க.பாலாசி: கழுதைகளுக்கு தெரியுமா?

Monday, January 11, 2010

கழுதைகளுக்கு தெரியுமா?

சக மனிதனொருவன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், தனது வெள்ளை வேட்டிச்சட்டையில் படப்போகும் ரத்தக்கரைகளுக்கு பயந்தோ அல்லது அசிங்கப்பட்டோ தூரநின்று தொலைப்பேசிவழி அடுத்தவர்களுக்கு தகவல்கொடுக்கும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அதே காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அவர்களது உதவியாளர்கள், மற்றும் இன்னபிற அரசுத்துறை அதிகாரிகள், தீண்டத்தகாவன் என்பதுபோல் தண்ணீரை தூரநின்று ஊற்றும் ஒரு சமூகப்பிரஜை ஆகிய இவர்களின் ரத்தசொந்தமொன்றுக்கு இவ்வாறு நடந்திருந்தால், இதையேத்தான் செய்துகொண்டிருந்திருப்பார்களா? என்று எண்ணத்தூண்டுகிறது சமீபத்திய திருநெல்வேலி நிகழ்வு. இத்தனை வாகனங்களிருந்தும் அவசரகால ஊர்திக்காக காத்திருந்துதான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவேண்டுமென்ற ‘விடாப்பிடியான கொள்கையுடன் நின்றிருந்தவர்களை எப்படி வசை பாடினால் என்ன?


புரியாதவர்கள் இந்த காணொளியைப் பார்க்கவும்.


அவ்வாறு அவர் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் அங்கே ஜீவனற்றுகிடந்த மரக்கட்டைகளுக்கும், உயிர்வலியை அல்லது துடிப்பை சகித்துக்கிரகித்துக் கொண்டிருந்த இவர்களுக்கும் இருக்கும் வித்யாசங்கள் வெகுக்குறைவாகே தெரிகிறது.


வழக்கமாய் பொதுமக்கள் செய்யும் காரியத்தைதான் உயர்மட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும் செய்திருக்கிறார்கள் பூசிமொழுகிய ஊடகப்பார்வையுடன். இதில் கவனிக்கவேண்டிய விசயம் இதை ‘தத்ரூபமாக ஒளிப்பதிவு செய்தவருக்கும் மனிதாபிமானமோ வேறெந்த மண்ணாங்கட்டியோ இல்லாமல் இருந்திருக்கிறது.


ஒரு நாய்க்கு அடிப்பட்டால் கூட இன்னொரு நாய் அதனருகில் நின்று அழும். இன்னொரு காக்கைக்கு காலொடிந்திருந்தால் சுற்றிலும் காக்கைகளின் கூட்டம் அலப்பறியும். ஆனால் ஒரு மனிதன் அடிப்பட்டாலோ, அல்லது உயிர்வலியில் துடித்தாலோ நானா? நீயா? என்ற போட்டியிலோ அல்லது சுயநலப்புண்ணாக்கிலோ அனைவரும் வேடிக்கைப் பார்ப்பது எவ்வளவு கேவலமான செயல். அதுசரி கழுதைகளுக்கு தெரியுமா???36 comments:

பிரியமுடன்...வசந்த் said...

அது ஒண்ணுமில்ல பாலாஜி சின்னபுள்ளையில இருந்தே நம்மளுக்கு சோறுகூட வேடிக்கை காட்டிகிட்டே ஊட்டிவிடுறாங்க சகமனிதர்கள் சண்டைபோட்டாலே விலக்கிவிடாமா வேடிக்கை பார்ப்போம் உசிருக்கு போராட்டம்ன்னு வரும்போது போலீஸ் கேஸ் ஆயிப்போகுமோன்னுத்தான் வேற என்ன மனசாட்சி இப்போ யாருக்கும் இல்லைன்னு சொல்ல முடியாது ஒரு சிலருக்கு இல்லை முக்கியமா இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு...

ஈரோடு கதிர் said...

பாலாசி..

இன்னும் விகடன் ஆன்லைனில் பாருங்கள்... மிகத் தெளிவான வீடியோ...

என்னுடைய கோபம் வேடிக்கை பார்த்த அரசியல்வாதி / அரசு ஊழியர்களைத் தாண்டி....

அந்த உதவி ஆய்வாளர் புரண்டு துடித்து, கெஞ்சி, நம்பிக்கை தளர்ந்து வீழ்ந்தாரே.... அதை கவனமாக வீடியோ எடுத்து இன்று வியாபாரம் செய்கிறானே ஊடக விபசாரி... அவனிடம் ஒரு கேள்வி தன் குடும்பத்தில் யாராவது விழுந்து கிடந்திருந்தால் இப்படித்தான் தரமாக ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்திருப்பானா.... ஓடி கட்டி அணைத்து, அள்ளி... ஏதாவது முயற்சி செய்திருந்தால் என்ன குறைந்தா போயிருப்பான்...

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
அதை கவனமாக வீடியோ எடுத்து இன்று வியாபாரம் செய்கிறானே ஊடக விபசாரி...//

இது எல்லாத்தையும்விட அசிங்கம்...

vasu balaji said...

எனக்கு ரொம்ப உருத்துற விஷயம் இதெல்லாம் விட, சவப்பெட்டில கிடத்தி அடிச்சானே சல்யூட்டு. அப்பவாவது மனசுல ஒரு மரியாதை, ஒரு குற்ற உணர்ச்சி, உன்ன சாக்குடுத்தது நாங்கதான்னு ஒரு வலி இருந்திருக்குமா?

க.பாலாசி said...

//பிரியமுடன்...வசந்த் said...
மனசாட்சி இப்போ யாருக்கும் இல்லைன்னு சொல்ல முடியாது ஒரு சிலருக்கு இல்லை முக்கியமா இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு...//

அமைச்சர்களுக்கு மட்டுமில்லை நண்பரே... அங்கே கூடிநின்று குலவிக்கொண்டிருந்த அத்தனைப்பேருக்கும் அதுயில்லை என்றே நினைக்கிறேன்.

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
எனக்கு ரொம்ப உருத்துற விஷயம் இதெல்லாம் விட, சவப்பெட்டில கிடத்தி அடிச்சானே சல்யூட்டு. அப்பவாவது மனசுல ஒரு மரியாதை, ஒரு குற்ற உணர்ச்சி, உன்ன சாக்குடுத்தது நாங்கதான்னு ஒரு வலி இருந்திருக்குமா?//

ஒரு மண்ணாங்கட்டியும் இருந்திருக்காது. சல்யூட் அடிச்ச போலீஸ்காரங்க தன்னோட கடமைய நெலநாட்ட வந்திருப்பாங்க. பொடலங்கா கடமை...

Paleo God said...

இதுல பொதுமக்கள் சரியான ஒத்துழைப்பு கொடுப்பதில்லைன்னு ஸ்டேட்மெண்ட் வேற அடிக்கடி போலிஸ் கிட்ட இருந்து வரும்... யாரை நோவது...வெட்க்கம்:((

Romeoboy said...

\\ஈரோடு கதிர் said...
அதை கவனமாக வீடியோ எடுத்து இன்று வியாபாரம் செய்கிறானே ஊடக விபசாரி...//

எனக்கும் அந்த நாதரி மேலதான் முதல் கோவமே. எவனாவது அடிப்படுடா ஐயோன்னு நமக்கு மனசு பதறுது. அவன பாருங்க அப்படியே படம் எடுத்துக்கு இருக்கான்

ஹேமா said...

மனித நேயம் இருக்கும் மனிதர்கள் (எங்கோ சில பெரியவர்களைத் தவிர) வாழ்ந்தால் எங்கள் நாடுகள் என்றோ உருப்பட்டிருக்குமே !

அன்புடன் மலிக்கா said...

காட்சிகளை காணும்கண்கள் கண்ணீரில்
கரைந்துபோகிறது

மனித உயிர் விலைபதிப்பற்தாகப்போய்விட்டது
மனிதம் அழிந்துகொண்டு வருகிறது.

மனிதனுக்கு மனிதனே உதவவில்லையெனில்
மனிதனாய் பிறந்து என்ன பயன்.

Unknown said...

தாங்கவே முடியாத துயரம் இது..

ஒரு மனிதனின் உயிர் போயிருக்கிறது என்பதை விட அதை பல மனித ஓநாய்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததே என்பதுதான் மிக்க வேதனை அளிக்கும் விஷயம்.

காமராஜ் said...

நடந்துகொண்டிருக்கும் அபத்தங்களின் ஒரு சிறு சாம்பிள் இது.
கறைபடிந்திருக்கும் எண்ணங்கள் கை மனசு வீடு, வேட்டி மட்டும் வெளேர்.

ஜோதிஜி said...

இதை ‘தத்ரூபமாக’ ஒளிப்பதிவு செய்தவருக்கும் மனிதாபிமானமோ வேறெந்த மண்ணாங்கட்டியோ இல்லாமல் இருந்திருக்கிறது.


இந்த விசயத்தைத்தான் ஒவ்வொரு முறையும் யோசித்து பார்த்து மனம் தளர்ந்து போனதுண்டு

பிரபாகர் said...

அதை படமெடுத்தவரை விடவும், பதவியில் இருக்கும் பரதேசிகள் பக்கத்தில் கூட செல்லாமால்! நினைக்கும்போதே நெஞ்சு கொதிக்கிறது!

பிரபாகர்.

கலகலப்ரியா said...

video.. parkkala.. puriyuthu.. :(

Chitra said...

இதில் கவனிக்கவேண்டிய விசயம் இதை ‘தத்ரூபமாக’ ஒளிப்பதிவு செய்தவருக்கும் மனிதாபிமானமோ வேறெந்த மண்ணாங்கட்டியோ இல்லாமல் இருந்திருக்கிறது. ............மனித நேயமும் கொல்ல பட்டு விட்டதா?

தாராபுரத்தான் said...

வேடிக்கை பார்ப்பதை நாமும் வேடிக்கை பார்க்க வேண்டியாகி விடுகிறதே,,

சினிமா புலவன் said...

இவங்கல்லாம் மனித்ப்பிறவியே இல்லீங்க

Anonymous said...

அவர்களை சொல்லும் முன் ஒரு வேளை நாம் அங்கிருந்திருந்தால் கூட அவர்களில் ஒருவராகத் தான் இருந்திருப்போம் அதிகாரிகளே நெருங்க பயப்படறாங்களேன்னு இது தாங்க மனித இயல்பு..மனிதம் என்பது பிறப்பில் வருவது இது எல்லாரிடமும் எதிர்ப்பார்க்கமுடியாது...சகலரையும் போல நானும் வருந்துகிறேன்....

சந்தனமுல்லை said...

:-(((

புலவன் புலிகேசி said...

தல மனித வடிவ மிருகங்கள் இவை..மிருகங்கள் கோபித்து கொள்ள வேண்டாம்

Sadagopal Muralidharan said...

எனக்கென்னவோ, இந்தப்படத்தைப்பிடித்து ஒளிபரப்ப உதவிய அந்த மாமரம் வெட்டப்படவேண்டிய ஒன்று. கண்டிப்பாக வளர்க்கப்படக்கூடாது.
மனிதமும் மனிதனேயமும் அவ்வப்போது குற்றுயிராக்கப்படுகிறது. கண்டிப்பாக அதைக்காப்பாற்றும் ஆற்றலும் நம்மிடம் உள்ளது.

செ.சரவணக்குமார் said...

மிக வேதனையான நிகழ்வு நண்பரே, நினைத்துப் பார்க்கவே மனம் பதறுகிறது. சக மனிதன் மீதான நேசம் முற்றிலுமாக மறைந்துபோனதோ?

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா எனக்கு ஒரு வருத்தம் மனிதர்களை மிருகங்களோடு ஒப்பிட வேண்டாம் .....மனிதன் மிக கேவலமாய் போய்க்கொண்டிருக்கிறான் மனிதம் என்பதே சுயநலம் ....மனித நேயம் அவனுக்கு அவனே கவலை படுவது ......

அகல்விளக்கு said...

///வானம்பாடிகள் said...

எனக்கு ரொம்ப உருத்துற விஷயம் இதெல்லாம் விட, சவப்பெட்டில கிடத்தி அடிச்சானே சல்யூட்டு. அப்பவாவது மனசுல ஒரு மரியாதை, ஒரு குற்ற உணர்ச்சி, உன்ன சாக்குடுத்தது நாங்கதான்னு ஒரு வலி இருந்திருக்குமா?
///

இதுதான் நானும் யோசித்தேன்...

இது போன்ற காட்டு மிராண்டிகளை என்ன செய்வது ??

ஆரூரன் விசுவநாதன் said...

nice article

மகா said...

Blaming not give the lost life of the cop.....

விக்னேஷ்வரி said...

:'(

க.பாலாசி said...

உணர்வுகளை பகிர்ந்துகொண்டவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

Radhakrishnan said...

மிகவும் வருத்தத்துக்குரிய நிகழ்வு.

அன்பேசிவம் said...

நண்பர் சொல்வதுபோல இந்தியாவில் முகவும் மலிவாகக் கிடைப்பது உயிர்கள் மட்டுமே.

ஒருவேளை நான் அங்கிருந்தால் உதவிசெய்திருப்பேனோ என்பதுதெரியாது ஆனால் நிச்சயம் யாரையாவது எதாவது செய்ய வைத்திருப்பேன்.

ம்ம்ம் விடுங்க இன்னும் எத்தனையோ இருக்கு நம்ம கன்ணுக்கு தெரியாம, இங்க ஒருத்தன் கேடுகெட்டு எடுத்த வீடியோவால எல்லாருக்கும் தெரியுது, இல்லைன்னா இன்னேரம் இந்த விஷயத்தை நாம் நாளிதழ்களில் வெகு சுலபமாக கடந்திருக்கக்கூடும்.

சிவாஜி said...

நமக்கு நாமே வெட்கப்பட வேண்டிய நிகழ்வு :( அங்க கூடி இருந்தவங்கள குறை சொல்லிப் பயனில்லை. நம்மில் பெரும்பான்மையினரின் இயல்பு தான் அங்கும் வெளிப்பட்டிருக்கிறது. என்ன ஊடகம் காட்டிக் கொடுத்துவிட்டது. @பிரியமுடன்...வசந்த் அவர்கள் சொன்னதைப் போல கிளைகளை நொந்து பயனில்லை, வேரை கவனிக்க வேண்டும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மனதை சங்கடப்பட வைத்த நிகழ்சி

க.பாலாசி said...

நன்றி வெ.ராதாகிருஷ்ணன்

நன்றி முரளி

நன்றி சிவாஜி

நன்றி பட்டாபட்டி..

priyamudanprabu said...

ஒரு மிருகம் கூட சக மிருகம் அடிபட்டு உயிருக்கு போராடினால் உதவ என்னும் ஆனால் அங்கிருந்த மனிதர்கள்...........?!!!!!!!

கேவலம்

ரோகிணிசிவா said...

\\ஈரோடு கதிர் said...
அதை கவனமாக வீடியோ எடுத்து இன்று வியாபாரம் செய்கிறானே ஊடக விபசாரி...//
//வானம்பாடிகள் said...
எனக்கு ரொம்ப உருத்துற விஷயம் இதெல்லாம் விட, சவப்பெட்டில கிடத்தி அடிச்சானே சல்யூட்டு. அப்பவாவது மனசுல ஒரு மரியாதை, ஒரு குற்ற உணர்ச்சி, உன்ன சாக்குடுத்தது நாங்கதான்னு ஒரு வலி இருந்திருக்குமா?// -இரண்டு கருத்தையும் நானும் வழிமொழிகிறேன்!
//க. பாலாசி said ரத்தக்கரைகளுக்கு பயந்தோ அல்லது அசிங்கப்பட்டோ ,தண்ணீரை தூரநின்று ஊற்றும் ஒரு சமூகப்பிரஜை// கேவலமான மனித இனத்துக்கு கழுதையை ஒப்பிட்டு அதை அசிங்க படுத்த வேண்டாமே !

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO