க.பாலாசி: விட்டு விடுதலையாகி...

Tuesday, September 28, 2010

விட்டு விடுதலையாகி...

அந்த காலைப்பொழுதும் எப்போதும்போல் விடிந்திருக்கவில்லையெனலாம். முற்றத்தில் முகம் கழுவ வந்தபொழுது அந்த கல்லுக்குருவி கண்ணில் பட்டது. ராஜவேலுவை அழைத்துக்காட்டினேன். எழத்திராணியற்ற அதனை கைகளுக்குள் அடக்கிக்கொண்டான். வேண்டாம் விட்டுவிடலாம் என்றேன். அவன் கேட்கவில்லை. வளத்தலாம் என்றான். எனக்கு அவன் செயல் பிடிக்கவில்லை. கூண்டுக்குள் ஒரு உயிரை அடைப்பதும் நெஞ்சிக்குழியில் துடிக்கும் இதயக்குமிழை வெளியே எடுப்பதும் ஒன்றாகவே தெரிந்ததெனக்கு. தரிகெட்ட சுதந்திரமே அதன் பிறப்புரிமை.

வீட்டிற்குள்ளிருந்த வெங்காய கூடையை எடுத்து உத்திரத்தில் சணல் கயிறைக்கட்டி தொங்கவிட்டான். பானைபோன்ற கூடையின் இடையே ஒரு வேப்பங்குச்சியை சொருகினான். குருவியினை உள்ளேவிட்டு பூஸ்ட் குடுவை மூடியில் நெற்மணிகளை கொட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டான். இவனுக்கு தம்பினானது என் துரதிஷ்டம் என்ற எண்ணம் மட்டுமே எனக்கு.
கைக்கு எட்டாத கூண்டைவிட்டு அந்த உயிருக்கு விமோசனம் அளிக்க நான் அவ்வளவு உயரம் வளரவில்லை. ஒரு நாற்காலியைப்போட்டு அந்தப்பணியைச்செய்ய ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த வெங்கடாஜலபதியும் தைரியத்தைக்கொடுத்து அருள்பாலிக்கவில்லை. பாவம் என்று கொஞ்சநேரம் வெறித்து பார்த்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினேன்.

அம்மா அப்பாவும் கண்டுகொள்ளவில்லை. அவன்தான் செல்லம். அன்றைய மாலை, அடுத்தநாள் காலை அடுத்து... அடுத்து... மூன்றுநாளும் அந்தக்குருவிக்கு நெற்மணிகளும், சோற்றுப்பருக்கைகளும், எதிர்வீட்டு வாசற்படலில் பழுத்திருந்த கோவைப்பழமும் உணவாகப் படைக்கப்பட்டன. என் விருப்பமான இங்க் பழத்தைமட்டும் அவன் கொடுக்கவில்லை. அண்ணனாம் அண்ணன், மனதிற்குள் திட்டித்தீர்த்தேன். ஆனாலும் அந்தக்குருவி எதையும் திரும்பிப்பார்த்ததாய் தெரியவில்லை. கூண்டிற்குள் எல்லாமே காய்ந்து கிடந்தது. அதில் எனக்கு திருப்திதான்.

நான்காம்நாள். அந்த காலைப்பொழுதும் எப்போதும்போல் விடிந்திருக்கவில்லையெனலாம். முற்றத்தில் முகம் கழுவ வந்தபொழுது அந்த கல்லுக்குருவி கண்ணில் பட்டது. நடுவில் சொருகியிருந்த குச்சியில் தலைகீழாக தொங்கி சாகசம் காட்டியது. ராஜவேலுவிடம் காட்டினேன். திறந்து பார்த்தான். விரைத்துப்போய் விழுந்தது அது. அண்ணன் அழத்தொடங்கினான். வெங்கடாஜலபதி சிரித்துக்கொண்டிருந்தார்.29 comments:

பவள சங்கரி said...

இளம் பாலகனாகவே மாறிய தங்கள் நடை அருமை பாலாசி.......கூண்டுக்குள் ஒரு உயிரை அடைப்பதும் நெஞ்சிக்குழியில் துடிக்கும் இதயக்குமிழை வெளியே எடுப்பதும் ஒன்றாகவே தெரிந்ததெனக்கு. தரிகெட்ட சுதந்திரமே அதன் பிறப்புரிமை.........எங்கேயோ போய் விட்டீர்கள் பாலாசி........அடடா அண்ணன் தான் செல்லமா வீட்டில்...முடிவுத்தான் நெஞ்சுக் குழியைத் தீண்டி விட்டதுங்க......

ஜோதிஜி said...

அடுத்த அற்புதம் எப்போது? ரொம்பவும் சுருக்கி வீட்டீர்களா?

ரோகிணிசிவா said...

siru vayathukuriya kovam, iyalaamai ellame algau balasi ithil ,
valthukal

அம்பிகா said...

அருமையான கதை பாலாசி, முடிவு சோகமென்றாலும்.
தலைப்பு வெகு பொருத்தம்.

காமராஜ் said...

அருமை பாலா.

க ரா said...

பாலாசி என்ன சொல்ல ... மிக அற்புதம் :)

அன்பரசன் said...

பிரமாதம்

சீமான்கனி said...

நெகிழ்வான கதை பாலாசி...அருமை...

அன்பேசிவம் said...

அழகு நண்பா, கலக்குங்க உங்க உயரம் எனக்குத் தெரிகிறது... வாழ்த்துகள்

vasu balaji said...

ரொம்ப எளிமையா அழகாய்ச் சொன்ன கதை.

எஸ்.கே said...

மிக அருமையான உணர்வுகளை தாக்கும் கதை!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான கதை

ஹேமா said...

அது அது அந்தந்த இடத்தில் வாழ்ந்தால்தான் சந்தோஷம்.என்னைப்போல !

பழமைபேசி said...

பாலகன் பாலாசி...

Anonymous said...

ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு பாலாஜி!

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் பாலாசி...

அகல்விளக்கு said...

வார்த்தைகள் வரவில்லை...

அருமை அண்ணா...

பனித்துளி சங்கர் said...

அசத்தல் நண்பரே ! முடிவில் மனம் கனக்கிறது !

r.v.saravanan said...

அசத்தல் பாலாசி

மாசிலா said...

உங்களது பதிவை கடந்த சில நாட்களாகத்தன் படித்து வருகிறேன். இதில் "ராசம்..." சிறு கதையை படித்து மிகவும் இரசித்தேன்.

அதே வேகத்தையும் எதிர்பார்ப்பையும் "விட்டு விடுதலையாகி"யில் ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்து போனேன். உங்களை ஊக்குவிப்பதற்காக மற்ற வாசகர்கள் கருத்துக்களைப்போல் நானும் சொல்ல எனது மனம் இடம் கொடுக்கவில்லை. மன்னிக்கவும்.

தொடர்ந்து பல புதிய ஆக்கங்களை எழுதி அளிக்க வேண்டுகிறேன்.

மீண்டும் ஒரு முறை மன்னிக்கவும்.

'பரிவை' சே.குமார் said...

அழகிய நடையில் ஒரு அற்புதப் படைப்பு.
உங்கள் வழக்கமான பதிவில் சற்று மாறுதலாய் ரொம்பவே நீளம் குறைந்த பதிவு.

"உழவன்" "Uzhavan" said...

குருவி செத்ததுக்கு வெங்கடாஜலபதி ஏன் சிரிக்கிறார்?

sakthi said...

நெஞ்சிக்குழியில் துடிக்கும் இதயக்குமிழை வெளியே எடுப்பதும் ஒன்றாகவே தெரிந்ததெனக்கு.

::)))

sakthi said...

அருமை பாலாசி அருமையான நடை ஆனாலும் பாவம் அந்த சிட்டுக்குருவி

ரிஷபன் said...

ராஜவேலுவை அழைத்துக்காட்டினேன்

ஆக அந்த குருவியைக் காட்டின புண்ணியம் உங்களுக்கு!

குருவியின் விடுதலைக்கு முழுமையாய் அந்த தம்பி முயற்சிக்கவில்லையோ?

கமலேஷ் said...

பிரமாதம் பிரமாதம்....

க.பாலாசி said...

நன்றிங்க நித்திலம் மேடம்
நன்றிங்க ஜோதிஜி
(சுருக்கமாக எழுதவே எண்ணினேன்.)
நன்றி ரோகிணிக்கா
நன்றிங்க அம்பிகா
நன்றி காமராஜ் அய்யா
நன்றி இராமசாமி கண்ணன்
நன்றி அன்பரசன்
நன்றி சீமான்கனி
நன்றி முரளி
நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி எஸ்.கே
நன்றி டி.வி.ஆர் அய்யா
நன்றி ஹேமா
(ஆமங்க)
நன்றி பழமைப்பேசி அய்யா
நன்றி பாலாஜி சரவணன்
நன்றி ஆரூரன் அய்யா
நன்றி அகல்விளக்கு ராசா
நன்றி பனித்துளி சங்கர்
நன்றி ஆர்.வி.சரவணன்
நன்றி மாசிலா
(இதுக்கு எதுக்குங்க மன்னிப்பு. தாங்கள் சொன்ன கருத்தினை உணர்கிறேன்.. தங்களின் கருத்திற்கும் நன்றி)
நன்றி சே.குமார்
நன்றி உழவன்
(முதலில் வெங்கடாஜலபதியை பார்த்தவன் கொஞ்சம் வெறுப்புற்றான், பிறகு குருவிக்கு விமோசனம் அளித்து அவர் சிரித்ததாக முடித்தேன்.)
நன்றிங்க சக்தி
நன்றி ரிஷபன்
(அவனின் இயலாமையும்கூட)
நன்றி கமலேஷ்

R. Gopi said...

நல்லா இருக்கு கதை

ஹுஸைனம்மா said...

வேறுபட்ட விடுதலை. சோகம் தருகிறது.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO