க.பாலாசி: அனைவரும் வருக!!!

Tuesday, December 14, 2010

அனைவரும் வருக!!!

அதிகாலைநேரத்தில் பனிப்புகையுடன் தொண்டையில் பரவும் சூடான தேநீர், மழைக்காலத்தே பசியிலலையும் எறும்புக்கூட்டங்களுக்கு சாமிமாடம் முன்பு போடப்பட்ட அரிசிமாக் கோலம், மார்கழிமாதக் காலையில் சாணந்தெளித்த வாசலதில் வைத்த மகரந்தம் மிளிரும் பூசணிப்பூ, எரியூட்டப்படும் மண் அடுப்புகளில் கிழக்கு நோக்கி முதலில் பொங்கும் வெண்சோற்றுப்பானை, தூரதேசம் வாழும் மகனின் கையில் தாய் தன்கைப்பட சுட்டுக்கொடுத்த முறுக்கும், அதிரசமும் கிடைக்கும் நேரம், இருளடர்ந்த வீட்டினரையில் விளையாடும் குழந்தையின் கையிலிருக்கும் விளக்கெரியும் பொம்மை, தீப்பிழம்புகள் காடழிக்க நல்லரவத்திற்கு கரையான் புற்று கண்படும் நொடி, முதலில் பிரசவித்த குழந்தைக்கு தாயவள் தன் மார்க்காம்பை வாயிற்புகட்டும் தருணம், போலவே வருகிற திசம்பர் 26 ம் தேதி ஈரோட்டில் நடைபெறவிருக்கின்ற பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கான மாபெரும் சங்கமம்‘2010.

இணையத்தில் இணைந்த கண்கள் இச்சங்கமத்தில் சங்கமிக்கட்டும். காத்திருக்கிறோம் அனைவரின் அகமும் புறமும் மகி(ழ)ழ்த்த.

நாள்         : 26.12.2010 ஞாயிறு
நேரம்      : காலை 11.00 மணி
இடம்       : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
                       URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு

நிகழ்ச்சி முன்னோட்டம்: -

* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்
* சிறுகதைகளை உருவாக்குவோம்
* புகைப்படங்களில் நேர்த்தி
* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்
* உலகத்திரைப்படங்கள்
* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்
* பதிவர்கள் கலந்துரையாடல்

காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.

பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும்.

உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்
உங்கள் வருகையே நம் வெற்றி!

தொடர்புகளுக்கு:
erodetamizh@gmail.com அல்லது குழும பதிவர்களைத் தொடர்பு கொள்ளவும்.


.

36 comments:

vasu balaji said...

போடு சக்கெ. அழைப்புக்கு அழைப்புமாச்சு அழகான இடுகையுமாச்சு. வாழ்த்துகள்.

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துகள்

ஹேமா said...

வாழ்த்துகள் பாலாஜி.

arasan said...

வாழ்த்துக்கள்... சங்கமம் அருமையா நடைபெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

கலகலப்ரியா said...

வர முடியலயே... அவ்வ்வ்... விழா சிறக்க வாழ்த்துகள்...

பழமைபேசி said...

புகைப்படங்களில் நேர்த்தி --- என்ன அருமையான வாய்ப்ப்ய் பயனாளிகளுக்கு? ப்ச்... என்னை மாதிரி நாடோடிகளுக்கு வடை போச்சே?!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

பழமைபேசி said...

கனவுகள் கசியுதுங்றாய்ங்க.... மேயுதுங்றாங்க.... இவுங்க இருக்குறது கனவுலகமோ? டிச-26ல ஒரு எட்டுப் போய்ப் பாருங்க அப்பு!

வினோ said...

விழா சிறக்க வாழ்த்துக்கள் பாலாசி..

r.v.saravanan said...

விழா சிறக்க வாழ்த்துக்கள் பாலாசி..

iwill try to come

r.v.saravanan said...

விழா சிறக்க வாழ்த்துக்கள் பாலாசி..

iwill try to come

ராமலக்ஷ்மி said...

நிகழ்ச்சி நிரல் சிறப்பாக உள்ளது.

ஏற்பாடுகள் அருமை.

விழா கோலகலமாக நடக்க வாழ்த்துக்கள்:)!

sakthi said...

விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள் பாலாசி

க ரா said...

அழகு தமிழ் பாலாசி.. மிக்க நன்றி அழைப்புக்கு :)

பவள சங்கரி said...

அழகான வரவேற்பு, இடுகையும் அருமை.

அமர பாரதி said...

//பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும்// இது சூப்பர் ஏற்பாடு. சும்மா அதிரனும்ல.

ஈரோடு கதிர் said...

பின்னிட்டே தம்பி!

||தாய் தன்கைப்பட சுட்டுக்கொடுத்த முறுக்கும், அதிரசமும்||

திங்ற பண்டம் பேரெல்லாம் போடாத தம்பி, இப்பவே எச்சில் ஊறுது!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்.. வரமுடியலையே வருத்தமா இருக்கு பாலாசி.

விழா சிறக்க வாழ்த்துகள்.

Jerry Eshananda said...

sure..

Unknown said...

அன்றைய தினம் பதிவர்களின் நூல் வெளியீடு விழா சென்னையில் நடைபெறுவதால் வர இயலாது என நினைக்கிறேன்,,

விழா சிறக்க என் வாழ்த்துக்கள் ...

மாணவன் said...

சந்திப்புகள் இனிதாக நடைபெற என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்....

Unknown said...

தூள் கிளப்புங்க. வாழ்த்துகள்.

பிரதீபா said...

அடடா அடடா வர முடியலைங்களே... :-(
விழா சிறக்க வாழ்த்துக்கள். விழா முடிஞ்சதுக்கப்புறம் எங்கள மாதிரி வர முடியாத மக்களுக்காக 'சில துளிகள்' பதிவு போடுங்க. சாப்பாடு ஐட்டங்களோ இல்ல சாப்பிடற மாதிரி போட்டோ எல்லாம் போட்டீங்க, காதுல புகை வரும் பாலாண்ணா :)

Mahi_Granny said...

வாசகியாக வர ஆசைதான் . ஆனாலும் வர முடியாத நிலை. 26 ஆம் தேதி இரவு உங்களில் ஒருவரின் இடுகையைப் பார்த்து திருப்திபட்டுக் கொள்ள வேண்டியது தான் . விழா சிறப்பாய் நடக்க வாழ்த்துக்கள்

காமராஜ் said...

மொத்த சந்தோசத்தையும் இந்தப்பதிவே சொல்லிவிட்டது.இன்னும் எதுக்க அங்க வரணும் ?.

ஆனால் எல்லோரையும் ஒரு சேரப் பாக்கலாம். முகமுகமாய்ப்பேசலாம்.

பிரபாகர் said...

வந்து கலக்கிடுவோம் இளவல்...

பிரபாகர்...

cheena (சீனா) said...

அன்பின் பாலாசி - அருமை அருமை - இப்பவே சங்கமத்தைப் பத்திக் கனவு காண ஆரம்பிச்சாச்சு - என்ன நடை என்ன வர்ணனை - முதலில் பிரசவித்த குழந்தைக்கு தாயவள் தன் மார்க்காம்பை வாயிற்புகட்டும் தருணம் - அடடா - வந்த்டறோம் பாலாசி - சங்கமம் மிகப் பெரிய வெற்றியினை ஈரோட்டுப் பதிவர்க்ளுக்கு அள்ளித் தரும். ஐயமில்லை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தாராபுரத்தான் said...

அவ்வண்ணமே அழைக்கும்..தாராபுரத்தான்.

மாதவராஜ் said...

வாசம் அடிக்கும் எழுத்து. வருகிறேன்...!

'பரிவை' சே.குமார் said...

வாசம் அடிக்கும் எழுத்து.
தூள் கிளப்புங்க. வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan said...

நிகழ்ச்சி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் பாலாசி

அரசூரான் said...

நிகழ்ச்சி குறித்து மிக்க மகிழ்ச்சி பாலசி... விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
போடு சக்கெ. அழைப்புக்கு அழைப்புமாச்சு அழகான இடுகையுமாச்சு. வாழ்த்துகள்.//

நன்றிங்க அய்யா

//Blogger "உழவன்" "Uzhavan" said...
வாழ்த்துகள்//

நன்றிங்க உழவன்

//Blogger ஹேமா said...
வாழ்த்துகள் பாலாஜி.//

நன்றிங்க ஹேமா

//Blogger அரசன் said...
வாழ்த்துக்கள்... சங்கமம் அருமையா நடைபெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..//

நன்றி அரசன்

//Blogger கலகலப்ரியா said...
வர முடியலயே... அவ்வ்வ்... விழா சிறக்க வாழ்த்துகள்...//

நன்றிக்கா

//Blogger பழமைபேசி said...
புகைப்படங்களில் நேர்த்தி --- என்ன அருமையான வாய்ப்ப்ய் பயனாளிகளுக்கு? ப்ச்... என்னை மாதிரி நாடோடிகளுக்கு வடை போச்சே?!//

ப்ப்ப்ச்... அடுத்தமுறை வாங்க.. நன்றிங்க அய்யா

//Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...
வாழ்த்துகள்//

நன்றிங்க அய்யா

//Blogger பழமைபேசி said...
கனவுகள் கசியுதுங்றாய்ங்க.... மேயுதுங்றாங்க.... இவுங்க இருக்குறது கனவுலகமோ? டிச-26ல ஒரு எட்டுப் போய்ப் பாருங்க அப்பு!//

அவ்வண்ணமே கோரும் நானும்.

//Blogger வினோ said...
விழா சிறக்க வாழ்த்துக்கள் பாலாசி..//

நன்றிங்க வினோ

//Blogger r.v.saravanan said...
விழா சிறக்க வாழ்த்துக்கள் பாலாசி.. will try to come//

நன்றி சரவணன் வந்திடுங்க..

//Blogger ராமலக்ஷ்மி said...
நிகழ்ச்சி நிரல் சிறப்பாக உள்ளது.
ஏற்பாடுகள் அருமை.
விழா கோலகலமாக நடக்க வாழ்த்துக்கள்:)!//

நன்றிங்க ராமலக்ஷ்மி

க.பாலாசி said...

//sakthi said...
விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள் பாலாசி//

நன்றிக்கா

//Blogger இராமசாமி said...
அழகு தமிழ் பாலாசி.. மிக்க நன்றி அழைப்புக்கு :)//

நன்றிங்க

//Blogger நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
அழகான வரவேற்பு, இடுகையும் அருமை.//

வாங்க மேடம்.. நன்றி

//Blogger அமர பாரதி said...
இது சூப்பர் ஏற்பாடு. சும்மா அதிரனும்ல.//

அதிரும்ங்க.. வாங்க நன்றி..

//Blogger ஈரோடு கதிர் said...
பின்னிட்டே தம்பி!
திங்ற பண்டம் பேரெல்லாம் போடாத தம்பி, இப்பவே எச்சில் ஊறுது!//

நன்றிங்க

//Blogger ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
ம்ம்.. வரமுடியலையே வருத்தமா இருக்கு பாலாசி.
விழா சிறக்க வாழ்த்துகள்.//

நன்றிங்க செந்தில்வேலன்

//Blogger ஜெரி ஈசானந்தன். said...
sure..//

வாங்க சார்.. நன்றி..

//Blogger கே.ஆர்.பி.செந்தில் said...
அன்றைய தினம் பதிவர்களின் நூல் வெளியீடு விழா சென்னையில் நடைபெறுவதால் வர இயலாது என நினைக்கிறேன்,,
விழா சிறக்க என் வாழ்த்துக்கள் ...//

சரிங்க செந்தில்... நன்றி

//Blogger மாணவன் said...
சந்திப்புகள் இனிதாக நடைபெற என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்....//

நன்றிங்க மாணவன்

//Blogger Sethu said...
தூள் கிளப்புங்க. வாழ்த்துகள்.//

வாங்க சேது.. நன்றி..

க.பாலாசி said...

//பிரதீபா said...
அடடா அடடா வர முடியலைங்களே... :-(
விழா சிறக்க வாழ்த்துக்கள். விழா முடிஞ்சதுக்கப்புறம் எங்கள மாதிரி வர முடியாத மக்களுக்காக 'சில துளிகள்' பதிவு போடுங்க. சாப்பாடு ஐட்டங்களோ இல்ல சாப்பிடற மாதிரி போட்டோ எல்லாம் போட்டீங்க, காதுல புகை வரும் பாலாண்ணா :)//

கண்டிப்பா போடுறோம்ங்க.. கூடுமானவரை வர முயலுங்கள்.. நன்றி..

//Blogger Mahi_Granny said...
வாசகியாக வர ஆசைதான் . ஆனாலும் வர முடியாத நிலை. 26 ஆம் தேதி இரவு உங்களில் ஒருவரின் இடுகையைப் பார்த்து திருப்திபட்டுக் கொள்ள வேண்டியது தான் . விழா சிறப்பாய் நடக்க வாழ்த்துக்கள்//

நன்றிங்க மகி மேம்..

//Blogger காமராஜ் said...
மொத்த சந்தோசத்தையும் இந்தப்பதிவே சொல்லிவிட்டது.இன்னும் எதுக்க அங்க வரணும் ?.
ஆனால் எல்லோரையும் ஒரு சேரப் பாக்கலாம். முகமுகமாய்ப்பேசலாம்.//

ஆமாங்க.. வாங்க.. பார்க்கணும், பழகனும்.. நன்றி..

//Blogger பிரபாகர் said...
வந்து கலக்கிடுவோம் இளவல்...
பிரபாகர்...//

வாங்கண்ணா, நன்றியும்..

//Blogger cheena (சீனா) said...
அன்பின் பாலாசி - அருமை அருமை - இப்பவே சங்கமத்தைப் பத்திக் கனவு காண ஆரம்பிச்சாச்சு - என்ன நடை என்ன வர்ணனை - முதலில் பிரசவித்த குழந்தைக்கு தாயவள் தன் மார்க்காம்பை வாயிற்புகட்டும் தருணம் - அடடா - வந்த்டறோம் பாலாசி - சங்கமம் மிகப் பெரிய வெற்றியினை ஈரோட்டுப் பதிவர்க்ளுக்கு அள்ளித் தரும். ஐயமில்லை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

நன்றிங்கய்யா.. தங்களின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.. நன்றி..

//Blogger தாராபுரத்தான் said...
அவ்வண்ணமே அழைக்கும்..தாராபுரத்தான்.//

நன்றிங்கய்யா

//Blogger மாதவராஜ் said...
வாசம் அடிக்கும் எழுத்து. வருகிறேன்...!//

நன்றிங்க அய்யா.. வாங்க..அன்போடு அழைக்கிறோம்.. நன்றி..

//Blogger சே.குமார் said...
வாசம் அடிக்கும் எழுத்து.
தூள் கிளப்புங்க. வாழ்த்துகள்.//

நன்றிங்க சே.குமார்..

//Blogger தேனம்மை லெக்ஷ்மணன் said...
நிகழ்ச்சி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் பாலாசி//

நன்றிங்க்கா

//Blogger அரசூரான் said...
நிகழ்ச்சி குறித்து மிக்க மகிழ்ச்சி பாலசி... விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்//

நன்றிங்க சார்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

படிப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு பாலாஜி...

நான் ஈரோடை சேர்ந்தவன் இல்லையென்றாலும்... கலந்துக்கொள்ள ஆசையாய்... கண்டிப்பா காலம் அனுமதித்தால் வந்து கலந்து மகிழ்கிறேன் நானும்....

நிகழ்ச்சி இனிதே நடைபெற என் வாழ்த்துகள்...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO