க.பாலாசி: ஒரு குழந்தையின் குமுறல்

Wednesday, December 22, 2010

ஒரு குழந்தையின் குமுறல்



விளை நிலங்களை விற்றாகிவிட்டது
மூலைக்கொரு வீடும் வந்துவிட்டது
காவலுக்கிருந்த அய்யனார்
கட்டிடத்திற்குள் வந்துவிட்டார்
இனி கவலையில்லை.

*******

பள்ளிக்கூடம், வீட்டுப்பாடம்
சாயுங்காலம் டியூசன்
விடுமுறையென்றால் வீடியோ கேமும் உண்டு
வேறென்ன குறைச்சல்
எங்கள்வீட்டு நாய்க்குட்டியும் இப்படித்தான்.

*******

கட்சிக்கும் நடிகனுக்கும்
பளபளக்கும் பதாகைகள் 
பட்டினியில் செத்தவன் பிள்ளை
சிரிக்கிறான் வலது ஓரத்தில்..
பெரியதாய் படம்போட்டு... 

*******

விதர்பாவைப்பாருங்கள்
தண்டகாருன்யாவைப்பாருங்கள்
அய்யோ என் இனமே செத்துவிட்டதே
போராடுவோம்.. போராடுவோம்...
திரட்டியில் இணைத்தால் வேலை முடிந்தது
ஹலோ? என் கேபினுக்கு டீ வரல.

*******

எல்லாரும் திருடனுங்க
அத்தனையும் ஊழல்
யாருவீட்டு காச யாரு திங்கறது?
இந்தமுறை ஓட்டுப்போட
தலைக்கு ரெண்டாயிரம் வேணும்...

*******

அக்காளுக்கு போட்ட நகைநட்ட
நம்ம கல்யாணத்துல புடுங்கிடலாம்
கூடவே ஒரு டூவீலரும் கெடைச்சிடும்
ஜாம்..ஜாம் கல்யாணம்தான்
தாலிதானே குத்தும்.. பரவாயில்லை.

*******

செத்தவன் சேதி சிறுத்துக்கிடக்கும்
முக்கியமானது ஒரு மூலையில்
அரசியல்வாதி கோமணம் அங்கங்கே
போதும் போதும்.. ஆனது ஆகட்டும்
நடிகனின் மசிருக்குள் தேடலாம்
பத்திரிக்கை தர்மத்தை.

********



.

33 comments:

vasu balaji said...

அடேங்கப்பா. பொங்கிட்டீங்க இன்னைக்கு. என்னா அடி:)). இதுலையும் விளாசுங்க

அகல்விளக்கு said...

வாவ்....

சரியான விளாசல்....

:)

ராமலக்ஷ்மி said...

ஒவ்வொன்றும் சாட்டையடி.

நன்று பாலாசி.

ரோகிணிசிவா said...

sema ,
nalla iruku , athum //thali thane uruthum paravayilla// ,super :))

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாசி.......ம்ம்ம்.....

Ahamed irshad said...

பிரிச்சு மேஞ்சிட்டீங்க‌..

க ரா said...

அறச்சீற்றம் :)

வினோ said...

சீற்றம் ரொம்ப காரம இருக்கு...

பனித்துளி சங்கர் said...

உங்களின் ஆதங்கம் தெளிவாக வெளிப்படுகிறது வார்த்தைகளில் அருமை . பகிர்வுக்கு நன்றி

Unknown said...

பாலாஜி சான்ஸே இல்லை.செமையா எழுதுறீங்கப்பா. ரசித்தேன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

எல்லாமே சிறப்பு.

எனக்கு நிரம்ப பிடிச்சது... திரட்டில சேர்க்கறது தான்.. ஹிஹிஹி.. ;)

தேவன் மாயம் said...

விளை நிலங்களை விற்றாகிவிட்டது
மூலைக்கொரு வீடும் வந்துவிட்டது
காவலுக்கிருந்த அய்யனார்
கட்டிடத்திற்குள் வந்துவிட்டார்
இனி கவலையில்லை.//

போட்டுத் தாக்குங்க!

தேவன் மாயம் said...

விடுமுறையென்றால் வீடியோ கேமும் உண்டு
வேறென்ன குறைச்சல்
எங்கள்வீட்டு நாய்க்குட்டியும் இப்படித்தான்.//

பின்னிட்டீங்க!

தேவன் மாயம் said...

விதர்பாவைப்பாருங்கள்
தண்டகாருன்யாவைப்பாருங்கள்
அய்யோ என் இனமே செத்துவிட்டதே
போராடுவோம்.. போராடுவோம்...
திரட்டியில் இணைத்தால் வேலை முடிந்தது
ஹலோ? என் கேபினுக்கு டீ வரல.//

காகிதப்புலியா!

தேவன் மாயம் said...

எல்லாரும் திருடனுங்க
அத்தனையும் ஊழல்
யாருவீட்டு காச யாரு திங்கறது?
இந்தமுறை ஓட்டுப்போட
தலைக்கு ரெண்டாயிரம் வேணும்...
//

கூடக்கேட்கலாம் பாலாஜி!,....வெலைவாசி ஏறிப்போச்சில்ல!

தேவன் மாயம் said...

செத்தவன் சேதி சிறுத்துக்கிடக்கும்
முக்கியமானது ஒரு மூலையில்
அரசியல்வாதி கோமணம் அங்கங்கே
போதும் போதும்.. ஆனது ஆகட்டும்
நடிகனின் மசிருக்குள் தேடலாம்
பத்திரிக்கை தர்மத்தை./

சாத்துங்க!

r.v.saravanan said...

அனைத்துமே அருமை பாலாசி

ஈரோடு கதிர் said...

||திரட்டியில் இணைத்தால் வேலை முடிந்தது||

ம்ம்ம்.. நமக்கும்
ஒரு ஓட்டும் பின்னூட்டமும் போட்டுட்டா போதுமே!

ரவுடியாயிட்டாருப்பா பாலாசி!

sakthi said...

பாலாசி எல்லா சிறுகவிதையும் அருமை நல்ல பார்ம்ல இருக்கீங்க அடிச்சு விளையாடுங்க!!!!

அம்பிகா said...

காரமான கவிதைகள்...
நல்லாவே இருக்கு பாலாசி.

பாலகுமார் said...

அருமை.. அருமை .அருமை..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

arumai!!!

ஹேமா said...

ஆதங்கம் கோபமாக.
பாலாஜி....இவ்ளோ
கோவம் வருமா உங்களுக்கு !

காமராஜ் said...

//பள்ளிக்கூடம், வீட்டுப்பாடம்
சாயுங்காலம் டியூசன்
விடுமுறையென்றால் வீடியோ கேமும் உண்டு
வேறென்ன குறைச்சல்
எங்கள்வீட்டு நாய்க்குட்டியும் இப்படித்தான்.


எல்லாரும் திருடனுங்க
அத்தனையும் ஊழல்
யாருவீட்டு காச யாரு திங்கறது?
இந்தமுறை ஓட்டுப்போட
தலைக்கு ரெண்டாயிரம் வேணும்...//


ஆமாம் பாலாசி.கசக்கிற உணவு.விசம் தடவிய காற்று.அனுபவித்தே தீரவேண்டும்.

பத்மா said...

நா சொல்ல வேற எதாவது இருக்கா?
சர்க்கரை இனிக்கும்னு எல்லாருக்கும் தெரிந்தது தானே !
இன்னைக்கு கொஞ்சம் காரமாவும் இருக்கு ....

'பரிவை' சே.குமார் said...

//செத்தவன் சேதி சிறுத்துக்கிடக்கும்
முக்கியமானது ஒரு மூலையில்
அரசியல்வாதி கோமணம் அங்கங்கே
போதும் போதும்.. ஆனது ஆகட்டும்
நடிகனின் மசிருக்குள் தேடலாம்
பத்திரிக்கை தர்மத்தை. //

பொங்கிட்டீங்க...

சிவாஜி said...

ஹலோ? என் கேபினுக்கும் டீ வரல. :)

arasan said...

அருமையா இருந்தது ஒவ்வொன்றும் சும்மா நச்சுனு இருக்குங்க

"உழவன்" "Uzhavan" said...

ஒவ்வொன்னும் சிக்சர்தான் பாலாஜி

Anonymous said...

ஒவ்வொன்னும் ஹாட் ஷாட்,,, பாலாசியா இது?

Mahi_Granny said...

குமுறல் உரத்த சத்தமாய் . 4 , 5 மற்றும் 6 அருமை

அன்புடன் நான் said...

வணக்கம் பாலாசி.....
நீண்ட நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை.... வேலை நேரம் படுத்துகிறது.....

இருந்தும் உங்க ஆதரவுக்கு என் நன்றி.

இந்த படைப்பில் சினமும் கேலியும்... மிக வலிமையா பதிவாகியுள்ளது....

உங்க ஆதங்கத்தை வெளிப்படுத்திய வரிகளுக்கு என் வணக்கம்

மிக வியக்கிறேன் உங்க சினத்தை.

க.பாலாசி said...

நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி அகல்விளக்கு ராசா
நன்றி ராமலஷ்மி மேடம்
நன்றி ரோகிணியக்கா
நன்றி ஆரூரன்
நன்றி ராஜு
நன்றி இர்சாத்
நன்றி இராமசாமி கண்ணன்
நன்றி வினோ
நன்றி பனித்துளி சங்கர்
நன்றி தாமேதர் சார்
நன்றி ச.செந்தில்வேலன்
நன்றி தேவன்மாயம்
நன்றி ஆர்.வி.சரவணன்
நன்றி ஈரோடு கதிர்
நன்றி சக்தியக்கா
நன்றி அம்பிகா
நன்றி பாலகுமார்
நன்றி எல் போர்ட்
நன்றி ஹேமா
நன்றி காமராஜ் அய்யா
நன்றி பத்மா மேடம்
நன்றி சே.குமார்
நன்றி உழவன்
நன்றி சிவாஜி
நன்றி அரசன்
நன்றி தமிழரசிக்கா
நன்றி மகி மேடம்
நன்றி கருணாகரசு
(வணக்கம்.. வாங்க..)

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO