க.பாலாசி: அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்

Wednesday, January 5, 2011

அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்

ஒரு இறுக்கம் தளர்ந்த இரவுப்பொழுது என்றுதான் வாய்க்குமோ தெரியவில்லை. ஒவ்வொரு நாள் அடர்த்தியும், அழுத்தி கொடுக்கிற முத்தத்தால் விளையும் கன்னத்து எச்சில்களாய் கொஞ்சம் சில்லிடலும் கொஞ்சம் அருவருப்புமாய் தொலைகிறது. கருமாந்திர கன்றாவிகளை சகித்துகொண்டே பழகிவிட்டது மனது.


தினமும் விடிகிற காலையைப்போல்தான் அன்றும் விடியப்போகிறது. வேறெந்த எழவும் நடக்கபோவதில்லை. ஒரு திருவிழாவிற்குண்டான பரபரப்பினை பள்ளிக்கூடங்களைச் சூழ்ந்த கடைகண்ணிகள் கொண்டிருக்கும். கலர் கலர் தோரணங்களும் பதாகைகளும் தார்ச்சாலையில் அம்மா வாங்க அய்யா வாங்க என்றழைக்கும் சுண்ணாம்புக்கோடுகள் தோரணையில் திருவோடுகளும், ஓரங்களில் வாடகைக்கடையோ அல்லது டெண்ட்டோ போட்டு ‘டேய் அண்ணன் வந்திட்டாருடா, 3 வது வார்டு, கரைட்டா நோட் பண்ணிக்கொடு, அண்ண மறந்திடாதண்ண மேலேர்ந்து மூணாவது பட்டன் நம்மளோடது, அழுத்தினா சவுண்ட் வரும் பாத்துக்க’ இயல்பாய் பாடத்துடன் ஒலிக்கும் குரல்களும் கேட்டுகொண்டேதானிருக்கும்.

நடக்கமுடியாத இராசாயாக்கிழவியும், நவநீயும் ஜகஜ்ஜோராக வண்டியில் பொக்கைப்பல் தெரிய ‘நானெல்லாம் ஓட்டுப்போட்டு என்ன ஆவப்போது‘என்று சிரித்துகொண்டே போவார்கள். டவுசரை மறந்து லுங்கியைச் சுற்றியதுகளனைத்தும் பக்கோடா பொட்டணத்திற்கும், ‘டீ’க்குமாக பூத் ஏஜண்டாகவோ, வெளியில் வார்டு எண் குறித்துதரும் பொம்மைகளாகவோத்தான் வீற்றிருக்கப்போகின்றன. கன்னக்கோல் வைத்து திருடும் கூட்டத்திற்கு வெள்ளைவேட்டியும் சட்டைகளும்வேறு. நேற்றைய மழையில் முளைத்த இன்னொரு காளானாக ஆகப்போகும் புதிதாய் வாய்க்கப்பெற்றவன் இந்த நாட்டின் முதல்குடிமகனான பிரம்மையில்  வேகாத வெய்யலில் நின்று கையில் வைத்த மையை திரும்பத்திரும்ப பார்த்து பிரமித்துபோகப்போகிறான் அரும்பிய மீசையை தடவித்தடவி இன்புறுவதுபோல். இன்னொரு ஏப்ரல், மே, இன்னொரு சனி ஞாயிறு, இன்னொரு விடுமுறை, இன்னொரு 2ஜியோ புண்ணாக்கோ என்ன புடலங்காயோ.....

‘ஆணவம் தலைக்கேரிய மன்னா, உன் ஆணவம் அழியப்போகிறது..... லொக்..லொக்..’

‘அழிவாம் அழிவு, என்னை அழிக்க எவனடா வருவான்...ஹா..ஹா..ஹா.. ’

கட் கட்..கட்..

ங்ஙஞீஞீங்ங்ஞேஞே.. குதிரையும் அதன் கணைப்பும், பேக்ரவுண்டில் டண்டண்டய்ங்ங் இசையும் சூழ ஒரு உக்கிரபுத்திரன் வருவான் இவ்வுலகைக்காக்க...

ஆஹா.. அஹ்ஹஹ்ஹா... தட்டுடா கைய....என திரைச்சித்திரத்தின் நீட்சியைக்கண்டு மெய்சிலிர்த்துப்போவதோடு இம்மண்ணின் மனிதகுலம் மாட்சியுறும்.

எந்த பன்றியுடன் சேர்ந்த கன்னுக்குட்டிகள், கன்னுக்குட்டிகளாகவே இருந்திருக்கின்றன? வாருங்கள் அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம், அதற்கு இன்னும் நாள்தான் வைக்கவில்லை.



.

25 comments:

vasu balaji said...

ங்கொய்யால அதான் நாம செம்மறியாட்டு கூட்டமுன்னு ‘மே’ மாசம் வச்சிருக்காங்களாமுல்ல தேர்தலு. ஓட்டைப் போட்டுட்டு ஆட்டைத் தின்றதோட நம்ம கடமை முடிஞ்சது. ஆட்டையப் போட அவனாச்சு. ஓட்டைப் போட நாமாச்சு. :))கலக்கு கலக்கு.

பவள சங்கரி said...

ஹ...ஹா.......இடுகையும், வானம்பாடி சாரின் பின்னூட்டமும் ஜோர்.........

ஈரோடு கதிர் said...

எல்லாத் தேர்தல் வரைக்கும் இத மீள் இடுகையாகவே கூட போட்டுக்கிட்டே இருக்கலாம்!

ரோகிணிசிவா said...

//Blogger நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ஹ...ஹா.......இடுகையும், வானம்பாடி சாரின் பின்னூட்டமும் ஜோர்........//

சூப்பர் ,வழிமொழிகிறேன்

Anonymous said...

இந்த சவுக்கடியெல்லாம் வலிக்குமா பாலாசி..

அம்பிகா said...

யதார்த்தம்.

அகல்விளக்கு said...

நச்...

ஆனால் யாருக்கு உறைக்கும்...???

//ஈரோடு கதிர் said...

எல்லாத் தேர்தல் வரைக்கும் இத மீள் இடுகையாகவே கூட போட்டுக்கிட்டே இருக்கலாம்!//


இதுல ஆயிரம் அர்த்தம் இருக்குறமாதிரியே தெரியுது...

Chitra said...

எந்த பன்றியுடன் சேர்ந்த கன்னுக்குட்டிகள், கன்னுக்குட்டிகளாகவே இருந்திருக்கின்றன? வாருங்கள் அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம், அதற்கு இன்னும் நாள்தான் வைக்கவில்லை.


...... நெத்தியடி! சொல்றதை சொல்லிட்டீங்க..... ..... ம்ஹூம்.... வேற என்ன?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//கருமாந்திர கன்றாவிகளை சகித்துகொண்டே பழகிவிட்டது மனது.//

அதே..

சில சமயம்.. நாம் இது போல பதிவெழுதி என்ன பயன் என்று தோன்றுகிறது பாலாசி.

யார் படிக்கப் போகிறார்கள். எனக்கு நீங்களும்.. உங்களுக்கு நானும் தோள் தட்டிக் கொடுப்பது தான் மிச்சம்.

Mahi_Granny said...

வரப்போகும் உக்கிரபுத்திரனுக்காக இப்பவே இவ்வளவு உக்கிரத்துடன் எழுதிய பாலாசிக்கு பாராட்டுக்கள்

பொன் மாலை பொழுது said...

விரக்தி, அவலம் வெளிப்படும் அழகிய பதிவு. சில நேரங்களில் ஒரு வேகம் வந்து மறையும். இந்த நாடும் மக்களும் எல்லோரும் சேர்ந்து இவர்களை அடித்தே கொன்றால் என்ன? ஆனால் நடைமுறையில் முடியவில்லை. அது முடிந்தால் நம் நாடு அன்றுதான் நமது நாடாகும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

superb

வினோ said...

எழுதி எழுதி வலிக்கும் கைக்கு அவன் மை வைத்திருப்பான் :( இன்னும் நாலு மாசம் தான்...

அரசூரான் said...

ஆமாம்... முதலில் கையில் மை, பிறகு பையில் கை. நாயெல்லாம் இப்ப வாலாட்டாம மை வச்ச கைய கடிக்கப் பார்க்குது.

Kodees said...

என்னத்தச் சொல்ல! நம்ம நெலம இவ்வளவு கவலகிடமாப்போச்சே! ஆமா - அந்த நாய குளிப்பாட்டறதுக்கு ஆளுக்கு 2000 ரூபா தரப்போறதாச் சொல்றாங்களே அது நெசமா?

ஜோதிஜி said...

பாலாசி என் தாழ்மையான வணக்கத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

Ashok D said...

இதற்கு ஸ்மைலி போடுவதா சோகலி போடுவதா... confuse ஆகிடிச்சுதுபா எனக்கு

சிநேகிதன் அக்பர் said...

சரியா சொன்னீங்க.

செ.சரவணக்குமார் said...

அசத்தல் பாலாசி. கதிர் அண்ணனின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.

vasan said...

'சி@பாலாசி ப‌திவின் தாக்க‌ம்' இர‌ட்டை வ‌ரியில் வானம்பாடி பாலா சாரின் பின்னோட்ட‌மாய்.
போன தேர்த‌லைவிட, வ‌ரும் தேர்த‌லில் வேட்பாள‌ர்க‌ள் மாறாதிருந்தாலும், வாக்காள‌ர் கொஞ்ச‌மேனும் மாறி இருப்ப‌தாய்த் தான் தெரிகிற‌து. இந்த‌ச் சிறு மாற்ற‌ம், அர‌சிய‌லில், தேர்த‌லில் மிகப் பெரிய‌ மாற்றங்களை கொண்டுவ‌ர‌லாம்.
80 ம‌திப்பெண் வாங்குப‌வ‌னுக்கு "ஓரிரு ம‌திப்பெண் வித்தியாச‌ம்" தேர்வு முடிவை பாதிக்காது, ஆனால் 35/40 மார்க் பார்ட‌ர் மார்க் வாங்கி பாஸ் ப‌ண்ற‌வ‌னுக்கு அதுவே த‌லைவிதியை மாற்றி விடும‌ல்ல‌வா?

arasan said...

அருமையான சாட்டையடி நண்பரே

ராமலக்ஷ்மி said...

நல்லாச் சொன்னீங்க பாலாசி!

"உழவன்" "Uzhavan" said...

கண்காட்சியில் இருப்பவைகள் அனைத்துமே "ஸ்கேம்"நாய்கள் தானே..

சிவகுமாரன் said...

ஏன் நடு வீட்டுல வைக்கணும் ? அடிச்சு துரத்த முடியாதா அந்த நாய்களை ?

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO