க.பாலாசி: காணிக்கை...

Tuesday, October 20, 2009

காணிக்கை...




பொதுப்பணியில் செலவழிக்க
நினைக்கும்போது பொருளில்லை
பொருளும் புகழும் சேர்ந்தபின்னே
பொதுப்பணியில் நினைவில்லை
போதுமான பொருளும் வந்து
பொதுப்பணியில் நினைவும் வந்தால்
போட்ட திட்டம் நிறைவேறக்
கூட்டாளிகள் சரியில்லை.

இந்த பட்டுக்கோட்டையாரின் வரிகளில் உள்ளர்த்தங்கள் நிறைய உள்ளன. பொதுவாக இது எல்லாவற்றிற்கும் பொருந்தும் வரிகளாயினும் எனது பார்வையில் மிகச்சரி எனப்படுவதை பகிர்ந்துள்ளேன்.

இன்று நாம் கோயில் செல்கிறோம். கும்பிடுகிறோம். காணிக்கை என்ற பெயரில் எவ்வளவோ பணங்களை, பொருள்களை, சொத்துக்களை செலுத்துகிறோம். வீதிக்கொரு கோயில் என புதுவிதி செய்கிறோம். பயன் என்ன? பெற்ற இன்பங்கள் என்னனென்ன? எத்தனை மனிதர்களின் வாழ்வாதாரங்கள் புதிய கோயில் கட்டுவதனாலும், காணிக்கையிடப்படுவதனாலும் சீரமைந்திருக்கின்றன? பெரிய பெரிய கோயில்களில் கொட்டிகிடக்கும் காணிக்கை பணங்களால் எவருக்கு என்ன பயன்? எத்தனை கோயில்களில் கிடைக்கும் வருமானங்கள் மூலம் மக்களுக்கு நல்லது செய்யப்படுகின்றன? போன்ற கேள்விகளுக்கு விடை என்பது ஒருசில இடங்களிலிலிருந்து மட்டுமே கிடைக்கும். அதுவும் கண்துடைப்பாக.

முக்கியமாக எல்லா கோயில்களிலும் அதன் உண்டியல் வருமானம் மற்றும் இன்னபிற வருமானங்கள் அந்த நிர்வாகத்திற்கே செலவிடப்படுகிறது. இதை நான் தவறென்று சொல்லவில்லை. பராமரிப்பும் முக்கியம்தான். ஆயினும் அபரிதமான வருமானம் உள்ள கோயில்களில் கொட்டிகிடக்கும் பணங்கள் ஏழைகளின் அடிமட்ட வாழ்க்கைமுறையை கொஞ்சம் மேல் தூக்கிவிட செலவிடப்படுமாயின் இறைவனின் பணத்தில் ஏழையின் சிரிப்பினை காணலாம் என்பதே என் எண்ணம்.

பழைய கோயில்களே கவனிப்பாரற்று கிடக்கும் நேரத்தில் புதிதாய் வீதிக்கொரு கோயில் கட்டப்படுகிறது. ஏனென்று கொஞ்சம் உற்று நோக்குவோமாயின் ஏதோவொரு விதத்தில் அப்படியும் ஒரு வியாபாராம் நடந்து கொண்டிருக்கிறது. இருக்கின்ற கோயில்களை சீரமைக்கவே முடியாதபட்சத்தில் புதிதாய் ஒரு கோயில் எழுப்பி வருமானத்தினை தேடும் போக்கு ஏழைகளின் புரை விழுந்த கண்களுக்கு என்றுமே மருந்தாய் பயன்படப்போவதில்லை.


இடுகை பற்றின உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...


31 comments:

ஈரோடு கதிர் said...

சிந்திக்க வைக்கும் இடுகை பாலாஜி

பாராட்டுகள்..

கோவில் என்பது மனிதனின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கிறது, (சரி அல்லது தவறு என்பது வேறு), அந்த நம்பிக்கையில் மாற்றம் வரும் வரை இது தொடரத்தான் செய்யும்..

கோவில்களில் பால் அபிசேகம் செய்வதைப் பார்க்கும் போது மனது வலிக்கும்

பழமைபேசி said...

ஈரோடுன்னாலே புரட்சிதானா? எழுத்துப் புரட்சிய சொன்னேங்க.... நல்ல ஒரு முன்னுதாரணம்.... ஈரோட்டு எழுத்தாளர்களுக்கு ஒரு பணிவான வணக்கமும் வாழ்த்தும்!

vasu balaji said...

அட ஒம்பது நிமிசந்தான் ஆச்சி. நாமதான் முதல்லன்னு வந்தா மனுசன் இங்கயும் பூந்தாச்சி. ம்ம்ம்.ச்ச்ச்சேரி. நாம பின்னூட்டம் போடுவம்டா வானம்பாடி.

அடிப்படையில் கோவில்கள் அமைந்த சிந்தனை வேறு. இன்றைய யதார்த்தம் வேறு. அபிசேகப் பால் பிரசாதமாக ஏழைகளுக்கு வழங்கப்பட்டதொரு காலம். செங்கல்லை சூடு பண்ணி மேலே ஈரத்துணியைப் போட்டு டங்குவார் அந்துபோக உதை விழுந்தது இந்தக் காலம். அதனால தானெ சு.சாமி சிதம்பரத்துக்கு வக்காலத்து. காசேதான் கடவுளடா மாறி, கடவுளேதான் காசடான்னு ஆகிப் போச்சு. திருப்பதி கோவில் சுவத்துக்கு தங்கத் தகடு போடுறானாமா. வெளிய வந்தா அய்யா அய்யான்னு எத்தன பிஞ்சு ஏங்கி நிக்குது?

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல சிந்தனை.. மக்கள் யோசிப்பார்களா?

விரும்பி said...

வணக்கம் பாலாஜி

கோயில்களில் உண்டியல் திட்டத்தின் அடிப்படை எழைகளிற்கு உணவளிப்பதும் உதவுவதற்கமாகத்தான் உருவாக்கப்பட்ட நற்திட்டம் காலப்போக்கில் கடவள்களில் யார் பணக்காரக்கடவுள் என மதிப்பீடு செய்வதற்கான ஒரே விடயமாக வழங்கும் காணிக்கைகள் கருதப்படுகின்றன. விடுத்து கோயில் பொருளாதாரம் என்பதில் ஏராளமான பணம் புரள்கின்றது. சரியாக திட்டமிட்டால் எவ்வளவே ஏழைகள் பயன் பெறுவர்கள். முதலில் வீதிக்கொரு கோயில் முறையையும் அதை ஊக்குவிக்கும் மக்களும் மாறவேண்டும்.

நல்ல கருத்துக்கள்

ஹேமா said...

பாலாஜி,எங்கே தீபாவளிப் பலகாரம் !

இப்போ சாமி தொடக்கம் சாணி வரைக்கும் வியாபாரம்தான் பாலாஜி.உலகம் போகிற போக்கு நல்லாவா இருக்கு ?

பிரபாகர் said...

//பழைய கோயில்களே கவனிப்பாரற்று கிடக்கும் நேரத்தில் புதிதாய் வீதிக்கொரு கோயில் கட்டப்படுகிறது.//

நல்ல இடுகை பாலாஜி.... ஆதங்கம் அருமை...

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

குட்பிளாக்-ல வந்ததுக்கு காணிக்கை கொடுக்கலையே மகனே...

க.பாலாசி said...

//கதிர் - ஈரோடு said...
சிந்திக்க வைக்கும் இடுகை பாலாஜி
பாராட்டுகள்..
கோவில் என்பது மனிதனின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கிறது, (சரி அல்லது தவறு என்பது வேறு), அந்த நம்பிக்கையில் மாற்றம் வரும் வரை இது தொடரத்தான் செய்யும்..//

நம்பிக்கையில் மாற்றம் என்பது ஒருபுறம் இருந்தாலும் அதன் நோக்கத்தில் மாற்றம் வேண்டும் என்றே எண்ணுகிறேன்.

//கோவில்களில் பால் அபிசேகம் செய்வதைப் பார்க்கும் போது மனது வலிக்கும்//

சரிதான். உங்களின் உணர்வினையும் மதிக்கிறேன். நன்றி அன்பரே வருகைக்கும் கருத்திற்கும்.

//Blogger பழமைபேசி said...
ஈரோடுன்னாலே புரட்சிதானா? எழுத்துப் புரட்சிய சொன்னேங்க.... நல்ல ஒரு முன்னுதாரணம்.... ஈரோட்டு எழுத்தாளர்களுக்கு ஒரு பணிவான வணக்கமும் வாழ்த்தும்!//

அப்படியா? மிக்க நன்றி தங்களின் வருகை மற்றும் வாழ்த்துக்களுக்கு...

க.பாலாசி said...

// வானம்பாடிகள் said...
அட ஒம்பது நிமிசந்தான் ஆச்சி. நாமதான் முதல்லன்னு வந்தா மனுசன் இங்கயும் பூந்தாச்சி. ம்ம்ம்.ச்ச்ச்சேரி. நாம பின்னூட்டம் போடுவம்டா வானம்பாடி.//

நடக்கட்டும் நடக்கட்டும்...

// அடிப்படையில் கோவில்கள் அமைந்த சிந்தனை வேறு. இன்றைய யதார்த்தம் வேறு. அபிசேகப் பால் பிரசாதமாக ஏழைகளுக்கு வழங்கப்பட்டதொரு காலம். செங்கல்லை சூடு பண்ணி மேலே ஈரத்துணியைப் போட்டு டங்குவார் அந்துபோக உதை விழுந்தது இந்தக் காலம். அதனால தானெ சு.சாமி சிதம்பரத்துக்கு வக்காலத்து. காசேதான் கடவுளடா மாறி, கடவுளேதான் காசடான்னு ஆகிப் போச்சு. திருப்பதி கோவில் சுவத்துக்கு தங்கத் தகடு போடுறானாமா. வெளிய வந்தா அய்யா அய்யான்னு எத்தன பிஞ்சு ஏங்கி நிக்குது?//

உண்மைதான் இதை இரண்டுமாதங்களுக்கு முன் திருப்பதி சென்றபோது பார்த்திருக்கிறேன். நடைபாதையில் எத்தனை ஏழைகள்....எவருக்குமே இன்றும் விடிவில்லை. நன்றி உங்களின் வருகைக்கு...

//Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல சிந்தனை.. மக்கள் யோசிப்பார்களா?//

நன்றி நண்பரே...உங்களின் கருத்திற்கு....யோசிக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய அவாவும்....

க.பாலாசி said...

//விரும்பி said...
வணக்கம் பாலாஜி//

வணக்கம் அன்பரே...

//கோயில்களில் உண்டியல் திட்டத்தின் அடிப்படை எழைகளிற்கு உணவளிப்பதும் உதவுவதற்கமாகத்தான் உருவாக்கப்பட்ட நற்திட்டம் காலப்போக்கில் கடவள்களில் யார் பணக்காரக்கடவுள் என மதிப்பீடு செய்வதற்கான ஒரே விடயமாக வழங்கும் காணிக்கைகள் கருதப்படுகின்றன. விடுத்து கோயில் பொருளாதாரம் என்பதில் ஏராளமான பணம் புரள்கின்றது. சரியாக திட்டமிட்டால் எவ்வளவே ஏழைகள் பயன் பெறுவர்கள். முதலில் வீதிக்கொரு கோயில் முறையையும் அதை ஊக்குவிக்கும் மக்களும் மாறவேண்டும்.//

சரிதான். இதற்கான திட்டமிடல் இன்னும் நமது அரசாங்கங்களின் பார்வையில் படவில்லைபோலும். அப்படியே தெரிந்திருந்தாலும் அந்த வருமானங்களையும் தாங்களே சுருட்டிக்கொள்ளும் எண்ணம்தான் நமது அரசியல்வாதிகளிடம் இருக்கிறது.

இதற்கான முயற்சியில் மக்களும் மாறவேண்டும் என்பதே முதல் எண்ணம்.

// நல்ல கருத்துக்கள்//

மிக்க நன்றி அன்பரே...

//Blogger ஹேமா said...
பாலாஜி,எங்கே தீபாவளிப் பலகாரம் !//

பல‘காரம்’தான் இருக்கிறது தோழியே. பரவாயில்லன்னா சொல்லுங்க....

// இப்போ சாமி தொடக்கம் சாணி வரைக்கும் வியாபாரம்தான் பாலாஜி.உலகம் போகிற போக்கு நல்லாவா இருக்கு ?//

நன்றி தங்களின் கருத்திற்கு....

க.பாலாசி said...

// பிரபாகர் said...
நல்ல இடுகை பாலாஜி.... ஆதங்கம் அருமை... பிரபாகர்.//

மிக்க நன்றி நண்பரே...தங்களின் வருகை மற்றம் பின்னூட்டத்திற்கு....

//Blogger கதிர் - ஈரோடு said...
குட்பிளாக்-ல வந்ததுக்கு காணிக்கை கொடுக்கலையே மகனே...//

அப்படிங்களா தகப்பா. இந்த நன்றியே காணிக்கை....பிறகென்னவேண்டும்....

தமிழ் நாடன் said...

ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய கருத்துக்கள்.

இதைத்தான் நம்மூரில் உள்ளூர் குளம் தீர்த்த குளம் ஆகாதா? என்பார்கள்.

எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க கோயிகள் கவனிப்பாரண்றி சீரழிந்து போயிருக்கினறன. அவற்றை போற்றி பாதுகாத்தாலே போதும்.

ப்ரியமுடன் வசந்த் said...

பாராட்டுக்கள் பாலாஜி

எனக்கும் உங்களுக்கும் புரிந்தது எல்லாருக்கும் புரியுற காலம் எப்போ?

Unknown said...

அருமை பாலாஜி.

திருப்பதிங்கர பேர கேட்டாலே எனக்கு இப்படித்தான் தோணும், நீங்க இடுகையாகவே போட்டுடிங்க..

புலவன் புலிகேசி said...

இல்லாத கடவுளுக்காக கோவிலில் கொடுப்பதை இல்லாதவனுக்கு கொடுக்க மனமில்லாத உலகம் பாலாஜி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல இடுகை பாலாஜி. உண்டியல் வருமானம் எல்லா எங்கே செல்கிறது? எல்லாம் ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

க.பாலாசி said...

//தமிழ் நாடன் said...
ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய கருத்துக்கள்.
இதைத்தான் நம்மூரில் உள்ளூர் குளம் தீர்த்த குளம் ஆகாதா? என்பார்கள்.
எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க கோயிகள் கவனிப்பாரண்றி சீரழிந்து போயிருக்கினறன. அவற்றை போற்றி பாதுகாத்தாலே போதும்.//

ஆமாம் நண்பரே....அதற்கான விழிப்புணர்வு இன்னும் நமது மக்களுக்கு வரவில்லை.

நன்றி உங்களின் வருகை மற்றும் கருத்திற்கு...

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
பாராட்டுக்கள் பாலாஜி
எனக்கும் உங்களுக்கும் புரிந்தது எல்லாருக்கும் புரியுற காலம் எப்போ?//

அதுதான் தெரியவில்லை நண்பரே....எந்தவொரு விசயத்தையும் சொல்லச்சொல்லதான் ஆழப்பதியும் என்று எண்ணுகிறேன். நன்றி நண்பா...

க.பாலாசி said...

//பட்டிக்காட்டான்.. said...
அருமை பாலாஜி.
திருப்பதிங்கர பேர கேட்டாலே எனக்கு இப்படித்தான் தோணும், நீங்க இடுகையாகவே போட்டுடிங்க..//

நன்றி அன்பரே....

//Blogger புலவன் புலிகேசி said...
இல்லாத கடவுளுக்காக கோவிலில் கொடுப்பதை இல்லாதவனுக்கு கொடுக்க மனமில்லாத உலகம் பாலாஜி//

உண்மைதான் நண்பரே...நன்றி வருகைக்கு...

க.பாலாசி said...

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
நல்ல இடுகை பாலாஜி. உண்டியல் வருமானம் எல்லா எங்கே செல்கிறது? எல்லாம் ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.//

உண்டியல் வருமானங்கள் செல்லுமிடமெல்லாம் சிறப்பானதாக இருக்கவில்லை. அவைகள் ஏழைகளின் குடிசைகளுக்கு ஏதோவொரு விதத்தில் சென்றால் சிறப்பினையடையும்.

நன்றி அன்பரே உங்களின் வருகை மற்றும் கருத்திற்கு...

velji said...

பக்த்ர்களுக்கு கொடுக்க இருப்பு இருக்கனும்ல...வரம் பெற்ற பக்தர்கள் கண் புரைக்கு சில நேரங்களில் மருத்துவ கேம்ப் நடத்துவார்கள்!

வால்பையன் said...

இருக்கின்ற கோயிலை எல்லாம்
படிக்கின்ற பள்ளிகள் செய்வோம்!

காமராஜ் said...

தர்மகர்த்தா பதவிக்கு நடக்கும் கொலை வெறிப் போட்டியை மறந்துட்டீங்க பாலாஜி.
திருநீறு ஒட்டியிருக்கும் ரூபாய் நோட்டுக்கள் மதுவிடுதிளிலும், விபச்சாரவிடுதிகளிலும் அதிகம் தென்படுகிறது.

"உழவன்" "Uzhavan" said...

ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் அனாதை ஆஸ்ரமங்கள்/முதியோர் இல்லங்கள் இப்படி ஏதேனும் ஒருவருக்கான கண்ணாடி உண்டியல் இருக்கும். இதுபோல, கோவில்களிலும் வைத்தாலென்ன?

க.பாலாசி said...

//velji said...
பக்த்ர்களுக்கு கொடுக்க இருப்பு இருக்கனும்ல...வரம் பெற்ற பக்தர்கள் கண் புரைக்கு சில நேரங்களில் மருத்துவ கேம்ப் நடத்துவார்கள்!//

கோயில் நிர்வாகமா நடத்துகிறார்கள். ஆச்சரியமான விசயம். நன்றி அன்பரே வருகைக்கு...

//Blogger வால்பையன் said...
இருக்கின்ற கோயிலை எல்லாம்
படிக்கின்ற பள்ளிகள் செய்வோம்!//

செய்யலாம். அங்கேயும் இப்போது வியாபாரம்தானே நடக்கிறது.

நன்றி அண்ணா...

க.பாலாசி said...

//காமராஜ் said...
தர்மகர்த்தா பதவிக்கு நடக்கும் கொலை வெறிப் போட்டியை மறந்துட்டீங்க பாலாஜி.//

சரிதான்...

// திருநீறு ஒட்டியிருக்கும் ரூபாய் நோட்டுக்கள் மதுவிடுதிளிலும், விபச்சாரவிடுதிகளிலும் அதிகம் தென்படுகிறது.//

அவலத்தின் உச்சம். நன்றி அன்பரே வருகைக்கும் கருத்திற்கும்..

//Blogger " உழவன் " " Uzhavan " said...
ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் அனாதை ஆஸ்ரமங்கள்/முதியோர் இல்லங்கள் இப்படி ஏதேனும் ஒருவருக்கான கண்ணாடி உண்டியல் இருக்கும். இதுபோல, கோவில்களிலும் வைத்தாலென்ன?//

வைக்கலாம்...அப்படியான உண்டியல்கள் சேரவேண்டிய இடத்தில்தான் சேருகிறதா? அப்படி சேர்ந்தால் இங்கும் செய்யலாம்...

நன்றி அன்பரே கருத்திற்கு...

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

ஏழைகளாம் எங்கள் திருமணங்கள்
தங்கத்தால் நிற்க,
1.5 டன் எடையில் தங்கம்
இழைத்து கோயில் கட்ட கனவில்
அருளும் கடவுள், ஏன் எங்கள் கனவில் வருவதில்லை?? எங்களிடம் தங்கம் இல்லையென்பதாலா??

ஸ்ரீ புரத்தில் தங்க கோயில் பற்றி அறிந்து ,அச்சமயத்தில் நான் கிருக்கியது,
இப்போது உங்களுக்கு பின்னூட்டமாய்

அன்புடன் நான் said...

அருமையான கருத்து....
//அபரிதமான வருமானம் உள்ள கோயில்களில் கொட்டிகிடக்கும் பணங்கள் ஏழைகளின் அடிமட்ட வாழ்க்கைமுறையை கொஞ்சம் மேல் தூக்கிவிட செலவிடப்படுமாயின் இறைவனின் பணத்தில் ஏழையின் சிரிப்பினை காணலாம் என்பதே என் எண்ணம். //

இதை நான் வ‌ர‌வேற்கிறேன்.

க.பாலாசி said...

//கிறுக்கல் கிறுக்கன் said...
ஏழைகளாம் எங்கள் திருமணங்கள்
தங்கத்தால் நிற்க,
1.5 டன் எடையில் தங்கம்
இழைத்து கோயில் கட்ட கனவில்
அருளும் கடவுள், ஏன் எங்கள் கனவில் வருவதில்லை?? எங்களிடம் தங்கம் இல்லையென்பதாலா??
ஸ்ரீ புரத்தில் தங்க கோயில் பற்றி அறிந்து ,அச்சமயத்தில் நான் கிருக்கியது,
இப்போது உங்களுக்கு பின்னூட்டமாய்//

மிக்க நன்றி அன்பரே...உங்களது சிந்தனை கவிதை மிக நன்றாக உள்ளது...

//Blogger சி. கருணாகரசு said...
அருமையான கருத்து....
இதை நான் வ‌ர‌வேற்கிறேன்.//

நன்றி அன்பரே...வருகைக்கும் கருத்திற்கும்...

ஜோதிஜி said...

இன்னும் இரண்டு நாட்கள் இந்த கருத்து உள்ளே உறுத்தலாய் இருந்து கொண்டு அவஸ்த்தைபடுத்தும். நண்பர்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது உங்கள் சிந்தனைகளை புரிந்து கொள்ள முடிகிறது.

க.பாலாசி said...

//Blogger ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
இன்னும் இரண்டு நாட்கள் இந்த கருத்து உள்ளே உறுத்தலாய் இருந்து கொண்டு அவஸ்த்தைபடுத்தும். நண்பர்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது உங்கள் சிந்தனைகளை புரிந்து கொள்ள முடிகிறது.//

மிக்க நன்றி ஜோதிஜி....உங்களின் வருக்கும் கருத்திற்கும்...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO