க.பாலாசி: கூட்டுறவு கடன்கள்

Wednesday, July 8, 2009

கூட்டுறவு கடன்கள்

இப்போதும் தமிழக அரசின் இலவச உபயமாக கடன்களுக்கான வட்டியில் 251 கோடி ருபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இப்படி நமது அரசு செய்துவரும் தள்ளுபடிகளால் மக்களுக்கு கிடைக்கும் லாபங்கள் ஒருபுறம் இருந்தாலும் அரசு இந்த நிதிச்சுமைகளை எவ்வகையில் ஈடுசெய்கிறது என்பது விளக்கப்படவில்லை. ஒருவேளை அதே கூட்டுறவு சங்கங்களால் இச்சுமை சரிசெய்யப்படுகிறதா? அப்படியிருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

ஏனென்றால் கூட்டுறவு சங்கங்களின் இன்றைய நிலை அவ்வளவு சிறப்பானதாக இல்லை என்றே சொல்லவேண்டும்.

இவை எல்லாவற்றிற்கு மேலாக மக்களின் மனதில் ஒரு தவறான அபிப்ராயத்தை அரசு ஏற்படுத்துகிறது. கூட்டுறவு சங்கங்களின் முலமாக எவ்வளவு கடன்கள் வாங்கினாலும் அதற்கான வட்டியையோ அல்லது அதன் அசலையோ ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செலுத்தவேண்டும் என்ற அவசியம் இதுபோன்ற அறிவிப்புகளால் ஏற்படபோவதில்லை. அப்படியே செலுத்தினாலும் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்திவிட்டு இருந்துவிட்டால், வரப்போகிற அரசோ அல்லது வந்துவிட்ட அரசோ அதை எப்படியும் ஏழைகளுக்கு(?) சலுகைகள் என்ற பெயரில் தள்ளுபடி செய்துவிடும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது.

இதே நிலமையினால் இப்போது கடன் வாங்கவேண்டுமா? உடனே கூட்டுறவு வங்கிதான் பளிச்சென மக்களின் மனதில் படுகிறது. பாதுகாப்பு மற்றும் சலுகைகள்.

சலுகைகளை நான் குறைசொல்லவில்லை. வாழைப்பழத்தை கையில் கொடுத்து சாப்பிடசொல்வதற்கு பதிலாக அதற்கான மரக்கன்றை கொடுக்கலாமே.

பயனடையும் சில ஏழை (?) மற்றும் பணக்கார வர்க்கங்களுக்காக எல்லாதரப்பு மக்களும் ஏதோவகையில் பாதிக்கப்படுகிறார்கள். இதை எப்படி நியாயம் என்று சொல்வதென்று புரியவில்லை.

கூட்டுறவு சங்கங்களின் முலம் பெற்ற கடன், சேட்டுவிடம் நகையை வைத்துவிட்டு பயப்படும் அளவிற்கு இல்லை. சேட்டுவிடம் நகைவைத்து மீட்காவிட்டால் நகைபோய்விடும். அதே கூட்டுறவு வங்கிகளில் நாலைந்து தடவைகள் கடிதம் வரும், அப்பறம் ஆட்சிமாற்றம் வரும் அல்லது முதல்வருக்கு பிறந்தநாள், அல்லது முன்னாள் முதல்வர்கள் பிறந்தநாள் இப்படி ஏதாவது ஒன்று வரும். அப்படியே கடன் தள்ளுபடிசெய்யப்பட்டு நம் நகையோ அல்லது ஏதோஒன்றோ நம்மிடையே வரும். நம் வாழ்க்கையும்.....

9 comments:

Unknown said...

ஹரே பாபி ... இதர் தேக்கோ .....!!!!! மச்சி நம்மல்கி ஏதோ சொல்து...!! கூற்றுவு பேங்க்லே வட்டி தள்றான்...!!!! வட்டி தள்றான்...!!!

ஹரே... பாபாஜி ...!! இப்டி சும்மா... சும்மா.. தல்ல்னா.. நம்மல் மூட்டே .. முட்சே .. கட்க்கிட்டு பம்பாய் போகுது ....!!!!

குடந்தை அன்புமணி said...

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை வீடு வந்து சேர்ப்பது என்பதே அரிதாகிவிட்டது. இயற்கை மா(சீ)ற்றங்கள், தண்ணீர் கிடைப்பதில் இருக்கும் அரசியல், உரம் போன்ற பொருட்களின் விலை இப்படி...விளை பொருட்களுக்கு நல்ல விலையும் கிடைப்பதில்லை. வறுமையில் விவசாயிகள் சாகாமல் காக்கவே இந்த தள்ளுபடி சமாச்சாரங்கள். விவசாயிகளுக்கு மாற்றுத் திட்டங்கள் வரும் வரை இந்த தள்ளுபடியும் தொடர வேண்டும். அதற்கு தண்டமாக அரசு செய்யட்டுமே...

க.பாலாசி said...

நன்றி மாதேஷ், தங்கள் வருகைக்கு.
...........

//விவசாயிகளுக்கு மாற்றுத் திட்டங்கள் வரும் வரை இந்த தள்ளுபடியும் தொடர வேண்டும். அதற்கு தண்டமாக அரசு செய்யட்டுமே...//

சார் தள்ளுபடிகள் விவசாயிகளுக்கு நன்மைபயக்க கூடியதுதான். ஆனால் விவசாயிகள் மட்டுமே இவ்வாறு கடன்பெறுபவர்கள் அல்ல. அரசாங்கமும் அவர்களை மட்டுமே கருத்திற்கொண்டு இத்தள்ளுபடிகளை செய்வதில்லை. அரசாங்கம் உருவகப்படுத்துவது என்னமோ விவசாயிகள்தான். ஆனால் பயன்பெறுபவர்கள் பட்டியல் என்னமோ அப்படியில்லையென்றே தோன்றுகிறது.

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

ராஜ நடராஜன் said...

பாலாஜி என்ன பிரபு கடையில விடாம பின்னூட்ட சிக்ஸரா அடிச்சிகிட்டுருக்காரேன்னு நேத்தைக்கு உங்க கடைக்கு வந்து ஒரு நோட்டம் விட்டுட்டுப் போனேன்.அவசரத்துல ஒண்ணும் சொல்லாம போயிட்டேனா.இன்னைக்கு நீங்க வீடு தேடி வந்ததும் சரி ஒரு ஹலோ சொல்லிட்டு வரலாமேன்னு வந்துட்டேன்.

க.பாலாசி said...

Blogger ராஜ நடராஜன் said...
//இன்னைக்கு நீங்க வீடு தேடி வந்ததும் சரி ஒரு ஹலோ சொல்லிட்டு வரலாமேன்னு வந்துட்டேன்.//

நன்றி. திரு. ராஜ நடராஜன் அவர்களே. உங்கள் வருகையால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் நட்பை விரும்புகிறேன்.

நட்புடன் ஜமால் said...

வாழைப்பழத்தை கையில் கொடுத்து சாப்பிடசொல்வதற்கு பதிலாக அதற்கான மரக்கன்றை கொடுக்கலாமே. \\

சிறப்பா சொன்னீங்க ...

க.பாலாசி said...

//சிறப்பா சொன்னீங்க ...//

மிக்க நன்றி ஜமால், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

Sadagopal Muralidharan said...

நாமார்க்கும் குடியல்லோம்.
நமனை அஞ்சோம்.
கொடுததவை யாவும் என்னுடையது
என்னுடையதை எனக்கு கொடுத்தாய்
எதற்க்கு திரும்பக்கேட்கவேண்டும். கொடுக்க முடிந்திருந்தால் கொடுக்காமல் இருப்பேனா?
எனவே இவையாவும் தவறல்ல. முறையே.
விவசாயிகள் நலன் கருதி செய்யப்படும் எந்த செயலும் நன்மைக்கே.
ஒரு தனி மனிதன் உணவுக்காக உதவி செய்பவனைக்கொண்டாடும் நாம் ஒரு நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் உழவனுக்காக 253 கோடி தள்ளுபடி செய்வது சரியே.
ஒரே ஒரு சோகம். இந்த தொகையில் பாதி எங்கு செல்கிறதோ?

நல்ல பதிவு.

க.பாலாசி said...

//ஒரே ஒரு சோகம். இந்த தொகையில் பாதி எங்கு செல்கிறதோ?//

உண்மை. இதுதான் எனது வருத்தமும். ‘ஏழைகளுக்காக‘ என்று சொல்லி கொடுக்கப்படுகிற எந்தவொரு சலுகையும் ஏழைகளிடம் முழுமையாக போய் சேர்வதில்லை.

நன்றி. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும். (என்னில் இணைந்தமைக்கும்)

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO