1. காந்தியடிகளை எல்லோரும் தேசப்பிதா என்கிறோம். இது சரியல்ல. ஏனென்றால் நம் இந்திய பூமியை பாரத்தாய் என்றே குறிப்பிடுகிறோம். அப்படியானால் காந்தியடிகளை எப்படி அவ்வாறு அழைக்கமுடியும். காந்தியடிகளை நமது பாரத்தாயின் தலையாய மூத்தமகன் என்று அழைக்கலாம்.
2. காந்தி கண்ட ராமராஜ்யம் என்பதை காந்தியடிகள் ஏன் விரும்பினார்?. ‘ராமபிரானின் முன்னோர்களோ அல்லது அவரின் வழித்தோன்றல்களோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை பின்பற்றியதாக வால்மீகி இராமயணத்திலும் சரி, கம்ப இராமாயணத்திலும் சரி எந்தவொரு குறிப்பிடலும் இல்லை. ஆனால் ராமன் அதை பின்பற்றினான். மேலும் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காண்டங்களில் அயோத்தி காண்டமே உயர்ந்த நாகரீகமும், பண்பாடும் கொண்டதாக விளங்கியது. இதில் கிஷ்கிந்தா காண்டத்தில் பண்பாடு இருந்தது ஆனால் நாகரீகம் என்பது இல்லை. இலங்கை காண்டத்தில் உயர்ந்த நாகரீகம் இருந்தது பண்பாடு இல்லை. இராமனின் அயோத்தியா காண்டத்தில் உயர்ந்த நாகரீகமும், மிகச்சிறந்த பண்பாடும் இருந்தது என்பதனையும் ஒரு காரணமாக வைத்து காந்தியடிகள் அதை விரும்பினார்.
இந்த கருத்து மதங்களுக்கு அப்பாற்பட்டு நிற்பதால் குறிப்பிடுகிறேன். இன்றைய காலகட்டங்களில் நமது நாகரீகமும், பண்பாடும் சமநிலையில் கீழ்நோக்கி சென்றுவருகிறது. மேலைநாட்டவரெல்லாம் நமது கலாச்சாரத்தினையும், பண்பாட்டினையும் மதிக்கும் நேரத்தில் நாம் மேலை நாட்டவரின் ஒழுக்கக்கேடுகளை மட்டும் நம் மனநிலங்களில் விதைத்துக்கொண்டிருக்கிறோம். இது ஒவ்வொருவர் பாணியில் சரி, தவறு என்றிருக்கலாம். என் பார்வையில் சரியெனப்படவில்லை.
**********
தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...


