சிந்தனை
பெற்றவர்களிடம் பொருளாதாரம் இருந்தால்தான்,
பிள்ளைகளால் பொருளாதாரம்கூட படிக்க முடியும்.
செய்தி
விடுதலைப்புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் தந்த அலிகாத் என்ற போர் டாஸ்க், மற்றும் விமான ஓட்டிகளின் துல்லியமான(?) தாக்குதல் ஆகியவையே என்று பாகிஸ்தான் இப்போது மார்தட்டுகிறது. (அப்போ இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி அப்பாவி மக்கள் கொள்ளப்பட்டால் அதற்கு அவர்கள் தான் காரணம்)
ஒரு நகைச்சுவை
ஜிம், ஜெனி இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். ஒருநாள் மருத்துவமனையில் இருந்த நீச்சல் குளத்தில் ஜெனி விழுந்துவிட்டான். உடனே பாய்ந்து ஜெனி காப்பாற்றினாள்.
இருநாட்களுக்கு பிறகு, ஜெனியை மருத்துவர் அழைத்து, ஜிம்மை நீ காப்பாற்றியது நல்ல செய்தி. நீ போகலாம் என்றார். ஆனால் உனக்கு ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது. ஜிம் குளியறையில் தூக்கு போட்டு இறந்துவிட்டான் என்றார். அதற்கு ஜெனி சொன்னாள், குளத்தில் நனைந்த அவனை காயவைப்பதற்காக நான் தான் கயிற்றில் தொங்கவிட்டேன் என்று.
ஒரு கவிதை
காதலால்
பெண்
கவிதையாகி,
கதையாகி
காவியமாகிறாள்.
ஆண்
கவிஞனாகி
கலைஞனாகி
காணாமல் போகிறான்.
ஒரு படம்
ஒரு பாடம்
பிடிக்காதவனுடன் வாழ்ந்து மனக்கஷ்டப்படுவதைவிட
பிடித்தவனுடன் வாழ்ந்து பணக்கஷ்டப்படலாம்.
.
Thursday, July 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஆஹா, இவ்வளவு மேட்டர் இருக்கா? இதுக்குள்ளயும் ஒரு மேட்டர் இருக்கும் போல இருக்கே!! என்ன மேட்டர்? யாரு ஆளு?
இதுக்குள்ளயும் ஒரு மேட்டர் இருக்கும் போல இருக்கே!! என்ன மேட்டர்? யாரு ஆளு?
இது அனுபவம் அல்ல. (அப்பாடி தப்பிச்சாச்சு) ஆனால் அனுபவித்தவர்கள் பாடம்.
தலைவரே.. பதிவுலக ஆசான்னு என் போட்டோவ பொட்டிருக்கிறீங்களே.. என்னை வச்சி காமெடி, கீமெடி பண்ணலியே..?:)
//என் போட்டோவ பொட்டிருக்கிறீங்களே.. என்னை வச்சி காமெடி, கீமெடி பண்ணலியே..?:)//
சார் அப்படில்லாம் இல்லீங்க. கோயிலுக்கு போனாகூட நாம ஒரு தெய்வத்தை விரும்பிகும்பிடுவோம்ல. அதுபோல...
நம்மளோட வாகனங்களோ அல்லது பொருட்கள் மீதோ ’இவங்க’துணைன்னு போடுறதில்லையா அதுபோல...
வேறென்ன, ஞாபகம் வரலை. ஓ.கே. அப்படித்தான்.
Post a Comment