க.பாலாசி: காந்தி கண்ட ராமராஜ்யம்...

Monday, October 26, 2009

காந்தி கண்ட ராமராஜ்யம்...

அக்டோபர் 2ம் நாள் ஈரோட்டில் பத்மம் மஹாலில் ‘காந்தி கண்ட ராமராஜ்யம்’ என்ற தலைப்பில் விஸ்வஇந்து பரிஸத் மாநில துணைத்தலைவர் ஆர்பிவிஎஸ்.மணியன் அவர்களின் சமுதாய சொற்பொழிவுநிகழ்ந்தது. சென்றிருந்தேன். சொன்ன கருத்துக்களில் இரண்டு மட்டும் என்னுள் மிக ஆழமாய் பதிந்தது.

1. காந்தியடிகளை எல்லோரும் தேசப்பிதா என்கிறோம். இது சரியல்ல. ஏனென்றால் நம் இந்திய பூமியை பாரத்தாய் என்றே குறிப்பிடுகிறோம். அப்படியானால் காந்தியடிகளை எப்படி அவ்வாறு அழைக்கமுடியும். காந்தியடிகளை நமது பாரத்தாயின் தலையாய மூத்தமகன் என்று அழைக்கலாம்.

2. காந்தி கண்ட ராமராஜ்யம் என்பதை காந்தியடிகள் ஏன் விரும்பினார்?. ‘ராமபிரானின் முன்னோர்களோ அல்லது அவரின் வழித்தோன்றல்களோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை பின்பற்றியதாக வால்மீகி இராமயணத்திலும் சரி, கம்ப இராமாயணத்திலும் சரி எந்தவொரு குறிப்பிடலும் இல்லை. ஆனால் ராமன் அதை பின்பற்றினான். மேலும் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காண்டங்களில் அயோத்தி காண்டமே உயர்ந்த நாகரீகமும், பண்பாடும் கொண்டதாக விளங்கியது. இதில் கிஷ்கிந்தா காண்டத்தில் பண்பாடு இருந்தது ஆனால் நாகரீகம் என்பது இல்லை. இலங்கை காண்டத்தில் உயர்ந்த நாகரீகம் இருந்தது பண்பாடு இல்லை. இராமனின் அயோத்தியா காண்டத்தில் உயர்ந்த நாகரீகமும், மிகச்சிறந்த பண்பாடும் இருந்தது என்பதனையும் ஒரு காரணமாக வைத்து காந்தியடிகள் அதை விரும்பினார்.

இந்த கருத்து மதங்களுக்கு அப்பாற்பட்டு நிற்பதால் குறிப்பிடுகிறேன். இன்றைய காலகட்டங்களில் நமது நாகரீகமும், பண்பாடும் சமநிலையில் கீழ்நோக்கி சென்றுவருகிறது. மேலைநாட்டவரெல்லாம் நமது கலாச்சாரத்தினையும், பண்பாட்டினையும் மதிக்கும் நேரத்தில் நாம் மேலை நாட்டவரின் ஒழுக்கக்கேடுகளை மட்டும் நம் மனநிலங்களில் விதைத்துக்கொண்டிருக்கிறோம். இது ஒவ்வொருவர் பாணியில் சரி, தவறு என்றிருக்கலாம். என் பார்வையில் சரியெனப்படவில்லை.


**********

தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...


30 comments:

உங்கள் தோழி கிருத்திகா said...

பாலாஜி சூப்பர் கருத்து....உங்கள் கருத்துக்கு என் ஆதரவு உண்டு

ஊடகன் said...

மிக அருமையான களத்தை விவரித்துள்ளீர்கள்.....
உங்கள் தமிழ் நடையும் அருமையாக இருந்தது........
நன்று தொடருங்கள்...........

vasu balaji said...

/காந்தியடிகளை நமது பாரத்தாயின் தலையாய மூத்தமகன் என்று அழைக்கலாம். /

சரியான கருத்து.

/நாம் மேலை நாட்டவரின் ஒழுக்கக்கேடுகளை மட்டும் நம் மனநிலங்களில் விதைத்துக்கொண்டிருக்கிறோம்./

ஹி ஹி.இப்பிடி சொல்லி நாசமா போனதுதான் மிச்சம். அவன் ஒழுங்காத்தான் இருக்கான்.

நல்ல கருத்துகள்.

Ashok D said...

வானம்பாடியை வழிமொழிகிறேன்.

பிரபாகர் said...

மேலைநாட்டினரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கு பாலாசி... நமது பார்வையில் அவர்களது திருமணம், ஆண் பெண் உறவு என மட்டும் பார்க்கிறோம். அது தவிர நிறைய இருக்கிறது...

பிரபாகர்.

க.பாலாசி said...

//Blogger பிரபாகர் said...
மேலைநாட்டினரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கு பாலாசி... நமது பார்வையில் அவர்களது திருமணம், ஆண் பெண் உறவு என மட்டும் பார்க்கிறோம். அது தவிர நிறைய இருக்கிறது...//

உண்மைதான் நானும் அதையே குறிப்பிட்டுள்ளேன். அவர்களிடம் எதை நாம் கற்றுக்கொள்ளக்கூடாதோ அதை மட்டும் மிகச்சரியாக கற்றுக்கொண்டுள்ளோம்.

அகல்விளக்கு said...

கலக்கல் பாலசி ன்னா.

பகிர்வுக்கு நன்றி.

புலவன் புலிகேசி said...

//மேலைநாட்டவரெல்லாம் நமது கலாச்சாரத்தினையும், பண்பாட்டினையும் மதிக்கும் நேரத்தில் நாம் மேலை நாட்டவரின் ஒழுக்கக்கேடுகளை மட்டும் நம் மனநிலங்களில் விதைத்துக்கொண்டிருக்கிறோம்
//

அப்பட்டமான உண்மை பாலாஜி.....பாராட்டுக்கள்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வால்பையன் said...

ஆர்.எஸ்.எஸ். காரனுங்க கொலைவெறி பிடிச்சவனுங்களாச்சே! அவுனுகளோட உங்களுக்கு எதுக்கு சகவாசம்!

க.பாலாசி said...
This comment has been removed by the author.
velji said...

வானம்பாடிகள் சொன்னது சரியெனப்படுகிறது.அவன் சரியாத்தான் இருக்கான்.நாம் இரண்டுக்கும் நடுவே ஊசலாடும் நிலையில் இருக்கிறோம்.

மனதில் கொள்ள வேண்டிய பதிவு.

/இந்த கருத்து மதங்களுக்கு அப்பாற்பட்டு நிற்பதால் குறிப்பிடுகிறேன்/

இது போதும்.வீண் விவாதங்களை தவிர்க்க.

ஜோதிஜி said...

நன்றி. உங்கள் இடுகையின் கருத்து உடன்பாடு தான். அதை விட பெயர் இல்லாமல் சொன்னவர் தெளிவாகத்தான் அவர் கருத்தை சொல்லி இருக்கிறார், ஆனால் மறைந்து கொண்டு சொல்கிறாரே? ஏன்?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
உங்கள் தோழி கிருத்திகா said...
This comment has been removed by a blog administrator.
ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
/காந்தியடிகளை நமது பாரத்தாயின் தலையாய மூத்தமகன் என்று அழைக்கலாம். /

சரியான கருத்து.

/நாம் மேலை நாட்டவரின் ஒழுக்கக்கேடுகளை மட்டும் நம் மனநிலங்களில் விதைத்துக்கொண்டிருக்கிறோம்./

ஹி ஹி.இப்பிடி சொல்லி நாசமா போனதுதான் மிச்சம். அவன் ஒழுங்காத்தான் இருக்கான்.

நல்ல கருத்துகள்.

D.R.Ashok said...
வானம்பாடியை வழிமொழிகிறேன்.//

நானும் வழிமொழிகிறேன்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
க.பாலாசி said...

இந்த இடுகை சம்பந்தமாக நேர்மையான, தேவையான கருத்துக்களை தெரிவிக்க விரும்புபவர்கள் தங்களின் வலைப்பூ மற்றும் வலைதள முகவரியுடன் வரவும். அதை நான் ஏற்கிறேன்.

அதைவிடுத்து அனானி என்ற அனாதை பெயருடன் வந்தால் ஏற்கப்படமாட்டாது.

அன்பேசிவம் said...

பாலாஜி, இது உங்கள் கருத்தாக இருந்தால் நாம் பேசலாம்.
:-)

க.பாலாசி said...

//முரளிகுமார் பத்மநாபன் said...
பாலாஜி, இது உங்கள் கருத்தாக இருந்தால் நாம் பேசலாம்.//

கீழே நான் குறிப்பிட்ட வரிகளை படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

//சொன்ன கருத்துக்களில் இரண்டு மட்டும் என்னுள் மிக ஆழமாய் பதிந்தது.//

//நமது கலாச்சாரத்தினையும், பண்பாட்டினையும் மதிக்கும் நேரத்தில் நாம் மேலை நாட்டவரின் ஒழுக்கக்கேடுகளை மட்டும் நம் மனநிலங்களில் விதைத்துக்கொண்டிருக்கிறோம். இது ஒவ்வொருவர் பாணியில் சரி, தவறு என்றிருக்கலாம். என் பார்வையில் சரியெனப்படவில்லை.//

ப்ரியமுடன் வசந்த் said...

நான் வரலை ஆட்டத்துக்கு...

ஹேமா said...

பாலாஜி கடைசிப் பந்தியில் சொல்லியிருக்கீங்க அது முற்றிலும் உண்மை.

கார்த்திகைப் பாண்டியன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா

"உழவன்" "Uzhavan" said...

என்ன இவ்வளவு லேட்? சொற்பொழிவு முழுமையையும் சுருக்கமா போட்டிருக்கலாமே

க.பாலாசி said...

நன்றி கிருத்திகா

நன்றி ஊடகன்

நன்றி வானம்பாடிகள்

நன்றி அசோக்

நன்றி பிரபாகர்

நன்றி அகல்விளக்கு

நன்றி புலவன் புலிகேசி

நன்றி வால்பையன்

நன்றி வேல்ஜி

நன்றி ஜோதிஜி

நன்றி கதிரய்யா

நன்றி முரளிகுமார்

நன்றி வசந்த்

நன்றி ஹேமா...

நன்றி கார்த்திகைப்பாண்டியன்...

உங்களின் அனைவரின் வருகையையும் கருத்தையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். மீண்டும் நன்றிகள்.

க.பாலாசி said...

//" உழவன் " " Uzhavan " said...

என்ன இவ்வளவு லேட்? சொற்பொழிவு முழுமையையும் சுருக்கமா போட்டிருக்கலாமே//

கொஞ்சம் தாமதம்தான். இதுதான் மொத்த சொற்பொழிவின் சுருக்கம்.

நன்றி உழவன்...வருகைக்கும் கருத்திற்கும்...

சந்தான சங்கர் said...

மேலைநாட்டவரெல்லாம் நமது கலாச்சாரத்தினையும், பண்பாட்டினையும் மதிக்கும் நேரத்தில் நாம் மேலை நாட்டவரின் ஒழுக்கக்கேடுகளை மட்டும் நம் மனநிலங்களில் விதைத்துக்கொண்டிருக்கிறோம். இது ஒவ்வொருவர் பாணியில் சரி, தவறு என்றிருக்கலாம். என் பார்வையில் சரியெனப்படவில்லை//


சரியான கருத்துதான்
பாலாசி..

மா.குருபரன் said...

//மேலைநாட்டவரெல்லாம் நமது கலாச்சாரத்தினையும், பண்பாட்டினையும் மதிக்கும் நேரத்தில் நாம் மேலை நாட்டவரின் ஒழுக்கக்கேடுகளை மட்டும் நம் மனநிலங்களில் விதைத்துக்கொண்டிருக்கிறோம்//

நல்ல உண்மையான கருத்து நண்பரே...

எனக்கு காந்தி மீது உடன்பாடு இல்லை.எனக்கு காந்தியின் அகிம்சை சம்மந்தமாக பல சந்தேகங்களும் சர்ச்சைகளும் உள்ளது. அவருடைய வாழ்க்கை முறை மற்றும் அவர் நடந்து கொண்டவிதங்கள் தொடர்பாகவும் பின் நாட்களில் அவர் எப்படி தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டார் என்பது தொடர்பிலும் ஜயப்பாடு உண்டு.அவருடைய அகிம்சை எவ்வாறு வென்றது என்பதிலும் ஜயமுண்டு. இந்த இடத்திலே என்னுடை இந்த கருத்து பொருத்தமானதா என்று தெரியவில்லை. காந்தி மீது அளவுகடந்த மரியாதை வைத்திருக்கும் நண்பர்களே தயவு செய்து என்மீது கோபம் கொள்ளாதீர்கள்.

க.பாலாசி said...

//சந்தான சங்கர் said...
சரியான கருத்துதான்
பாலாசி..//

நன்றி சந்தான சங்கர்...

// மா.குருபரன் said...
நல்ல உண்மையான கருத்து நண்பரே...//

நன்றி குருபரன். தங்களின் கருத்தினில் எனக்கும் உடன்பாடுண்டு.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO