க.பாலாசி: பச்சைமா மலைபோல் மேனி...

Wednesday, July 22, 2009

பச்சைமா மலைபோல் மேனி...



“பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!”

எனும் தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரின்,
திருமாலையில் வரும் பாடலின்
பொருளிற்கேற்றாற்போல
இவ்விருதினை நான் கருதுகிறேன்.


இவ்விருதினை எனக்கும் அளித்து என்னுள்ளும் ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்திய திரு. கதிர் அவர்களுக்கும், மற்றும் இவ்விருதினை ஏற்படுத்தி வலையுலகில் மகிழ்ச்சியுடன் வலம் வர செய்த திரு. செந்தழல் ரவி அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

மேலும் எனக்கு கொடுக்கப்படிருக்கும் இவ்விருதினை, யான் பெற்ற இவ்வின்பம் பெறுக இவ்வையகம் எனும் நோக்கில், கீழ்கண்ட நல் உள்ளங்களை பரிந்துரைத்து வழங்குவதில் பெருமையடைகிறேன். ஒரு நல்ல எண்ணத்தில் தொடுக்கப்பட்ட இந்த நன்விருது எல்லோரின் ஒற்றுமையை வளர்க்க பயன்படட்டும் என்கிற ஆவலில்
"பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க" எனும் நாலடியாரின் வாக்கிற்கிணங்க நானும் கீழ்கண்டவர்களுக்காக நாமொழிகிறேன்.

௧. கேபிள் சங்கர் * எனது பதிவுலக ஆசான்.

(ஆசானுக்கு விருதுகொடுக்க அடியேனுக்கு அனுபவம் இல்லையென்றாலும் இதை ஒரு காணிக்கையாக செலுத்துகிறேன்.)

ங. தங்கமணி பிரபு
*

ச. சடகோபன் முரளிதரன்
*

ஞ. கவிக்கிழவன்
*

த. சென்ஷி
*

ந. லவ்டேல்மேடி
*


இவர்களில் எவருக்கேனும் முன்னமே இந்நன்மதிப்பு வழக்கப்பட்டிருப்பின் ஈருடல் கலந்து ஓர் உயிர் என்பதுபோல கருதவேண்டுகிறேன். நன்றி.



••••••••

11 comments:

Sadagopal Muralidharan said...

அன்பு பாலாஜிக்கு,
நலம். வாழ்த்துக்கள். நன்றி.
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"
உங்களுடைய விருதினை எமக்கு பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றி நட்பே.
ஆனாலும் நான் கனவில் கூட நினைத்ததில்லை எனக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று. அதுவும் என்னுடன் நீங்கள் காப்லேஷங்க த. ம. பி போன்றவர்களை இணைத்து எனக்கு தலையில் மணிமகுடம் சூட்டியமைக்கு மிக்க நன்றி.

ஒன்று கவனித்தீர்களா? இயன்ற வரை தமிழிலேயே விடையிறுக்கிறேன். எல்லாம் நீங்கள் கொடுக்கும் ஊக்கம்.

நான் இனிமேல் மிக கவனமாக பதிப்பேன்.

Sadagopal Muralidharan said...

காப்லேஷங்க = cable shankar

க.பாலாசி said...

//ஒன்று கவனித்தீர்களா? இயன்ற வரை தமிழிலேயே விடையிறுக்கிறேன். எல்லாம் நீங்கள் கொடுக்கும் ஊக்கம்.//

தங்களின் தமிழ் ஆர்வம் கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

//காப்லேஷங்க = cable shankar//

கேபிள் சங்கர் = cable shankar என்பது சரி. அவர இந்தளவுக்கு பிச்சுட்டீங்களே.

நன்றி..

Unknown said...

ரொம்ப நன்றிங்க பாலாஜி.....!!!

Unknown said...

http://madydreamz.blogspot.com/2009/07/blog-post_24.html

karthikharish said...

thanx balaji sir

வால்பையன் said...

வாழ்த்துக்கள் நண்பரே!

Cable சங்கர் said...

மிக்க நன்றி பாலாஜி.. வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

//வால்பையன் said...
வாழ்த்துக்கள் நண்பரே!//

தங்களின் வருகையையும் வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்கிறேன் அன்பரே.

சென்ஷி said...

விருதுக்கு என் பெயரையும் பரிந்துரைந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே!

தங்களுக்கு விருது கிடைத்திருப்பதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தங்கள் வலைப்பக்கம் நேர்த்தியாக உள்ளது

க.பாலாசி said...

//தங்களுக்கு விருது கிடைத்திருப்பதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தங்கள் வலைப்பக்கம் நேர்த்தியாக உள்ளது//

மிக்க நன்றி அன்பரே. தங்களின் வருகைக்கும் வாழ்த்துதளுக்கும்.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO