க.பாலாசி: பிரபாகரன் - ஒரு பார்வை

Saturday, February 14, 2009

பிரபாகரன் - ஒரு பார்வை

தமிழ் மக்களின் தேசிய தலைவரான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் 1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் திகதி அன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்தார். தனது கல்வியை வல்வெட்டித்துறை ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரை கற்றார்.
தேசக்குரலின் குடும்பத்துடன் பிரபாகரன் குடும்பம்
இலங்கையில் தமிழ் மாணவர்கள் மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பிரபாகரன் விடுதலைப் போராளியாக செயற்படத்தொடங்கியதனால் படிப்பை தொடர முடியவில்லை.

படிக்கும் சிறுவனாக இருக்கும் போதே அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கைக்குண்டு தயாரிக்க பழகினார். ஒரு நாள் எதிர்பாராத விதமாக அக்குண்டு வெடித்ததால் அவரது காலில் எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பின் அந்த இடம் கருமை அடைந்ததால் கரிகாலன் எனவும் அழைக்கப்பட்டார்.


1972ம் ஆண்டு தமிழ் புது புலிகள் என்ற அமைப்பை தனது 18 வது வயதினிலே பிரபாகரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். பின் 1976ம் ஆண்டு வைகாசி மாதம் 5ம் திகதி தமிழீழ விடுதலை புலிகள் என பெயர் மாற்றம் செய்தார்.

1984ம் ஆண்டு இந்தியாவின் திருவாண்மையூர் திருப்போருர் கோயிலில் தனது காதலியான மதிவதனி அவர்களை தேசக்குரல் அன்ரன் பாலசிங்கம் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் பின் சார்லஸ் அந்தோனி, துவாரகா எனும் இரு பிள்ளைகள் உள்ளனர்.


குடும்பத்துடன்
மூத்தமகன் சார்லஸ் அந்தோனி ஏரோநாடிகல் பொறியியலில் பட்டம் பெற்று, அயர்லாந்திலிருந்து 2006ம் ஆண்டு தமிழீழம் திரும்பினார். இலங்கை இராணுவத்துக்கு எதிராக நடைபெற்று வரும் விமானப்படைக்கு தலைமை தாங்குபவரும் பிரபாகரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: வெப்துனியா

No comments:

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO