க.பாலாசி: நன்றி என்னய்யா பெரிய நன்றி...

Monday, December 27, 2010

நன்றி என்னய்யா பெரிய நன்றி...

நினைத்துப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய அலைபேசிக்கு ஒரு பழக்கமிருக்கிறது, எப்போதும் ஊமையாகவே இருப்பது. அதற்கு அடிமையாகாமல் என்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கதைவிட்டாலும் அந்தளவிற்கு எனக்கு அழைப்புகள் வருவதில்லையென்பது உண்மை. மேலும் சீக்குவந்த கோழியின் தலைபோல அலைபேசியில் பேசிக்கொண்டேயிருப்பதும் எனக்கு பிடிக்காத செயல்தான். இந்த இரண்டு நாட்களாக என் அலைபேசி ‘சிரித்து’க்கொண்டேதானிருந்தது. சங்கமத்தைப்பற்றிய அழைப்புகள் மற்றும் கலந்துகொள்ளும் நண்பர்களின் அழைப்புகளென்று இந்த திருவிழாவில் பங்கேற்ற பெருமை என் அலைபேசிக்கும் உண்டு. இரட்டிப்பு மகிழ்ச்சி இப்போது உள்ளது. இப்படியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த பதிவர்கள் மற்றும் வாசகர்கள் எல்லோரையும்  முதற்கண் வணங்குகிறேன்.

ஒரு பெரிய மலையை இரண்டுகைகளினால் புரட்டிப்போட்டதுபோன்ற பிரமிப்புணர்ச்சி எங்கள் குழும உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்கிறது. இந்த முல்லைச்செடியை வளர்த்தது நாங்கள்தானென்றாலும் தேர்கொடுத்தவர்கள் நீங்கதானே. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் எங்களின் சங்கமத்தில்  இத்தனைப் பதிவர்கள் கலந்துகொண்டதையெண்ணி மிகவும் மகிழ்கிறேன்.  நாட்கள் நெருங்கநெருங்க எனக்கு கொஞ்சம் பயம் எடுக்கத்தான் செய்தது. எங்களது ஏற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்தவேண்டுமே என்கிற இதயத்துடிப்புதான் அதற்கு காரணம். இப்போது வருகைதந்தோர் ஒவ்வொருவரும் இதைப்பற்றி சிறப்பாக கூறும் போது எங்களது உழைப்பு பயனுள்ளதாகிவிட்டது என்ற திருப்தியும் ஒட்டிக்கொண்டுள்ளது.

எங்களது உழைப்பு என்பது இந்நிகழ்வில் மிக மிக குறைவுதான். ஒவ்வொருவருடைய வாழ்த்தும் வருகையும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியில் அடங்கியுள்ளது. ஏதோவொரு சந்திப்பு நடைபெறுகிறது நமக்கென்ன என்றில்லாமல் இந்த சந்திப்பில் அவசியம் கலந்துகொள்ளவேண்டும் என்று சிரத்தையெடுத்துக்கொண்டு வருகைபுரிந்த பதிவர்கள் மற்றும் வாசகர்கள், மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டவர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்கு அனைத்துவகையிலும் உதவியவர்களுக்கும் எனது நன்றியை தனிப்பட்ட முறையிலும், குழுமத்தின் சார்பாகவும் தெரிவிக்கிறேன்.

குறிப்பாய் இம்மாபெரும் விழாவிற்கு வருகைதந்த பெண் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன்.

நன்றி என்னய்யா பெரிய நன்றி... கண்கள் பனித்ததும் இதயம் இனித்ததும்  (கலைஞர் உபயம்) எப்படியென்று மனதார உணர்ந்தேன். எல்லோருக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்...


நன்றி...நன்றி...நன்றி சொந்தங்களே!!!!


சங்கமத்தில் கலந்துகொண்டவர்கள் பட்டியல்

மேலும் விரிவான இடுகை ஈரோடு கதிர் அவர்கள் பக்கத்தில்
 
 சங்கமம்‘2010 படங்களைக் காண இந்த சுட்டியை சொடுக்கவும்32 comments:

vasu balaji said...

சபாஷ்:). அருமைய்யா.

சத்ரியன் said...

ரொம்ப சந்தோஷம்யா.

சத்ரியன் said...

பாலா அண்ணே,

சின்ன பசங்க வடைய பிடுங்கிக்கறது அவ்வளவு நல்லதில்ல. சொல்லிட்டன். ஆமா.

Unknown said...

பாராட்டுக்கள் ..

சிநேகிதன் அக்பர் said...

நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததில் ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கள்.

R. Gopi said...

பாலாசி, கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க

ராமலக்ஷ்மி said...

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

arasan said...

அழகான நிகழ்வில் பங்கு பெற இயலவில்லையே என்று நினைக்கும் போது தான் கொஞ்சம் வருத்தம் ...

புகைப்படம் அருமை....

நிகழ்ச்சி இனிதே நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள் ....

Unknown said...

//நன்றி என்னய்யா பெரிய நன்றி... கண்கள் பனித்ததும் இதயம் இனித்ததும் (கலைஞர் உபயம்) எப்படியென்று மனதார உணர்ந்தேன். எல்லோருக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்.. \\

என்னுடைய உள்ளக் கிடங்கையை அப்படியே வெளிப்படுத்தியுள்ளாய். நன்றி நண்பா.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

:)

அன்புடன் நான் said...

சாதனைக்கு.... வாழ்த்துக்கள் பாலாசி.

அன்புடன் நான் said...

சத்ரியன் said...
பாலா அண்ணே,

சின்ன பசங்க வடைய பிடுங்கிக்கறது அவ்வளவு நல்லதில்ல. சொல்லிட்டன். ஆமா.

December 27, 2010 6:24 PM//

நேற்று என்னிடம் பிடிங்கியதை என்னசொல்ல?

( நேற்று உண்மையிலேயே என் வடையை பிடுங்கியதை நான் ரகசியமாகவே வைத்திருக்கிறேன் மாம்ஸ்)

அன்புடன் நான் said...

சத்ரியன் said...
ரொம்ப சந்தோஷம்யா.

December 27, 2010 6:23 PM//

என்ன உனக்கு சலதோசமா?

சிவாஜி said...

கண்கள் பனித்ததும் இதயம் இனித்ததும் எப்படியென்று மனதார உணர்ந்தேன். எல்லோருக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்..

உண்மைதாங்க பாலாசி. :)

sakthi said...

பாலாசி உங்கள் அனைவரையும் பார்த்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி....

Unknown said...

ரொம்ப சந்தோசம் பாலாசி. கலக்கிட்டீங்க உங்க குழுமம்.

ஆமா! நீங்க எந்த போட்டோவில இருக்கீங்க!

ஈரோடு கதிர் said...

இதைப் படிக்கும் போதுதான், எனக்கு கண்கள் பனிக்கிறது பாலாசி!

தம்பி நீ வாழ்க!!!!

Anonymous said...

படிக்கும் போதே பெருமிதம் புரிகிறது உங்களை போன்ற நல்ல மனங்கள் என்றென்றும் இனிதே வாழ வாழ்த்துக்கள்

Unknown said...

சபாஷ் நண்பர்களே...

பா.ராஜாராம் said...

என்னத்த சொன்னாலும் தைக்கிற மாதிரிதானே சொல்றீர்!

Mahi_Granny said...

நன்றி...நன்றி...நன்றி சொந்தங்களே!!!!இது என் ஈரோடு சொந்தங்களுக்கு

ஹேமா said...

மிக்க மகிழ்ச்சி பாலாஜி !

'பரிவை' சே.குமார் said...

நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததில் ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கள்.

சேக்காளி said...

http://picasaweb.google.com/kathir7/Sangamam2010#
என்ற முகவரியில் நிகழ்ச்சியின் படங்களை பார்த்தேன்.மிக்க சந்தோசம். மனிதனின் எண்ணங்களையும்,மனதின் குமுறல்களையும் வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த எண்ணற்ற மக்களின் உளக்கிடக்கைகளை வெளிக்கொணர உதவும் வலைமனை,பூக்களுக்கு எப்படி நன்றி சொல்வது.பதிவர்களாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை படங்களை பார்க்கும் போது வருகிறது. வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

இரண்டில் இருந்து மூன்றுக்கு நகர்வது பாலாசிக்கு பெரிய விசயமா என்ன?

r.v.saravanan said...

நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததில் ரொம்ப சந்தோசம் பாலாசி

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா கண்கள் பனித்தது.. இதயம்இனித்ததும்.. அருமை.. எடுத்தாண்ட விதம்..:))

சிவகுமாரன் said...

பொறாமையா இருக்குங்க.மதுரையில் யாராவது சங்கமம் நடத்துங்களேன்.

ரோஸ்விக் said...

பாலாசி என்னைய விட்டுபுட்டு நல்லா கொண்டாடீட்டீங்கள்ள...? உங்க கூட காய்.

மிகுந்த சந்தோசம். இந்தமுறையும் சிறப்பாக அமைத்ததற்கு வாழ்த்துகள். :-)

செ.சரவணக்குமார் said...

ஆஹா.. அசத்திப்புட்டீங்களே பாலாசி. நம் ஈரோடு சொந்தங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

க.பாலாசி said...

வாழ்த்திட்ட நண்பர்கள் அன்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களும்கூட...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO