க.பாலாசி: தொலைந்து போனது உறவுகளின் ஆசை...

Monday, September 21, 2009

தொலைந்து போனது உறவுகளின் ஆசை...


உதிரும் சருகாய் பெற்றவள்...
உள்ளூர நினைக்கையில்...
வெளிப்படும் கீழிமை நீர்
கீழ் விழ நேரமில்லை...

கற்புடைய தாரமவள்...
கட்டியணைத்து பிரிகையில்
மனதெழுந்த கேள்வியதற்கு
விடையெழுத விடியவில்லை...

தான் ஈன்ற பிள்ளை...
தன்னிலையற்று உறங்குகையில்
உடல் அணைத்து, உச்சி முகர்ந்து...
இதழ் பதிக்க இயலவில்லை...

எல்லாம் மறந்து
எல்லையில் நின்றிருக்க...

எழுந்த துப்பாக்கியோசையதில்...
தொலைந்து போனது உறவுகளின் ஆசை...


இது எனது 50வது இடுகை.....இதுவரையில் வருகைதந்து ஊக்கமளித்த...இனிமேலும் வருகைதந்து ஊக்கமளிக்கப் போகின்ற அனைத்து பதிவுலக அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் உங்களது வாக்கினை பதிவிடவும்...நன்றி...

33 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//கற்புடைய தாரமவள்...
கட்டியணைத்து பிரிகையில்
மனதெழுந்த கேள்வியதற்கு
விடையெழுத விடியவில்லை...//

பிரிவின் வலியையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்தும் அருமையான வரிகள்

50வது இடுகைக்கு வாழ்த்துக்கள்...

சிவாஜி சங்கர் said...

50வது இடுகைக்கு வாழ்த்துக்கள்...

ஹேமா said...

பாலாஜி,இனிய வாழ்த்துகள்.இன்னும் நிறைய எழுதவேணும் நீங்க.

மனம் கனக்கிறது கவிதை.நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்களோ.நான் நினைப்பதெல்லாம் என் மக்களைத்தான்.

ஏன் பாலாஜி,சந்தோஷமான நேரத்தில் ஒரு சந்தோஷமான பதிவு தந்திருக்கலாமே !

vasu balaji said...

ஐம்பதாவது இடுகை அருமை பாலாஜி. மனம் கனக்கும் வரிகள் என்றாலும் அவர்களுக்கு சமர்ப்பணமாய் இக்கவிதை. வாழ்த்துகள்

இரும்புத்திரை said...

கவிதை நன்றாக இருக்கு தோழரே

Ashok D said...

வார்த்தைகளை அழகாய் வளைக்கிறீர்கள் பாலாஜி.

முதல் இரண்டு பத்தி க்ளாஸ்.

50க்கு வாழ்த்துக்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் பாலாஜி....

அன்புடன்
ஆரூரன்

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

//உறங்கையில்//

உறங்குகையில்

பிரபாகர் said...

ஐம்பதிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நாளுக்கு நாள் மெருகு கூடிக்கொண்டே போகிறது உங்களின் படைப்பில். கலக்குங்கள் பாலாஜி...

போருடன் இயைந்த இக்கவிதை மனதை வருடுகிறது. மிக அருமை.

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

நண்பரே முதலில் உங்கள் 50 வது இடுக்கைக்கு எனது வாழ்த்துக்கள். நான் படித்த கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளின் வரிசையில் இந்த கவிதையும் இணைந்து கொண்டது. வாழ்த்துக்கள். தொடருங்கள்...............

shortfilmindia.com said...

50வது பதிவு.. 51 பாலோயர்கள்..பாலாஜி.. சபாஷ்.. நல்லருக்கு கவிதை.. (அட இப்படித்தான் எழுதணுமா கவிதையை.. நானும் எழுதியிருக்கேனே..?)

Beski said...

கவிதை நல்லாயிருக்கு.

பொன்பதிவிற்கு வாழ்த்துக்கள் பாலாஜி.

மா.குருபரன் said...

/"கற்புடைய தாரமவள்...
கட்டியணைத்து பிரிகையில்
மனதெழுந்த கேள்வியதற்கு
விடையெழுத விடியவில்லை..."/

நன்றாக உள்ளது நண்பரே... தொடருங்கள் உங்கள் இலக்கிய பயணத்தை..

Radhakrishnan said...

நல்லதொரு கவிதை. ஐம்பது பதிவுகளுக்கு வாழ்த்துகள் பாலாஜி.

கார்த்திகைப் பாண்டியன் said...
This comment has been removed by the author.
கார்த்திகைப் பாண்டியன் said...

வார்த்தைகளில் சொல்ல முடியாத வலிகளும் ஏக்கமும்.. நன்றாக இருக்கிறது நண்பா..50வது இடுகைக்கு வாழ்த்துகள்..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

வார்த்தைகளில் சொல்ல முடியாத வலிகளும் ஏக்கமும்.. நன்றாக இருக்கிறது நண்பா..50வது இடுகைக்கு வாழ்த்துகள்..:-)))

ஈரோடு கதிர் said...

//எழுந்த துப்பாக்கியோசையதில்...
தொலைந்து போனது உறவுகளின் ஆசை...//


யதார்த்தமான வரிகள்

கவிதை அருமை

50 இடுகை, 51 தொடருபவர்கள்
வாழ்த்துகள் பாலாஜி

க.பாலாசி said...

//பிரியமுடன்...வசந்த் said...
பிரிவின் வலியையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்தும் அருமையான வரிகள்
50வது இடுகைக்கு வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றி வசந்த்...

//Blogger Sivaji Sankar said...
50வது இடுகைக்கு வாழ்த்துக்கள்...//

நன்றி சிவாஜி...

//Blogger ஹேமா said...
பாலாஜி,இனிய வாழ்த்துகள்.இன்னும் நிறைய எழுதவேணும் நீங்க.//

கண்டிப்பாக...

//மனம் கனக்கிறது கவிதை.நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்களோ.நான் நினைப்பதெல்லாம் என் மக்களைத்தான்.//

வலிகள் என்பது ஒவ்வொருவரது மனநிலையைப் பொருத்து மாறுபடுவது இயல்புதான்...

//ஏன் பாலாஜி,சந்தோஷமான நேரத்தில் ஒரு சந்தோஷமான பதிவு தந்திருக்கலாமே !//

தந்திருக்கலாம்...இதில் வலிகளை விட அவனின் உணர்வுகள்தான் மிகை..

நன்றி ஹேமா உங்களின் வருகை மற்றும் கருத்திற்கு...

//Blogger வானம்பாடிகள் said...
ஐம்பதாவது இடுகை அருமை பாலாஜி. மனம் கனக்கும் வரிகள் என்றாலும் அவர்களுக்கு சமர்ப்பணமாய் இக்கவிதை. வாழ்த்துகள்//

ஆமாம் அவர்களை சிந்தையில் வைத்துதான் இதை எழுதினேன். 50 வது இடுகை என்பது கூடுதல் தகுதி...

க.பாலாசி said...

// D.R.Ashok said...
வார்த்தைகளை அழகாய் வளைக்கிறீர்கள் பாலாஜி.
முதல் இரண்டு பத்தி க்ளாஸ்.
50க்கு வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி அன்பரே...வருகை மற்றும் கருத்திற்கு...

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
வாழ்த்துக்கள் பாலாஜி....
அன்புடன்
ஆரூரன்//

நன்றி அன்பரே...

//Blogger பழமைபேசி said...
வாழ்த்துகள்!
உறங்குகையில்//

சரிதான் திருத்திக்கொண்டேன்...நன்றி உங்களின் வருகைக்கு...

//Blogger பிரபாகர் said...
ஐம்பதிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நாளுக்கு நாள் மெருகு கூடிக்கொண்டே போகிறது உங்களின் படைப்பில். கலக்குங்கள் பாலாஜி...
போருடன் இயைந்த இக்கவிதை மனதை வருடுகிறது. மிக அருமை.//

மிக்க நன்றி அன்பரே...கடல்கடந்த உங்களின் வருகை மற்றும் கருத்திற்கு...

க.பாலாசி said...

// புலவன் புலிகேசி said...
நண்பரே முதலில் உங்கள் 50 வது இடுக்கைக்கு எனது வாழ்த்துக்கள். நான் படித்த கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளின் வரிசையில் இந்த கவிதையும் இணைந்து கொண்டது. வாழ்த்துக்கள். தொடருங்கள்...............//

மிக்க நன்றி தோழா....உங்களின் பெயர் நன்றாக இருக்கிறது...

//Blogger shortfilmindia.com said...
50வது பதிவு.. 51 பாலோயர்கள்..பாலாஜி.. சபாஷ்.. நல்லருக்கு கவிதை.. (அட இப்படித்தான் எழுதணுமா கவிதையை.. நானும் எழுதியிருக்கேனே..?)//

நன்றி கேபிளய்யா...எல்லாம் உங்களின் ஊக்கம்தான்...

//Blogger எவனோ ஒருவன் said...
கவிதை நல்லாயிருக்கு.
பொன்பதிவிற்கு வாழ்த்துக்கள் பாலாஜி.//

மிக்க நன்றி நண்பரே...

//Blogger குருபரன் said...
நன்றாக உள்ளது நண்பரே... தொடருங்கள் உங்கள் இலக்கிய பயணத்தை..//

நன்றி குருபரன் உங்களின் முதல் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு...

க.பாலாசி said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
நல்லதொரு கவிதை. ஐம்பது பதிவுகளுக்கு வாழ்த்துகள் பாலாஜி.//

நன்றி இராதாகிருஷ்ணன் அய்யா....

//Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
வார்த்தைகளில் சொல்ல முடியாத வலிகளும் ஏக்கமும்.. நன்றாக இருக்கிறது நண்பா..50வது இடுகைக்கு வாழ்த்துகள்..:-)))//

நன்றி தோழரே...

//Blogger கதிர் - ஈரோடு said...
யதார்த்தமான வரிகள்
கவிதை அருமை
50 இடுகை, 51 தொடருபவர்கள்
வாழ்த்துகள் பாலாஜி//

மிக்க நன்றி கதிரய்யா... எல்லாம் உங்களின் ஊக்கம்தான்...

அமுதா கிருஷ்ணா said...

மனம் வலிக்கிறது...

கலகலப்ரியா said...

மிகவும் நன்றாக இருக்கிறது.. ! ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

க.பாலாசி said...

//அமுதா கிருஷ்ணா said...
மனம் வலிக்கிறது...//

நன்றி அமுதா அக்கா...உங்களின் வருகைக்கு...

//கலகலப்ரியா said...
மிகவும் நன்றாக இருக்கிறது.. ! ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!..//

மிக்க நன்றி அக்கா....

பா.ராஜாராம் said...

அருமையான கவிதை பாலாஜி.வாழ்த்துக்கள்!

Unknown said...

அருமையான கவிதை..

50வது இடுகைக்கு வாழ்த்துகள் நண்பா..

க.பாலாசி said...

//பா.ராஜாராம் said...
அருமையான கவிதை பாலாஜி.வாழ்த்துக்கள்!//

நன்றி...ராஜாராம் அவர்களே...

//பட்டிக்காட்டான்.. said...
அருமையான கவிதை..
50வது இடுகைக்கு வாழ்த்துகள் நண்பா..//

மிக்க நன்றி நண்பரே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

மனம் கனக்கும் வரிகள்

Sadagopal Muralidharan said...

தனிமையில், தட்பவெப்பக்கொடுமையில், எதிரியின் வேட்டைக்குணத்தை எதிர்கொண்டு வாழும், நம் நாட்டைக்காக்கப் பணயம் வைக்கப்பட்ட ஒரு மானிடனுக்காக எழுதப்பட்ட இந்தக்கவிதை உண்மையாகவே உங்கள் ஐம்பதாவது பதிவிர்க்கு மகுடம் சூட்டிட்யிருக்கிறது. தொடர்க இத்தகைய பதிவுகள்.

க.பாலாசி said...

//T.V.Radhakrishnan said...
மனம் கனக்கும் வரிகள்//

நன்றி அன்பரே...

//Sadagopal Muralidharan said...
தனிமையில், தட்பவெப்பக்கொடுமையில், எதிரியின் வேட்டைக்குணத்தை எதிர்கொண்டு வாழும், நம் நாட்டைக்காக்கப் பணயம் வைக்கப்பட்ட ஒரு மானிடனுக்காக எழுதப்பட்ட இந்தக்கவிதை உண்மையாகவே உங்கள் ஐம்பதாவது பதிவிர்க்கு மகுடம் சூட்டிட்யிருக்கிறது. தொடர்க இத்தகைய பதிவுகள்.//

மிக்க நன்றி தோழரே...உங்களின் வருகைக்கும் வாழ்த்துதலுக்கும்....

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துக்கள்.. தொடருங்கள்

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

50 ஐநூறு ஆக வாழ்த்துக்கள்

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO