இமைமூடி இனி உறங்கா அதிகாலையை
கொசுவின் கொஞ்சலோடு சேர்த்தணைக்கையில்
மேற்போர்வை விலக்கி குளிர்ச்சுமைக்
கூட்டிய மின்விசிறியை அமர்த்திவிட்டு
பதம்கொண்டு சுருண்டிருந்த மேனியை
நீட்டி ஒருபுறம் குவித்து, கவ்விக்கொண்டிருந்த
கனவினை உதறி, காலையைக்காண...
பனிச்சிலிர்ப்புடன் எழுந்து தொடர்கையில்
சொச்சநேரக் கருமைத்தாக்கி உட்சென்று
உள்ளுக்குள் புதைந்திருந்த மீதத்துயிலைத்
தொட்டிழுக்காமல்....அருந்திய தேநீரது
இதமாய் உள்நாக்குச் சுட்டுக்குளிர...
கடந்துச்சென்ற கல்லூரிப்பெண்ணவளின்
இயல்பில் சொக்கிச் சுணங்கி மீண்டும்
பகற்கனவில் படுத்துக்கொண்ட மனதுடன்
அலுவலகம் சென்றேன்...ஊதியம் காண...
கொசுவின் கொஞ்சலோடு சேர்த்தணைக்கையில்
மேற்போர்வை விலக்கி குளிர்ச்சுமைக்
கூட்டிய மின்விசிறியை அமர்த்திவிட்டு
பதம்கொண்டு சுருண்டிருந்த மேனியை
நீட்டி ஒருபுறம் குவித்து, கவ்விக்கொண்டிருந்த
கனவினை உதறி, காலையைக்காண...
பனிச்சிலிர்ப்புடன் எழுந்து தொடர்கையில்
சொச்சநேரக் கருமைத்தாக்கி உட்சென்று
உள்ளுக்குள் புதைந்திருந்த மீதத்துயிலைத்
தொட்டிழுக்காமல்....அருந்திய தேநீரது
இதமாய் உள்நாக்குச் சுட்டுக்குளிர...
கடந்துச்சென்ற கல்லூரிப்பெண்ணவளின்
இயல்பில் சொக்கிச் சுணங்கி மீண்டும்
பகற்கனவில் படுத்துக்கொண்ட மனதுடன்
அலுவலகம் சென்றேன்...ஊதியம் காண...
42 comments:
:) கவிதை நல்லாயிருக்குங்க.
/சொச்சநேரக் கருமைத்தாக்கி உட்சென்று
உள்ளுக்குள் புதைந்திருந்த மீதத்துயிலைத்
தொட்டிழுக்காமல்....அருந்திய தேநீரது
இதமாய் உள்நாக்குச் சுட்டுக்குளிர.../
அடங்கப்பா சாமி சாமி..
/பகற்கனவில் படுத்துக்கொண்ட மனதுடன்
அலுவலகம் சென்றேன்...ஊதியம் காண.../
அட சை. இதுக்கா இந்த அலப்பறை..
சூப்பரப்பு
//பனிச்சிலிர்ப்பிடன்//
சிலிர்ப்புடன் :)
வாழ்த்துகள்
//நேசமித்ரன் said...
//பனிச்சிலிர்ப்பிடன்//
சிலிர்ப்புடன் :)
வாழ்த்துகள்//
மிக்க நன்றி திருத்திக்கொண்டேன்.
சூப்பர் கவிதை
கடந்துச்சென்ற கல்லூரிப்பெண்ணவளின்
இயல்பில் சொக்கிச் சுணங்கி மீண்டும்
பகற்கனவில் படுத்துக்கொண்ட மனதுடன்
அலுவலகம் சென்றேன்...ஊதியம் காண...//
நம்பியாச்சு பாலாசி
கவிதைதான் நல்லாருக்கு புது புது வார்த்தைகளுடன் படிக்கவும் நல்லாயிருக்கு...
கவிதை வெகு அருமை.
//அலுவலகம் சென்றேன்...ஊதியம் காண...//
படத்திலிருக்கும் பாலகன் பள்ளி செல்ல அழுவதைப் போல...
அப்படித்தானா:)?
தல ரசனையோடு ரசித்தவைகளை சொல்லு அலுவலகத்துல முடிச்சிட்டீங்க. சூப்பரு.
காலை நிகழ்ச்சியை நல்லா சொல்லியிருக்கீங்க!!
ம்ம், கவிதை கலக்கல்.
கவிதய விட நட்டுகிட்ட முடியோட இருக்கிற பாப்பா அழகா இருக்கு...
குழந்தையின் போட்டோ தாண்டி எதையும் படிக்கமுடியவில்லை... பாலாசி
class
அடடே...சிலாகித்து எழுதி இருகீங்க போல...அருமை...பாலாசி....
வாழ்த்துகள்
அழகா எழுதியிருக்கீங்க..
superu...!!! (ethukkum oru bow & arrow anupparen.. =))))
கவிதை ரொம்ப சூப்பர் .
கடந்துச்சென்ற கல்லூரிப்பெண்ணவளின்
இயல்பில் சொக்கிச் சுணங்கி மீண்டும்
பகற்கனவில் படுத்துக்கொண்ட மனதுடன்
அலுவலகம் சென்றேன்...ஊதியம் காண...
.......கனவும் நிஜமும் சங்கமிக்கும் வரிகள். :-)
//
கடந்துச்சென்ற கல்லூரிப்பெண்ணவளின்
இயல்பில் சொக்கிச் சுணங்கி மீண்டும்
பகற்கனவில் படுத்துக்கொண்ட மனதுடன்
அலுவலகம் சென்றேன்...ஊதியம் காண...//
எப்படி .. இப்படி .. வேலை காலி இருந்தா எனக்கும் சொல்லுங்க
கவிஞரே, வாழ்த்துகள்!
//கடந்துச்சென்ற கல்லூரிப்பெண்ணவளின்
இயல்பில் சொக்கிச் சுணங்கி மீண்டும்
பகற்கனவில் படுத்துக்கொண்ட மனதுடன்
அலுவலகம் சென்றேன்...ஊதியம் காண...//
சூப்பர்....
:-)
நல்ல கவிதைநானும் இப்படிதான்
பகற்கனவில் படுத்துக்கொண்ட மனதுடன்
அலுவலகம் சென்றேன்...ஊதியம் காண...//
அட அடா அடா உண்மை விரும்பி நீங்க பாலாசி..கவிதை நல்லாயிருக்கு...அழகா அதிகாலை சோம்பலை கவியாக்கியிருக்கீங்க,,,,
//கடந்துச்சென்ற கல்லூரிப்பெண்ணவளின்
இயல்பில் சொக்கிச் சுணங்கி மீண்டும்//
இதே வேலையாப் போச்சு படவா
சரியாப்போச்சு...பாலாஜி நீங்களுமா !கனவா !
முதல்ல அந்தக் குழந்தை அழுகையை நிப்பாட்டுங்க.
பாலாசி,
//ஊதியம் காண...//
வேற வழி...?
ம்ம்ம்....பனியிரவு... கொஞ்சம் கஸ்டந்தான்.
நன்றி சுந்தரா
நன்றி வானம்பாடிகள்
(அதுதாங்க தலைவரே கஷ்டம்)
நன்றி Blogger நேசமித்ரன்
நன்றி Blogger முகிலன்
நன்றி Blogger பிரியமுடன்...வசந்த்
நன்றி Blogger ராமலக்ஷ்மி
(அப்படித்தாங்க...கஷ்டமா இருக்கு)
நன்றி புலவன் புலிகேசி
நன்றி Blogger T.V.ராதாகிருஷ்ணன்
நன்றி Blogger தேவன் மாயம்
நன்றிBlogger V.Radhakrishnan
நன்றி Blogger கண்ணகி
நன்றி Blogger D.R.Ashok
நன்றி Blogger அக்பர்
நன்றி Blogger seemangani
நன்றி ச.செந்தில்வேலன்
நன்றி Blogger கலகலப்ரியா
(என்னாத்துக்கு??? ஓ....மன்ஸ்லாயி...)
நன்றி Blogger Starjan ( ஸ்டார்ஜன் )
நன்றி Blogger Chitra
நன்றி Blogger நசரேயன்
(அதுக்கெல்லாம் ஒரு இது வேணுங்க)
நன்றி Blogger பழமைபேசி
நன்றி Blogger அகல்விளக்கு
நன்றி Blogger கவிக்கிழவன்
நன்றி தமிழரசி
நன்றி Blogger ஈரோடு கதிர்
(ஹா..ஹா..ஹா..)
நன்றி Blogger ஹேமா
(நானும் சொல்லிப்பாத்தேன்...ம்கூம்...)
நன்றி Blogger சத்ரியன்
(ஆமங்க...)
கவிதை என்பதை விட உணர்வுகளின் தொகுப்பு.. நல்லா வந்திருக்கு.. எல்லார் மனசையும் படிச்சாப்ல..
கவிதை என்பதை விட உணர்வுகளின் தொகுப்பு.. நல்லா வந்திருக்கு.. எல்லார் மனசையும் படிச்சாப்ல..
ஒரு கனவு,ஒரு நல்ல காட்சி ரெண்டுமே மனசை லகுவாக்கும்.
superp.....
நல்லா இருக்கு பாலாஜி..
கவிதை நல்லாருக்கு பாலாசி.. படமும் அருமை.. குழந்தை அழறது தான் மனச என்னமோ செய்யுது
ஊதியம் கிட்டும் நாளில் எப்படி அலுவலகம் செல்வீர்கள் அதையும் கவித்துவமாக்குங்களேன் கேட்போம்
elarudaya kalayum ipadi than,anal eno uthiyam kanave valkayo
good continue
Devakumari
இயல்பான காலை விழித்தலை அழ்காய்ச் சொல்லியிருக்கீங்க
ஆவிஸ் போயாச்சும் வேலை பாத்தீங்களா?பகல் கனவு தொடர்ந்ததா?:)))
நன்றாகவே உள்ளது.கவிதைகள் தொடர வாழ்த்துக்கள்.
பகல் கனவு பலிக்காது பாலாசி.
ஆனாலும் கவிதை நல்லாயிருக்குதுங்க.
ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீர்கள்! ரொம்ப இயல்பாக இருக்கு!!
நன்றி ரிஷபன்
நன்றி Blogger காமராஜ்
நன்றி Blogger கார்த்திகைப் பாண்டியன்
நன்றி Blogger திவ்யாஹரி
நன்றி Blogger goma
(செய்திடுவோம்...)
நன்றி Blogger kumari
நன்றி Blogger கண்மணி
(எங்க முடியுது...)
நன்றி Blogger தாராபுரத்தான்
நன்றி Blogger அம்பிகா
(அவ்வ்வ்வ்.........)
நன்றி Blogger விஜய்
Post a Comment