எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும், மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும், என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாம்.
- பாவேந்தர் பாரதிதாசனின் இவ்வரிகளை நம்மின் மனதில் வைராக்கியமாகக்கொண்டு வாழ்வோம்... வளம்பெறுவோம்...
அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
பாசமுடன், க. பாலாசி
Thursday, December 24, 2009
நானும் குடுக்கிறனுங்க...
ஒண்ணும் பெரிசா இல்லீங்க. ஒழுங்கா ஓரமா உட்காந்து ஆபிஸ் வேலய பார்த்துகிட்டு இருந்தேனுங்க. என்னையப்போயி மெயில் செக்ஸனுக்கு மாத்தினாங்க. அய்யோ அங்கண வேல பாக்கனும்ணா நமக்கு இங்கிலீஸ்காரன்ல நண்பனா இருக்கணும். என்னடா பண்றதுன்னு யோசிச்சிக்கிட்டே உட்காந்தப்பதான் ஒரு ஐடியா வந்துச்சு. இங்கண இருக்கிற ஒரு ஸ்போக்கன் இங்கிலீஸ் கிளாஸ்க்கு போகலாம்னு. சரின்னு போயி ஜாயிண்ட்டும் பண்ணியாச்சு. அங்கணயிருந்த ஒரு அம்மாவுக்கு தமிழ் சுத்தமா வராது. ஏன்னா அவிங்க ஊட்டி கான்வெண்ட்ல படிச்சாங்கலாம். நமக்கும் ரொம்ப வசதியாப்போச்சுன்னு அவங்களுக்கு தமிழ நல்லா சொல்லிக்குடுத்துட்டு வந்தேனுங்க. இது வரலாறுங்க. நெக்ஸ்ட் வலைப்பூவியல் பாக்கலாங்க.
கொஞ்ச நாளு கம்பேனி மெயிலு அதுஇதுன்னு கலிகாலத்திலேயே சுத்திகிட்டு இருந்த என்னோட சுழி சும்மா இருந்துதா? அதான் இல்ல. புதுசா வர படத்துக்கு எங்கடா விமர்சனம் படிக்கலாம்னு கூகில் சர்ச்ல நோண்டி பாத்தேனா... அங்கணதான் கெடச்சுது கேபிள் சங்கரோட லிங்க். அது ஏதோ வெப்சைட்னு நெனச்சுகிட்டே ரொம்ப காலமா ஓட்டிகிட்டிருந்தனுங்க. ஆனா பாருங்க என்னோட மூளையில இது என்னா பிளாக்ஸ்பாட்டுன்னு ஒரு யு.ஆர்.எல் அப்டின்னு அதே கூகிள் சர்ச்ல தோண்டி தொழாவி கண்டுபுடிச்சனுங்க இந்த பிளாக்கர்.காம்ம. புடிடா பாலாசின்னு நல்லா இருக்கமா ஒரு ரெஜிஸ்ட்டர் பண்ணி எங்கணயாவது கெடைக்கிற சேதிங்கள பொறுக்கிப்போட்டு ஒரு பத்து போஸ்ட் பண்ணிருப்பன்னு நெனக்கிறேன். அதுக்குள்ள பாருங்க நம்ம வால் அண்ணணும், கேபிள் அண்ணணும்நமக்கு பாளோயர் ஆயிட்டாங்க. அப்பறமா கதிர் அய்யாவும், லவ்டேல்மேடியும் வந்துட்டாங்க. பார்றா நம்மளயும் பாக்குறாங்கன்னு நெம்ப சந்தோஷமாயிடுச்சுங்க. அதுக்கப்புறம் ஆரம்புச்சுதுங்க இந்த கிறுக்கு. இன்னும் ஓஞ்சபாடில்ல. பூவோட சேந்த நாரும் மணக்கும்னு சொல்லுவாங்களே அதுமாதிரி கதிரய்யாவோட சேந்துகிட்டு நானும் ஏதாவது நல்லது கெட்டது எழுதிகிட்டே இருக்கணுங்க.
கூட சுத்துர சேக்காளிங்க சரியில்ல, அதனாலத்தான் பயபுள்ள வீணாப்போயிட்டுன்னு ஆபிஸ் மேனேஜர் கத்திகிட்டு இருப்பாருங்க. இங்கண பாருங்க அவரையும் ஒரு பிளாக் ஆரம்பிக்க வைச்சிட்டனுங்க. கூடிய சீக்கிரமே அவரும் நம்மள மாதிரி பிளாக் லோகமே புண்ணியலோகம்னு ஆயிடுவாருன்னு நம்பிக்க மட்டும் இருக்குங்க. இதாங்க நம்ம பூவுலகவியல்.
இங்கணப் பாருங்க முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரின்னு சொல்லுவாங்க. அதுமாதிரி கூட்டாளிங்க புலிகேசிகிட்டேயிருந்தும், திருப்பூர்ல இருக்குற முரளிக்குமார் பத்மநாபன்டேயிருந்தும் நமக்கொரு விருது வந்திருக்குங்க. நான் முல்லையில்லாம் இல்லீங்க. ஆனாலும் முள்ளும்மில்லீங்க. மனசுக்குள்ள எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுங்களா? நானும் பிரிண்ட் எடுத்துக்கூட பாத்தேன். அந்த கோல்ட் கலர்தான் வருதே ஒழிய கோல்ட் வரமாட்டங்குது. சரி விடுங்க. ஆனாலும் பாருங்க நாம எழுற எழுத்துக்கு இப்டி விருதுல்லாம் வருதேன்னு சந்தோசமாதானுங்க இருக்கு. அதுவொரு இனம்புரியாத இனிமைங்க. நமக்கு விருதுகொடுத்த எல்லா மக்களுக்கும் நன்றிய சொல்லிக்கிறனுங்க. எத்தன நாளைக்குதாங்க சேட்டு கடையில இருக்குற நகையாட்டம் சும்மா வைச்சிக்கறது. அதனால எனக்கு கெடச்ச இந்த விருத கீழ உள்ளவங்களுக்கு நானும் குடுக்கிறனுங்க. வாங்கிக்குங்க சாமியோவ்...
ஈரோட்டு பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சார்பாக ஒரு நினைவூட்டல்
ஈரோட்டில் நடைபெறவுள்ள பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றது. மனதில் என்றும் நிழலாடும் சங்கமமாக அமைந்திட ஈரோட்டு பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும் திட்டமிட்டு வருகிறோம்.
இடம் பில்டர்ஸ் அசோசியேசன் ஹால்
(லோட்டஸ் ஷாப்பிங் பின்புறம், கலெக்டர் அலுவலம் அருகில், பெருந்துறை ரோடு, ஈரோடு)
அரங்கம் நகர மையத்தில் இருப்பதால், எந்த திசையில் இருந்து வந்தாலும் மிக எளிதாக அடைய முடியும்.
நாள் : 20.12.2009 ஞாயிறு நேரம் : மாலை 3.30 மணி
நிகழ்ச்சி நிரல்:
சங்கமம் துவக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
பதிவர்கள் - அறிமுகம்
சிறப்பு அழைப்பாளர்களின் வாழ்த்துரை
எழுதுவதில் இருக்கும் தயக்கத்தை உடைத்தல்
வலைப்பக்கத் தொழில் நுட்பம்
தேநீர் இடைவேளை
பதிர்வர்களின் முக்கிய கடமை
வாசகர்களின் எதிர்பார்ப்பு
கலந்துரையாடல்
மாலை 07.00 மணி
இரவு உணவு (சைவம் மற்றும் அசைவம்)
அனைவருக்கும் சைவ, அசைவ உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். விழா அரங்கு, உபகரணங்கள், உணவுக்கான செலவுகளை சங்கம ஒருங்கிணைப்பாளர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.ஈரோடு பகுதியைச் சார்ந்த பதிவர் வேறு யாராவது செலவுகளை பகிர்ந்து கொள்ள விழைந்திடின், ஈரோடு கதிர் அய்யாவின் அலைபேசி எண்ணுக்கோ அல்லது அவரது மின்னஞ்சல் முகவரிக்கோ தெரியப்படுத்தவும்.