க.பாலாசி: தீபாவளி...

Monday, October 12, 2009

தீபாவளி...



ஜீன்ஸ் பேண்ட்டு
காலர் வச்ச டீ சர்ட்
மத்தாப்பூ
தரைச் சக்கரம்
துப்பாக்கி.....

- கனவுடன் மகன்

செவ்வாய்க்கிழமை தவணை
அடகு வைத்த குடம்
எடைக்கு போட்ட இரும்பு
விலைபோன சைக்கிள்
எல்லாமே இப்பதான்
முறுக்காவும்,
அதிரசமாவும் ஆகியிருக்கு.....

- தவிப்புடன் தந்தை


தங்களது வாக்கினை தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் செலுத்தவும்....நன்றி....

40 comments:

ஈரோடு கதிர் said...

படம் உருக்கமானது

பிரபாகர் said...

கைவைத்து தலையில்
கவலையோடு அப்பா
காரணம் அறிய
கவிதையது கீழே...

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

ஏக்கமும், தவிப்பும்
கவிதையின் அழகு...

மனதைப் பிசையும் கரு

தமிழ் அமுதன் said...

இதுபோல வறுமையில் பிழியப்பட்ட தீபாவளி முறுக்குகளை நிறைய சாப்பிட்டு இருக்கின்றேன் ..!

பிரபாகர் said...

வறுமையின் கொடுமை
வாட்டத்தில் இருவர்
அருமையாய் சொல்லி
அசத்தும் பாலா சி

பிரபாகர்.

பா.ராஜாராம் said...

இயல்பான வார்த்தைகளில் கவிதை வெடிக்கிறது பாலாஜி!

ஹேமா said...

தீபாவளி - தவிப்பு.

தேவன் மாயம் said...

எளிய சொற்களில் கனத்த விசயம்!!

vasu balaji said...

படத்தில அப்பா தலையில கை!
படிச்ச எனக்கு மூக்கு மேல் விரல்!
கனவாய் ஒளியும்
நிஜமாய் இருளும்.

இன்னைக்கு நிறைய அசத்தல் கவிதைகள்.

பிரபாகர் ம்ம்ம்ம். அசத்துறீங்க. பின்னூட்டத்தில் புது பாணி. கவிதைக்கு கவிதையில் ஊட்டம்.

Ashok D said...

யப்பா.... நீ.. பாராவிட மோசமான ஆளுப்பா... மனச பிசையறதல..

Unknown said...

கஷ்ட்டம்தான்...!!

முரளிகண்ணன் said...

நிதர்சனம்

ப்ரியமுடன் வசந்த் said...

:(

ராமலக்ஷ்மி said...

அருமையாய் சொல்லிவிட்டிருக்கிறீர்கள் மகனின் கனவையும் தந்தையின் தவிப்பையும். படமும் வெகு பொருத்தம்.

தமிழ் நாடன் said...

நடுத்தர வர்க்கத்தின் நிதர்சனங்கள் இவை!

நல்ல வெளிப்பாடு!

தமிழ் நாடன் said...

தமிலிஷ்ல உங்களுக்கு ஓட்டு போட்டா ஹேமாவோட தீபாவளி கவிதைக்கு ஓட்டு போகுது!

அதுவும் ஒரு வலி மிகுந்த கவிதைதான்!

ராமலக்ஷ்மி said...

தமிழ் நாடன் said...
//தமிலிஷ்ல உங்களுக்கு ஓட்டு போட்டா ஹேமாவோட தீபாவளி கவிதைக்கு ஓட்டு போகுது!//

நானும் கவனித்தேன்.

கவி அழகன் said...

வறியவைர்களின் தீபாவளி
உள்ளதை இழந்து சிரிகிறான்
உண்மையை உணர மறுக்கிறான்
இருக்கும் வரை கஷ்டபட்டு
சிரிதுவிடாவது போகட்டும்

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்வின் நிதர்சனம்...

அன்பேசிவம் said...

நண்பா, கவிதை எப்போதும்போல அருமை. படத்தை எங்கப்பா புடிச்ச, அதுவே ஆயிரம் கவிதையை சொல்லும்போல ஒருக்கே.... இத்தனை கஸ்டமும் அந்த இல்லாத வயிற்றுக்காக அல்லது தலையில் கை வைக்குமளவிற்கு பிரச்சனை என் வயிற்றுக்காக இல்லை, என் பிள்ளைகளின் வயிற்றிர்காக என்று குறிப்பால் உணர்த்துகிறது

புலவன் புலிகேசி said...

வறுமை....நல்ல சிந்தனைக் கவிதை..

S.A. நவாஸுதீன் said...

நடுத்தரவர்க்கத்தினரின் பெரும்பாலான பண்டிகைகள் இப்படித்தான்.

அத நீங்க ”நச்”சுன்னு சொல்லிட்டீங்க

க.பாலாசி said...

//கதிர் - ஈரோடு said...
படம் உருக்கமானது
ஏக்கமும், தவிப்பும்
கவிதையின் அழகு...
மனதைப் பிசையும் கரு//

நன்றி அன்பரே...

//Blogger பிரபாகர் said...
கைவைத்து தலையில்
கவலையோடு அப்பா
காரணம் அறிய
கவிதையது கீழே...

வறுமையின் கொடுமை
வாட்டத்தில் இருவர்
அருமையாய் சொல்லி
அசத்தும் பாலா சி//

பின்னூட்டமும் கவிதையாக....மிக்க நன்றி அன்பரே...

//Blogger ஜீவன் said...
இதுபோல வறுமையில் பிழியப்பட்ட தீபாவளி முறுக்குகளை நிறைய சாப்பிட்டு இருக்கின்றேன் ..!//

என்னுடையதும் அதனுடைய தாக்கமே...

நன்றி ஜீவன்...

க.பாலாசி said...

//பா.ராஜாராம் said...
இயல்பான வார்த்தைகளில் கவிதை வெடிக்கிறது பாலாஜி!//

நன்றி அன்பரே...

//Blogger ஹேமா said...
தீபாவளி - தவிப்பு.//

நன்றி ஹேமா அவர்களே...

//Blogger தேவன் மாயம் said...
எளிய சொற்களில் கனத்த விசயம்!!//

நன்றி டாக்டர்...

//Blogger வானம்பாடிகள் said...
படத்தில அப்பா தலையில கை!
படிச்ச எனக்கு மூக்கு மேல் விரல்!
கனவாய் ஒளியும்
நிஜமாய் இருளும்.
இன்னைக்கு நிறைய அசத்தல் கவிதைகள்.//

நன்றி பாமரன் அய்யா....

க.பாலாசி said...

//D.R.Ashok said...
யப்பா.... நீ.. பாராவிட மோசமான ஆளுப்பா... மனச பிசையறதல..//

நன்றி அசோக் சார்..

//Blogger லவ்டேல் மேடி said...
கஷ்ட்டம்தான்...!!//

நீங்க எதைச்சொல்றீங்க தல...

நன்றி...

//Blogger முரளிகண்ணன் said...
நிதர்சனம்


//Blogger பிரியமுடன்...வசந்த் said...
:(//

:)) நன்றி வசந்த்...

//Blogger ராமலக்ஷ்மி said...
அருமையாய் சொல்லிவிட்டிருக்கிறீர்கள் மகனின் கனவையும் தந்தையின் தவிப்பையும். படமும் வெகு பொருத்தம்.//

மிக்க நன்றி அக்கா...

//Blogger தமிழ் நாடன் said...
நடுத்தர வர்க்கத்தின் நிதர்சனங்கள் இவை! நல்ல வெளிப்பாடு!//

நன்றி தமிழ்நாடன்...

க.பாலாசி said...

//தமிழ் நாடன் said...
தமிலிஷ்ல உங்களுக்கு ஓட்டு போட்டா ஹேமாவோட தீபாவளி கவிதைக்கு ஓட்டு போகுது!//

அதுவும் ஒரு வலி மிகுந்த கவிதைதான்!//
//Blogger ராமலக்ஷ்மி said...
நானும் கவனித்தேன்.//

நானும் பார்த்தேன்...ஒரே தலைப்பில் இருப்பதினால் உண்டாகியிருக்கும்....

நன்றி கருத்திற்கு....

க.பாலாசி said...

//கவிக்கிழவன் said...
வறியவைர்களின் தீபாவளி
உள்ளதை இழந்து சிரிகிறான்
உண்மையை உணர மறுக்கிறான்
இருக்கும் வரை கஷ்டபட்டு
சிரிதுவிடாவது போகட்டும்//

நன்றி கவிக்கிழவன்...உங்களது கவிதையும் வலி...

//Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
வாழ்வின் நிதர்சனம்...//

நன்றி அன்பரே...

//Blogger முரளிகுமார் பத்மநாபன் said...
நண்பா, கவிதை எப்போதும்போல அருமை. படத்தை எங்கப்பா புடிச்ச, அதுவே ஆயிரம் கவிதையை சொல்லும்போல ஒருக்கே.... இத்தனை கஸ்டமும் அந்த இல்லாத வயிற்றுக்காக அல்லது தலையில் கை வைக்குமளவிற்கு பிரச்சனை என் வயிற்றுக்காக இல்லை, என் பிள்ளைகளின் வயிற்றிர்காக என்று குறிப்பால் உணர்த்துகிறது//

உண்மைதான் இவ்வளவு பொருத்தமான படம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. யதார்த்தமாக கவிதைக்கு ஏற்றால் போல் கிடைத்தது.

நன்றி உங்களின் வருகை மற்றும் கருத்திற்கு...

க.பாலாசி said...

//புலவன் புலிகேசி said...
வறுமை....நல்ல சிந்தனைக் கவிதை..//

நன்றி நண்பா...

//Blogger S.A. நவாஸுதீன் said...
நடுத்தரவர்க்கத்தினரின் பெரும்பாலான பண்டிகைகள் இப்படித்தான்.
அத நீங்க ”நச்”சுன்னு சொல்லிட்டீங்க//

நன்றி நவாஸ்...

சந்தனமுல்லை said...

அவரவர் கவலை அவரவர்க்கு!! அழகான கவிதை!!

சுரேஷ்குமார் said...

தமிழிழ் ஓட்டு போட்ட கீழ் வரும் லிங்க்கு போகுது.ஏதாவது பிரச்ச்னையா?

http://kuzhanthainila.blogspot.com/2008/10/blog-post_31.html

வால்பையன் said...

முதிர்ச்சி தெரியுது தல!

Sadagopal Muralidharan said...

தீபாவளியா? தீபா(வலியா)? நல்ல இடுகை.
கொண்டாட்டம் என்பது போய் திண்டாட்டம் ஆகிவருகிறது இந்தப் பண்டிகைகள்.

vasu balaji said...

வழக்கம்போல் குட் ப்ளாக்ஸ். வழக்கம் போல் பாராட்டு. வழக்கம் போல் தகவல்?
http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

க.பாலாசி said...

//சந்தனமுல்லை said...
அவரவர் கவலை அவரவர்க்கு!! அழகான கவிதை!!//

சரிதான்....நன்றி அக்கா..

//Blogger சுரேஷ்குமார் said...
தமிழிழ் ஓட்டு போட்ட கீழ் வரும் லிங்க்கு போகுது.ஏதாவது பிரச்ச்னையா?
http://kuzhanthainila.blogspot.com/2008/10/blog-post_31.html//

உண்மைதான். ஒரே தலைப்பில் இருப்பதனால் அப்படி வருகிறது. தீர்வும் தெரியவில்லை. நன்றி வருகைக்கு...

//Blogger வால்பையன் said...
முதிர்ச்சி தெரியுது தல!//

நன்றி தல...

//Blogger Sadagopal Muralidharan said...
தீபாவளியா? தீபா(வலியா)? நல்ல இடுகை.
கொண்டாட்டம் என்பது போய் திண்டாட்டம் ஆகிவருகிறது இந்தப் பண்டிகைகள்.//

தீப வலிதான் கொஞ்சம் ஒளியுடன்...

நன்றி அன்பரே.....வருகை மற்றும் கருத்திடலுக்கு...

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
வழக்கம்போல் குட் ப்ளாக்ஸ். வழக்கம் போல் பாராட்டு. வழக்கம் போல் தகவல்?
http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp//

எப்போதும்போல் நன்றி அய்யா....தகவலுக்கும் வாழ்த்துதலுக்கும்...

"உழவன்" "Uzhavan" said...

தீபாவளிக்காக வாங்கிய கடனை அடைப்பதற்குள் பொங்கல் வந்துவிடும். பொங்கலுக்காக வாங்கிய கடனை அடைப்பதற்குள் வேறொன்று வந்து நிற்கும். இப்படித்தான் வாழ்வை நகர்த்துகிறோம்.
இயல்பான கவிதை பாலாஜி.. அதுக்காக தீபாவளி கொண்டாடாம இருக்காதீங்க.. தீபாவளி வாழ்த்துக்கள் :-)

அன்புடன் நான் said...

மனதை பிழிகிறது ... கவிதை மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.

கிறுக்கல்கள்/Scribbles said...

கவிதை மிக நன்று. அனுபவித்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும். வாழ்க!

காமராஜ் said...

கொளுத்திப்போட்டுவிட்டீர்கள், வெடிச்சத்தம் கேட்கட்டும் வலைமுழுக்க.
அருமை பாலாஜி...

க.பாலாசி said...

//" உழவன் " " Uzhavan " said...
தீபாவளிக்காக வாங்கிய கடனை அடைப்பதற்குள் பொங்கல் வந்துவிடும். பொங்கலுக்காக வாங்கிய கடனை அடைப்பதற்குள் வேறொன்று வந்து நிற்கும். இப்படித்தான் வாழ்வை நகர்த்துகிறோம்.
இயல்பான கவிதை பாலாஜி.. அதுக்காக தீபாவளி கொண்டாடாம இருக்காதீங்க.. தீபாவளி வாழ்த்துக்கள் :-)//

நன்றி உழவன்

//Blogger சி. கருணாகரசு said...
மனதை பிழிகிறது ... கவிதை மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்...//

நன்றி அன்பரே...

//Blogger கிறுக்கல்கள் said...
கவிதை மிக நன்று. அனுபவித்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும். வாழ்க!//

நன்றி அன்பரே...

//Blogger காமராஜ் said...
கொளுத்திப்போட்டுவிட்டீர்கள், வெடிச்சத்தம் கேட்கட்டும் வலைமுழுக்க.
அருமை பாலாஜி...//

மிக்க நன்றி அன்பரே....

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO