க.பாலாசி: கடலும்...நிலவும்...

Tuesday, September 29, 2009

கடலும்...நிலவும்...


நேர்

உன் கண்களின் நளினங்களில்
ஆயிரம் அர்த்தங்கள் அலைய...
நம் உடல் ஒட்டி பிறந்த
உஷ்ணத்தின் சிலிர்ப்புக்குள்
சிறைப்பட்டுபோனது என் கனவுகள்...
கடலில் கலந்த காவிரியைப்போல்...

********

எதிர்


உன் தங்கையின் நடையினில்
ஆயிரம் கவிதைகள் புதைய...
அவள் உடல் மோதி உடைந்த
கற்சிலையின் பாகத்திற்குள்
காணாமல்போனது அதன் அழகு...
நிலவுடன் மோதிய நட்சத்திரம்போல்...


********


தமிழ்மணத்திலும், தமிலிஸ்ஸிலும் உங்களது வாக்கினை பதிவிடவும்...நன்றி...

32 comments:

ஈரோடு கதிர் said...

நேர் அருமை

கவிக்கிழவன் said...

எதிர் அருமை

புலவன் புலிகேசி said...

அருமையான கவிதை..........

S.A. நவாஸுதீன் said...

இரண்டுமே அருமை

ஹேமா said...

காதலில் விழுதல்,
இரண்டுமே அருமை பாலாஜி.

"உழவன்" "Uzhavan" said...

நேர் அருமை

Ashok D said...

பாலாஜி... பின்றப்பா..பின்றப்பா...

நேர் - அருமை
எதிர் - அருமையோ அருமை

ஒரு மனிதனுக்கு நேர் எதிர் அமைந்துவிட்டால் அது அல்லவோ வரம் (சும்மா டமாஸ்க்கு.. ஹும்..)

Ashok D said...

காவிரி

நட்சத்திரம்

என்றே முடிக்கலாம். ’போல’ வேண்டாம் என்றே தோன்றுகிறது.

தேனொடு கலந்த தெள்ளமுது.

பிரபாகர் said...

//உடல் ஒட்டி பிறந்த
உஷ்ணத்தின் சிலிர்ப்புக்குள்//

அருமையன வரிகள். மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள் பாலாஜி... வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

Admin said...

//உன் தங்கையின் நடையினில்
ஆயிரம் கவிதைகள் புதைய...
அவள் உடல் மோதி உடைந்த
கற்சிலையின் பாகத்திற்குள்
காணாமல்போனது அதன் அழகு...
நிலவுடன் மோதிய நட்சத்திரம்போல்...//


அருமையான வரிகள்..

ப்ரியமுடன் வசந்த் said...

நேர்-தூள்
எதிர்-......?புரியலை

பழமைபேசி said...

நன்று!

ஆரூரன் விசுவநாதன் said...

அருமை பாலாஜி
வாழ்த்துக்கள்

அன்பேசிவம் said...

நேர், எதிர் இரண்டுமே நல்லா இருக்கு நண்பா, எனக்கும் அந்த “போல”ன்னு முடிச்சிருக்க வேண்டாம்ன்னு தோனுது.

க.பாலாசி said...

//கதிர் - ஈரோடு said...
நேர் அருமை//

நன்றி...

//Blogger கவிக்கிழவன் said...
எதிர் அருமை//

நன்றி...

//Blogger புலவன் புலிகேசி said...
அருமையான கவிதை..........//

நன்றி நண்பா...

//Blogger T.V.Radhakrishnan said...
அருமை//

நன்றி...

க.பாலாசி said...

//S.A. நவாஸுதீன் said...
இரண்டுமே அருமை//

நன்றி...

//Blogger ஹேமா said...
காதலில் விழுதல்,
இரண்டுமே அருமை பாலாஜி.//

நன்றி...

//Blogger " உழவன் " " Uzhavan " said...
நேர் அருமை//

நன்றி...

க.பாலாசி said...

//D.R.Ashok said...
பாலாஜி... பின்றப்பா..பின்றப்பா...
நேர் - அருமை
எதிர் - அருமையோ அருமை
ஒரு மனிதனுக்கு நேர் எதிர் அமைந்துவிட்டால் அது அல்லவோ வரம் (சும்மா டமாஸ்க்கு.. ஹும்..)//

இந்த ஆசைவேறு இருக்கிறதா? ம்ம்ம்....

நன்றி...

//Blogger D.R.Ashok said...
காவிரி
நட்சத்திரம்
என்றே முடிக்கலாம். ’போல’ வேண்டாம் என்றே தோன்றுகிறது.
தேனொடு கலந்த தெள்ளமுது.//

சரிதான். எதிர்வரும் கவிதைகளில் சரிசெய்கிறேன். நன்றி உங்களின் வருகை மற்றம் கருத்திற்கு...

//Blogger பிரபாகர் said...
அருமையன வரிகள். மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள் பாலாஜி... வாழ்த்துக்கள்.//

நன்றி பிரபாகர் அய்யா....

//Blogger சந்ரு said...
அருமையான வரிகள்..//

நன்றி சந்ரு....

க.பாலாசி said...

//பிரியமுடன்...வசந்த் said...
நேர்-தூள்

நன்றி...

//எதிர்-......?புரியலை//

அதுதானே நண்பா கவிதை...

//Blogger பழமைபேசி said...

நன்று!//

நன்றி...

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
அருமை பாலாஜி
வாழ்த்துக்கள்//

நன்றி அன்பரே..

//Blogger முரளிகுமார் பத்மநாபன் said...//
நேர், எதிர் இரண்டுமே நல்லா இருக்கு நண்பா, எனக்கும் அந்த “போல”ன்னு முடிச்சிருக்க வேண்டாம்ன்னு தோனுது.//

சரிதான்....இனிவரும் கவிதைகளில் திருத்திக்கொள்கிறேன். நன்றி அன்பரே உங்களின் வருகை மற்றும் கருத்திற்கு...

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு!

தேவன் மாயம் said...

நண்பரே!!!இரண்டுமே அருமை/

தேவா

கலையரசன் said...

எதிருக்கு விளக்கம் சொன்னா நல்லாயிருக்கும்!

விரும்பி said...

நேர் எதிரில் வரிகளை கையாண்ட லாவகத்தில்
உங்கள் தரம் மிகச்சிறப்பாக வெளிப்படுகின்றது
தொடரட்டும்
வாழ்த்துக்கள்

vasu balaji said...

நல்லாருக்கு பாலாஜி

Prapa said...

நேர் எதிர் சுப்பர் தல...........

க.பாலாசி said...

//சந்தனமுல்லை said...
நல்லாருக்கு!//

நன்றி..சந்தனமுல்லை...

//Blogger தேவன் மாயம் said...
நண்பரே!!!இரண்டுமே அருமை/
தேவா//

நன்றி அனபரே...

//Blogger கலையரசன் said...
எதிருக்கு விளக்கம் சொன்னா நல்லாயிருக்கும்!//

இப்டி திடீர்னு கேட்டா எப்படி....

க.பாலாசி said...

//விரும்பி said...
நேர் எதிரில் வரிகளை கையாண்ட லாவகத்தில் உங்கள் தரம் மிகச்சிறப்பாக வெளிப்படுகின்றது தொடரட்டும்
வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி....உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...

//Blogger வானம்பாடிகள் said...
நல்லாருக்கு பாலாஜி//

நன்றி அய்யா...

//Blogger பிரபா said...
நேர் எதிர் சுப்பர் தல...........//

நன்றி நண்பா....

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...3

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

Unknown said...

அடா.. அடா..அடா... நேர் கவிதை சூப்பர்..... அதைவிட படம் நெம்ப.. நெம்ப ... சூப்பர்......

க.பாலாசி said...

//தமிழ் முல்லை said...
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!
முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...3
வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!//

பார்க்கிறேன் நண்பரே...வருகைக்கு நன்றி...

//Blogger லவ்டேல் மேடி said...
அடா.. அடா..அடா... நேர் கவிதை சூப்பர்..... அதைவிட படம் நெம்ப.. நெம்ப ... சூப்பர்......//

நன்றிண்ணா....

ஊடகன் said...

அருமையோ அருமை

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

அருமை^100

க.பாலாசி said...

//ஊடகன் said...
அருமையோ அருமை//

//கிறுக்கல் கிறுக்கன் said...
அருமை^100//

நன்றி அன்பர்களே...உங்களின் வருகைக்கு...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO