

அடங்கொய்யால... நண்பன் மேல இவ்ளோ பாசமா இருக்கீங்களேய்யா... நல்ல வேள, ரெண்டு பேரு மட்டும் பாசமா இருந்தீங்க, நாலு பேரும் இருந்திருந்தா...

க.பாலாசி said...

// பழமைபேசி said...
அவையடக்கம்? இருக்கட்டு, இருக்கட்டு... கதை சுவாரசியமா இருக்குங்கோய்...//

நன்றிங்கோய்...

//Blogger JACK and JILLU said...
நல்ல காமெடி கதை... உங்கள நம்ம்ம்பி கூப்பிட்டாரு பாருங்க அலங்காரம் பண்ண.. அதை நினைச்சாத்தான் பாவமா இருக்கு//

நன்றி ஜாக்....உங்களின் முதல் வருகை மற்றும் கருத்திற்கு...

//Blogger நாகா said...
Nice and Funny Balaji :)//

நன்றி நாகா....

க.பாலாசி said...

//பிரியமுடன்...வசந்த் said...
அடப்பாவிகளா..
கலக்கல் காமெடிங் பாலாஜி//

நன்றி வசந்த்....

//Blogger எவனோ ஒருவன் said...
அடங்கொய்யால... நண்பன் மேல இவ்ளோ பாசமா இருக்கீங்களேய்யா... நல்ல வேள, ரெண்டு பேரு மட்டும் பாசமா இருந்தீங்க, நாலு பேரும் இருந்திருந்தா...//

நாலு பேரு போனாலும் சேம் பிளட் தானே நண்பா.... அதனால இரண்டு பேரு மட்டும் போனோம்.

நன்றி நண்பா...

ஆரூரன் விசுவநாதன் said...

ஆனாலும் இது கொஞ்சம் ஓவரு.....

அன்புடன்
ஆரூரன்

க.பாலாசி said...

//ஆரூரன் விசுவநாதன் said...
ஆனாலும் இது கொஞ்சம் ஓவரு.....
அன்புடன்
ஆரூரன்//

நன்றி அன்பரே உங்களின் வருகைக்கு...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO